Monday, July 22, 2013




ஜெயலலிதா மனசு வைச்சா?

ஜெயலலிதா அவர்கள் மனசு வைச்சால் தமிழக குடிமக்களுக்கு இந்த வசதியை  பண்ணிதரமுடியும். இதை பண்ணுவதால் அரசாங்கத்திற்கு செலவு ஏதும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு இன்னும் அதிக வருமானம்தான்.அப்படி ஒரு திட்டம் நம்ம ஜோதிஜியின்  பதிவை படித்ததும் அதில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் என் மனதில் உதித்தது அதை சொல்லவிட்டால் எனது மண்டை வெடித்துவிடும் போல இருந்ததால் இந்த அவசரப் பதிவு..

இந்த மாதிரி நல்ல ஐடியா மதுரைத்தமிழனுக்கு மட்டுமே வரும் என்று நீங்கள் பாரட்டுவது எனக்கு தெரியும்...

அது யாருப்பா அது என்ன ஐடியா சொல்லி தொலைடா மதுரைத்தமிழா என்று சத்தம் போடுவது காதில் விழுகிறது..

அவரசப்படாதீங்க சொல்லுறேன்.. சொல்லுறேன்..  ஆனா சொல்லுறதுக்கு முன்னால் ஒரு கேள்வி?

உங்களில் எத்தனை பேர் கோவிலுக்கு சென்று இருக்கிறீர்கள்? அப்படி நீங்கள் சென்று இருந்தால் கடவுளை காண கூட்டத்தில் மாட்டாமல் இருக்க ஸ்பெஷல் தரிசன வழியில் சென்று இருப்பிர்கள் அதற்கு நீங்கள் சற்று அதிக கட்டணம் செலுத்தி இருப்பீர்கள் அல்லவா? அது போல பஸ், ரயில்,விமானத்தில் பயணம் செல்வதாக இருந்தால் கூட்டத்தில் மாட்டாமல் சொகுசா பயணம் செய்ய சற்று அதிக பணம் கொடுத்து ஸ்பெஷல் வரிசையிலும் செல்வீர்கள்தானே. இந்த வசதியை எத்தனை பேர் பெற்று மகிழ்ந்திருக்கிறீர்கள்


இப்படி கூட்டம் அதிக வரும் இடங்களில் எல்லாம் நம் அரசாங்கம் மக்களுக்கு இந்த வசதியை செய்து கொடுத்திருக்கிறதே. அப்படியானால் மக்கள் அதிகம் கூட்டம் வரும் இந்த இடத்திற்கும் ஸ்பெஷல் கட்டண வசதியை செய்து கொடுக்கலாமே நம் தமிழக அரசு. இப்படி செய்து கொடுப்பதால் நாம் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழலாமே

என் பதிவுகளை படித்து வருபவர்களுக்கு இப்ப அது எந்த இடம் என்று புரிந்து இருக்குமே...


அப்படி புரியாதவர்களுக்கு அது எந்த இடம் என்று சொல்லிவிடுகிறேன்.



அது வேறு எந்த இடமும் காலையில் எழுந்ததும் நம் தமிழக 'குடி' மக்கள் போகும் டாஸ்மாக் ஒயின் ஷாப்தானுங்க

என்னங்க அங்க இந்த வசதியை தமிழக அரசாங்கம் பண்ணி தரலாமே. "தங்களை அழித்து தமிழகத்தையே காப்பாற்றும்" இந்த குடிமக்களுக்காக இந்த அரசாங்கம் கண்டிப்பாக செய்து தர வேண்டும்





அன்புடன்
மதுரைத்தமிழன்

21 comments:

  1. எதிர்பார்க்கவே இல்லை. எம்பூட்டு நல்ல ஐகுடியா?

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி உங்கள் பதிவை படித்ததினால் வந்த ஜடியா ! உங்களுக்கு நன்றி

      Delete
    2. நல்ல ஐடியாதான்
      பட ஒப்பீடு அருமை
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    3. பட ஒப்பிட்டை ரசித்தற்கு நன்றி & த.மாவிற்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி

      Delete
  2. ஹா... ஹா... இரு படத்தின் வரிகள் சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. பட ஒப்பிட்டை ரசித்தற்கு நன்றி

      Delete
  3. இப்படி ஒரு சசூப்பர் ஐடியா கொடுப்பதற்கு மதுரை தமிழனை தவிர வேறு யாரால் முடியும்?

    ReplyDelete
    Replies
    1. எப்படி என் பதிவை சூப்பர் என்று பாராட்டுவதற்கு தம்பி இருக்கும் போது ஐடியா சூப்பரா பறந்து பறந்து வரும்

      Delete
  4. அட நல்ல ஐடியாவா இருக்கே.... ஒரு ஃபோனப் போட்டு அம்மாவுக்கு யாராவது சொல்லுங்கப்பா!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா உடனே சொல்லுங்க, கம்பி எண்ண தம்பி ஆவலாக இருக்கிறார் ஹா ஹா ஹா ஹா...

      வளர்மதி இப்பவே உருட்டு கட்டையை கையில எடுத்தாச்சாம்.

      Delete
    2. அம்மாவுக்கு வேண்டாம் டாஸ்மாக் டைரக்டருக்கு ஒரு போனை போடுங்க

      Delete
  5. எலேய் மக்கா ஒன்னு ஆட்டோ வரும் உம்ம வீட்டுக்கு, ரெண்டு கண்டிப்பா ஜெயில் கன்பார்ம் ஜாக்கிரதை ஆமா !

    ReplyDelete
    Replies
    1. பட ஒப்பிட்டை ரசித்தற்கு நன்றி & த.மாவிற்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி

      மக்கா நான் என்ன அம்மாவை கிண்டல் அல்லது கேலியா பண்ணுனேன். அவர்களின் தலைமையில் நடக்கும் அரசாங்கத்திற்கு ஐடியாதானே சொன்னேன். அது தவறா என்ன? ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இல்லாமால் கலைஞர் ஆட்சியில் இருந்தால் கலைஞர் மனசு வைச்சா என்று பதிவு போட்டு இருப்பேன்..


      நல்ல ஐடியா தந்த தமிழகத்தில் ஜெயில் போடுவார்களா என்ன? இப்படி ஒரு சட்டம் நான் தமிழகத்தில் இருந்த வரை அமுலில் இருந்தாக எனக்கு தெரியவில்லை.


      அப்புறம் ஜெயிலில் இருந்து பழகியவந்தான் நான் . நீங்க கூட ஜெயிலில்தான் இருக்கிங்க ஏன் கல்யாணம் ஆன ஆண்கள் வீட்டில் இருப்பதே ஜெயிலில் இருப்பது மாதிரிதானே மக்கா

      Delete
  6. நல்ல காலம் கருப்பு எம்ஜீயார் ஆட்சியில் இல்லை.
    தப்பித்தோம் நாம்.
    இல்லேன்னா, நம்ம அறிவாளி (அதாங்க நம்ம மருத தமிழன்!!) அவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருப்பார்....
    "எதுக்கு கூட்டத்துலே சிக்கி அவதிபடுகிறீங்க, நான் வீட்டுக்கே அனுப்பிவைக்கிறேன்"

    ReplyDelete
  7. மேலும் அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்குவதைப் போல் அம்மா மதுபானக்கடை துவங்கி மலிவு விலையில் மது விற்க ஏற்பாடு செய்தால் குடிமகன்கள் என்றும் அம்மா வழி நிற்பார்கள்.....

    ReplyDelete
  8. நல்ல ஐடியா! பார்த்து குடி மகன்கள் காதில் இது விழுந்து விடப் போகிறது... அப்புறம் குடித்த பாட்டில்கள் வீடு மட்டும் அல்லாமல், இங்கே பிளாக்கிலும் பறக்கவிடப் போகிறார்கள்... பார்த்து, ஜாக்கிரதை...!

    ReplyDelete
  9. சூப்பர் ஐடியா! படங்களும் வாசகங்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. ஒரு நோபல் பரிசைப் பெற்றுத் தரும் ஐடியா இது.

    வாழ்க

    சிங் ஐயாகிட்டே இதை சொல்லுங்க. அவரும் பார்க்கணும். அவரும் உங்களுக்கு ஒரு கங்க்ராட்ஸ் சொல்வார்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  11. அண்ணே! எப்படியெல்லாம் யோசிக்குறீங்க நீங்க?! அதுக்கு என்ன காரணம்ன்னு சொன்னா, நாங்களும் எதோ பொழச்சுப்போமில்ல!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.