Monday, September 9, 2013


சன் டிவியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி முன்னேறுவது எப்படி?




அரசாங்க டிவி சேனல் மட்டும் வந்த நேரம் அது. சில இடங்களில் சிலோன் டிவியும் தெரிய ஆரம்பித்தது. அரசாங்க டிவிக்கு பல கட்டுபாடுகள் . அரசு டிவி என்பது ஆளும் அரசாங்க கொள்கைபரப்பும் டிவியாகவே இருந்து வந்தது. அதனால் அவர்களால் சுதந்திரமாக நிகழ்ச்சிகளை வழங்க முடியவில்லை.



 
அந்த நேரத்தில் வெளிவந்ததுதான் தனியார் துறையை சேர்ந்த சன் டிவி சேனல். தனியார் என்பதால் அவர்களால் பல மக்கள் விரும்பும் நிகழ்ச்சியை ஒலிபரப்ப முடிந்தது.அது மட்டுமல்ல ஆளும் கட்சிக்கு எதிராகவும் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டதால் ஆளும் கட்சியால் முடி மறைக்கப்பட்ட செய்திகளையும் வெளிக் கொணர்ந்ததால் மக்களிடம் மிக பாப்புலராக தொடங்கியது. தனியார் துறையில் வந்த முதல் டிவி என்பதால் மிக அளவில் மக்களை கவர்ந்தது. அது ஒருகட்சியை சார்ந்தது என்பதால் மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் புதிய சேனல்கள் ஆரம்பித்து அதற்கு போட்டியை தந்தனர். இருந்த போதிலும் அது முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டதாலும் அரசாங்க பின்பலமும் சேர்ந்து கொண்டதால் அது தன் நிலையை இழக்காமல் இருந்து வந்தது .



 
இந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் விஜய் டிவி சேனல். இந்த சேனல் எந்த அரசியல் கட்சியை சார்ந்தோ அல்லது எதிர்த்தோ நிகழ்ச்சியை நடத்தாமல் இருந்ததால் இது எல்லா கட்சியை சேர்ந்த மக்களாலும் கவரப்பட்டது. இதில் செய்திகள் ஒலிபரப்ப படாததால் எந்த கட்சியையும் பாதிக்கவில்லை. செய்திகள் ஒலிபரப்பினால்தான் யாருக்காவது ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்தி வெளியிடும் நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்படாமல் அது பார்த்து கொண்டது. இந்த டிவி ஆரம்பித்து மெதுவாக வளர்ர்சி அடைந்து 2003 வாக்கில் அது சன் டிவிக்கு மிகவும் சவாலாக ஆகிவிட்டது. இவர்களின் வளர்ச்சியால் மோனோபோலியாக இருந்த மார்கெட்டில் போட்டி வந்தததால் சன் மிக அதிக அளவில் மூதலீடு செய்து தன் இடத்தை தக்க வைக்க முயற்சித்து கொண்டிருக்கிறது.



இதற்கு இடையில் கலைஞர் டிவியும் வெளிவந்ததால் அதுவும் மிகப் பெரிய அடியை சன் டிவிக்குதான் கொடுத்தது. கலைஞருக்கும் சன் டிவிக்கு நடந்து போட்டியின் போது விஜய் டிவி பல புது புரோகிராமை வெளியிட்டு இளம் வயதினர் கூட்டத்தை சுண்டி இழுத்து வெற்றி பாதையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது




STAR Vijay (commonly known as Vijay TV) is an Indian entertainment channel broadcasting in Tamil, also available in several other nations. The channel is owned by Rupert Murdoch's 21st Century Fox through . After being founded by N. P. V. Ramaswamy Udayar in 1994 and later acquired by Vijay Mallya and UTV Software Communications, the channel has been co-owned since 2001 by STAR TV and Fox International Channels, which are subsidiaries of 21st Century Fox, owned by Rupert Murdoch. Sun TV Network Limited is an Indian mass media company headquartered in MRC Nagar, Chennai, Tamil Nadu, India. It is a part of Sun Group. It has been named as Asia's most profitable media corporations and the largest TV network.[2][3] Established on April 13, 1993, it created and owns a variety of television channels and radio stations in multiple languages covering all Indian States. Its flagship channel is Sun TV which was the first fully privately owned Tamil channel in India when it emerged. Sun TV Networks are the owners for an Hyderabad based IPL Team, taken over from the Deccan Chargers from 2012.[4]The team will be known as the Sun Risers[5] from the 2013 season of the Indian Premier League The company is owned by Kalanidhi Maran, who is the chairman and managing director who was recently awarded the CNBC Business Excellence Award in 2005.



அது போல சமுக அவலங்களை எடுத்து சொல்லும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் கூட எடுத்து வைக்கும் தலைப்புகள் அரசியல் கட்சிகளையோ அல்லது அவர்களது நிலையையோ எடுத்து விவாதிக்காமல் பொதுவான தலைப்புகளை எடுத்து யாருக்கும் பாதிப்பு வராமல் நிகழ்ழ்சியை நடத்தி தனது வருமானத்திற்கு பாதிப்பு யாருக்கும் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.



