Wednesday, August 7, 2013



நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா மதுரைத்தமிழா?


ஸ்கூல்பையன் மதுரைத்தமிழா மதுரைத்தமிழா எனக்கு ஒரு சந்தேகம் அதை தீர்த்து வையுங்களேன்

உனக்கு என்ன சந்தேகம் ஸ்கூல் பையா?


பெரிய மனுசன்  என்றால் வயதில் மூத்தவர்களா ?

ஸ்கூல் பையா பெரிய மனுசன் என்பவன் யாராவது தன் மனதை  காயப்படுத்தினால்,   தன்னை காயபடுத்தியதற்கான அந்த மனிதனின் சூழ்நிலையை  அறிந்து பதிலுக்கு அந்த மனிதனை காயப்படுத்தாமல் இருப்பவனே பெரிய மனுஷன் என்று நம் சமுகத்தில் சொல்லபடுகிறார்கள்


இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்



ஸ்கூல் பையா மேலே இருக்கும் இந்த படத்தை பார்த்தாயா? அந்த பெண் கவர்ச்சியாக சேலை கட்டி என் மனதை காயப்படுத்துகிறாள். ஆனால் நானோ அவளை காயப்படுத்துவதற்கு பதிலாக உடல் முழுவதையும் மறைக்க கூடிய அளவிற்கு துணி வாங்க முடியாத அவளின் சூழ்நிலையை புரிந்து கொள்கிறேன். அப்படி செய்வதுதான் பெரிய மனுஷனுக்கு அடையாளம்


அண்ணே உங்க பெரிய மனுஷ  விளக்கம் சூப்பர் அண்ணே.. நீங்க என் ஞானக் கண்ணை இன்று திறந்து வீட்டீர்கள் மிக்க நன்றி


இதை படிக்கும் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். ஹீ.ஹீ

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. துணி வாங்கி கொடுங்கப்பா பாவம் பயபுள்ள சேலை வாங்க கூட காசில்லை போல...!

    ReplyDelete
    Replies
    1. நாம் பொண்ணுகளுக்கு சேலை எல்லாம் வாங்கி கொடுக்கபாடாதுங்க அப்புறம் ஊரூக்குள்ள நம்மை பற்றி தப்பா பேசுவாங்க

      Delete
  2. தான் கெட்ட குரங்கு தனோடு சேர்த்து வனத்தையும் கெடுத்துச்சுன்னு ஒரு பழமொழி தமிழ்ல இருக்கு. அதுப்போல, நீங்க கெட்டது பத்தாதுன்னு ஸ்கூல் பையனையும் கெடுக்க ஆரம்பிச்சாச்சா?!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ இந்த குரங்கால் செய்ய முடிஞ்ச ஒரு நல்ல காரியம் அதுதானங்க

      Delete
  3. ஆண்டவரே இந்த சோதனைகளை தாங்கும் சக்தியை தாரும்

    ReplyDelete
    Replies
    1. சோதனை எனது பதிவிற்காக அல்லது அந்த படத்திற்காக தெளிவா ஆண்டவணிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் இல்லை என்றால் எல்லாப் பெண்களையும் அரேபிய பெண்கள் போல கவர்ச்சிகரமாக ஆடை அணியஸ் செய்து உங்கள் முன்னால் நிப்பாட்டிவிடுவாருங்க

      Delete
  4. உங்கள மாதிரியே நானும் பெரிய மனுசனா வளரனும்னு என்ன வாழ்த்துங்க தல..

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்ப ஆசைப்பட்டிங்களோ அப்பவே நீங்க பெரிய மனுஷனாக ஆகிவிட்டீர்கள்

      Delete
    2. பூப்புனித நீராட்டு விழா நடத்துவீங்களா?

      Delete
  5. பெரிய மனுஷனுக்கு புதிய இலக்கணம் வகுத்த மதுரை தமிழனுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அட வுட்டா நீங்க தமிழகத்தில் எனக்கு சிலையே வைத்து விடுவீர்கள் போல இருக்கே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.