உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, September 12, 2013

நம்பளை ஏமாத்துறாங்களாம்?நம்பளை ஏமாத்துறாங்களாம்?

ஆளு அசந்த ஏமாத்துறது இந்தியாவில மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் நடை பெற்றுக் கொண்டுத்தான் இருக்கிறது அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இங்கும் பல வகைகளில் ஏமாற்றிக் கொண்டும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் மற்ற மாநிலங்களில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் நீயூஜெர்ஸியில் இது இப்போது மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. போனமாதம் என் நண்பனின் மனைவி ஏமாறத் தெரிந்தார் அந்த லேடி ஸ்மார்ட்தான் என்றாலும் ஏமாற்றுபவர்கள் எல்லோரையும்விட மிக ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறார்கள்.


ஒரு நாள் அவருக்கு போன்வந்தது அவர்கள் 5000 டாலர் பாக்கி கவர்மெண்டுக்கு கட்ட வேண்டும் என்று அதற்கான லெட்டர் பலமுறை அனுப்பியும்  பதில் அளிக்கவில்லை அதனால் அதை இப்போதே கட்ட வேண்டும் இல்லையென்றால் உடனடியாக அரஸ்ட் செய்ய போவதாகவும் கூறி பயமுறுத்தி இருக்கிறார்கள் அவரும் உடனே நான் எனது பேங்க் அக்கவுண்டில் இருந்து உடனே வயர் டிரான்ஸ்பர் பண்ணுவதாகவும் சொல்லி இருக்கிறார்கள் அதற்கு அவர்கள் அப்படி யெல்லாம் கட்டக்கூடாது அதற்கு டைம் ஆகும் அதனால் வால்மார்ட்டிற்கு சென்று அங்கு 500 டாலர் Paypal கார்டாக  வாங்கி அந்த அக்கவுண்ட் நம்பரை உடனடியாக போனிலே சொல்லவும் என்று அவரை மிரட்டி  இருக்கிறார்கள் அவரும் வால்மாரட் சென்று வாங்க போன நேரத்தில் அங்கிருந்து அவரது கணவருக்கு நிலமையை சொல்லி இருக்கிறார் அவரும் கொஞ்ச பயந்த டைப் அதற்கு அவரும் அவர்கள் சொன்னபடி செய்து விடு என்ற போது அருகில் இருந்த நான் அந்த பேச்சை கேட்ட போது டேய் மடையா யாரோ ஏமாற்றுகிறார்கள் அப்படி யாரும் உங்களை அரஸ்ட் பண்ண முடியாது அப்படியெல்லாம் இங்கு சட்டம் கிடையாது உடனே உன் மனைவியை போலீஸ்க்கு போன் செய்ய சொல்லி விபரங்களை சொல்ல சொல் என்று சொன்னதும் அவர் போலீஸ்க்கு  போன் பண்ண போலிஸ் அப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று சொல்லி உடனடியாக போலிஸும் ஸ்பாட்டுக்கு வந்து விசாரணையை மேற்கொண்டது அப்போது போலிஸ் சொன்னது இப்படி பல இடங்களில் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்றும் சில நாட்களுக்கு முன்பு இதே போலத்தான் இன்னொரு இந்தியன் லேடியிடமும் இப்படி ஏமாற்றி பத்தாயிரம் டாலருக்கும் மேல் பணம் பறித்து இருப்பதாக சொன்னார்கள்


இப்ப நம்ம கதைக்கு வருவோம். நாம எப்போவுமே உஷாரான ஆளுதானே அது மட்டுமல்ல அடிக்கடி நாட்டுல நடக்கும் சம்பவங்களை சொல்லி மனைவியையும் மகளையும் எப்பவுமே உஷார்படுத்திகிட்டே இருப்பேன்

இப்படி வந்த இடத்தில நாம உஷாராக வாழ்ந்துகிட்டு இருக்கையிலே 2 வாரத்திற்கு முன்பு எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் சொன்னார் உங்க கம்பியூட்டரில் நீங்கள் நிறுவி இருக்கும் விண்டோ --- வெர்ஷனில் பிரச்சனை உள்ளது அதனை சரி செய்யதான் நான் உங்களை கூப்பிட்ட்டேன். நான் சொல்வதுபடி நீங்கள் அதில் மாற்றம் செய்யவேண்டும் என்றார். அதுவும் அவர்கள் நேஷனல் செக்ரியூட்டி டிபார்ட்மெண்டில் இருந்து பேசுவதாகவும் அவர்கள் சொல்வதுபடி நடக்கவில்லையென்றால் என் மீது லீகல் ஆக்ஷன் எடுக்க போவதாகவும் சொன்னார்கள்.

எனக்கு வந்த கோபத்தில் F--K  you  என்று சொல்லி போனை வைத்துவிட்டேன் உடனே என் வீட்டில் உள்ளவர்களையும் எச்சரித்துவிட்டேன். கடந்த வாரமும் போன் வந்தது என் குழந்தை எடுத்து டாடி அந்த ஃப்ராடு போன்ல இருக்காங்க நான் கட் பணுறேன் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டாள்.
அதே போன் மீண்டும் இன்று வந்தது என் குழந்தை போனை எடுத்து என் கையில் கொடுத்தாள் . எனக்கோ இன்று நல்ல கலாய்க்கிற மூடு ஆடு வந்து நம்ம கிட்ட தானாகவே மாட்டிருச்சு என்று எண்ணி பேச ஆரம்பித்தேன்

அவரிடம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடலின் தமிழ் ஆக்கம்தான் இது ( அட நம்ம மதுர  இங்கிலிபிச்சில் எல்லாம் பேசுவானா என்று கேட்க கூடாது )

அவர் சொன்னார் உங்க விண்டோவில் ப்ராபளம் இருக்கிறது அதை நான் சொன்னபடி சரி செய்யுங்கள் என்றார்.
அதற்கு நான் அப்பாவியா  எந்த ரூமில் உள்ள விண்டோவை சொல்லுறீங்க என்றேன்
அவர் சார் உங்க ரூம் விண்டோ அல்ல உங்க கம்பியூட்டரில் உள்ள வீண்டோ சார் என்றார்
அதற்கு நான் கம்பிய்யுட்டர்னா என்னங்க என்றேன் அப்பாவியாக
அவர் அதுதான் சார் டெஸ்க்டாப் கம்பீய்யுட்டர் என்றார்.
நான் என்னிடம் டெஸ்க்கும் அதற்கு டாப்பும் இருக்கிறது ஆனா நீங்க கம்பீய்யுட்டர் என்று சொல்லுறீங்களே அது என்ன என்ரு மீண்டும் கேட்டேன்

அதற்கு அவர் நீங்க லேப் டாப் வைச்சிருக்கீங்களா என்றார். நான் உடனே எனது லேப்பில் நான் அணிந்திருக்கும் ஜீன்ஸ்தான் இருக்கிறது வேற எதுவும் வைக்கலை என்றேன் அதை கேட்ட அவர் அப்ப நீங்க நோட்புக் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார் நானும் ஆமாம் என்னிடம் சில  ரூல்டு நோட்பு க்கும் அன்ரூல்டு நோட்புக்கும்  இருக்கிறது என்றேன்.

அப்போதுதான் அந்த மரமண்டைக்கு புரிந்தது நான் அவனை வைச்சு காமெடி பண்னுவது. உடனே அவன் என்னை பார்த்து யூ ஆர் ஃபண்ணி என்றான் ஆமாம்டா நான் funny ஃபண்ணிதான் ஆனால் முட்டாள் இல்லை வைடா போனை ஒங்காத்தா என்று திட்டிவிட்டு வைத்து விட்டேன்.அப்புறம் என்னங்க நான் என் வீட்டு கம்பீயூட்டரில் பிரச்சனை என்று யாரையும் கூப்பிடவில்லை . அவனுங்களும்  இலவசமாக என் கம்பிய்யுட்டரில் உள்ள பிரச்சனையை தீர்க்க போறாங்களாம் வேற எந்த நாட்டுலவையாவது இலவசமாக செய்து தருவார்கள் ஆனால் அமெரிக்கர்கள் எச்சில் கையால் காக்கையை  ஒட்டாத ஆட்கள் & சுயநல வாதிகள் அவர்களாவது இலவசமாக செய்வதாவது மதுரக்காரன் அப்படி எளிதில் ஏமாறக் கூடியவனா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments :

 1. அதானே...! நாங்கெல்லாம் யாரு...?

  ReplyDelete
 2. விண்டோசில் ப்ராபளம் இருக்கிறதா தெரியவில்லை... உங்கள் தளத்தில் ஏதோ ப்ராபளம் இருக்கிறது... தளம் முதல் முறை திறந்தவுடன் கீழே உள்ள முகவரிக்கு செல்கிறது... சரி பார்க்கவும்...

  http://www.webring.org/hub/indianbloggersri?w=1024;rh=http%3A%2F%2Favargal-unmaigal%2Eblogspot%2Ecom%2F2013%2F09%2Fblog-post_12%2Ehtml;rd=1

  ReplyDelete
 3. இங்க பிரச்சனை என்று அழைத்தாலும் யாரும் சரியா செய்து கொடுப்பதில்லை.. இதில் இப்படியுமா ?

  ReplyDelete
 4. சமர்த்துதான் நீங்க!

  ReplyDelete
 5. ஏமாற்றுவதும் ஏமாறுவதும்
  சர்வதேசப் பிரச்சனையாகிவிட்டது
  நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
  என்னும் எச்சரிக்கையைப்
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 6. மதுரைன்னா சும்மாவா.. அதுவும் தமிழன்.. யாரை ஏமாத்த பார்க்கறாங்க..க்கும்!
  ராங் போன் காலை சூப்பரா கலாய்ச்சிட்டிங்க...

  ReplyDelete
 7. இப்படியும் நடக்குதா !அடக் கடவுளே!

  ReplyDelete
 8. சூப்பரா கலாய்ச்சி இருக்கீங்க! மதுரைத்தமிழனா கொக்கா?

  ReplyDelete
 9. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்......

  ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை! :)

  ReplyDelete
 10. மதுரைத் தமிழனின் கலாய்ப்பு சுப்பர்.
  ஏமாற்றுபவர்கள் எல்லோரையும் விட ஸ்மார்ட் என்பது முக்காலும் உண்மை

  ReplyDelete
 11. செம கலாய் ,கூடிய சீக்கிரம் நம்ம நாட்டுக்கும் இறக்குமதி பண்ணிருவாயிங்க போல

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog