உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, July 20, 2013

மதுரைத்தமிழனும் தினப்பலனும்மதுரைத்தமிழனும் தினப்பலனும்தினசரிகளில் வரும் தினப்பலனை பார்த்து கிண்டல் அடிக்கும் என்னிடம்  என் நண்பணோ நீ நம்பிக்கையோடு அதைப்பார்த்தால் அந்த பலன் பலிக்கும் என்றான்.

நானும் சரியென்று சொல்லிவிட்டு அன்றைய தினசரியை எடுத்து பார்த்தேன் அதில் என் ராசிக்கு தினபலனை பார்த்தேன் அதில் அன்று  "வாகனப்ராப்தி, நூதன ஸ்த்ரீகளின் சிக்ஷ்ருட்சை" என்று போட்டிருந்தது.

என்னடா இது! இதெல்லாம் எப்படி ஏற்படமுடியும்? செருப்புக்கு போடக் கூட வக்கு இல்லாதவன் நாம் பஸ்ஸில்கூட எங்கும் செல்வது இல்லை! பெண்கள் பக்கமும் திரும்புவதில்லை & சம்பந்தமும் கூட கிடையாதே?" என்றெல்லாம் எண்ணியாவாறே
வீதியில் நடந்து சென்றேன்.

அப்படி நடந்து சென்ற என்மேல் கார் மோதிவிட்டது. நானும் காயத்துடன் மயக்கமாக விழுந்துவிட்டேன்.  அதன் பின் ஆம்புலன்ஸ் வந்தது.என்னை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள் . அங்கு  எனக்கு வைத்தியம் நடந்ததது . அங்குள்ள வார்டில் உள்ள நர்ஸ்கள் என்னை  சுத்தப்படுத்தி வேறு உடை மாற்றி சாப்பாடு, மருந்து எல்லாம் தந்து கவனித்தனர்.

அதன் பின்தான் எனக்கு புரிந்ததது  எனது தினப்பலன் என்றால் இப்படிதான்  பலிக்குமோ என்று

"நூதனஸ்த்ரீகளின் சிக்ஷ்ருட்சை" - நர்ஸ்களின் பணிவிடை
"வாகனப்ராப்தி" - ஆம்புலன்ஸ் பயணம்,


எனக்கு படத்தில் உள்ள பிகர் அல்ல கலர் ரொம்ப பிடிக்கும். நான் அந்த பொண்ணின் கலரைச் சொல்லவில்லை அவள் அணிந்திருக்கும் சேலையின் "மாம்பலக்" கலரைச் சொல்லுகிறேன்

அதன் பின் தினப்பலனை எட்டிப்பார்க்கும் வழக்கமே இல்லாமல் போய்விட்டது சரி ரொம்ப ஆண்டுகள் கழித்து இன்று என்ன பலன் என்று பார்த்தேன் அதில் என் ராசிக்கு அதிக ஹிட் என்று இருந்தது. ஆஹா நம்ம பதிவுக்கு இன்று ரொம்ப ஹிட்டு கிடைக்கும் என நினைத்து மகிழ்ந்தேன். மகிழ்ந்த அடுத்த நொடியில் எனக்கு ஹிட் கிடைக்க ஆரம்பித்தது அந்த ஹிட் என் பதிவிற்கு வந்தது அல்ல  என் தலைக்கு வந்தது. பூரிக்கட்டையால் காரணம்  என் மனைவி நான் குளிச்சிட்டு வந்துடுறேன் அதுவரைக்கும் கொஞ்சம் அடுப்பை பாத்துகுங்க என்று சொல்லிட்டு போனாள் ஆனால் அது என் காதில் நீங்கள் கொஞ்ச நேரம் இடுப்பை பார்த்து கொண்டிருங்கள் நான் வந்துவிடுகிறேன் என்று சொன்னது போல காதில் விழுந்தது. லேப்டாப்பில் இருந்த நான் அப்படியே ஒரு நல்ல இடுப்பை ரசித்து கொண்டிருந்தேன் அதுக்குதாங்க இப்படி ஹிட்டுகள் அதிகம் விழுகிறது இந்த பெண்களே இப்படிதானுங்க சொல்லுரதை தெளிவா ப்ரியும்படையா சொல்லுறது இல்லை ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. ஹா...ஹா... பூரிக்கட்டை மட்டும் பத்தாது...!

  ReplyDelete
 2. நல்ல நகைச்சுவை விருந்து. ரஸித்தேன். சிரித்தேன்.

  அடுப்பு - இடுப்பு ;)))))

  [இடுப்புக்கான படத்தேர்வு அருமை]

  ReplyDelete
 3. காலெண்டர் ஜோசியம் பலிக்கும் இப்பவாவது புரிஞ்சுக்கோங்க.
  விதி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சா அடுப்பு இடுப்புன்னுதான் காதுல விழும்

  ReplyDelete
 4. பார்த்ததுக்கே அடி! தொட்டுத் தடவியிருந்தா.....?

  நல்ல வேளை, அப்படி ஏதும் நடக்கல!

  ReplyDelete
 5. ஐயோ அம்மா
  வாழ்க வளமுடன்
  அகாச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 6. அடுப்பு இடுப்புன்னு கேட்டுச்சா ? பூரிக்கட்டை கூட உலைக்கையும் சேர்ந்து வந்தாலும் ஆச்சர்யம் இல்ல...!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog