Sunday, September 22, 2013

எங்கள் வீட்டிற்கு வந்த திருடன்


யாருக்கும் தெரியாமல் வருபவன் திருடன் ஆனால் இந்த திருடனை அழைத்து வந்து வீட்டில் ராஜ உபசரிப்பு பண்ணுவது நாங்கள். எங்களின் மனத்தை திருடியது மட்டுமல்லாமல் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களையும் குழந்தைகளின் மனத்தை கொள்ளை அடிக்கும் இந்த கள்வனை திருடன் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பதாம்.



அட அவன் யாரு என்று சொல்லாமல் சும்மா அவனைப் பற்றியே சொல்லிக் கொண்டு போவது சரியில்லைதான். அந்த கள்வனின் பெயர் 'சன்னி' எங்கள் வீட்டிற்கு வந்த புதிய ஆண் குட்டி இவன். அதாங்க எங்க வீட்டிற்கு வந்த நாய்க் குட்டி

Name : Sunny  Date of birth : 06/13/2013



எனது குழந்தை நீண்ட நாள் நாய்க் குட்டி ஒன்றை வாங்கி தருமாறு கேட்டுக் கொண்டிருந்தாள் அவளின் ஆசையை கடந்தவாரம் நாங்கள் நிறைவேற்றி வைத்தோம். என் மனைவி அவளின் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டாள். அதுதாங்க அந்த நாய்குட்டி பிறந்து 3 மாதமே ஆனதால் அது பாவங்க என்றாள் அதனால் நான் அந்த நாய்க்குட்டி கூடவே வாங்கி வந்த நாள் அன்று தூங்கும் படி ஆகியது. இந்த நாய் என் மனைவி மாதிரி படுக்கும் போது தொண தொண என்று பேசாமல் சமத்தாக தூங்கியது ஆனா அப்ப அப்ப மட்டும் முழித்து நான் அருகில் இருக்கிறேனா என்று பார்த்து கொண்டது.


இந்த நாய்க்குட்டி எனது மகள், மனைவி, எனக்கு, எனது வீட்டுக்கருகில் வசிக்கும் பலருக்கும் & குழந்தைகளுக்கும் பலருக்கும் சந்தோஷம் கொடுத்து கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் பதிவுகள் அதிகம் கடந்த வாரம் முழுவதும் எழுதவில்லை அது கூட உங்களுக்கும் மிக சந்தோஷத்தை கொடுத்திருக்கும்தானே. ஆனா நீங்க ரொம்ப நாளா அதிகம் சந்தோஷமாக இருக்க கூடாது என்பதால்தான் இந்த பதிவு.

இந்த நாய்க்குட்டி மால்டிஷான் Maltichons வகையை சார்ந்தது. இதை டிசைனர் டாக் அல்லது ஹைபிரீட் என்பர். இது மால்டிஸ் & பீஷ்ஷான் என்ற 2 டாக்கையும் கலந்து இனவிருத்தி செய்த நாய்க்குட்டி. புசு புசு என்று பார்ப்பதற்கு இருக்கும் இந்த நாய்க்கு முடி கொட்டுவதில்லை அலர்ஜி ஃப்ரீ நாய்க் குட்டி. மிக புத்திசாலிதனமான நாய்க்குட்டி. இந்த வகை நாய்க் குட்டி ஆசை பிராணியாக வளர்க்க கூடியது பாதுக்காப்பிற்காக வளர்க்க கூடியது அல்ல. அது போல வீட்டிற்கு வெளியே கட்டிப் போட்டு வளர்க்கும் நாயுமல்ல




Maltichons are produced by two pure-breeds, The Maltichon is a designer dog breed (also known as hybrid dog breed). The breed is a cross between the Maltese and the Bichon Frise. Over the years the purchase of Maltichon puppies have grown in popularity due to their compatibility with other pets and their love for children. They make fabulous family pets. . These dogs possess a friendly personality, and can be a welcoming addition to the family. The Maltichon has a wavy, soft, non-shedding coat. maltichon's have a non-shed coat. Many people who suffer from allergies to dogs, are happy to learn that they are not allergic to the Maltichon. They are a very sweet natured, gentle and lovable breed.

The Maltichon is extremely intelligent and highly trainable.


சிறிது விலை அதிகமான இந்த டாக்கை 700 டாலர் டீலில் வாங்கினோம். வாங்கின அன்றில் இருந்து செலவுதான் இதுக்கு பேசாம இன்னொரு குழந்தையை பெற்று இருக்கலாம். ஆனா என்ன இந்த டாக்கை ஆரம்ப காலங்களில் அதிகம் திட்ட முடியாது ஆனா நன்கு வளர்ந்த பிறகு என்னா திட்டினாலும் நம்ம காலையே சுற்றி சுற்றி வரும்.

இந்த டாக்கை வாங்கி வந்த உடனே petsmart ஷாப்பிற்கு சென்று அதற்கு தேவையான உணவு, கேஜ், பெட். போன்றவைகளை வாங்கி வந்தோம் அதற்கு 150 டாலர் ஆகியது. டாக் வாங்கிய அடுத்த நாள் டாக்டரிடம் சென்று பரி சோதனை செய்து அதற்கு தேவையான ஊசியை போட்டு மலப் பரிசோதனையும் செய்து கொண்டோம் அதற்கு 180 டாலர் ஆகியது. இந்த பரிசோதனையை உடனடியாக செய்ய காரணம் டாக் வாங்கிய 7 நாளுக்குள் டாக்டர் சோதனை செய்து எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் நாம் வைத்து கொள்ளலாம் அல்லது இந்த நாய்க்கு பிரச்சனை ஏதும் இருக்கிறது என்றால் 7 நாட்களுக்குள் ரிட்டர்ன் & எக்சேஞ் செய்து கொள்ளலாம் அப்படி 7 நாட்களுக்குள் செய்து கொள்ள வில்லை என்றால் அதன் பிறகு ஏதும் நேர்ந்தால் விற்பவர் ரெஸ்பான்ஸ் இல்லை

முன்னால் பெட்ஷாப்பிற்கு போனால் அங்கு விற்கும் பொருட்களை பார்த்து இதையெல்லாம் தாங்கள் வளர்க்கும் டாக்கிற்கு லூசுதனமாக வாங்கி காசை கரியாக்குகிறார்களே என்று நினைத்து கொள்வோம். இப்போது நாங்களும் அந்த லூசு லிஸ்டில் சேர்ந்து கொண்டோம்.

குழந்தை பிறந்த பின் நாம் கடைக்கு சென்றால் குழந்தைக்கு இது நன்றாக இருக்குமே அல்லது உபயோகமாக இருக்குமே, இதை போட்டா அழகாக இருக்குமே அல்லது பாதுகாப்பாக இருக்குமே என்று நாம் பார்த்து பார்த்து வாங்குவது போல தினமும் கடைக்கு சென்று ஏதாவது வாங்கி வருகிறோம்.

இதனை குழந்தைப் போல 3 மணி நேரத்திற்கு ஒருக்காக உணவு கொடுக்க வேண்டும் அதுவும் என் பொறுப்பாக இருப்பதால் வேலையில் இருந்து மதிய நேரங்களில் டிமிக்கி கொடுத்து வந்து விடுகிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: இந்த வாயில்லாப் ஆத்மா (பிராணி) நீண்ட நாள் நன்றாக வாழ் வாழ்த்தி செல்லுங்கள்

43 comments:

  1. வாயில்லா ஆத்மாவுடன் ,வாய் உள்ள ஆத்மாக்களும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. வாயில்லா ஜீவனோடு இந்த வாய்ப் பேச முடியாதவனையும் சேர்த்து வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  2. Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. புசு புசு என்று அழகாக உள்ளது... இனி தினமும் சந்தோசம் தான்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  4. வாழ்த்துக்கள் சகோ !
    அழகான பேர் ! புசு புசுவென்று அழகான நாய்க்குட்டி !
    உங்கள் மகள் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்.!
    நீடூழி வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. மகள் முகத்தில் வந்த சந்தோஷத்தை பார்த்து எங்களுக்கும் சந்தோஷம் வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  5. pet shop போன பிறகு doctorஐ பார்க்க போக கூடாது. doctorஐ பார்த்த பிறகு pet shop போக வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. அட உங்ககிட்ட ஐடியா கேட்காம போயிட்டேனே?

      Delete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  7. இ­ந்­த ­வா­யில்லாப ஆத்­மா ­(பி­ரா­ணி) - அப்­ப­டிங்­க­ற ­வார்த்­தை ­கு­றிப்­ப­து ­வா­லுள்­ள ­ஜீ­வ­னை­யா, இல்­லை ­ம­து­ரைத் ­த­மி­ழ­னை­யான்­னு ­மைல்ல்­டா ­ஒ­ரு ­ட­வுட்­டு...! எ­ந்­த ­வா­யில்ல்­லாப் ­பி­ரா­­ணி­யா ­இ­ருந்­தா­லும் ­நீ­டூ­ழி ­வா­ழ ­ம­னம் ­நி­றைந்­த ­ந­ல்ல்­வாழ்ழ்த்­துகள்!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்திற்கு அப்புறம் மதுரைத்தமிழனின் வால் கட் செய்யப்பட்டது அதன் பின் மதுரைத்த்மிழனும் வாயில்லா ஜீவனாக மாறிட்டான் வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  8. நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
    இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற :)
    பின்ன என்னங்க எல்லாருடைய மனதையும்
    கொள்ளையடித்த சன்னி கள்வன் என்றால் "அவரது"
    (மரியாதை மரியாதை ) அன்பிற்காக ஏங்கும் மக்கள்
    இவர்கள் ஏழைகள் தானே :)))) சரி வள வள என்று பேசாமல்
    மனமுவந்து வாழ்த்துகின்றேன் .உங்கள் மனம் போல
    எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்க சன்னி ......

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  9. ஆஹா நாய்குட்டியாவும் இருக்கலாம்னு நெனைச்சேன்.. சரியா போச்சு! உங்க சன்னி ரொம்ப வருஷம் மகிழ்ச்சியா இருக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைத்தது சரியே. வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  10. புதிய விருந்தினர் வருகையில்
    வீடு களைகட்டி இருப்பதை அறிய
    மனம் மகிழ்வு கொண்டது
    உள்ளம் கவர் கள்வனுக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சன்னி வந்த பின் வாழ்க்கையில் ஒரு பிரகாசம்(SUNNY) வந்தது மாதிரி ஒரு உணர்வு எங்கள் எல்லோருக்கும்

      Delete
  11. பெங்களூரில் எங்க சித்தி வீட்டில் இப்படித்தான் நாயை வளர்த்துகிட்டு ஓவரா கனிப்பாங்க.. அதுக்கு ஒடம்பு சரியில்லைன்னா ஒரு வாரம் ஆஸ்பிட்டல் பெட்ல வச்சி கவனிக்கிறது. தினமும் அதுக்கு வாக்கிங்.. ஸ்பெஷல் உணவுன்னு ராஜமரியாதை.. சமயத்துல எங்க பிரதர் ஊருக்கு போய்ட்டான்னா அங்கிருந்து போன் பண்ணி ஸ்பீக்கர் ஆன் பண்ணி " ஹாய்.. டா எப்படி இருக்கே..?" பதிலுக்கு அது " லொள்..லொள்.." "சாப்பிட்டியாடா செல்லம்? " லொள்...லொள்.."..! - ஹா.. ஹா எனக்கு இதெல்லாம் லொள்ளாத்தான் இருக்கு.. பின்ன.. வீட்ல இருக்கற மனுஷாளையே கவனிக்க முடியலை இப்படி நாய்க்குட்டி பூனைக்குட்டின்னு எப்படித்தான் வளர்க்குறாங்களோன்னு நான் முணு முணுப்பேன்.

    ஆனா பெரும்பாலும் எல்லோர் வீட்லயும் கழுதை, நாய், பூனை இந்த மூணு ஜீவனும் இருக்கும்.. எப்படியா? .... இப்படித்தான்...
    1) என்னாங்க.. நான் கழுதையா கத்திட்டிருக்கேன்.. கேக்கலையா?..
    2) சும்மா நாய் மாதிரி குலைக்காதீங்க...
    3)பண்றதையும் பண்ணிப்புட்டு பூனை மாதிரி இருக்கறத பாரு...

    இன்னும் சில பேர் வீட்ல பன்னி, எருமை, பிசாசு கூட வளர்க்கிறாங்களாம்... ஹா.. ஹா.. !
    எங்க வீட்ல கழுதை, பூனை மட்டும்தான்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
      நம்பர் 1 நீங்க நம்பர் 3 உங்க வூட்டுகாரர் அப்ப 3 உங்க மாமியாரா சரியாக சொல்லாம விட்டுட்டீங்களே

      சரி சரி இந்த என் பதிலை உங்க வீட்டுகாரகள் கண்ணில் காட்டிவிட்டாதீர்கள் அப்புறம் ஒரு லோடு பூரிக்கட்டைக்கு ஆர்டர் செய்து என் மனைவிக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்

      Delete
  12. கோவிச்சுக்காதீக..

    மனசுக்கு பட்டதை சொல்றேன்.

    700 டாலர் கொடுத்து டாக் 7வாங்கிய நீங்க
    அந்த
    700 இண்டு 62 = 434000 ரூபாயை
    உதவும் கரங்களுக்கு அனுப்பி இருந்தீங்கன்னா
    ஒரு
    700 குழந்தைகள்
    ஒரு மாசம்
    நல்ல சோரு சாப்பிடுங்க..

    திரும்பவும் சொல்றேங்க...

    கோவிச்சுக்காதீங்க..

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நான் கோவிச்சுக்கலை ஐயா இப்படி யாராவது வந்து கருத்து சொல்லுவாங்க என நினைத்தேன் ஆனா நீங்க வந்து சொல்லீ மாட்டிகிட்டீங்க..



      நான் நாய்க் குட்டி வாங்கியது என் மகளின் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கதான். நான் நீங்கள் சொன்ன மாதிரி செய்து இருந்தால் அந்த குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறேனோ இல்லையோ என் மகளின் மனதில் மகிழ்ச்சி வந்து இருக்காது. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தங்கள் பெண்ணின் மகிழ்ச்சிதான் முக்கியம் அதில் நானும் விலக்கு அல்ல.


      நமக்கு நம் மகிழ்ச்சியும் நம்மை சுற்றி உள்ளவர்களின் மகிழ்ச்சிதான் முக்கியம் அதற்கு நீங்களும் விலக்கு அல்ல.

      உங்களிடம் சில கேள்விகள்... நான் நாய்க்கு செலவழித்த தொகைக்கு எவ்வள்வு குழந்தைகள் சாப்பிடலாம் என்று கணக்கு சொன்ன நீங்கள் சில வற்றை மறந்து போனது எப்படி

      நீங்கள் கொண்டாடிய பண்டிகைகள் எத்தனை அதற்கு எவ்வளவு பணம் செலவழித்தீர்கள்? பட்டு புடவை பட்டு வேஷ்டி, தங்க நகைகள், வெடிகள் இனிப்புகள். இதற்கு செலவழித்த தொகை எவ்வளவு? பட்டு புடவை பட்டு வேஷ்டிக்கு பதிலாக நார்மல் உடைகள் வாங்கி இருக்கலாமே? தங்க நகைகள் வாங்கி மனைவி மகளை மகிழ்வித்தற்கு பதிலாக நாரமல் பாசிகளை வாங்கி அணிந்து மகிழ்ந்து இருக்கலாமே? இனிப்புகள் வாங்கி வசதி படைத்த நண்பர்களுக்கு கொடுப்பத்ற்கு பதிலாக அந்த தொகையை எழைகுழந்தைகளின் உணவிற்க்காக கொடுத்து இருக்கலாமே?

      நீங்கள் மற்றும் உங்கள் மனைவி அமெரிக்கா வந்து உங்கள் குழந்தை மற்றும் பேரன் பேத்திகளை எவ்வளவு செலவு செய்து பார்க்க வந்தீர்களே அது எதற்காக அது உங்களின் சந்தோஷத்திற்க்காகதானே அப்படி செலவு பண்ணி உங்கள் குழந்தைகளை பார்ப்பதற்கு பதிலாக அவர்களை வீடியோகான்ப்ரன்ஸில் பார்த்து மகிழ்ந்து அந்த செலவில் எத்தனை குழந்தைகளுக்கு எத்தனை மாதம் உணவு கொடுத்து இருக்கலாம்
      அமெரிக்க வர ஒருவருக்கு குறைந்த பட்சம் 1300 டாலர் அங்கு வர விசா செலவு இன்சுரன்ஸ் தொகை வந்து இங்கு வந்து சுற்றுலா நீயூயார்க் தியோட்டர் செல்ல ஆன செலவு எல்ல்லாவற்றையும் கூட்டிப்பாருங்கள் அதுக்கு முன்னால் நான் நாய்க்கு செலவழித்த தொகை சுசூப்பி)

      சரி குழந்தைகளை பார்க்கதான் வந்தீர்கள் அவர்களை பார்த்து மகிழ்ந்து இருக்கலாமே? ஆனால் நயகாரா வாசிங்க்டன் நீயூயார்க் பாஸ்டன் என்று பல இடங்களுக்கு சென்று மகிழ்ந்தீர்களே அப்படி செல்லாமல் பிள்ளையின் வீட்டிலே இருந்து மகிழ்ந்து இருந்தால் எவ்வள்வு பணம் சேர்த்து இருக்கலாம் அந்த பணத்தை கொண்டு எத்தனை குழந்தைகளுக்கு உணவு கொடுத்து இருக்கலாம்

      கொஞ்சம் யோசிச்சு பாருங்க?

      இததை நான் கோபத்துடன் எழுதவிலலை உங்கள் பதிலை படித்த பின் என் மனதில் தோன்றியதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க.


      Delete
    2. ஏன் இதை கோபம் இல்லாமல் சொல்லுகிறீர்கள்? நீங்கள் கோபப்பட்டு இன்னும் கடுமையான தொனியில் சொல்லியிருக்கலாம். ஊருக்கு மட்டும் உபதேசம் புரிபவர்கள் கள்ள சாமியார்கள். சாமியார்கள் பலரின் லீலைகள் நினைவுக்கு வருகின்றது. அவர்களுடைய நோக்கம் ஊரை மாற்ற வேண்டும் தம்மையல்ல.

      Delete
  13. லூசு லிஸ்டில் சேர்ந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்...இப்படிப்பட்ட லூசாவதில் தவறேயில்லை... பெட்களுடன் விளையாடுவது பல நோய்களை வருமுன் காக்கிறது...சன்னிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. கடந்த பல வாரங்களாக மனப் புழுக்கத்தில் இருந்த எனக்கு சன்னி வந்த பின்பு மன இறுக்கம் மிக குறைந்து உள்ளதுங்க...வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  14. வீட்டில் இனி நுழையும் போதே சந்தோஷமாக வரவேற்க ஒரு ஆள் இருக்காங்க சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. பதிவுலகில் நீங்க வீட்டில் நாய்குட்டிங்க என்னை வரவேற்க

      Delete
  15. நிஜ நாய்க்குட்டி போல இல்லாம பொம்மை போல அழகா இருக்கு. எனக்கு இதுப்போல ஒரு செல்லத்தை வளர்க்க ஆசை. ஆனா, என்னவருக்கு இதெல்லாம் பிடிக்காது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வீட்டில் 2 பிராணிகள் இருக்க கூடாது என்று உங்களவர் நினைக்கிறார் போலிருக்கு

      Delete
  16. வாவ் !!!!! ரொம்ப அழகுங்க உங்க வீட்டு உள்ளம் கவர் கள்வன் :))சன்னி ..

    நல்ல விஷயம் செய்திருக்கீங்க ..படத்தில் அந்த புன்னகையே சொல்லுது சன்னி எவ்ளோ ஹாப்பினஸ் கொணடாதிருக்கு உங்க வீட்டில் உள்ள அனைவருக்கும் ..
    எங்க வீட்டிலும் ஒரு புது வரவு எங்க மகளுக்காகவே ....ஒரு பூனைக்குட்டி :))
    இதே போலதான் நாளைக்கு செக்கப் வாக்சிநேஷன் எல்லாம் செய்யணும் :))
    there are no words to express my daughters happiness when we brought the kitty home .

    கண்டிப்பாக வெளிநாட்டில் வளரும் பிள்ளைகளுக்கு இவை ஒரு நல்ல companion ....வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்குடும்பத்தினரை சந்தோஷப்படுத்திய உங்களுக்கும் நியூ அரைவல் சன்னிக்கும் :)

    Angelin.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் மிக சரியே இந்த மகிழ்ழ்சியை விபரிக்க வார்தைகளே இல்லை வாழ்த்தியதற்கு நன்றி

      Delete
  17. குட்டி நாய் அழகாத் தான் இருக்கு! ஆனா இதுக்கு இவ்வளவு செலவு ஆகுதா அமெரிக்காவிலே! வியக்க வைக்கிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இந்த மாதிரி நாய்க்குட்டிகளை வளர்க்க இந்த அளவுதான் செலவாகும். உங்களுக்கு தெரியுமா தி ஹிந்து நாளிதழ் உரிமையாளர் ராம் அவர்கள் இந்த மாதிரி பல இன நாய்க்குட்டிகளை மிக அதிகம்வீட்டில் வளர்க்கிறார்

      Delete
  18. dog valarpathal ithaiya noy samantha patta viyathikal varuvathu illaiyam sir.. unga ponnu so lucky.. ketathume vangi koduthutinga... nanga enga vittula golden ritrevel varkalam paarthom mudiyala. time varumpothu paarkalam vittittom.. unga pathivu again dog mela irukkum virupathai thundi vittutichu... ninda nal vala valthukkal..

    ReplyDelete
  19. உங்க வீட்டு புதுவரவிற்கு வாழ்த்துக்கள்.
    மல்டிசான் பற்றி நிறைய இப்ப தெரிஞ்சு வைத்திருப்பீர்கள். காப்பகத்திலிருந்து பர்ஸ் பதம்பார்க்காமல் வாங்கலாம் என்பது ஒரு கருத்து, ஆனால் ஆரோக்கியம் கேள்விக்குறியது என்று சிலர்.
    இதைத்தவிர, கடையில வாங்குறது - வளர்ப்பவர்ங்க கிட்ட இருந்து வாங்குவது - எது நல்லது?

    நியூஜெர்சியில விலை அதிகம்தான். வளர்ப்பதற்கு வரி ஏதாவது உண்டா?
    ரெம்ப நாளா இந்த சிலபல விசயங்களை சொல்லி நம்ம வீட்டுல தடையுத்தரவை அமல்படுத்திக்கிட்டு இருக்கேன்... தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. காப்பகத்தில் இருந்து வாங்குவதைவிட வளர்ப்பவர்களிடம் இருந்து வாங்குவது நலம்.காரணம் நாம் குலம் கோத்திரம் பார்பது போல யார் இதற்கு ஒரிஜினல் அம்மா என்பதை தேவை என்றால் என்று தெரிந்து கொள்ளலாம். இதை தெரிந்து கொள்வதன் மூலம் அந்த நாயின் அம்மாவிற்கு ஏதாவது நோய் இருந்ததா என்ரு தெரிந்து கொள்ளலாம் ஆனால் இப்படி தெரியாமல் வாங்கினால் மரபு நோய் குட்டிக்கும் வந்தால் உங்கள் பர்ஸை மிக பலமாக எதிர் காலத்தில் கடிக்கும். மால்ஷான் விட்டின் பாதுகாப்பிற்க்காக வளர்ப்பது அல்ல இது செல்லப் பிராணியா வள்ர்ப்பத்ற்கு வாங்குவது


      நாய் வளர்ப்பத்ற்கு லைசன்ஸ் வாங்க வேண்டும் அது 10 லிருந்து 30 டாலருக்குள்தான் அதை ஒவ்வொரு வருடமும் புதுபிக்க வேண்டும் வருடத்தீற்கு சில முறை டாக்டரிடம் கூப்பிட்டு செல்ல வேண்டும் ஆனால் சிக்கானால் வம்பு அதனால் நாய்க்கு ஹெல்த் இன்சுரென்ஸ் வாங்கி கொள்ளலாம்/ இந்த வகையான நாய்கள் யாரையும் கடிப்ப்பதிலை ஆனால் பாதுகாப்பிற்காக வாங்கும் நாய்க்கள் கடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் அப்படி பட்ட நாய்களை வாங்கும் போது அத்ற்கென லயபில்டி இன்சுரென்ஸ் கண்டிப்பாக வாங்க வேண்டும் இல்லையென்றால் யாரவது நம்பள் மீது வழ்க்கு திடர்ந்துவிடுவார்கள்


      மிக முக்கியமாக உங்கள் குழந்தை மற்றும் மனைவியைவிட நீங்கள் நாயை அதிகம் நேசிப்பவராக இருக்க வேண்டும் மேலும் நாயுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் அப்படி முடியாவிட்டால் நீங்கள் நாய் வானுவதை தவிர்க்கவும்

      மேலும் விபரங்கள் வேண்டுமென்றால் இமெயில் அனுப்பவும்

      Delete
    2. நீங்கள் நார்த் கரோலினா பக்கத்தில் இருந்தால் நாய்க் குட்டி மிக சீப்பாக கிடைக்கும் (50 டாலருக்கும்)

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. தங்கள் பதிலுக்கு நன்றி. வள்ர்ப்பவர்களிடம் செல்லப்பிராணிகளை வாங்குவது பலவகையில் திருப்தியாக இருக்கும் என்பது சரிதான். இபே-ல் பலதினுசு நாய்வகைகளைப் பார்த்திருக்கிறேன்.
      அப்புறம் அந்த ஹெல்த் இன்சூரன்ஸ் - ஆஹா நமக்கே ஒரு உருப்படியான ஹெல்த் இன்சூரன்ஸ் இன்னும் வாய்க்கவில்லை. போற போக்க பார்த்தா, நாய்க்குட்டிக்குத்தான் குடும்பத்திலே நல்ல இன்சூரன்ஸ் வாங்குற நிலமை வந்திரும் போலிருக்கு. பார்க்கலாம்.
      மேற்படி விபரம் தேவையென்றால் இமெய்ல் அனுப்புறேன்.

      Delete
  20. உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்
    http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.