Wednesday, August 28, 2013


தமிழ் பதிவாளர்கள் திருவிழாவும்( 2013 ) புறக்கணிக்கப்பட்ட பதிவாளர்களும்





வலைப்பதிவாளர்கள் திருவிழா இந்த வருடமும் பதிவாளர்களால் நடத்தப்படுகிறது. இந்த விழாக்குழுவினர் பல குழுவை அமைத்து விழா ஏற்பாட்டினை  மிக சிறப்பாக செய்து வருகிறார்கள். அதில் எந்தவித குறையும் சொல்ல முடியவில்லை. மிகவும் சிறப்பாகவும் செய்துவருகிறார்கள் அதனை மிகவும் பாராட்டிதான் ஆக வேண்டும். இதனை நடத்துவதால் யாருக்கும் தனிபட்ட சுயலாபம் ஏதுமில்லை.  இப்படி நல்ல விஷயங்களை பாரட்டி பேசும் போது கண்ணில் பட்ட குறையையும் சுட்டிக்காட்டுவதிலும் நான் தயக்கம் காட்டுவதில்லை..


இந்த குறையை செய்தவர்கள், சென்னை சுற்றி வாழும் பதிவாளர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி அவர்களை அழைக்க ஏற்படுத்தப்பட்ட சென்னை குழுவினர்தான் அவர்களுக்கு எனது கண்டனம் காரணம் இவர்கள் இவர்களுக்கு வேண்டிய பதிவாளர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் மூத்த பதிவாளர்களான கிழே உள்ளவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. இதில் உள்ள மூத்த பதிவாளரை கடந்த முறை திருவிழாவிற்கும் அழைக்கவில்லை என்பதை இங்கே  சுட்டிக்காட்டி கடந்த முறையே எச்சரித்து இருந்தேன் இருந்த போதிலும் அதே தவறை இந்த முறையும் செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டதும் என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை


அந்த மூத்த பதிவாளர்கள் இவர்கள்தான்

மூத்த பதிவாளர்கள்

1. கலைஞர் ( இவர் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் கலக்கி வருபவர்)
2. ஜெயலலிதா  இவர் பேஸ்புக்கில் மட்டும் கலக்கி வருபவர்)


எழுத்தாளர்கள் பெயர் & அவர்களது இணையதளம் 
List of Tamil writers & Website


இவர்களும் பதிவாளர்கள்தானே ? இவர்களை எல்லாம் கூப்பிடாதது தவறுதானே?


அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி: எனக்குதான் வெகேஷன் உங்களுக்கு வெகெஷன் இல்லை. என் பதிவைபடிக்காமல் தப்பிக்கலாம் என நினைத்தீர்களா என்ன? அதுதான் நடக்காதே
















21 comments:

  1. தேடி கண்டுபிடித்திருகிங்க... லிங்க்-உடன்...

    ReplyDelete
  2. இப்படிலாம் கூட்டத்துல யாராவது குழப்பம் பண்ணுவாங்கன்னு நீங்க அசரக்கூடாதுன்னு விழாக்குழுவினர் சார்பா அவங்களுக்குலாம் தனியா மெயில் அனுப்பிட்டோம்!!

    ReplyDelete
  3. திரு விழான்னு சொல்லிட்டோம்
    கொடியும் ஏத்திட்டோம்
    அவரவர்கள் கலந்து கொண்டு
    மகிழ்ச்சி கொள்வது சிறப்பு
    திருவிழான்னா அப்படித்தானே
    சுவாரஸ்யமான பதிவு
    வர இயலாத சூழலிலும் பதிவர் சந்திப்பு குறித்த
    நினைவுகளோடு தொடர்ந்து இருக்கும் தங்களுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. அவரவர் கலந்து கொள்வதுதான் சிறப்பு. இருந்தாலும் கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் நேரில் அழைப்பு வைத்திருக்கலாமோ என்று தான் நான் நினைக்கிறேன் ஹீஹீ

      Delete
  4. ஆஹா நானும் பயந்தே போயிட்டேன்பா.. நீங்க போட்டிருந்ததை படிச்சுட்டு மனசு பதைக்க ஓடி வந்தால்.... உங்களை என்ன செய்யலாம் :)

    சரி சரி... இவர்களை எல்லாம் அழைப்போம் கண்டிப்பா.. ஆனா இப்ப இல்ல அடுத்த வருடம் :) ஓகேவாப்பா?

    ஒழுங்கா பதிவர் மாநாட்டுக்கு வரப்பாருங்க :)

    எப்படி இத்தனைப்பேரோட லிங்க் கலெக்ட் பண்ணீங்க? சிரமமா இருந்திருக்குமே...

    சீரிய முயற்சி சகோ.. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. அட இது எழுத்தாளர்களை அவர்களின் இணைய லிங்குடன் வித்தியாசமாக அறிமுகப் படுத்து ஒரு பதிவுதானங்க. இதெற்கெல்லாம் பயப்படலாமா? நாம சொல்லும் விஷயம் நாலு பேருக்கு சென்று அடைய வேண்டுமுங்க அதனாலதான் காலத்திற்கு ஏற்றவாறு சூழ்னிலைக்கு ஏற்றவாறு தலைப்பு வைத்து நாலு கிறுக்கு கிறுக்கி எழுதினாதாங்க அது எல்லோரையும் சென்று அடையும்.

      Delete
  5. ம்.. இனிமே வெகேஷனுக்கு கிளம்பினா லேப்-டாப்பை வீட்லயே வச்சிட்டு போகனும் சரிங்களா?

    ReplyDelete
    Replies
    1. வெகேஷனுக்கு போகும் போது பூரிக்கட்டையை மட்டும் வீட்டில் வைத்துவிட்டு போவோமுங்க

      Delete
  6. இந்த தொகுப்பில் நான் தந்திருக்கும் எழுத்தாளர்களின் வலைத்தளத்தில் பதிவுகள் மிக அருமையாக இருக்கின்றது. அது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது

    ReplyDelete
  7. ஞாநி அவர்களின் வலைதளம்?

    ReplyDelete
    Replies
    1. சரி செய்துவிட்டேன் நண்பா

      Delete
  8. மிக அற்புதம் இந்த தளங்களை தேடித்தந்த விஷயம் சிறப்பு. நீங்க வாங்களேன் சந்திப்பிற்கு.

    ReplyDelete
    Replies
    1. என்னமோ எனக்கு இந்த சந்திப்பிற்கு வர பிடிக்காத மாதிரி நினைக்கிறீங்க போலிருக்கு? நான் மட்டும் இந்தியாவில் இருந்து இருந்தால் நாந்தான் முதல் ஆளா வரிந்து கட்டி வேலை செய்து இருப்பேன்.

      Delete
  9. என்னைப்பொருத்தவரை இத்தனைபேரின் வலைப்பக்கச் சுட்டிகள் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது இலாபம்! (சில பக்கங்கள் ஏற்கெனவே தெரியும்)

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எனக்கு தெரிந்த சில எழுத்தாளர்கள் மிஸ்ஸிங்க் அதனை இதே பக்கத்தில் விரைவில் இணைக்கிறேன்

      Delete
  10. ஸ்ரீராம் சார் சொன்னது மிகச்சரி.. மிகச்சிறந்த (அ)புக்மார்க் பதிவு

    ReplyDelete
    Replies
    1. புக்மார்க்காக save செய்து கொள்ளுங்கள் கூடிய சீக்கிரம் மேலும் பல எழுத்தாளர்களின் லிஸ்ட்டும் தொடரும்

      Delete
  11. இது நம்ப குடும்ப விழாங்க..அத்தனை பதிவர்களும் அழைக்காமலே ஆளுக்கு ஒரு வேலையா எடுத்துக் கட்டி செய்யணும் ..இதுல உன்னை அழைக்கல என்னை அழைக்கலன்னு யாருப்பா பேசறது... போங்க போங்க அடுத்த வேலைய கவனிங்க... சமாளிச்சிடுவோமில்ல....

    எப்படியோ பல நல்ல வலைப்பக்க சுட்டிகள் கிடைத்தது மகிழ்வு.....

    ReplyDelete
    Replies
    1. நீங்க என் தளத்திற்கு புதியவர் என நினைக்கிறேன் அதனாலதான் நான் சொன்னதை சீரியஸா எடுத்துகிட்டீங்க் போல இருக்கு ..அட இது நம்ம குடும்பவிழாதானுங்க அதை குறை சொல்லி எழுதலைங்க. யாரையும் தனிதனியாக வெத்தலை பாக்கு வைச்சு அழைக்கமுடியாதுங்க..எல்லாப் பதிவாளர்களும் விழா பற்றிய செய்திகளை பகிர்ந்து அதில் கலந்து கொள்ள யாரை தொடர்பு கொள்ளனும் என்று அழகாக பதிந்து இருக்கிறார்கள் அதைப் பார்த்தும் தொடர்பு கொள்ளதவர்கள் வராதவர்கள் இந்த விழாப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள் என்பதுதான் என் கருத்துங்க

      Delete
  12. தலைப்பில் ஒரு எதிர்பார்ப்பு, தேடி சேகரித்த சுட்டிகளின் தகவல்கள் மிக அருமை. பதிவு திருவிழாப் பற்றிய சிந்தனைக்கு சிரம் தாழ்த்தி வணக்கம். நன்றி அய்யா.

    ReplyDelete
  13. வித்தியாசமான பதிவைப் பதிந்துவிட்டீர்கள். அதிர்ச்சி வைத்தியம்:) நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.