Tuesday, July 9, 2013

 

@avargal unmaigal

திருடுவது , பொய் சொல்லுவது , ஏமாற்றுவது தப்பில்லைங்க???

 நான் பல சமயங்களில் சிந்தித்து எழுதிய சிறு கருத்துக்களை ஒரு பைலில் சேர்த்து வைத்திருந்தேன். அதை உங்கள் பார்வைக்காக இங்கு வெளியிடுகிறேன். நான் நிறைய இணையத்தில் படிப்பேன், அப்படிப் படிக்கும் நேரத்தில் மனதில் சட்டென்று சில கருத்துக்கள் தோன்றும். அதை உடனே அதற்கென்று இருக்கும் பைலில் எழுதி வைத்துவிடுவேன் அப்படி எழுதி வைத்த கருத்துகளிலிருந்து சில சமயங்களில் ஒரு நல்ல பதிவே வந்துவிடும்.
 
இன்று அப்படி நான் எழுதி வைத்த கருத்து குவியலிலிருந்து எனக்குப் பிடித்தவற்றை இங்குத் தொகுத்து வழங்குகிறேன். அதைப் படித்து நீங்களும் ரசித்தால் உஙளுக்கு நேரமிருந்தால் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லிவிட்டு போங்கள். இன்னும் ஒரு சில தினங்களில் இந்த வலைத்தளம் நான்காவது ஆண்டில் உங்களின் அதீத ஆதரவோடு அடித்தளம் எடுத்து வைக்கிறது. உங்களின் பேராதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்


1. நீ அரசியல்வாதிகளாக இருந்தால் திருடுவது, பொய் சொல்லுவது, ஏமாற்றுவது தப்பில்லை

2. திருடனைத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கும் நாளைத்தான் தேர்தல்நாள் என்று இந்தியர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்

3.ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு நல்ல தலைவன் இருக்கிறான் ஆனால் தமிழ் மக்களுக்கு(+ இந்திய) மட்டும் ஒரு நல்ல தலைவன் இல்லை.

4.அரசியல் வாதிகள் மக்களைப் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட மக்கள் அரசியல்வாதிகளைச் சிறிது கூட புரிந்து கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

  5.கருப்பு இனத்தவரைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தற்கு அமெரிக்கர்கள் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள் அப்ப ஊமையனைத் தலைவனாக தேர்ந்தெடுத்த இந்தியர்கள் எவ்வளவு பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.

6. இரு நண்பர்களிடையே உள்ள நட்பு முறிவதற்கு முக்கிய காரணம் அவனைவிட நான் ஒரு பெரிய பிஸ்தா என ஒவ்வொருவரும் நினைப்பதுதான்

7. பணக்காரனின் விட்டிலில் பல ஜன்னல்களும் ஏழையின் சட்டையில் பல ஜன்னல்களும் இருப்பது இயற்கையே

8. குளிரில் நடுங்கும் ஒரு மனிதனுக்கு ஒரு தீக்குச்சியைக் கொடுத்தால் அவன் ஒரு நிமிடம் மட்டும் சூட்டைப் பெறுவான். ஆனால் அதே மனிதன் மேல் நெருப்பை வைத்தால் அவன் உயிர் உள்ளவரை மிக அதிக சூட்டோடு வாழ்வான்.

9. பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை என்று ஒன்று இல்லாவிட்டால் கடவுளின் மீது நம்பிக்கையே வந்திருக்காது

 10. ஆட்டோ ரிக் ஷாவின் மீட்டரில் உள்ள முள்ளைப் போன்றுதான் வாழ்க்கையும் ஒரே இடத்தில் நின்றால் கூட ,அது நிக்காமல் தொடர்ந்து ஒடிக் கொண்டிருக்கும்.

11. கல்யாணம் ஆகும் வரை வாழ்க்கையில் ஏதோ மிஸ் ஆகிறது போல இருக்கும்.ஆனால் கல்யாணம் ஆன பிறகு வாழ்க்கையே மிஸ் ஆனது போல இருக்கும்


12. அந்த காலத்தில் ஒரு தப்பு செஞ்சிட்டா ஒரு நிமிடம் அமைதியாக நின்று யோசித்து இனிமேல் எப்படித் தப்பு பண்ணாமல் இருக்குறதுன்னு யோசிப்பாங்க. ஆனால் இந்த காலத்தில் ஒரு தப்பு செஞ்சிட்டா ஒரு நிமிடம் அமைதியாக நின்று யாரு மேல பழி போடலாமென்று யோசிக்கிறார்கள்.



13. தமிழர்கள் ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டார்கள் அது வேறு யாருமல்ல நான்தாங்க அந்த தலைவன்

அன்புடன்
மதுரைத்தமிழன

6 comments:

  1. இது நல்லாருக்கு, அது நல்லாருக்குன்னு குறிப்பிட்டுப் பாராட்ட முடியாதபடிக்கு எல்லாமே அருமையா இருக்குது நண்பா! ஆனாலும் அந்த 13வது.... மதுரைத் தமிழன் பஞ்ச்சைத் தாங்க முடியலடா சாமி...!

    ReplyDelete
    Replies
    1. இந்த 13 வது பஞ்சு டயலாக்கிற்கே இப்படி அலறினால் எப்படி? இப்பதானானே ஆரம்பிச்சிருக்கேன் இனிமேதானே விஸ்வரூபம் ஆரம்பிக்க போது....

      படித்து ரசித்தற்கு நன்றி

      Delete
  2. அன்புள்ள மதுரைத்தமிழன்... தாங்கள் விடுமுறையில் ஊருக்கு வரும்போது கட்சி பேதம் பாராமல் அனைவரும் தங்களைக் குமுற வாய்ப்புள்ளது பிரகாசமாகத் தெரிகிறது.... (1 முதல் 5 வரை)

    ReplyDelete
    Replies
    1. நான் இந்தியா வரும் போது ஸ்கூல்பையன் காலேஜ் பையனாக மாறி எனக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டாரா என்ன?

      Delete
  3. 5 வது அப்புறம் 11 வது ரொம்ப பிடிச்சிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. 11வது பிடிச்சவங்களுக்கு அதாவது கல்யாணம் ஆன ஆண்களுக்கு 5 வது கண்டிப்பாக (ஊமையாய் நடிப்பது) பிடிக்குமுங்க. இதை பிடிச்சிருக்கு என்று சொல்வதால் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன் சரிதானே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.