Sunday, August 4, 2013


இணையத்தால் அல்ல நல் இதயங்களால் இணைவதே நல்ல நட்பு ( அனைத்து வயதினரும் படிக்க தவறாவிடக் கூடாத பதிவு )


காலையில் நாம் எழுந்திருக்கும் போது நல்லவர்களின் முகத்தில் முழித்தால் நல்லது நடக்கும் என நாம் நினைப்போம். . அது போல பதிவுகளை காலையில் பார்க்கும் போது நல்ல செய்திகளோடு படிக்க ஆரம்பித்தால் அந்த நாள் முழுவதும் மிக மகிழ்ச்சியாக உணர்வோம்.

அதன்படி இன்று நான் படித்த முதல் பதிவு நட்பு என்றால் நம்பிக்கை.  மஞ்சு சுபாஷினி அவர்களுடையது. அவர்களின் நட்பு வளையத்தில் நான் இல்லையென்றாலும் நான் மிகவும் மதிக்கும் இணைய பதிவாளர் அவர் ஆவார் ( அங்க என்ன சத்தம்.. ஓ ராஜி, சசி, உஷா அருணா செல்வமா? அம்மா தாயே நானும் உங்களை மதிக்கிறேனம்மா இல்லை என்று  நான் சொல்லிவிட முடியுமா  என்ன ? )

என்ன இன்னும் சத்தம் அதிகமாகி கொண்டிருக்கிறது....  சகோ ராஜி அது யாரும்மா கொஞ்சம் பார்த்து சொல்லம்மா

அண்ணா நம்ம மனோ அண்ணா கையில் அருவாவோட வந்து கொண்டிருக்கிறார். அவர் பின்னால் பால கணேஷ், சீனு, தி.தன்பாலன், ஜோதிஜி, விக்கி, முரளி, ஜோதிஜி, இன்னும் அதிக பேர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை நீங்கள் மதிக்கிறேன் என்று போடவில்லை என்பதால் அவர்களுக்கும் கோபம் அண்ணா

என்னம்மா இணையதள சண்டியர்களான அவர்களை நான் மதிக்காமல் இருந்து விட முடியாமா என்ன அவர்ளை மட்டுமல்ல  எல்லோரையும் முகத்தை வெளிகாட்டாத இந்த மதுரைத்தமிழன் மதிக்கிறான் என்று சொல்லிவிடமா.

சரி பதிவில் சொல்ல வந்த விஷயத்தை தவிர வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்று நண்பர்கள் தினமாதலால் இணையதள நண்பர்களுக்கும் எனது பதிவை தொடர்ந்து வாசித்து வரும் ஃப்ளோவர்களுக்கும் சைலண்ட் ரீடர்களுக்கும் எனது இரு  நட்புக்குரிய மிக அருமையான பதிவை உங்களுக்கு மீண்டும் தருகிறேன்

இதைப்படித்த பின் உங்களுக்குள் தோன்றுவது என்ன மதுரைதமிழன் இப்படி நல்ல பதிவுகளும் எழுதுவாரா என்ற ஆச்சிரியம் உங்களுக்கு தோன்றலாம்



ஒரு அழகிய மணமுள்ள  ரோஜாமலரை சில மீன்களோடு போட்டு ஒரு பையில் வைத்தால் சிறிதுநாளில் அது நாறத்துவங்கும். அது போலதான் நம் கூட உள்ள மோசமான நட்பால் நமது வாழ்வும் கெட்டுபோகும் மேலும் தொடர ( கூடா நட்பால் அதிகம் பாதிக்கபட்டவர் ஜெயலலிதாவா, கருணாநிதியா அல்லது நீங்களா? ) இதைப் படியுங்க நல்ல பதிவுதானுங்க....நட்பை பற்றிய ஒரு நல்ல பதிவு . எனது பதிவுகளில் தலைப்பைபார்க்காதிர்கள் அந்த பதிவில் உள்ள விஷயங்களை பாருங்கள். தலைப்பு அந்த நேரத்திற்கு வந்த செய்திகளின் அடிப்படையில் வைத்து இருப்பேன்.



மேல் சொன்ன பதிவை படித்துவிட்டு கண்டிப்பாக இதையும் படித்து செல்லுங்கள். தவற வீடாதீர்கள்



இப்படி ஒரு நட்பா? உறவா ?ஆண் பெண் இருவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு


அன்புடன்
மதுரைத்தமிழன்

17 comments:

  1. நம்மையெல்லாம் உங்க பட்டியல்ல சேர்க்க மாட்டீங்களோ?!

    ReplyDelete
    Replies
    1. // எல்லோரையும் முகத்தை வெளிகாட்டாத இந்த மதுரைத்தமிழன் மதிக்கிறான் என்று சொல்லிவிடமா.//
      கவிப்ரியன் இந்த வரிகளை நீங்கள் படிக்கவில்லையா என்ன?

      கவிப்ரியன் பட்டியலில் வராத பெயர்கள் எல்லாம் என் இதயத்தில் வெளியிட்டு இருக்கிறேன். உண்மையாகவே சொல்லுகிறேன் நான் எல்லோரையும் நேசிப்பவன் ... முகத்தைகாட்டி நேசிப்பதுபோல நடிப்பவர்கள் பலர் ஆனால் நான் முகம்காட்டாமல் அதே நேரத்தில் அனைவரையும் உண்மையாக நேசிப்பவன் நான் எதுவும் எதிர்பார்க்காமல்.

      Delete
  2. நண்பர்கள் தினத்தில் நட்பின் சிறப்பை விளக்கும் இரண்டு சிறப்பான பதிவுகளை படிக்க வைத்தமைக்கு நன்றி! இரண்டும் நன் முத்துக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நட்பை புரிந்து கருத்து இட்டதற்கு நன்றி சுரேஷ்

      Delete
  3. நணபர்கள் தின நல்வாழ்த்துகள்.....

    இதயங்களால் இணைவதே நல்ல நட்பு..... உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி &இதயத்தை புரிந்து கருத்து இட்டதற்கும் நன்றி வெங்கட்

      Delete
  4. உண்மையேப்பா... மதுரைத்தமிழன்...

    நீங்க என்னிடம் மெயிலில் முன்பு பேசி இருப்பது எனக்கு நினைவில் இருக்கிறதுப்பா..

    நீங்கள் என்னை சகோ என்று அழைத்து இட்ட மெயில் என்றோ எனக்கு வந்திருக்கிறது...

    என் நலன் குறித்து அன்புடன் நீங்கள் விசாரித்து மெயில் அனுப்பி இருந்திருக்கீங்க..

    நட்பு வட்டத்தில் நீங்க இல்லைன்னு எனக்கு சொல்லத்தெரியலப்பா..

    ஆனால் எனக்கு உங்களை நன்றாக தெரியும்...

    நல்ல விஷயங்களை மிக அருமையாக தொகுத்து தரும் வலைப்பூ உங்களுடையது...

    வாழை இலை எந்தப்பக்கம் மடிப்பது எதனால் என்று முன்பு ஒரு பதிவு உங்க வலைப்பூவில் தான் படித்தேன்..

    ஜாதி மதம் வித்தியாசமில்லாமல் அன்பு மட்டுமே இணைக்கும் அற்புதமான மனசு உங்களுடையது என்பதும் எனக்கு தெரியும்பா...

    நடுநிலையோடு எப்போதும் பதிக்கும் உங்கள் வரிகள் எனக்கு பரிச்சயம்பா...

    இது போதுமா நான் உங்களைப்பற்றி அறிந்தவரை சொன்னது?

    உண்மையே... இதயங்களால் இணைவதே நல் நட்பு..... அன்பின் இழை இருப்பதால் தான் நட்பு இற்றுப்போகாமல் இருப்பது...

    உங்களிடம் இருந்து மீண்டும் அதே அன்புடன் சகோதரத்துடன் மெயில் எதிர்ப்பார்க்கிறேன்பா..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இட்டது கருத்து அல்ல பாராட்டுப் பத்திரம். நோபல் பரிசைவிட மிகவும் உயர்ந்தது உங்கள் பாராட்டு. அது கிடைத்தால் இன்று மிகவும் சந்தோஷமாக இன்றைய நாள் கழிகிறது You made my day brighten. Thank you very much

      Delete
  5. என்னை பற்றி சொன்னதால் தப்பிச்சீங்க. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வலையுலகின் பெண் தாதா நீங்கள் ஆச்சே உங்களை மதித்து உங்கள் பெயரை சொல்லாவிட்டால் பதிவுதான் எழுதி வெளியிட முடியுமா என்ன?

      Delete
  6. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
    இதயங்களால் இணைவதே நல்ல நட்பு உண்மை நீங்கள் சொல்வது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி கோமதி அரசு

      Delete
  7. நண்பர்கள் தினத்தில் நட்பிற்குப் பெருமை சேர்க்கும்பதிவு நன்றி

    ReplyDelete
  8. என்னவோ எல்லாம் சொல்றீங்க படித்து தான் பார்ப்போமே !!!

    ReplyDelete
  9. வலையுலக நட்பென்பது ஆச்சர்யமான ஒன்று, அதுவரை பார்த்திராதவர்களைக் கூட நேரில் பார்க்கும் பொது கட்டி அணைக்க தூண்டும் அன்பு, பலவருஷங்களாக கூடவே இருந்தவர்கள் போல மனசு எண்ணுகிறது, ஆனந்தமாக இருக்கிறது...!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  10. குறுகிய காலத்தில் நெருக்கமான தோழமை பாராட்டிய உங்களுக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அப்பப்ப வந்து மிரட்டலைன்னா மறந்து போய்விடுவிங்களே... ! விடுவோமா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.