Wednesday, September 11, 2013



மதுரைத்தமிழனின் வீட்டுகதவை தட்டிய எமதர்மன்

என் வீட்டு  காலிங்க் பெல் அடிக்கும் சத்தத்தை கேட்டு நான்  கதவை திறக்க சென்றேன். கதவை திறந்ததும் கருப்பு கலர் டிரெஸ் போட்டு ஒருத்தர் நிற்பதை பார்த்ததும்.யாரூ நீங்க? உங்களுக்கு  யாரைப் பார்க்கணும் என்று  கேட்டேன்.

அதற்கு அவர் நான்தான் எமதர்ம ராஜா.. நான் மதுரைத்தமிழனை பார்க்க வந்து இருக்கிறேன் என்றார்.




நான் தான் மதுரைத்தமிழன். நீங்களும் என் மறைவுச் செய்தி பதிவு படித்து வீட்டு விளக்கம் கேட்க வந்திருக்கிறீர்களா அல்லது உண்மையில் என் உயிரை எடுக்க வந்திருக்கிறீர்களா? எதுவாக இருந்தாலும் சரி எனக்கு ஒரு 5 நிமிஷம் டைம் கொடுங்கள் நான் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன் அதை எழுதி பதிவிட்டதும் நீங்கள் என் உயிரை எடுத்துக் கொள்ளலாம் என்றேன்.


அவரும் சிரித்தவாறு நீங்கள் பதிவிட்டு வாருங்கள் நான் வந்த விஷயத்தை சொல்லுகிறேன் என்றார்.


நானும் சரி என்று போக முற்படுகையில் அவர் எனக்கு கொஞ்சம் தாகமாக இருக்கிறது குடிக்க கொஞ்சம் ஏதாவது தாருங்களேன் என்றார்.

நான் என் நண்பர்களிடம் வழக்கமாக என்ன வேண்டும் என்று கேட்பதைப் போல அவரிடம் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் ரம்மா விஸ்கியா வோட்காவா என்ரு கேட்டேன்.

அதற்கு அவர் பயந்து போய் என்ன மதுரைத்தமிழா நீ என்னை கொல்லப் பார்க்கிறாயா என்ன? நான் இதையெல்லாம் குடிப்பது இல்லை அது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷம். நான் மற்றவர்களை கொன்று எடுத்து செல்வதுதான் என் பழக்கம் என்னையே கொல்லும் செயலை செய்யமாட்டேன் என்றார்.

நானும் சரி சரி எமதர்ம ராஜா உன்மூலம் இன்று நான் கற்றுக் கொண்டது குடிப்பவன் தன்னை தானே அழித்து கொள்கிறான் ஆனால் குடிக்காதவனோ மற்றவர்களை கொன்று அழிக்கிறான் என்றேன்.

அதற்கு எமதர்ம ராஜா மதுரைத்தமிழா உனக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தி சரி நீ போய் சீக்கிரம் பதிவு போட்டுவா அதன் பிறகு நான் வந்த காரணத்தை சொல்லுகிறேன் என்றார்.

நானும் சரி என்று பதிவு எழுதி போட்டுவிட்டு அப்படியே மற்ற பதிவர்கள் வெளியிட்ட பதிவுகளையும் படிச்சுவிட்டு ஹாலுக்கு வந்தா ஏமதர்மராஜா நல்லா குறைட்டைவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.

அவரை  எழுப்பி நான் ரெடி  என்னை அழைத்து செல்லுங்கள் என்றேன் அதற்கு அவர் நான் உன்னை அழைத்து செல்ல வர வில்லையென்றார்...

அப்படியா நான் என்னவோ நீங்க நான் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட மறைவுச் செய்தியைப் பார்த்து வந்தீட்டிங்களோ அல்லது என் தலையை சுற்றிக் கொண்டிருக்கும் தேவதை நான் சொல்லும் வார்த்தையெல்லாம் கேட்டு அதன்படி நான் மறைவு என்று சொன்னதும் அதை கப் என்று பிடித்துக் கொண்டு உங்களை அனுப்பியதோ என்று நினைத்தேன் என்று சொன்ன்னேன்.

அதற்கு எமதர்ம ராஜா நான் உன்னை பாராட்டவே வந்தேன் என்றார்.

என்ன என்னை பாராட்ட வந்தீர்களா? அப்படி நான் என்ன நல்ல விஷயம் செய்துவிட்டேன் என்று கேட்டதற்கு அவர் நீ பல மொக்கை பதிவுகள் போட்டு என் வேலையை மிக எளிதாக்கி  கொண்டிருப்பதால் உன்னை பாராட்ட வந்துள்ளேன் என்றார்

உங்கள் வேலையை நான் எளிதாக்குகிறேனா அது எப்படி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்

நீ போடுற மொக்கை பதிவுகளை படித்துவிட்டு நாட்டில் அவனவன் தானகவே சாகிறான். அதனால் நான் அவர்களை சாக அடிக்கும் வேலை இல்லாமல் போகிறது என்று சொல்லி சிரித்தார். அதுமட்டுமல்ல எனக்கு வயதும் ஆகிவிட்டது அதனால் முன்பு போல என்னால் வேகமாக செயல்பட முடியவில்லை அதனால் கடவுளிடம் சொல்லி உன்னைப் போன்ற மொக்கை பதிவாளர்களயும் கவிதை மற்றும் கதைகளை எழுதி மக்களை சாக அடிக்கும் பதிவாளர்களின்  வாழ்நாளையும் அதிகரிக்க செய்துள்ளேன் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.

இதனால் பதிவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் மறக்காமல் கவிதை கதைகளை நீங்கள் எழுதி வெளியிட்டு வந்தால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும்

எனது மொக்கை ரசிக ரசிகைகள் சங்கத்தினருக்காக இந்த மொக்கை பதிவை வெளியிடுவது 
மதுரைத்தமிழன்

25 comments:

  1. தெரியாம இந்தப்பக்கம் வந்துட்டேங்க...

    லிஸ்டில் இருந்து என்னுடைய பெயரை நீக்கிவிடவும்...

    என்ன ஒரு கொலை வெறி.....!

    ReplyDelete
  2. இதிலும் நல்ல விஷயம் இருக்கிறது....

    குடிப்பவர்கள் தன்னை தானே அழித்துக்கொள்கிறார்கள்... அனைவருக்கும் தேவையான அறழவுரை

    ReplyDelete
    Replies
    1. கவிதை எழுதமாட்டேன் என்று அரசாங்க முத்திரைதாள் வாங்கி அதில் எழுதி கையெழுத்து போட்டால் மட்டும் லிஸ்டில் இருந்து பெயர் நீக்க படும்

      Delete
  3. காலை அஞ்சு மணிக்கு எழுது இந்த பதிவை படிச்சி ..........ஏனைய்யா இப்டி படுத்துறீங்க?

    ReplyDelete
    Replies
    1. காலங்ககாத்தால நம்ம பதிவை படிக்கிறீங்களா அட ராமா...போய் ஒரு நல்ல குளியல் போட்டுட்டு அப்படியே சாமிக்கு விளக்கேற்றி கும்பிடு போட்டுவிட்டு வந்துடுங்க..

      Delete
  4. /// மதுரைத்தமிழா உனக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தி... ///

    சரி...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அண்ணன் தன்பாலனின் மூச்சு காற்றுபட்டதால்தான். இங்கு அண்ணன் என்று அழைத்தது மரியாதைக்காக

      Delete
  5. இதோ இப்ப தாஎன் சொல்லியிருக்கிறீர்கள். இதோ போய் நான் ஒரு பதிவு எழுதி விடுகிறேன்,சரியா>...

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையாக எடுத்து கொண்டதற்கு நன்றி

      Delete
  6. எம தர்ம ராஜாவின் வாரிசாகும் தகுதியை பெற்றுவிட்டீர்கள் !வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. எமதர்மனின் வாரிசுக்கு உதவியாள் தேவைப்படுகிறது வந்து சேர்ந்து கொள்கிறீர்களா?

      Delete
    2. எழவு வீட்டிலே பொணமா,கல்யாண வீட்டிலே மாப்பிள்ளையா இருப்பேனே தவிர உதவியாளா வர மாட்டேன் !

      Delete
  7. ஆஹா! இந்த தீபாவளிக்கு உங்களுக்கு ஒரு கார் வாங்கி தரலாம்ன்னு நினச்சேன், இப்போதான் எமதர்மன் வாரிசாகிட்ட்டீங்களே! அத்னால, உங்களுக்கு ஒரு எருமையை வாங்கி தீபாவளி பரிசா அனுப்புறேன்!!

    ReplyDelete
    Replies
    1. பதிவை நீங்க நல்லா படிக்கலை போல இருக்கிறது கவிதை எழுதும் எல்லோரும் எமதர்மனின் வாரிசுதான் அதில் நீங்களும் அடக்கம் சகோ

      Delete
  8. ரெண்டு நாளைக்கு ஒண்ணுன்னு
    எழுதிக் கொண்டிருந்தேன்
    அதை நாளுக்கு ஒண்ணுன்னு மாத்தினா
    நம்ம ஆயுள் கூடும் ஆனா
    படிக்கிறவர்கள் ஆயுள் குறையுமே
    இனி அதனாலே மூன்று நாளைக்கு
    ஒண்ணுன்னு முடிவு பண்ணியிருக்கிறேன்
    இருவருக்கும் அவ்வளவாக பாதிப்பிருக்காது இல்லையா

    ReplyDelete
    Replies
    1. எனது முந்தைய பதிவில் நான் எழுதியதை நீங்கள் கவிதை என்று சொன்னதால் நீங்கள் எழுதியது எல்லாம் கவிதையில் சேராது. அதனால் நீங்கள் தினமும் 2 அல்லது 3 பதிவுகளை வெளியிடலாம்.. ஆயுசைபற்றி கவலைப்படாதீர்கள். என்னை எமதர்மனின் வாரிசாக நிர்ணயித்துவிட்டதால் உங்களின் ஆயுசை உங்களின் நல்ல பதிவிற்களுக்காக நான் கூட்டித்தருகிறேன்

      Delete
    2. இனியும் நான் கவிதை எழுதணுமா பாட்டியம்மா ?....
      ஏற்கனவே எனக்கு இந்த உலகம் பிடிக்கவே இல்ல பாட்டியம்மா .
      மதுரைத் தமிழா நான் உன்னோடு டூஊஊஊ :)))

      Delete
  9. படிக்கிறவங்க cost-ல உங்க வாழ்நாளை நீட்டிக்கிறதா??!! ரொம்ப நன்னாயிருக்கு!! நீங்க இந்த டாபிக்கையே சுத்தி சுத்தி வருவதுதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களின் அக்கறை எனக்கு புரிகிறது. எதுவும் நம் கையில் இல்லை எல்லாம் கடவுளின் செயல் அதனால் கவலை கொள்ளாதீர்கள் என்னைப்பற்றி உங்களின் அக்கறைக்கு எனது நன்றி

      Delete
  10. அது தானே பார்த்தேன் இடையிலேயே எனக்கு இந்த யோசனை வந்திச்சு .
    உண்மையில்லாமல் புகையாதே :) நடக்கட்டும் நடக்கடும் நாளைக்கே
    யுத்தமின்றி இரத்தமின்றி மரணிக்க இங்கே வாருங்கள் என்று சாவுகிராக்கிகள்
    அனைவருக்கும் (:))))) )அழைப்பாணை விடுத்திர்றேன் போதுமா ?...:))))))

    ReplyDelete
  11. தென்றல் பக்கம் உங்கள காணமேன்னு பார்த்தா இதான் சங்கதியா ? விவரமா இருக்காங்களாம்.

    ReplyDelete
  12. இதெல்லாம் ஓக்கே! படம்தான் கொஞ்சம் பயமுறுத்துது!

    ReplyDelete
  13. அண்ணா பதிவு எல்லாம் நல்லா நக்கலா எழுதுறீங்க ஆனா கொஞ்ச காலமா எதிர்மறை பதிவா வருது மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் . தங்களது பதிவுகளை தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்
    -தீபக்

    ReplyDelete
  14. நல்லாத்தான் திங் பண்றீங்க கொஞ்சம் இதப் பத்தியும் திங்பண்றீன்களா

    www.vitrustu.blogspot.in

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.