உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, July 20, 2013

எனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவுஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு


எனது கூடப் பிறந்தவர்கள் அனைவரும் சகோதரர்கள் எனக்கு சகோதரிகள் யாரும் கிடையாது ஆனால் பதிவு எழுத வந்த பின் எனக்கு ஒரு வாலு சகோ கிடைத்திருக்கிறார். எனக்கு மட்டுமல்ல அநேக பதிவாளருக்கும் சகோவாகத்தான் வளைய வந்து கொண்டிருக்கிறார். அந்த வாலுதான் என்னை இந்த தொடர்பதிவு எழுத அழைப்புவிடுவித்து என்னை வம்பில் மாட்டி விட்டுருக்கிறது


19** ல்( அது என்ன ஸ்டார் என்று கேட்க கூடாது சொன்னா வயசை கண்டு பிடிச்சுருவாங்கல) மதுரையில்  இருந்து கம்பியூட்டர் கல்வி கற்க சென்னை நோக்கி ஒரு அதிகாலையில் வைகை எக்ஸ்பிரஸ் மூலம் சென்றேன். அது என்னவோ நான் வெளிநாட்டுக்கு சென்றது போல ஒரு பிலிங்க் காரணம் நான் படிக்கும் காலத்தில் ஒரு சில நண்பர்கள் வீட்டைத்தவிர வேறு எங்கும் சென்றதில்லை படிப்பு உண்டு ( எல்லாம் மாத வார தினசரி இதழ்கள்தான் & கதைப் புக்குகள்) வீடு உண்டு என்று இருந்த என்னை வெளிநாட்டில் இருந்த என் மூத்த சகோதரன் நான் கொஞ்சமாவது உருப்புடட்டும் என்று சென்னைக்கு அனுப்பினான்
 
(நான் முதன் முதலாக பார்த்த கம்பிய்யூட்டரும் வேலை பார்த்த இடமும் நானும் )
அப்போது சென்னையில் கைவிட்டு எண்ணக் கூடிய அளவில்தான் கம்பியூட்டர் இன்ஸ்டிடுட் இருந்தது. அதில் ஒன்றுதான் ஆழ்வார் பேட்டையில் உள்ள மீயூசிக் அகடமிக்கு அருகில் இருந்தது. அங்குதான் கம்பியூட்டரை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் நான் அதை பார்ப்பதைவிட அங்கு வந்து படித்த மல்லுப் பெண்களை திருட்டு தனமாக பார்ப்பதில்தான் காலம் கடந்தது( ஏன் திருட்டுதனமாக பார்த்தேன் என்று கேட்க கூடாது அப்ப எல்லாம் நான் ரொம்ப ஷை டைப்புங்க் நேரா பார்க்க எல்லாம் தைரியம் கிடையாது.) அப்ப நான் படித்தது ஒரு வருட PG Dip. Comp. Science என்ற கோர்ஸான ஆகும் அப்ப எல்லாம் இண்டர்நெட் பற்றிய பாடம் எல்லாம் கிடையாது அப்ப எனக்கு சொல்லி கொடுத்தது Basic, Cobol, dbase, lotus போன்ற பாடங்கள் அது எல்லாம் என்னான்னு இப்ப கேட்க கூடாது. அப்ப எல்லாம் படிக்கிறோமோ இல்லையோ, வகுப்பில் கையில் எடுக்காத புக்கை சினிமா தியோட்டருக்கு போகும் போது மட்டும் மறக்காம எடுத்துட்டு போவோம்..


சரி இப்படி அப்படி என்று ஒரு வழியா படித்து முடித்தோம் பல இடங்களில் வேலை தேடி கடைசியில் படித்த இடத்திலேயே வேலைக்கு சேர்ந்தேன். உனக்கே ஒன்றும் தெரியாது அப்புறம் லேப்ல எப்படி நீ மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தியா என்று கேட்கிறீர்களா அதுலதான் காமெடியே இருக்கு...

யாரவது அவங்க டைப் பண்ணுன புரோகிராமை ரன் பண்ணும் போது பல தப்புகள் வரும் அதை எப்படி சால்வு பண்ணனும் என்று தெரியவில்லையென்றால் எங்களை கூப்பிடுவாங்க நானும் 'பெரிய பிஸ்தா" போல அந்த புரோகிரமை பார்ப்பேன் அதை என்னால் சரி செய்ய முடியும் என்றால் பண்ணுவேன் இல்லையென்றால் ரொமப் சிரியஸா யோசிப்பது போல நடித்து கட கட வென டைப் பண்ணி அந்த புரோகிராமைவையே டெலீட் பண்ணிவிட்டு ஹேய் அது வைரஸால் பாதிக்கபட்டு இருக்கிறது அதுமட்டுமல்லாமல் புரோகிராமே கரப்ட் ஆகி இருக்கிறது அதனால் முதலில் இருந்து ஆரம்பி என்று சொல்லி விட்டு சென்று விடுவேன். .

கொஞ்ச நாள் கழித்து மார்னிங்க் ஷிப்ட் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதிய ஷிப்ட்லில் வேலை செய்ய ஆரம்பித்தேன் காரணம் கபெனியின் டைரக்டர் 4 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு கிளம்பிவிடுவார் அதன் பின் நான் வைத்ததுதான் ராஜ்யம். அவர் ஆபிஸைவிட்டு நகர்ந்ததும் நான் ப்ளாப்பியில் லோடு வைத்து இருக்கும் pacman computer game யை போட்டுவிடுவேன் அதன் பின் படிக்கிற பய புள்ளையும் சார் சார் என்று அதை கேட்டு வாங்கி விளையாடிக் கொண்டிருக்கும்.  இரவு 7 மணிக்கு மேல் இருக்கிற படிக்கிற பெண்கள் எல்லாம் போன பிறகுதான் எங்களது திருவிளையாடல் ஆரம்பிக்கும்.. அப்போது என் கூட வேலைபார்த்தவன் விப்ரோவில் வேலைபார்த்தான் அவன் வெளிநாட்டில் இருக்கும் நண்பன் மூலம் கிடைத்த நிர்வாண படங்களை(இதெல்லாம தப்புதான் என்று புரியாத  இளம் வயது)  எல்லாம் டவுன்லோடு பண்ணி கொண்டு வருவான் அதன் பின் அதை பார்க்க என் கூட வேலைபார்க்கும் "பெரிசுகள்" எல்லாம் அந்த படங்களை பார்க்க வந்துவிடுவார்கள்.(  நான் வேலை பார்த்த இடத்தில் கணணி கோர்ஸ் மட்டுமல்ல IAS GRE GMAT TOEFL Export management, business management போன்ற பல்வேறு வகுப்புக்கள் நடக்கும் அதை எடுப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய கம்பெனியை சார்ந்த பெரிய ஆட்களும் கல்லூரி புரபசர்களும் தான் அவர்கள்தான் 8 மணிக்கு க்ளாஸ் முடிந்ததும் டான் என்று எங்க கம்பியூட்டர் லேப்புக்கு வந்துவிடுவார்கள்) இப்படி படிப்பவர்களுக்கு நான் சொல்லி கொடுப்பது எனக்கு போரடித்ததால் அதை கம்பெனியில் ஸ்டுடெண்ட் கவுன்சலராக சேர்ந்து வாழ்க்கையை நடத்தினேன் அப்போதுதான் அங்கு வந்து ஒழுங்காக சொல்லி தர வந்த பெண்ணே என் குடும்பத் துணைவியாகி போனாள்.


கடைசியாக சில காலங்களை சென்னையில் கழித்துவிட்டு 19** ல் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். வந்த முதல் மாதத்தில் ஒரு டெஸ்க் டாப் கம்பியூட்டர் வாங்கி நெட் இணைப்பையும் வாங்கி முதலில் நான் படித்தது தினமலர்தான். அப்போது எல்லாம் டயலப் நெட் கனெக்ஷந்தான் அது போன்லைன் மூலமாக கிடைக்கும் அதன் ஸ்பீடு வெகு ஸ்லோவாக இருக்கும்.

அதை வைத்தே அப்போதே யாகூ மற்றும் XOOM போன்றவைகள் தந்த இலவச இடத்தில் வலைத்தளம் ஆரம்பித்து நடத்திவந்தேன். அதில் அதிக அளவு தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி வந்தேன். அதன் பின் அவர்கள் அதை நிறுத்தியதும் பல ஆண்டுகள் எழுதுவதையே நிறுத்திவிட்டு  நிறைய தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன் அப்போது சில தமிழ் தளங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன. 2007க்கு அப்புறம் அதிக அளவில் பல தமிழ் தளங்கள் இணையத்தில் வர ஆரம்பித்தன அதை பார்த்து 2010ல் நானும் மொக்கைகள் போட ஆரம்பித்தேன் 2009 வரை டேஸ்க் டாப்பை மட்டும் உபயோகித்து வந்தேன் அதன் பின்தான் லேப்டாப் வாங்கி அதற்கு வயர்லஸ் ஹைஸ்ப்பீடு நெட் கனெக்ஷன் வாங்கி லேப்டாப்பை மனைவி படுத்த இடத்தில் வைத்துவிட்டு அவளை கொஞ்சம் பெட்டின் மறுமுனைக்கு தள்ளிவிட்டேன்.


எல்லாம் சொன்ன நான்  ஒன்று சொல்ல மறந்துட்டேன் ஒரு நாள் காலையில என் வீட்டு போன் அடித்தது யார்ரான்னு பார்த்தா நம்ம சகோ ராஜிதான் என்னம்மான்னு கேட்டா என் விண்டோ ஒப்பன் ஆக மாட்டேங்குது அது திறக்க ஒரு நல்ல ஐடியா ஒண்ணு சொல்லுங்க சகோ என்று கேட்டார் நானும் தூக்க கலக்கத்துல அம்மா நல்லா தண்ணிய சுட வைச்சு ஊத்து அதன் பின் அது ஈஸியா தொறக்கும் என சொன்னேன் அவங்களும் அதே மாதிரி செஞ்சாங்க அதன் பின் அவங்க மீண்டும் கால் பண்ணுணாங்க என்னம்மா எல்லாம் சரியாச்சா என்று கேட்டேன் அதுக்கு அவங்க சொன்னாங்க போங்க சகோ உங்க பேச்சை நம்பி கம்பீயூட்டர்ல தண்ணிய ஊத்துனேன் இப்ப என் கம்பியூட்டரே வீணா போச்சுன்னு சொல்லி அழுதாங்க. அப்ப நான் என்னம்மா சொல்லுறே நீ உன் வீட்டில் உள்ள ஜன்னலை (விண்டோவை) அல்லவா ஒப்பன் பண்ண ஐடியா அல்லவா கேட்டீங்க என்று சொன்னனேன்

அவ்வளவுதாங்க இனிமே உங்க கிட்ட நான் ஐடியாவே கேட்கமாட்டேன் என்று சொல்லி போய்ட்டாங்க

இது யாரு தப்புங்க நான் நல்ல ஐடியாதானே சொன்னேன் அவங்கதானனே விளக்கமா தெளிவா கேட்கனும்...பாத்தீங்களா நமக்கு இப்படிபட்ட அறிவு ஜீவி சகோதான் கிடைக்குது

இதுதாங்க என் அனுபவம்..இனிமே யாரவது தொடர்பதிவு எழுத கூப்பிட்டீங் தொலைச்சுபுடுவேன் தொலைச்சி இல்லை மரியாதையா 500 டாலரை அனுப்பி விடுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

நான் பட்ட கஷ்டத்தை மற்றவர்களும் பட  கிழே உள்ள  ஐந்து பேரை கூப்பிடுறேன். அவஙக இதேப்போல அஞ்சு பேரை சிக்க வைக்கனும். அப்போதானே நம்மாளுங்க விவரம்லாம் வெளில வரும்.


இவர்களை என் லிஸ்டில் முதலில் சேர்த்து இருந்தேன் ஆனால் நான் பதிவு வெளியிடுவதற்கு நண்பர் பால கணேஷ் வெளியிட்டு இவர்கள் பெயரை அவர் லிஸ்டில் சேர்த்து இருப்பதால்  வேறு இருவரை சேர்த்து உள்ளேன்
38 comments :

 1. பால.கணேஷ் அவர்கள் பதிவை இப்போதுதான் படித்து முடித்தேன். அடுத்து உங்களுடையது. நன்றாக, வழக்கம்போல நகைச்சுவையோடும் வெளிப்படையாகவும் சொன்னீர்கள். புகைப்படத்தில் முகத்தை மறைத்தால், கண்ணை வரைந்து கண்டுபிடிக்க முடியாதா, என்ன? வாழ்த்துக்கள்! இந்த மாதம் முழுக்க வலைப்பக்கம் தொடர்ச்சியாய் பதிவர்களையும் கம்ப்யூட்டர்களையும் காணலாம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த வரையில் நகைச்சுவையோடுதான் எனது பதிவுகளை வெளியிட விரும்புகிறேன். பல பதிவுகளில் என்னையோ எனது மனைவியையோ அல்லது எந்த பதிவாளர்கள் தவறாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேனோ அவர்களை கலாய்த்துதான் பதிவிடுகிறேன் அப்புறம் கண்னை வரைஞ்சு எல்லாம் கஷ்டப்படாதிங்க தமிழ்நாடு வரும் போது முடிந்த வரையில் அநேக பதிவாளர்களை சந்திக்கலாம் என நினைக்கிறேன் ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன்

   Delete
 2. குவாட்டர் பாட்டில் மூடி சுத்திட்டுன்னா திறக்க ( தண்ணிய சுட வச்சு ஊத்துறது மாதிரி)ஏதாவது யோசனை சோல்லுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. பாட்டில் திறக்க முடியலைன்னா அதை திறக்க மிக எளியவழி அதை என்னிடம் அனுப்பிவிடுவதுதான்

   Delete
 3. ஐடியாவிற்கே ஐடியாவா...? (சகோதரி முன்னமே வந்து பதில் சொல்லிட்டாங்களா...?)

  ஆக, இரண்டு பேர்கள் (மாட்டி விட்டார்களே...) சொன்னதால் கண்டிப்பாக தொடர்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 4. படத்தில் நீங்கள்...? முகம் மறைக்கப்பட்டுள்ளதா...?

  ReplyDelete
  Replies
  1. அது பழையபடம் அதில் முகத்தை காட்டுனாலும் ஒன்னுதான் காட்டாவிட்டாலும் ஒண்ணுதான் ஆனால் காட்டாமல் இருப்பதே மேல் என்று பட்டதால் முகத்தை அழித்துவிட்டேன்

   Delete
 5. எப்பா எவ்ளோ உண்மைகள சொல்லிருக்காரு,ஆள கண்டுபுடிச்சிருவோம்னு சேடோ போட்ருக்காருப்பா!

  எண்ணிய பலவற்றில் எழுதாமல் போனவைகளில் என் கணினி அனுபவங்களும் ஒன்று.இப்போ நீங்கள் அழைத்திருப்பதில் (மாட்டி விட்டதில்)விரைவில் எழுதிடனும்னு தோணுது.

  ReplyDelete
  Replies
  1. என் மனதில் உள்ளதை சொல்லி இருக்கிறேன்....... மாட்டிவிட்டேன் என்று என்னைய திட்டாதீங்க திட்டுறதுன்னா ராஜிம்மாவை திட்டுங்க எல்லாத்திற்கும் அவங்கதான் காரணம்

   Delete
 6. பெரிய மன்மத ராசுன்னு நினைப்பு மொகத்தை மறைச்சி மறைச்சி படம் எடுத்து போட்டிருக்காங்க... அந்த போட்டோ எடுத்து 40 இல்ல இல்ல 50 வருசத்துக்கு மேல இருக்கும்னு எங்களுக்கு தெரியாதா..?

  ReplyDelete
  Replies
  1. மன்மத ராசா முகத்தை மறைக்கமாட்டார் . தெய்வதிருமகனில் வரும் சிவாஜி போல இருப்பவர்தான் முகத்தை மறைப்பார் சகோ

   Delete
 7. ரொம்ப ஹானஸ்ட் நீங்க! வெந்நீர் வைத்தியம் சூப்பர்! ஆமாம் தொடர்பதிவுக்கு DD மற்றும் சீனுவை கணேஷ் அழைத்திருக்கிறாரே....!

  ReplyDelete
  Replies
  1. நடந்ததை சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க.....நான் பதிவு எழுத ஆரம்பிக்கும் போது முதலில் தனபாலன் சீனு பெயரையும் இணைத்து எழுத ஆரம்பித்தேன் ஆனால் நான் எழுதி முடிக்கும் முன் மதுரக்காரர் கணேஷ் முந்திவிட்டார் அதனால்தான் எழுதிய அவர்கள் பெயரை அழிக்காமல் போட்டுவிட்டேன்

   Delete
 8. மல்லு கேர்ள்ஸை ஸைட் அடித்தது போன்ற விஷயங்களை நீர் வெளிப்படையா சொன்னீர். தங்கை அடிக்குமேன்னு பயந்து நான் எடிட் பண்ணிட்டேனாக்கும்...! ஹி... ஹி...! அப்புறம்.... படத்துல இருக்கற கம்ப்யூட்டரை வெச்சே அது எந்த வருஷம்கறதைக் கண்டுபுடிச்சுட்டேனாக்கும்... கண்டிப்பா யார்ட்டயும் சொல்ல மாட்டேன்... ராஜிகிட்ட மட்டும்தான்பா சொல்வேன் அதை... ‌ஹா... ஹா... ஹா...!

  ReplyDelete
  Replies
  1. இளம் வயதில் சைட் அடிப்பது தவறு இல்லை. ஆனால் நாம் அடிப்பது அந்த பெண்களுக்கு தெரியக் கூடாது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. இளம் வயதில் ஒரு பையன் எந்த பெண்ணின் மீதும் ஆசைப்படவில்லை என்று சொன்னால் ஒன்று அவன் பொய் சொல்பவனாக இருக்க வேண்டும் அல்லது அவன் உடலில்லோ மனதிலோ ஏதாவது குறை இருக்க வேண்டும்.

   அப்புறம் மனதில்பட்டதை தைரியமாக சொல்லுங்கள் ஆனால் சொல்வது யாரையும் பாதிக்காமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். போலி இமேஜ் நமக்கு வேண்டாம்

   Delete
 9. நைட் ஏழு மணிக்கு மேல அந்த படமெல்லாம் பார்ப்போம்//////

  அண்ணே.... நல்ல அனுபவம்னே.....

  ReplyDelete
  Replies
  1. படம் என்று இங்கு நான் சொன்னது போட்டோக்களைதான். அது அந்த வயதின் வயசுக் கோளாறு. இப்படிப்பட்ட அனுபவங்கள் எல்லா ஆண்களுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையே

   Delete
 10. எல்லாருடைய கணினி முதல் அனுபவமும் வித்தியாசமாயும் புதுமையையும் உள்ளது, ஒருவழியாக உங்கள் புகைப் படத்தில் கொஞ்சம் போட்டு விட்டீர்கள், பதிவுலக தரிசனம் எப்போதோ?

  மேலும் என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. சீனு நான் என்ன கடவுளா அல்லது நீங்கள் காதலிக்கும் அழகான பொண்ணா தரிசனம் தருவதற்கு

   Delete
 11. முதல்ல கைக்குடுங்க சகோ!நான் யோக்கியமாக்கும்ன்னு எல்லாரும் இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. ஆனா, நீங்க கிரேட்,

  ReplyDelete
  Replies
  1. சகோ நான் கைகுடுக்கணுமா உண்மையை சொல்லிடுறேன் நான் கையில் மோதிரமோ அல்லது வாட்சோ கட்டுவதில்லை. இப்ப சொல்லுங்க இன்னும் கைகுடுக்கனுமா இல்ல வேண்டாமா என்று


   எல்லோரும் தான் யோக்கியமுனு வேஷம் போடுவாங்க ஆனால் கிட்ட நெருங்க நெருங்க அவர்களின் அயோக்கியத்தனம் வெளிப்படும். ஆனால் நான் அயோக்கியமாக இருப்பதாக உண்மையை சொல்லுவேன் ஆனால் என் கூட நெருங்கி பழகுவர்களுக்கு நான் எப்படி என்று தெரிந்ததது என்னை அவர்கள் நேசிப்பது இன்னும் அதிகமாகவே இருக்கும்

   Delete
  2. என்ன சகோ! இப்படி பப்ளிக்குல சொல்லிட்டீங்க. வாட்ச், மோதிரம் போன்ற அற்ப பொருளையெல்லாம் நான் சுடுறதில்லை. நெக்லஸ், கிரடிட் கார்ட் இப்படி பெருசாதான். அதனால பயப்படாம கைக்குடுங்க.

   Delete
 12. கூட வேலை பண்ண பொண்ணுக்கே உங்க லடசணம் தெரியலியா?! லவ் பண்ணி கல்யாணம் கட்டிக்கிச்சு.., இம்புட்டு வெள்ளந்தியாலாம் ஒரு பொண்ணு இருக்கப்படாது :-(

  ReplyDelete
  Replies
  1. என் மனைவி என்னிடம் ஏமாந்தது(காதலில் விழுந்தது ) எப்படி என்று ஒரு பதிவு போட்டேன் அதை நீங்கள் இன்னும் படிக்கவில்லையா?

   Delete
 13. ஓரளவுக்கு எனக்கும் வயசு தெரிஞ்சுட்டு கணேஷ் அண்ணா! அப்படி பார்த்தா இவர் எனக்கு அண்ணா முறையில்லை. சித்தப்பா முறையாகுது.

  ReplyDelete
  Replies
  1. முறையாக கூட இருக்கலாம் ஆனால் உங்களை விட வயதில் குறைவாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது உங்க அம்மா உங்களை பெற்ற பின் உங்க பாட்டி அதன் பின் என்னை பெற்று இருக்காலாம் அதனால் நான் உங்களைவிட வயதில் குறைந்தவனே.. ஹீ.ஹீ இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க

   Delete
  2. வேண்டாம் இதுக்கு என்னாலும் பதில் சொல்ல முடியும். ஆனா, இதுல அம்மா வர்றாங்க. அதனால,நான் எதாவது சொல்லி அது அவங்களை தவறா சித்தரிக்கும்படி ஆகிட போகுது.

   Delete
 14. சும்மாவே நீங்க ரெம்ப புத்திசாலி. இதுல தூக்கத்துல இருந்து எழும்புனா கேக்கவே வேணாம், எப்படி நல்ல ஐடியா குடுப்பிங்கன்னு நேக்கு தெரியும். அதனால என் கம்ப்யூட்டர்ல சுடுதண்ணி ஊத்தலை. ஊத்தினதை உங்களை ஏமாத்துனேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் ரொம்ப புத்திசாலி என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி மறக்காம சென்னையில் நடக்கும் பதிவர் விழாவில் என் சகோ ரொம்ப புத்திசாலி என்று ஒரு பேனர் எழுதி வைத்துவிடவும் நன்றி சகோ

   Delete
 15. முகம் மறைக்கப்பட்ட அந்த போட்டோவை பார்த்தா எங்கண்ணன் பாலிடெக்னிக் படிக்கும் போது எடுத்த போட்டோ மாதிரி இருக்கு. எங்க அண்ணன் முக ஜாடை இப்படித்தான் இருக்கும். அதுக்காக நீங்க எங்கண்ணன் வயசுன்னு உங்களை சொல்லி வெறுப்பேத்தலை... நீங்க guy யாகவே இருங்க...! அது சரி என்னை ஏன் மாட்டி விட்டிங்க...? பூரி கட்டை பறந்து வருது பாருங்க...!

  ReplyDelete
 16. என்னையும் சிக்க வச்சுட்டீங்களே பாஸ்.நான் கத்துகிட்டது ரொம்ப கேவலமா இருக்குமே பரவாயில்லையா?

  ReplyDelete
 17. நான் கம்ப்யுடரை தொட்டுபாத்ததே 2003லதான் அதுக்குள்ள கம்ப்யுடர்ல என்னென்னமோ செஞ்சு வாழ்க்கையைத் துணையையும் கரெக்ட் பண்ணீட்டிங்களே. மதுரை தமிழன்ன சும்மாவா?

  ReplyDelete
 18. Cobol, Lotus, Pacman game....உங்க வயசை கண்டுபிடிச்சிட்டேன் :)

  ReplyDelete
 19. நல்லா நகைச்சுவையா எழுதியிருக்கீங்க... அதிலும் சகோ ராஜியுடன் நடந்த சம்பவம் செம காமெடி..

  ReplyDelete
 20. வருடத்தைத்தான் சொல்லக்கூடாது. ஆமா மூஞ்சியைக் கூட காட்டக்கூடாதா?

  இந்த பதிவை படிக்கவில்லையோ?

  ஐந்து - 'வலை'த்ததும் வளையாததும்

  http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post.html

  எங்க ஊரு பழக்கம் என்னன்னா பந்திக்கு முந்தி விடு.

  எப்பூடி?

  ReplyDelete
 21. மனதில் பட்டதை தைரியமாக இளவயதில் நடந்து கொண்டதையும் மறைக்காமல் சுவாரஸ்யமாக சொன்ன விசயம்! சிறப்பு! இந்த பதிவும் இன்னும் உங்களின் சிலபதிவுகளும் இன்றுதான் என் டேஷ் போர்டில் கிடைத்தது! என்ன காரணம் என்று தெரியவில்லை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 22. தம்பி இன்னைக்கு தான் இந்த பதிவை படித்தேன். வட இந்திய சூறாவளி சுற்றுப்பயணம் முடித்து (JULY 20 to 28) நேற்று தான் வந்தேன்.யோசித்து எழுதுறேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog