உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, July 26, 2013

அரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது (இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்)அரபுநாடுகளுக்கு  வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது (இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்)


கடனை உடனை வாங்கி கொண்டு பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு பணம் சேர்க்க செல்லும் இளைஞர்களே. நீங்கள் செல்வது கஷ்டப்படும் உங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் வைக்கதான். ஆனால் சபல புத்தியினால் நீங்கள் தவறுகள் செய்தால் அதன் விளைவுகள் என்ன தெரியுமா?

வெளிநாட்டில் வேலை  பார்க்கும் & பார்க்க போகும் நண்பர்களே கட்டாயம் இந்த விடியோவை பாருங்கள் .வீட்டு வேலைக்காரி உடன் தகாத உறவு வைத்ததால் வந்த வினைதான் இது அதை ஒரு முறை பார்த்துவிடுங்களேன் இங்கே
இதை பார்த்ததும் என் மனம் அதிர்ந்து போய்விட்டது  இவர்கள் செய்தது தவறாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு இப்படி தண்டனை கொடுக்கும் உரிமையை இந்த மனித மிருகங்களுக்கு  கொடுத்தது.யார்?

இவர்கள் கஷ்டப்படும் ஏழைகள் என்பதால்தானே இப்படி தண்டனை? இதே மாதிரி தவறுகள் செய்யும் பணக்காரர்கள் ,ஷேக்குகள் நாடுவிட்டு நாடு வந்து தவறுகள் செய்கிறார்களே அவர்களுக்கு தண்டனை தருவது யார்?

என்னை பொருத்தவரை கடவுளைதவிர வேறு யாரும் யாருக்கும் தண்டனை தரமுடியாது

மிகமன வருத்ததுடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: நண்பர்களே இந்த செய்தியை வெளிநாட்டில் வேலை செய்யும்  நண்பர்களுக்கும் செய்யப்போகும் நண்பர்களுக்கும் முடிந்தால் ஷேர் செய்யுங்கள்


15 comments :

 1. அந்தப் பெண்ணும்... பையனும் - இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது...? இதில் கைபேசியில் வேறு எடுப்பது... மிருக வெறி நாய்கள்...

  ReplyDelete
 2. ச்..சே... மிருகங்கள்

  ReplyDelete
 3. என்னால முடியலை. பாவம் அந்த இருவர். பணமிருக்குறவங்களுக்கு ஒரு நீதி! இல்லாதவங்களுக்கு ஒரு நீதி! ச்ச்ச்சே

  ReplyDelete
 4. சரியான கேள்வி தான் கேட்டு இருக்கீங்க காசு உள்ளவன் என்ன வேணாலும் பண்ணலாம்

  ReplyDelete

 5. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை இப்படம் சொல்லி விடுகிறது. இருந்தாலும் இம்மாதிரி படங்களை தவிர்ப்பது நல்லது. த ஹிந்து பத்திரிக்கை இம்மாதிரி படங்களை பதிவிடுவதில்லை என்ற கொள்கையே வைத்திருப்பதாகக் கேள்வி.

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் எப்படி ஐயா மக்களுக்கு இந்த கொடுமையை தெரிவிப்பது.

   Delete
 6. காட்டுமிராண்டிகள் தேசத்து நடவடிக்கைகளில் ஒன்றை வெளியே கொண்டுவந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 7. கொடுமையின் உச்சகட்டம்!

  ReplyDelete
 8. இது தவறு செய்பவர்களுக்கு பாடம், கடுமையான தண்டனைதான் தவறு செய்வதை தடுக்கும். ஆனால் தண்டனை சட்டப்படி இருக்க வேண்டும்


  By அண்ணாதுரை

  ReplyDelete
 9. ஒரு நாட்டில் வேலைக்கு என்று சென்று விட்டால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அப்படிக் கட்டுப்பட்டு இருக்க முடியாதென்றால் செல்லக்கூடாது. இதுவே எமது கருத்து.

  ReplyDelete
 10. பொண்டாட்டி புருசனுக்கும் ,புருஷன் மனைவிக்கும் செய்யும் துரோகத்துக்கு இதைவிட வேறு பரிசு எதுவாக இருக்க முடியும் .இதில் யார் ?மிருகம?சட்டமா? தவறு செய்யும் மனித மிருகங்களா?

  ReplyDelete
 11. Sankara RamaSamy said...
  ஒரு நாட்டில் வேலைக்கு என்று சென்று விட்டால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அப்படிக் கட்டுப்பட்டு இருக்க முடியாதென்றால் செல்லக்கூடாது. இதுவே எமது கருத்து.

  July 27, 2013 at 10:52 AM

  ReplyDelete
  Replies
  1. அப்போ எதற்க்காக மேற்க்கு நாடுகளுக்கு வேலைக்கு போகும் நீங்கள் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட மாட்டேன் என்று கூறி போராட்டம் நடத்துகின்றீர்கள்?
   மேற்கு நாடுகளில் அகதியாக பிச்சை எடுக்க போன நீங்க எதற்க்காக ஷரியா சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்று போராடுகின்றீர்கள் ?

   Delete
 12. இது தவறு செய்பவர்களுக்கு பாடம், கடுமையான தண்டனைதான்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog