Friday, July 12, 2013

வலைத்தளத்தில்  இருந்து விடை பெறுகிறேன்.


எனது தளத்திற்கு வந்து ஆதரவு கொடுத்து படித்து ரசித்து  தலையில் அடித்து கொண்டு சென்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களை எல்லாம் எவ்வளவு நாள்தான் துன்புறுத்தி கொண்டிருப்பது அதனால் உங்களுக்கு விடுதலை கொடுக்க எண்ணி விடை பெறுகிறேன்...

அது யாரூ சத்தம் போடுறது முரளிதரனா இல்லை சீனுவா நீங்க சத்தமா என்ன சார் உங்க வீட்டுகாரம்மா தலையில் பலமாக அடித்துவிட்டார்களா என்ரு கேட்பது என் காதில் விழுகிறது... அதெல்லாம் ஒன்ரும் இல்லையப்பா..


நானாகத்தான் உங்கள் அனைவருக்கும் ரெஸ்ட் கொடுக்க முடிவு பண்ணிவிட்டேன்,


நான் போறேன் அதனால் யாரும் அழுது ஆர்பாட்டம் பண்ண வேண்டாம் அல்லது மனமொடிந்து தீ குளிக்க முயற்சிக்க  வேண்டாம்,,,,,,



நான் விடை பெறுகிறேன் என்று சொன்னது சில நாட்கள் மட்டுமே அதனால் நான் மீண்டும் திங்கள் அன்று வந்து மீண்டும் பதிவுகள் இட்டு உங்களை வதைக்க வந்துவிடுவேன்.

ஜெயலலிதா அவர்கள் கொடனாநாட்டுக்கு செல்வது போல நானும் மூன்று நாள் ஒய்வெடுக்க எனது வீட்டை சுற்றியுள்ள 8 குடும்பதினருடன் கேம்ப் குடும்பத்துடன் செல்கிறேன் அதாவது தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் கரெண்ட் இல்லாவிட்டால் எப்படி இருப்பார்கள் என்ற அனுபவத்தை நாங்கள் பெற போகிறோம் அதாவது நீயூஜெர்ஸிக்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் நம் நாட்டில் நாடோடி என்ற குறவர்கள் வாழ்வது போல வாழப்போகிறோம் அவ்வளவுதாங்க.

அப்ப வரட்டா

அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments:

  1. பயணம் இனிமையாக சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நினைத்தேன்... இப்படித்தான் நீங்க டுவிஸ்ட் வைப்பீங்கன்னு.... சந்தோசமா போயிட்டு வாங்க...

    ReplyDelete
  3. பயணம் இனிமையாக சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தற்காலிக விடுமுறை என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள் சென்று வாருங்கள்

    ReplyDelete
  5. இப்படியா கடைசியில சந்தோசத்துல மண்ணை வாரிப் போடுறது? என்னமோ போங்க பாசு!

    ReplyDelete
  6. வனப் பகுதியில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சொன்ன சொல் தவறாமல், சொன்ன நாளில் வந்துவிடுங்கள்.

    Bye!

    ReplyDelete
  8. தற்காலிக விடுதலை தானா? ஓடோடி வந்த எங்களை ஏமாற்றிவிட்டீரே, கேம்புக்கு எங்களையும் கூப்பிட்டு இருக்கலாமே. அவ்வ்வ்.

    ReplyDelete
  9. பயமுறுத்திட்டீங்களே பாஸ். என்ஜாய் பண்ணிட்டு வாங்க.. மேடத்தை மறக்காம பூரிக் கட்டை எடுத்துக்க சொல்லுங்க. வந்ததும் அனுபவங்களை வித்தியாசமா சொல்லி அசத்துங்க.

    ReplyDelete
  10. கவனமா போய்விட்டு வாங்க... வானப் பகுதியில இருக்கிற
    மிருகங்களை கடிச்சு வைக்க போறீங்க..... பாத்து போய்ட்டு வாங்கோ..

    ReplyDelete
  11. ஹா...ஹா... நல்லபடியாக சென்று வாருங்கள்...வாழ்த்துக்கள்...

    ஆனால் திரும்பி வரும்போது....
    .
    .
    .
    .
    .
    .
    .

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    'நான் ஏன் வலைத்தளத்தைவிட்டு செல்லவேண்டும். இதோ வந்துவிட்டேன் ' என இன்னொரு பதிவு போடனும் ஆமா...

    ReplyDelete
  12. பார்த்து சகோ! காட்டுல தனியா போகாதீங்க, பாப்பா கூடவோ இல்ல உங்க ஹவுஸ்பாஸ் கையையோ பிடிச்சுக்கிட்டு போங்க. பயந்துடப்போகுதுங்க..., பாவம் காட்டுல இருக்குற மிருகம்லாம்.

    ReplyDelete
  13. பயணங்கள் இனிக்கட்டும்

    ReplyDelete
  14. WISH YOU ALL THE BEST FOR YOUR JOURNEY.

    ReplyDelete
  15. ஏங்க! இப்படியெல்லாம் பயமுறுத்தறீங்க? சுற்றுலா பயணத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. அங்கே சென்று வந்து அந்த அனுபவங்களையும் எழுதுங்க மதுரை தமிழன்.....

    ReplyDelete
  17. நாங்களும் விரைவில் அந்த அனுபவத்தை பெறபோகிறோம். கூடாரத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை எங்களுக்கும் காட்டுவதாய் மகன் சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.