உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, July 8, 2013

வெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்

வெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்

நாட்டை கொள்ளை அடிப்பவன் நாட்டை காப்பவனிடம் கணக்கு கேட்கும் கேவலம் வேறு எங்கும் கேள்விபட்டு இருக்க முடியாது. ஆனால் அப்படி ஒரு கேவலமான கேள்வி கேட்கும் அரசாங்கம் இந்திய அரசாங்கமாக மட்டுமே இருக்க முடியும்.


அரசாங்க வளத்தையும் நிதியையும் கொள்ளை அடிப்பதாகவும் இருக்கட்டும் அதை வீணாக்குவதாகட்டும்  இந்திய அரசியல் தலைவர்களுக்கு இணையாக உலகத்தில் வேரு யாரும் இருக்க முடியாது.. நாடாளுமன்றம் கூடும் போதெல்லாம் அங்கு சென்று தங்கள் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைக்காமல் வெளிடப்பு செய்துவிடுவதும் அல்லது நடக்கவிடாமல் செய்வதாலும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணத்தை விரயமாக்குவதாகட்டும் அல்லது தேவை இல்லாமல் சக அமைச்சர்களுடனும் குடும்பத்தினருடனும் அரசாங்க செலவில் வெளிநாடு பயணம் மேற்கொள்வதாகட்டும், அல்லது நடக்காத திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அதற்கு விழா எடுத்து அதற்கு அதிக செலவு செய்து விளம்பரம் செய்வதும் இது போல மேலும் பலவற்றை சொல்லிக் கொண்டு போகலாம். இதற்கு யாரும் கணக்கு கேட்பதில்லை.


ஆனால் நம் நாட்டை உயிர் கொடுத்து காக்கும்  நாம் ராணுவத்தினர் எதிரிகளுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்தும் போது அதில் இருந்து வெளியேறும் குண்டுகளுக்கு கணக்கு காட்ட வேண்டுமாம் இந்த வெட்ககேடான நிகழ்ச்சியை வேறு எங்கும் கேட்டு இருக்க முடியாது. இதை சக பதிவாளாரும் ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் தன் பதிவில் இப்படி வெளியிட்டு இருந்தார்.

எனது பட்டாலியன் மிக கடுமையான ஒரு பதிலடி கொடுத்தது.அந்த பகுதியில் பாகிஸ்தான் இதற்க்கு முன் சந்திக்காத அதிரடி அது.கிட்டத்தட்ட அனைத்து ஆயுதங்களாலும் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது எனது பட்டாலியன்.

இப்படியான தாக்குதலில் தாக்குதல் முடிந்த பின் சுட்டவற்றிர்க்கு கணக்கு காட்ட வேண்டியிருக்கும்...அது ஒரு தலைவலி பிடித்த வேலை..அது போக ஏன் இவ்வளவு குண்டுகளை வீணடித்திர்கள் என்று வேறு கேள்வி வரும்.இதற்கு பயந்தே தாக்குதல்களை ஒரு அளவாக  பல பட்டாலியன்களின் கமாண்டன்ட்கள்  வைத்து கொள்வார்கள்.இதை அறிந்தே பாகிஸ்தானும் சீண்டி கொண்டே இருக்கும்.இதை படித்ததும் எனக்கு மிகவும் அதிர்ச்சியும் மிக வருத்தமும் ஆத்திரமும்தான்  வந்தது


நாட்டை அழிக்க வரும் திவிரவாததிகளைவிட இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வரும் நம் அரசியல் தலைவர்களே மிகவும் மோசமானவர்கள் & கேவலமானவர்கள்

சூடு சுரனை  உள்ள ஒவ்வொரு இந்தியனும் இதை தட்டிக் கேட்டு இதை மாற்றி அமைக்க போராட வேண்டும்


நமது ராணுவவீரரும் பதிவாளரும் சொன்ன செய்தியை படித்து என் மனதில் தோன்றியதை இங்கே கொட்டி உள்ளேன்
அவ்வளவுதாங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. இது போன்ற விஷயங்கள் எதிரிகளுக்கு சாதகமாகி விடுகின்றன என்பது உண்மைதான்.
  ராணுவத்தினர் அதை தவறாக பயன் படுத்தக் கூடாது என்ற நோக்கம்தான் காரணமாக இருக்கக் கூடும். அது பலவீனமாக ஆகிவிடுவது துரதிர்ஷ்ட வசமானது. நீங்கள் குறிப்பிட்ட பதிவை இன்னும் படிக்க வில்லை. படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 2. அதிர்ச்சியூட்டும் செய்தி
  படித்து மிக நொந்தேன்
  அனைவரும் இதை அறிய
  பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 3. உண்மைதான்.. நம் அரசியல் தலைவர்கள் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமா??

  ReplyDelete
 4. வெட்கக்கேடு

  ReplyDelete
 5. கண்டிப்பாக இதை எதிர்க்க வேண்டும் இந்திய அரசியல்வாதிகளை நடுகடலில் கொண்டு விட்டு விட வேண்டும் அப்போது தான் நாடு உருபுடும்

  ReplyDelete
 6. முரளி,ரமணி சார், சங்கவி & சக்கரகட்டி உங்கள் மனக் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog