Tuesday, July 2, 2013



ஒரு புதிய பிரதமர் புண்ணிய பூமியில் இருந்து அவதரிக்க  இவ்வளவு கோடி தேவையா ?
 

 
உலக மக்களை வியக்க வைக்கும் இந்தியா . இங்கு  பணம் என்பது குப்பை போல  வேன்களிலும் லாரிகளிலும் எடுத்து செல்லப்படுகின்ற அதிசயம் நடப்பது இந்தியாவில் மட்டுமே. வேறு எந்த நாட்டிலும் இந்த மாதிரி சம்பவங்களை கேள்வி பட்டிருக்க முடியாது.

நேற்றைய இரவு (திங்கள் இரவு ) மும்பையில் கைப்பற்றிய பணம் 2500 கோடிக்கும் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.



மும்பையில் டெம்போ வேனில் பணம் மற்றும் நகைகள் கடத்தப்படுவதாக தேசிய புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்ததும். உடனடியாக்  மும்பை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட போது 4 வேன் களில் இருந்து பணமும் நகையும் குப்பைகளை போல வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அதில் இருந்த 47 பேரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிக்கிய பணம் மதிப்பு என்று தற்போது சொல்ல முடியாது என்ற போதிலும் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி வரை மதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த பணம் மோடி ஆளும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு கொண்டு செல்லப்படவிருந்தாக தெரிய வருகிறது. இது போன்று மும்பையில் இருந்து குஜராத்துக்கு மாபியா கும்பல் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மோடியை மகானாகவும்,  குஜாரத்தை புண்ணிய பூமியா கருதும் சில  ஊடகங்கள் இதனை உடனடியாக தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி செய்தியை திசை திருப்பச் செய்கின்றன .

நிச்சயம் இதில் பல அரசியல் வாதிகள் நிச்சயம் சம்பந்தப்பட்டிருப்பார் . ஆனால் இதில் இருந்து எந்த எந்த அரசியல்வாதிகளுக்கு சம்பந்தமில்லை என்று காண்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கும்.

முதலில் வந்த செய்திகளில் 2,500 கோடி என்று வெளிவந்ததது. அதன் பின் இப்ப வரும் செய்திகள் 200 கோடி என்று செய்திகளை பரப்பி வருகின்றன. நாளையை செய்தியில் அது 20 கோடியாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. இதையெல்லாம் தீர்மானிப்பது இந்தியாவின் அதிகார வர்க்கமும் அதற்கு உடன் போகும் ஊடகங்களும்தான்.
 
இறுதியாக இதை பாகிஸ்தானில் இருந்து வந்த கள்ள நோட்டுகள் என்று திசை திருப்பவவும் அல்லது இந்த மூட்டைகளில் இருந்தது உண்டியலில் இருந்து சேகரிக்கப்பட்ட  ரூபாய் நோட்டுகள் காசு மூட்டைகள் என்ரும் செய்தி வரலாம்

இந்திய பொதுமக்களின் ஆதங்கம் எல்லாம் கோடிக்கணக்கான பணம் என்பதை கேள்விபட்டு மட்டும் இருப்பார்கள் அந்த கோடிக்கணக்கான பணம் எவ்வளவு என்பதை டீவியில் காண்பித்தால் பார்த்து சந்தோஷப்பட்டு போவோமே என்பதுதான்

அதனால் அதிகார வர்க்கமே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் பரவாயில்லை ஆனால் ஒரு தடவைமட்டும் எங்கள் கண்ணில் காண்பித்து விடுங்களேன். எங்கள் ஆசையாவது தீருமே,, அதிகார வர்க்கமே கவலைப்படாதீர்கள் நாங்கள் புரட்சி ஏதும் செய்துவிடுவோம் என்று அந்த அளவிர்கு எங்களுக்கு சூடு சுரனை எல்லாம் கிடையாது. எங்களுக்கு தேவை நீங்கள் தரும் இலவசம் மட்டுமே

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. எங்க வீட்டுக்கு இன்னும் மிக்சி, கிரைண்டர், ஃபேன் வரலை சகோ!

    ReplyDelete
  2. இலவசங்களுக்கு மயங்கிய மக்கள் பணத்தை கண்ணால் கண்டாவது ஆறுதல் அடையட்டுமே நினைக்கறீ்ஙக.... ஹும்! நிலைமை அப்படித்தானே இருக்குது? விபத்துக்கள்ல இறந்தவங்க எண்ணிக்கைய குறைச்சுச் சொல்ற மாதிரி பணத்தோட மதிப்பையும் குறைச்சுத்தான் சொல்வாங்க எப்பவுமே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.