உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 12, 2013

அமெரிக்காவில் இந்து வைதிக முறைப்படி நடந்த முதல் லெஸ்பியன் திருமணம்அமெரிக்காவில் இந்து வைதிக முறைப்படி நடந்த முதல் லெஸ்பியன் திருமணம்

திருமணம் என்றால் ஓர் ஆணும் பெண்ணும் இணைவது என்பதைத் தவிர்த்து நம்மால் வேறு விதமாக சிந்திக்கமுடிவதில்லை. ஓர் ஆணையும் பெண்ணையும் போலவே, ஓர் ஆணும் ஆணுமோ அல்லது ஒரு பெண்ணும் பெண்ணுமோ மணம் செய்துகொண்டு இணைந்து மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பதை நம்மால் கற்பனையாவது செய்யமுடியுமா? அவ்வாறு நிஜமாகவே நடந்தால் நம்மால் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளமுடியுமா?


அதற்கு நமக்கு கிடைக்க கூடிய பதில் முடியும் முடியாது என்பதாகத்தான் இருக்கும். ஆனால் நம் பதில் எப்படி இருந்தாலும் வருங்காலங்களில் நாம் அதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் காரணம் நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே அளவு அப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் இருக்கிறது அவர்களின் தனி மனித உரிமையில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை என்பதே உண்மையாகும்

இதோ அந்த கூற்றின்படி அமெரிக்காவில் இந்து வைதிக முறைப்படி நடந்த முதல் லெஸ்பியன் திருமணம் . இரு தரப்பு குடும்பங்களின் ஆதரவோடு நடந்த திருமணம். இது போல திருமணங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமே. காரணம் இந்த திருமணங்கள் இங்கு சட்டப்படி நடக்கின்றன.

 மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்ததிரத்தை மதிக்கும் மனநிலை எனக்கு இருப்பதால் அவர்கள் நலமுடன் வாழ எனது தளம் சார்பாக நான் வாழ்த்துகிறேன்


இந்த திருமணத்தை போட்டோ எடுத்த போட்டோகிரபரின் வார்த்தைகள் இங்கே அப்படியே தரப்பட்டு இருக்கின்றன. போட்டோகிரபரின் கைவண்ணத்தில் போட்டோக்கள் மனதை கவருகின்றனhttp://www.stephgrantphotography.com/blog/shannon-seema-indian-lesbian-wedding-los-angeles-ca/


இந்திய கலாச்சாரத்தில் வந்தவர்களுக்கு இது ஷாக்காக இருக்கலாம் ஆனால் இது ஏதோ முதல் முறையாக அமெரிக்காவில் மட்டும் நடக்கிறது என்று கருத வேண்டாம் . இந்தியாவிலும் இப்படிபட்ட திருமணங்கள் வெளியில் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

 1. மாமியார் வீடு, பிள்ளைப்பேறு, அதை கவனிக்குறது, ஆணாதிக்கம் போன்றவற்றிலிருந்து விடுதலை. அதே நேரத்தில் அங்கயும், ஈகோ, பொசசிவ், அதிகார, அலட்சியம் போன்ர விசயம்லம் இருக்கு. எது எப்படி இருந்தாலும் கல்யாணம்ன்னாலே பிரச்சனைதான்!!

  ReplyDelete
 2. அதானே! மந்திரம் சொல்லாமே கல்யாணமா?
  பூனைக்கும் எலிக்கும் கல்யாணம் நடந்தாலும்...மந்திரம் சொல்லணும். இல்லாட்டி ஆகாது! யாருக்கு?

  ReplyDelete
 3. மதத்தின் பெயராலும் இப்படி ஒரு அவலமா?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog