உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 7, 2013

சிங்கம்டா மதுரைத்தமிழன் ......சிங்கம்டா மதுரைத்தமிழன் ......


என் வீட்டில் போன் ஒலித்தது போனை எடுத்தால் ஒரு சகோ ..அண்ணே செளக்கியாமா?  என்று கேட்டார்

ஆமாம்  செளக்கியம்தான் நீங்க யாருன்னு கேட்டேன். அதற்கு அவர் நான் ஒரு தமிழ் பதிவாளர் என்று சொன்னார்

சரி உங்க பெயர் என்ன என்று கேட்டேன் அதற்கு அவர் பெயர் எல்லாம் முக்கியமல்ல... என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்க என்று அடாவடிதனமாக பேசினார்..

நானும் போனா போதுன்னு உங்க கேள்வி என்னங்க என்று கேட்டேன்

அந்த பதிவர் பேர்கூட சொல்லாம அனானியாக  நீங்க ஆபிஸ்ல மற்றும் வெளி உலகத்துல சிங்கம் மாதிரி வந்து கொண்டிருக்கீங்க நீங்க வீட்டுல எப்படிங்க? இது எனக்கு மட்டுமல்ல இந்த தமிழ் பதிவுலகத்தில் உள்ள அனைவருக்கும் உள்ள சந்தேகம் என்று புத்திசாலித்தனமாக கேட்டார்அதற்கு நான் அந்த அனானி பதிவரிடம், " நான் வீட்டுலேயும் சிங்கம்தாண்டா'......அதில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் என் மனைவி துர்க்கா கடவுள்டா அதுனால அவங்க என் மேல எப்போதும் உட்கார்ந்திருப்பாடா என்றேன்


இதைகேட்ட அவர் தலை தெரிக்க ஒடினார் ஒடினார் ஒடிக் கொண்டே இருக்கிறார்.


இந்த மதுரைச்சிங்கத்திடம் இனி யாராவது வந்து கேள்விகேப்பாங்காளா என்ன?அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : அனானியாக வந்து பேசியவர் யார் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தரப்படும்

10 comments :

 1. சரியான பதில்...! வாழ்க வளமுடன்...!

  ReplyDelete
 2. சமாளிஃபிகேஷன்?!

  ReplyDelete
 3. அவரு தலை தெரிக்க ஓடுனதெல்லாம் தெரியுத மாதிரி என்ன போனுன்னே உபயோகிக்கீங்க?

  ReplyDelete
 4. ஹாஹா படம் அருமை அண்ணே

  ReplyDelete
 5. ஐயோ ஐயோ ஒண்ணா ரெண்டா... ஆ...யிரம் பொற்காசுகள் (நாகேஷ் வாய்ஸ்!!)
  கண்டுபிடித்து கொண்டு வாங்க ஞாயமார்களே!

  ReplyDelete
 6. நல்லாவே சமாளிக்கீறீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. ம்ம்ம்... நல்லாத்தான் கேட்டு இருக்காரு! நீங்களும் நல்லாவே பதில் சொல்லி இருக்கீங்க! :)

  ReplyDelete
 8. 01.09.2013அன்னைக்கு பதிவர் சந்திப்புக்கு அமெரிக்காவிலிருந்து வாங்க. வர்ற பதிவர்களை எல்லாம் வரிசையா நிக்க வச்சு அந்த கேள்விய கேக்க வச்சு கண்டுபிடிச்சிடலாம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog