Friday, September 13, 2013



டில்லி பெண் கற்பழிப்பு வழக்கில் பாரபட்சமான தீர்ப்பும்   கேலிக்குள்ளாகும் இந்திய நீதித்துறையும்


இந்தியா  நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேரும் குற்றம் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இவர்களுக்கு தூக்குத்தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்தார்.



இப்படி பெண்களை கற்பழிக்கும் நபர்களுக்கு இப்படிபட்ட தண்டணைகள் தரலாம் அல்லது இதைவிட அதிக கொடுரமான தண்டனைகளையும் தரலாம் அது தப்பில்லை என்பதுதான் என் கருத்தும். ஆனால் இந்த வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு மிக  நியாமற்ற தாகவே எனக்கு தெரிகிறது..

இந்த தண்டனை கற்பழிப்பிற்க்காக கொடுக்கப்பட்டது என்றால் இந்தியாவில் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வரிசையாக இதே தண்டனையை தருவார்களா? அல்லது இதனால்  அந்த பெண் இறந்ததால்தான் இந்த தண்டனை கொடுக்கப்பட்டு  இருந்தால் கொலை செய்த அனைவருக்கும் இதே தண்டனை கொடுப்பார்களா ? இல்லை இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்ச்சி என்றால் பாண்டிச்சேரி பெண்ணின் மீது ஆஸிட் வீசி கொன்றானே அந்த கயவனுக்கும் இதே தண்டணை தரலாமே அந்த நிகழ்வும் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதுதானே?அப்படி இல்லை என்றால் இவர்களுக்கு மட்டும் இந்த தண்டனை ஏன்? சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே அப்ப ஏன் இந்த வேறுபாடு? 

மும்பையில் ஒரு நர்ஸ் துப்புரவு தொழிலாளி ஒருவனால் கற்பழிக்க பட்டு , பிறகு அவளை கொலை செய்யும் நோக்கத்தோடு கொடூரமாக தாக்கியதில், அந்த பெண் கோமா நிலையை அடைந்து விட்டாள். பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னமும் கோமா வில் தான் இருக்கிறாள் அவள் ஆனால் அந்த  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது , தண்டனை முடிந்து வெளியே வந்த அவன் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்கையை மீண்டும் துவங்கி விட்டன . ஆனால் அந்த பெண் ?  . நிர்பயவுக்காக இவ்வளவு கொதித்து எழுந்த  நம் நீதித்துறை சிறுமி புனிதா, மற்றும் அனேக கற்பழிப்பு வழக்கு களில் ஏன் அமைதி காக்கின்றனர் ?...


இது வரவேற்கத்தக்க நல்ல தீர்ப்பு .என்றால் அதேவேளையில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இதே காலகட்டத்தில் நடை பெற்று இருந்தும் கூட, அவைகளை விரைந்து முடிக்க அரசு இயந்திரம் மற்றும் நீதித்துறை  விரைவு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதது வருந்ததக்கதுதான் அதனால் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் நாட்டில் நடைபெறும் கற்பழிப்பு குற்றங்கள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.இல்லையேல் இக்குற்றங்கள் தொடரவே செய்யும் .


சரி இந்த குற்றவாளிக்கு இந்த் தண்டனை என்றால் சம்பவம் நடந்த இடத்திற்கு  மிக தாமதமாக வந்த காவல் துறை, மிக தாமதமாக  சிகிச்சை ஆரம்பித்த ஹாஸ்பிடல்  டாக்டர்கள் இதையெல்லாம் விட  நடுரோட்டில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை அடிபட்ட நாயை விட கேவலமாக பார்த்துக் கொண்டே சென்று விட்ட டில்லிவாசிகள் இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை தருவது? யார் தருவது




சரிங்க இந்த தீர்ப்பினால்  இனிமேல் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்களா என்று பார்த்தால் அது ஒரு கேள்விக் குறியே. காரணம் இந்த தீர்ப்பு வெளியாகிருக்கும் இதே நேரம் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண்ணின் அங்கம் அவள் அனுமதியின்றியே வேட்டையாடப்பட்டுக்கொண்டு தான் இருக்கும் ... இதே நேரம் ஒரு சிறுமியை காமக்கண் கொண்டு ஒருத்தன் பார்த்துக்கொண்டு தான் இருப்பான் ... ஒரு மாணவியின் மேனி உடன் படிப்பவனாலே கேவலப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் .. இதே நேரம் கோடி பெண்கள் மிருக ஆண்களிடம் தங்கள் கற்பை காக்க போராடிக்கொண்டிருப்பார்கள் .இந்த கயவர்களை மொத்தமாக ஒழிக்கும் நிலையில் நாம் இல்லை என்றாலும் இந்த டில்லி பெண்ணை கடித்து குதறிய மிருங்களையாவது நாம் கொன்று விட போகிறோம் என்ற திருப்தியில் வாழவேண்டி இருக்கிறது

இந்த நிகழ்வில் காங்கிரஸ் ஆட்சி செய்த மிக பெரிய சாதனை  மோடி பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பை மீடியாக்களில்  பின்னுக்கு தள்ளிவிட்டதுதான்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. இப்படிப்பட்ட கவர்ச்சி போஸ்களால் rape கூடுமே தவிர குறையாது !

    ReplyDelete
  2. இந்த வழக்கிலாவது விரைந்து தீர்ப்பு சொன்னார்களே.
    இதுபோன்ற தீர்ப்புகள் மற்ற வழக்குகளுக்கு முன் உதாரணமாக அமைய வாய்ப்பு உண்டு. பிற கொடூர நிகழ்வுகளிலும் இது போன்ற தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். தண்டனைகளால் குற்றங்கள் குறைந்து விடாது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பாலானவர்கள் தண்டனைகளுக்கும் அவமானங்களுக்கும் அஞ்சி குற்றம் செய்யாதவர்களே.

    ReplyDelete
  3. இத்தனை கேள்விகளும் எனக்குள்ளும் எழுந்தவை தான், ட்விட்டரில் சிலவற்றைப் பகிர்ந்தேன். ஆனால் தண்டனைகள் எல்லாவற்றையும் கடந்து வருங்காலத்தில் ஒவ்வொரு இந்தியப் பெண்கள் உட்பட ஒவ்வொரு நபரும் பாலியல் தொந்தரவின்றி வாழ சமூகமும், அரசும், அரசு எந்திரமும் என்ன வழி வகை செய்யப் போகின்றன என்பது தான் பெரும் வினாவே? அத்தனையும் ஓட்டைகள், இது வரை தொடர்ந்தவை தான் இனியும் தொடரப் போகின்றது என்பது மட்டுமே சத்தியம்.

    ReplyDelete
  4. நியாயமான வாதம்! கற்பழிப்பு குற்றங்களுக்கு பொதுவாக ஒரேவிதமான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

    ReplyDelete
  5. யோசிக்க வேண்டிய விஷயம்தான்....

    தண்டனைகள் அடுத்தலைமுறையை பயமுறுத்தப்படுவதாகவும் அந்த தப்பை யாரும் செய்யக்கூடாததாகவும் இருக்கவேண்டும்....

    எனக்கும் ஒரு கேள்வி எழுகிறது....

    அதாவது கற்பழிப்புக்கு தண்டனை இல்லை.. இப்படி கொடுமையாக கற்பழித்தால் தூக்கு தண்டனை என்பதுபோல் இருக்கிறது...

    ReplyDelete
  6. தண்டனைகள் குற்றங்கள் குறைவதற்காகவே செயல்படுத்தப்படுகிறது... இந்த தூக்கு தண்டனை மூலம் இப்படிப்பட்ட அநாகரீகமான செயல்களை எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க முயற்ச்சிக்கலாம் அவ்வளவுதான்.

    இந்த குற்றத்தை அப்படியே தடுத்து நிறுத்திவிட முடியாது...

    இன்னும் நிறைய சட்டத்திட்டங்களை மாற்றிஅமைக்க வேண்டும்...

    நாட்டில் அனைவருக்கும் தனிமனித ஒழுக்கம் வளரவேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்...


    இல்லையோ தாங்கள் கூறியதுபோல் கற்பழிப்பு செய்தவர்முதல் அதை வேடிக்கைப்பார்த்துச்சென்ற சாமானியன் வரை குற்றவாளி கூண்டில் நிறுத்தவேண்டியதுதான்...

    ReplyDelete
  7. கற்பழித்தவனுக்கு தூக்கு தண்டனை என்றால்,அந்த கற்பழிப்பு சிந்தனையை பரப்பிய சினிமா.டிவீ.மற்றும் சினிமா நடிகைகளின் அரைகுரை படங்களை கடை பரப்பி கல்லா கட்டுவர்களுக்கு தண்டனை யார் கொடுப்பது

    ReplyDelete
  8. அப்புறமாக உளறேன்

    ReplyDelete
  9. Rarest of rare வழக்குகளில் மாத்திரம்தான் தூக்கு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் பாலியல் வன்முறை அல்லது கொலை மாத்திரம் நடந்திருந்தால் நீதிபதி மரணதண்டனை விதிக்காமல் ஆயுள் கொடுத்திருப்பார். கொலை மற்றும் குழு பாலியல் வன்முறைக்கு ஆயுள்தண்டனைதான் கிடைக்கும்.ஒரு ஆள் மாத்திரம் பாலியல் வன்முறை செய்தால் 8 வருடம் மட்டும்தான்!

    இந்த வழக்கு ஏன் ஏன் பிற வழக்குகளில் இருந்து மாறுபட்டது, ஏன் மரணதண்டனை விதித்தேன் என நீதியரசர் தெளிவாக தீர்வில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    'the rarest-of-rare test largely depends on the perception of society as to if it approves the awarding of the death sentence for certain types of crimes. The court has to look into factors like society's abhorrence, extreme indignation and antipathy to certain types of cases, like the case in hand - of gang rape with brutal murder of a helpless girl by six men."

    'The facts show that the entire intestine of the victim was perforated, splayed and cut open due to repeated insertion of rods and hands. The convicts, in the most barbaric manner, pulled out her internal organs with their bare hands as well as with rods and caused her irreparable injuries, thus exhibiting extreme mental perversion not worthy of human condonation,"

    "Besides other serious injuries, various bite marks were observed on her face, lips, jaw, near ear, on the right and left breasts, left upper arm, right lower limb, right upper inner thigh (groin) , right lower thigh, left thigh lateral, left lower anterior and genital. It shows the beastly behaviour of convicts,"

    "They dragged the victims to the rear door of the bus to be thrown out, and when the rear door was found jammed, they were dragged by their hair to the front door and thrown out of the moving bus. Her intestines were severely damaged and the suffering inflicted on the victim was unparalleled,"

    பிறப்பு உறுப்பு உட்பட எல்லா வெளி அங்கங்களையும் கடித்து குதறியதோடு, கையையும் இரும்பு துண்டினை கொண்டு உள் உறுப்புக்களை சேதப்படுத்தி குடலை உருவி வெளியே போட்டதால்தான் இந்த மரணதண்டனை.

    உங்கள் நாடு (US dept of state) தீர்ப்பினை வரவேற்று, இந்திய நீதித்துறை சரியாக நீதி வழங்கியுள்ளது (We are heartened to see that the Indian justice system has spoken) என குறிப்பிட்டது கூடுதல் தகவல்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.