 
அமெரிக்கா மற்றும் உலகமெங்கும் புகழ் பெற்ற ஸ்டார்,ஃபாக்ஸ் சேனலின் பேக்கிரவுண்ட் பலத்தை கொண்டுள்ளதால் விஜய சேனல் அங்கு நடக்கும் புகழ் பெற்ற டிவி நிகழ்ச்சிகளை சற்று தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து வெற்றிக் கனியை தட்டி கொண்டு போகிறது. அதுமட்டுமல்லாமல் மேலை நாட்டு கலாச்சாரத்தை மறைமுகமாக போதை ஊசியை வைத்து போதையை ஏற்படுத்துவது போல மக்களின் மனதில் கலாச்சார சீர்கேடுகளை பல நிகழ்ச்சிகளில் ஏற்றி மக்கள் மனதை மாற்றி வருகிறது.



மேலை நாட்டு மோகத்தில் இருக்கும் மக்களுக்கும் இது வரப்பிரசாதமாக இருக்கிறது விஜய் டிவிக்கும் இப்படி செய்வது மிக எளிதாக  இருப்பதால் அது வெற்றியை நோக்கி நடைபெறுகிறது இந்த மேலை நாட்டு மோகத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் டிவியில் வரும் நல்ல நிகழ்ச்சிகள் வேம்பாய் கசக்கிறது என்பது கசக்கும் உண்மையே.



நல்ல விஷயங்கள் மக்களை கவர்வதில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சியை நடத்துவதால் விஜய் டிவி மற்ற டிவிக்களை விட இப்போது மக்கள் மனதில் பிரபல டிவியாக மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது



 



அன்புடன்
மதுரைத்தமிழன்


14 comments:

  1. வேம்பாய் கசந்தாலும் தொடர்பவர்கள் தொடர்கிறார்கள்... (எலிதாக - எளிதாக)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்... எழுத்து பிழையை சரி செய்துவிட்டேன் நன்றி

      Delete
  2. உண்மை தான் மக்கள் டிவியை அவ்வளவாக யாரும் ரசிக்கவில்லை என்பதே உண்மை

    ReplyDelete
    Replies
    1. நல்ல செய்தியை மக்கள் விரும்புவதில்லை என்பது உண்மை அதே நேரத்தில் நல்ல செய்தியை தரும் போது மக்களை கவரும் வகையில் தர மக்கள் டிவியும் முயற்சிக்க வேண்டும் சக்கரகட்டி

      Delete
  3. போட்டி என்றால் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் .
    உண்மை தான் நீங்கள் சொல்வது. கலிகாலம் சாமி !
    ஒன்றும் சொல்வதற்கில்லை. நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. போட்டி என்றால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது காந்திஜி கால பாலிசி ஆனால் போட்டியில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது இந்த கால பாலிசி

      Delete
  4. மக்கள் விருப்பம் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொண்டார்கள் போல இல்லையா ? நல்ல பதிவு...!

    ReplyDelete
    Replies
    1. மக்கள் விருப்பங்களை விஜய் டிவி தெரிந்து கொண்டது என்று சொல்வதை விட மக்களை எப்படி மயக்கி அடிமையாக்குவது என்ற கலையை அறிந்து இருக்கிறார்கள். & வருத்தத்திற்குரிய செய்தி நம் மக்களுக்கு எது நல்லது என்று பகுத்தறியும் திறமை இல்லை என்பது தான்

      Delete
  5. சன் டிவிக்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய் டிவி தான். http://tn.television.in ல் GRP rating வாராவாரம் வெளிவருகிறது. சன் டிவி ரேடிங் 1200+ ; விஜய் டிவி 200+ சுமார் 6 மடங்கு சன் டிவிக்கு அதிகம். அடுத்த இடத்துக்கு பாலிமர் டிவி வந்துகொண்டிருக்கிறது.


    A சென்டர்களில் விஜய் டிவி முன்னேறுகிறது என்பது உண்மை. B,C சென்டர்களில் சன் டிவியை எந்த டிவியும் மிஞ்ச முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. இந்த ரேட்டிங்க் எல்லாம் ஒரு கண் துடைப்பு விளையாட்டு என்று சொல்லாம். இன்று வரை சன் டிவி முன்னிலையில் இருந்தாலும் அதனுடைய மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.. விஜய் டிவி மெதுவாக அதே நேரத்தில் மிக உறுதியாக கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வருகிறார்கள்.. இதற்கு முயல் ஆமை கதையை உதாரணமாக சொல்லாம். முயல் = சன் ஆமை = ஸ்டார்.


      சன் டிவி முழித்து எழுந்தால் வெற்றியை இழக்க வேண்டி இருக்காது. அதை செய்யுமா என்பதைதான் நான் கவனித்து வருகிறேன்

      Delete
  6. முன்பு சன் டிவி நிகழ்ச்சிகளை மத்த டிவிக்கள் காப்பி செய்தது. தற்போது அது விஜய் டிவியைப் பார்த்து செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. கொடுமை..

    ReplyDelete
  7. மேலை நட்டு கலாச்சாரம் மிக அதிகமான பதிப்பை விஜய் மூலமாக தமிழ் நாட்டில் பரப்புகிறது
    மிக அழகான ஆழமான விஷயம் நன்றி தொடரட்டும் உம் சமுதாயப்பணி

    ReplyDelete
    Replies
    1. என் மனதில் பட்டதை கிறுக்குகிறேன் எழுதுகிறேன் என் பொழுது போக்கிற்காக மட்டுமே சமுதாயப் பணி ஆற்றவில்லை நண்பரே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.