Monday, September 23, 2013

மோடியும், ரஜினிகாந்தும் சொன்னதை செய்யாதவர்கள்

செய்தி : 2017-ம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக நீடிக்க விரும்புவதாகச் சொன்னாரே மோடி?



மோடியும் சொன்ன வாக்கை நிறைவேற்றாதவர் என்பது இதன் மூலம் தெரிகிறது. இவர் இந்திய நாட்டை காப்பாற்ற போகிறேன் என்று சொல்லுகிறார். அதையும் இந்த ஜனங்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள்

ஏ ஃபார் ஆதர்ஷ், பி ஃபார் போபர்ஸ், சி ஃபார் கோல் (நிலக்கரி)’ என்று காங்கிரஸ் அரசு ஊழல் செய்து வருவதாக மோடி சொல்கிறாரே?

மோடி புத்திசாலி ஆங்கில எழுத்துக்கள் 24 என்பதை அறிந்து வைத்திருக்கிறார் அதனால் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்ததை இவர் முடித்து வைக்க பதவிக்கு வர முயல்கிறார்


நடிகர் சங்க பொதுக்குழுவில் நான் பேசறேன்’ என இளம் நடிகர்களிடம் உறுதியளித்திருந்த ரஜினி கடைசிவரை வரவே இல்லை?

பொதுக்குழுவில் இப்போது இருக்கும் தலைவருக்கு எதிராக பேசுவது ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவது என்படு அவருக்கு நன்றாகவே தெரியும்( அவருக்கு உடல் நலம் சரியில்லாததால்தான் அங்கு வரவில்லை என்று கூறுபவர்கள் அவர் சினிமா நூற்றாண்டு விழாவில் மட்டும் கலந்துக்க மட்டும் எப்படி உடல் நலம் இடம் கொடுத்தது என்று விளக்கம் சொல்லவும்.)


சேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் கைவிட்டால், நாங்கள் காங்கிரஸைக் கைவிடுவோம்’ என்கிறாரே கருணாநிதி. அப்படியானால் கூட்டணி முறிந்ததா?

அட அட கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள் கைதட்டாமல் இருந்ததினால் அவர்கள் உயிரோடதான் இருக்கிறார்களா இல்லையா என்பதற்கு கலைஞர் வைத்த டெஸ்ட்தான் இது

செய்தி :தே.மு.தி..,வை யாராலும் அழிக்க முடியாது: விஜயகாந்த் ஆவேசம்

அது தானகவே அழிஞ்சு போயிடுமோ அதைத்தான் தலைவர் இப்படி சொல்கிறறோ என்னவோ


ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி: சிறிய அளவிலான குழுவினர் மட்டுமே, மதக் கலவரங்களில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க வேண்டியது, நம் ஒவ்வொருவரின் கடமை

இதை சொல்லுவதுதான் இந்திய ஜனாதிபதி வேலையா நல்லா இருக்கய்யா


இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் பேச்சு: பிற்போக்குத் தனமான அடிமைப் பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடித்து வரும் காங்கிரஸ் கட்சியையும், அதே கொள்கையுடன் மத வெறி, கொலை வெறியையும் சேர்த்து கொள்கையாகக் கொண்டுள்ள, பா..,வையும் வீழ்த்துவதற்கான வியூகத்தையும் வகுக்க வேண்டும்.

அங்கே யாரது இந்த செய்தியை ஜெயலலிதா அவர்களின் காதில் போடுங்கப்பா ஒரு சில சீட்டுகெல்லாம் எப்படி எல்லாம் பேசவேண்டியிருக்கு உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்(அப்படி முடியவில்லை என்றால் இதில் எந்த கட்சி நம்ம சேர்த்து கொள்ளுமோ அந்த கட்சியுடன் நாம் கூட்டணி வைத்து அவர்கள் கடமை ஆற்றுவார்களோ)

ஊழல் வழக்கில் சீன தலைவர் போ சிலாய்க்கு ஆயுள் தண்டனை

இவருக்கு இந்திய தலைவர் என்று நினைப்பு வந்து இப்படி செய்து மாட்டிக்கிட்டாறோ என்னவோ


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. கலைஞர் பாணியில் கேள்வியும் நானே
    பதிலும் நானே பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், கஷ்டம் அனுபவிப்பது மக்கள்தானே ?

    ReplyDelete
  3. சிவப்பு எழுத்துகளில் காரம் தூக்கலாதான் இருக்கு

    ReplyDelete
  4. கலக்கல் பதில்கள்! சூப்பர்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.