உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, July 29, 2013

நியூயார்க்கில் ஒரு தமிழ்பரதேசி


நியூயார்க்கில் ஒரு  தமிழ்பரதேசி

பரதேசிகளுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லை. ஆனால் நியூயார்க் நகரத்திலும் ஒரு தமிழ்பரதேசி சுற்றி வருகிறார் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா? நான்  ஒன்றும் பொய் சொல்லவில்லை.. உண்மையைத்தான் சொல்லுகிறேன்..


இந்த பரதேசி பெயரளவில்தான் பரதேசி ஆனால் வசதிபடைத்தவர். இவர் குடும்பத்துடன் இங்கு வசிக்கும் ஒரு சுத்த தமிழன். பல நல்ல காரியங்களை செய்தும் வருகிறார் .இப்போது அவரைப்பற்றி அவரே சொல்லவதை கேளுங்கள்நான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி. திண்டுக்கல்லில் பிறந்து,  ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.. சமூகவியல் படித்தவன். 

சொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்தபரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.

இருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.
என் இளம் வயதில்குட்வில் ஃபவுண்டேஷன்என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org)  சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.

இவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்தான்.


மனுஷன் எல்லா இடத்திலும் உண்மையை சொல்லி இருக்கிறார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் உண்மையை மறைச்சிருக்கிறறோ என்றுதான் தோன்றுகிறது அது எந்த இடம் என்றால் ///ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க/// இங்க இங்கதான் எனக்கு சந்தேகமுங்க... என்ன சந்தேகம்ன்னு கேட்கிறீங்களா? இன்னும் இல்லைங்க இவருக்கு எத்தனை கேர்ள் பிரெண்ட் இருக்காருன்னு சொல்லலீங்க .....பயபுள்ளைக்கு எதை மறைக்கனுன்னு நல்லா தெரிஞ்ச்சு இருக்கு.... (பக்கத்திலதானே வசிக்கிறார் ஒரு நாள் மட்டாமலா போவாரு )


சரிங்க சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.... நமக்கு எப்போதும் நக்கல் நையாண்டி மொக்கையாகத்தான் பதிவு போடத் தெரியும் ஆனால் எனது வலைப்பதிவை வாசிப்பவர்கள் அமெரிக்காவை பற்றி பல தகவல்களை தாருங்களேன் என்று சொல்லுவார்கள். அதை நான் தந்ததால் என்ன இவர் தந்தால் என்ன? அதனால்தான் இவரை இங்கு நான் அறிமுகம் செய்கிறேன். அமெரிக்காவிலே நான் பல ஆண்டுகள் வசித்தாலும் இவர் பதிவுகளை படிக்கும் போது நான் அமெரிக்காவில்தான் இருக்கிறேனா என்ரு சந்தேகமே வருகிறது. காரணம் அப்படி அழகாக எடுத்து சொல்லுகிறார்


இவர் தளத்திற்கு சென்று படித்து இவருக்கு ஆதரவு தாருங்கள் இதோ இவர் தளத்திற்கான முகவரி : http://paradesiatnewyork.blogspot.com


இது போல பல நல்ல அறிமுகங்கள்  எனது வலைத்தளத்தில் தொடரும்....


அன்புடன்
மதுரைதமிழன்
6 comments :

 1. அவர் தளத்திற்கு செல்கிறேன்... அறிமுகத்திற்கு நன்றி...

  ReplyDelete
 2. சரியான பாதை. தேவையான தகவல்கள்.

  ReplyDelete
 3. அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 4. உங்க அறிமுகம்ன்றதால கொஞ்சம் பயத்தோடவே போய் பார்க்குறேன்

  ReplyDelete
 5. எங்கூரா..படிச்சுட்டு கமெண்டலாம்...

  ReplyDelete
 6. அறிமுகத்திற்கு நன்றி மதுரைத் தமிழன். அவரது தளத்தினையும் பார்க்கிறேன்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog