உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 1, 2013

டெக்னாலஜி எங்கோ போகுதுங்க ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )

டெக்னாலஜி எங்கோ போகுதுங்க    வயது வந்தவர்களுக்கு மட்டும் )


வளர்ந்து வரும்  தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுமை என்ற பெயரில் என்னென்ன  செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்து  கொள்வது இன்றைய வாழ்வில் மிகவும் அவசியம்.  இப்போது வந்துள்ள புதுமையை அறிய நான் முற்படுகையில் என் பார்வையில் பட்டது இந்த செய்தி ( இதெல்லாம் எப்படிப்பா உன் கண்ணில் மாட்டுது என்ற  கிண்டல் வேண்டாம். அதுதான் என் கண்ணில் பட்டதை உங்கள் கண்ணிலும் பட வைக்கிறேன் அல்லவா?

பண்டைய காலத்தில் காதலி காதலனிடம் தம் மனதில் உள்ளதை கற்களில் செதுக்கியும் , புறா மூலம் செய்தி அனுப்பியும், தோழிகள் மூலம் தகவல் சொல்லியும் பகிர்ந்து வந்தார்கள். அதன் பின் கடிதங்கள் மூலமும் தகவல்கள் பறிமாறி வந்தார்கள். ஆனால் நாகரிகம் வளர வளர , டெக்னாலஜி வளர வளர தகவல் பறிமாற்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடிதத்திற்கு பின் அந்த இடத்தை போன் களும் அதனை அடுத்து  செல்போன், கம்பியூட்டர் சாட் மூலமும் தகவல் பறிமாறிக் கொள்ளப்பட்டது அதன் பின் வீடியோ சாட்டாக மாறி இப்போது தொடு உணர்வையும் இந்த டெக்னாலாஜி மூலம் கொண்டு  வந்துள்ளனர்.

எழுத்தில் ஆரம்பித்து பேச்சில் வந்து இப்போ தொடுவதில் வந்து நிற்கிறது இந்த டெக்னாலாஜி. இந்த டெக்னாலாஜியை பயனுக்கு வந்தால்  பீச்சில் காதலர்கள் கூட்டம் குறையலாம் (ஏய், கையை வச்சிகிட்டு சும்மா இருங்கன்னு பீச்சில் காதலர்களை கடந்து செல்லும் போது கேட்பது குறையலாம் அதனால் தைரியமாக குழந்தைகளை பீச்சுக்கு கூட்டிப் போகலாம்)  மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் கணவர்களின் ஏக்கங்கள் குறையலாம். கல்யாணம் ஆகியும் களவுக் காதலில் ஈடுபடுபவர்களின் ஆசைகள் நிறைவேறலாம்

அப்படி என்ன டெக்னாலாஜி அதை யாரு கண்டுபிடித்தது என்று அறிய ஆசையா மக்களே?

ஆமாம் என்பவர்கள் மேலே படிக்கவும் இல்லை என்பவர்கள் அப்படியே திரும்பி ஒடவும்..

இந்த புதிய கண்டுபிடிப்பான  அந்தரங்க ஆடை மூலம் காதலன் காதலி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தொட முடியும், வீடியோ சாட், தொலைப்பேசி சேட் இப்படி பல வழிகள் இதற்கு உண்டு.. இதனை  டூரக்ஸ் என்னும் கான்டம் தயாரிக்கும் கம்பெனி தான்  இதை அறிமுகப்படுத்தி உள்ளனர்

இதுல ஒன்றை  நீங்க வாங்கி மாட்டிகிட்டு இன்னொன்றை  உங்கள்  மனைவிக்கோ , காதலிக்கோ அல்லது பிடித்தமானவர்களுக்கு வாங்கி கொடுங்க. அதன் பின்  எங்க தொட வேண்டும் என்று உங்கள் ஐ ஃபோன் அல்லது ஆன்டிராயிடு மூலம் ஸ்க்ரீனில் தொட்டால் அங்கே உணரப்படும்..இதன் பெயர் "ஃப்ன்டாவேர்" வீடியோ பாருங்கள் -Put on a pair of these magic underpants called Fundawear, and you'll be able to feel your lover's touch from anywhere on the planet. Fundaware is a clever combination of a smartphone app and tiny vibrating motors sewn into female lingerie and male underpants. It accomplishes the task of "transferring touch across vast distances," Commissioned by the Australian division of condom company Durex, Fundaware uses tiny vibrating actuators similar to those that give your finger that buzzing "haptic feedback" on smartphones. The intensity of Fundawear's vibrations correspond to the movements of the person's finger touching the smartphone screen from afar. Video - Put on a pair of these magic underpants called Fundawear, and you'll be able to feel your lover's touch from anywhere on the planet. Fundaware is a clever combination of a smartphone app and tiny vibrating motors sewn into female lingerie and male underpants. It accomplishes the task of "transferring touch across vast distances," Commissioned by the Australian division of condom company Durex, Fundaware uses tiny vibrating actuators similar to those that give your finger that buzzing "haptic feedback" on smartphones. The intensity of Fundawear's vibrations correspond to the movements of the person's finger touching the smartphone screen from afar. Video - https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T6vul95hwOYLink-அன்புடன்

மதுரைத்தமிழன்

08/01/2013
6 comments :

 1. அடுத்து ஆப்பிரிக்காவில் இருக்கும் பையனுக்கும், இந்தியாவில் இருக்கும் பையனுக்கும் குழந்தை பொறக்க வாஇக்க முடியுமான்னு பார்க்க சொல்லுங்க. கல்யாணம், காட்சி, குடும்பம், வேலை, சம்பாத்தியம், சண்டை, டைவர்ஸ்லாம் கொஞ்சம் குறையும்!

  ReplyDelete
 2. அடப்பாவிகளா இப்படியும் ஆரம்பிச்சிட்டாயின்களா ?

  ReplyDelete
 3. தோழி மூலம் காதல் தகவல் சொல்லி, தோழியை கவ்விக்கிட்டு போனவங்களும் சரித்திரத்தில் உண்டு ஹி ஹி...

  ReplyDelete
 4. இன்னும் வ(ள)ரும்.

  ReplyDelete
 5. புதிது புதியாய் கண்டுபிடிப்புகள்......

  இன்னும் வந்து கொண்டே தான் இருக்கும்.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog