உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 14, 2013

பாரதப் பிரதமராக வரக் கூடிய ஜெயலலிதா அவர்களை பஞ்சாய்த்து தலைவராக்க முயற்சியா?

பாரதப் பிரதமராக வரக் கூடிய ஜெயலலிதா அவர்களை பஞ்சாய்த்து தலைவராக்க முயற்சியா?


தனி ஒரு மனிதராக தமிழகத்தை தன் கையில் அடக்கி ஆண்டு வரும் பெண்மணிதான் ஜெயலலிதா அவர்கள் என்று நான் சொல்லிதான் யாருக்கும் தெரியவேண்டுமென்பதில்லை அவர் கொடநாடு சென்று ரெஸ்ட் எடுத்தாலும்  அரசை தன் கண்ட் ரோலில்தான் வைத்துள்ளார் ஆனால் கலைஞர் ரெஸ்ட் எடுக்க சென்றால்  கதை,கவிதை வசனம். சினிமா என்று இருந்துவிடுவார் சாதாரண ஆண்களைப் போல ஆனால் ஜெயலலிதாவோ  தன் வீட்டைவிட்டு தாய்வீட்டிற்கு வெகேஷனுக்கு சென்ற குடும்பத்தலைவி போல தாய்வீட்டில் இருந்தாலும் தன் சொந்தவீட்டை கவனிக்கும் பொறுப்பை மறந்துவிடாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.இப்படி தமிழக தலைவராக இருந்து செயல்படும் அவர் பாரதத்தின் தலைவராக ஆனால் இன்னும் சிறப்பாகவே இருக்கும். காரணம் இன்று நமக்கு தேவை தைரியமாக யாருக்கும் அஞ்சாமல் செயல்படும் தலைவர்தான் இந்தியாவிற்கு தேவை அந்த குணம் இவரிடம் இருப்பது யாவரும் அறிந்ததுதான்.


அப்படி திறமை வாய்ந்த தலைவரை இப்போது உள்ள தமிழக திரையுலகம் பஞ்சாயத்து தலைவராகவே எண்ணி செயல்பட ஆரம்பித்து இருக்கிறது. இந்த தமிழ் திரையுலகம் தமிழக மக்களின் எந்தவித பிரச்சனைகளுக்கும் இறங்கி போராடியதில்லை. ஆனால் அவர்கள் போராடுவதெல்லாம் தங்களின் படங்களுக்கு பிரச்சனைகளுக்கு மட்டுமே


சமிபகாலமாக படங்களுக்கு பிரச்சனை வரும் போது அதை சட்ட ரீதியாக கோர்ட்டுக்கு போவதைவிட்டுவிட்டு தமிழக முதல்வரை வைத்து பஞ்சாயத்து நடத்த விரும்புகின்றனர். இதை கடந்த விஸ்வரூபம் படம் வெளியிட்ட போதும் நடந்தது. இப்போதும் தமிழக முதல்வரை வைத்து தலைவா படத்திற்கு இது போல பஞ்சாயத்து நடத்த முயற்சி செய்வதாக தகவல்கள் வருகின்றன.


இப்படி கட்ட பஞ்சாயத்து செய்வதை ஜெயலலிதா அவர்கள் உடனே நிறுத்த வேண்டும். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது யாருக்கும் எந்த வித உபயோகம் இல்லாத இந்த பிரச்சனைகளில் தலையிட்டு அவரது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதுதான்  தமிழக மக்களின் கருத்தும் என் கருத்தும் ஆகும்

சில பேர் கேட்கலாம் இவர்கள் இந்த படத்திற்கு அதிக மூதலீடு செய்து இருக்கிறார்கள் படம் வரவில்லையென்றால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று அப்படி சொல்லுபவர்களிடம் ஒரு கேள்வி நாட்டில் எத்தனை தொழில்களில் பிஸினஸ்களில் பண மூதலிடு செய்த பலர் சம்பந்தமில்லாத  காரணங்களால் பல பிரச்சனைகளில் மாட்டி  சட்டரீதியாக கோர்ட் சென்று தீர்ப்பு வரும் வரை நஷ்டத்தை அடைந்து கொண்டுதானே இருக்கிறாரகள் அவர்கள் ஒவ்வொருத்தரும் என்ன ஜெயலலிதாவிடமா பஞ்சாயத்துக்கு வருகிறார்கள் அவர்கள் வர ஆசைப்பட்டாலும் நடந்துவிடுமா என்ன?

திரைபடத்தில் நடிப்பவர்கள் மக்களின் பொழுது போக்கிற்காக நடிக்க வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டும் படங்களை எடுக்கும் போது எந்த சமுக மக்களை பாதிக்காத வகையிலும் எடுக்க வேண்டும்  அதைவிட்டு விட்டு  வெளியே நாங்களும் பெரிய தலைவர்கள்தான் நாங்கள் நினைத்தால் இந்த சமுகத்தையே மாற்றிவிட முடியும் என்று சவடால் வீட்டுவிட்டு பிரச்சனை வரும் போது தன்மானத்தை இழந்து மண்டியிடவேண்டாம்

இறுதியாக ஜெயலலிதா அவர்களே உங்கள் நோக்கம் பாரதப் பிரதமராக வர வேண்டும் என்று இருக்க வேண்டுமே தவிர இந்த மாதிரி வீணாப் போன பிரச்சனைகளில் தலையிட்டு பஞ்சாயத்து தலைவாரக ஆக வேண்டாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. அருமையான கருத்து
  சொல்லிச் சென்றவிதமும் அருமை
  வாழ்த்துக்கள்
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நீங்கள் விஜய் மேல் உள்ள வெறுப்பினால் இப்ப்படி எழுதியிருக்கிறீர்களா அல்லது அம்மா மேல் உள்ள பாசத்தினால் இப்படி எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இந்த படத்த்தை நான் பார்த்துவிட்டேன். இதில் நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தை கெடுக்கிற எந்த விஷயமோ, அல்லது அரசியலோ இல்லை. இது எல்லா தமிழ் படம் போல ஒரு சாதாரண அடிதடி திரைப்படம் அவ்வளவுதான். நாயகன் படத்துடைய அச்சு அசல் காப்பி. (படம் நல்லது அல்ல மொக்கை என்ற topic கிற்கு வரவில்லை. நான் விஜய்-ஐ support-உம் செய்யவில்லை). இந்த யார் தடை செய்திருக்கிறார்களோ அவர்கள் ஒரு cheap mentality. நல்ல சுவாரஸ்யமான பதிவுகளை வெளியிடுகிற நீங்கள் ஏன் இப்படி biased article வெளியிட்டீர்கள் என்று தெரியவில்லை. இதே படத்தை வேறு கதாநாயகன் நடித்து, வேறு ஒருவர் முதல்வராக இருந்திருந்தால் நீங்கள் இந்த பதிவை இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
  ஒருவர் பிரதமராக ஆசைபடும்போது இன்னொருவர் முதல்வராக ஆசைப்படக்கூடாதா?

  ReplyDelete
  Replies
  1. எனக்கு யாரு மேலும் வெறுப்பு கிடையாது. நான் இங்கு குறிப்பிட்டு இருப்பது 2 படங்களையும் அதில் நடித்தவர்களையும்தான் இந்த தலைவா படத்தில் சமுகப் பிரச்சனை இல்லை ஆனால் அதில் நடித்தவர் விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் அதில் தப்பு இல்லை. ஆனால் அதற்கு அவர் ஒரு விலையை கொடுக்க வேண்டும்

   நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் அவர்கள் தங்கள் தொழிலான நடிப்பை அரசியலோடு கலந்தால் அவர்கள் படங்களுக்கு வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் நண்பரே

   Delete
  2. appadiya. actors has do only acting. they should not enter politics?? everyone knows it is cheap idea to block/suppress others..

   Delete
  3. நடிகர்கள் வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை அவர்கள் வந்தால் அதற்கொரு விலையை கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

   இந்தியா ஜனநாயக நாடுதான் ஆனால் அங்கு ஆட்சி செய்பவர்கள் அமெரிக்க போல ஜனநாயக வழியில் ஆட்சி செய்பவர்கள் அல்ல அதனால்தான் தனக்கு போட்டியாக வருபவர்கள் எவரோ அவர்களை ஆரம்பத்திலே முளையில் கிள்ளி எறிவது போல எறிந்துவிடுவார்கள்

   இது மிகவும் சீப்புதான் ஆனால் அதுதான் இந்திய அரசியலுங்க இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைங்க


   இது அரசியலில் மட்டுமல்ல பிஸினஸிலும் இது நடப்பதுதாங்க

   Delete
 3. நல்ல ஆலோசனைதான்.

  ReplyDelete
 4. VS Kesavan என்றவர் பேஸ்புக்கில் சொன்ன கருத்து எனக்கு பிடித்ததால் அதை இங்கு பகிர்கிறேன்

  சில பல அயர்ன் பாக்ஸ்களையும் தையல் மெஷின்களையும் கொடுத்து விட்டு தமிழக முதல்வராகிவிடலாம் என்று இன்னுமா இந்த திரையுலகம் நம்புது...நாம அவ்வளவு கேவலமாவா இருக்கோம்...அட ராமா.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog