Monday, June 24, 2013


Help For Vote




மோடி செய்வதுதான் 'டாப்பு' இந்திய ராணுவம் செய்வதெல்லாம் 'டூப்பு

உத்ரகான்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு சாமி தரிசனம் சென்றவர்கள் எல்லாம்  ஆழிப்பேரலை போல ஏற்ப்பட்ட  வெள்ள  பெருக்கில் 5 ஆயிரத்துக்கு மேற்ப்பட்டவர்கள் இறந்த போய் இருக்க  வாய்ப்பு இருப்பதாக சொல்லுகின்றார்கள்...  லட்சத்துக்கு மேற்ப்பட்டவர்கள் இந்த  வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்க அனேக வாய்ப்புகள்  இருக்கின்றன. என்று அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் தெரிக்கின்றன..

இந்த பேரழிவில் சிக்கி இருப்பர்களை தன் நாட்டுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் இந்திய ராணுவ வீரர்கள். 1 லட்சத்திற்கும் மேலான பொதுமக்களை உத்தர்காண்டில் காப்பாற்றியுள்ளனர்...

வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகண்ட், மாநிலமே உருக்குலைந்து விட்டது. பல மாநிலங்களில் இருந்து, புனித யாத்திரை சென்ற பக்தர்கள், இதில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை சொந்த ஊர் அழைத்து வர, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அங்கு, மீட்பு பணிகளை பார்வையிட தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது."அவர்கள் செல்வதால் மீட்புப்பணி பாதிக்கப்படும்; அப்பகுதிகளை பார்வையிட, எனக்கே அனுமதியில்லை. உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவுக்கு மட்டுமே அனுமதி,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்


ஆனால் இதை மோடி பொருட்படுத்தாமல் இந்திய மக்களை காப்பாற்ற தம்மை கடவுளின் அவதாரமாக நினைத்த அவர் சட்டங்களை மிறி  குஜராத் மாநிலத்தவர்களை பாதுகாப்பாக மீட்க நேரடியாகவே களத்தில் இறங்கினார். எல்லோரும் இப்படி நடந்து விட்டதே என்று மனவருந்தி அரசாங்கம் இராணுவ உதவியுடன் எடுக்கும்  நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து நிற்க மோடி இதை வரும் தேர்தலில் அதிக வோட்டு பெற இந்த வாய்ய்பை பயன்படுத்தி சினிமாவில் வரும் ஹிரோ போல நடந்து கொள்கிறார்


அவரது நினைப்பு என்னவோ இந்திய ராணுவம் செய்வதெல்லாம் டூப்பு நாம் செய்வது மட்டும்தான் டாப்பு அதனால மக்கள் போடுவார்கள் வோட்டு என சந்தர்ப்பவாதி அரசியல் வாதி போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

பெட்டிச்  செய்தி
ஜூன் 21ம் தேதி மாலை, உத்தரகண்ட் புறப்பட்ட அவர், ..எஸ்., அதிகாரிகள் ஐந்து பேர், தலா ஒரு .பி.எஸ்., மற்றும் .எப்.எஸ்., அதிகாரிகள், ஜி..எஸ்., (குஜராத் மாநில நிர்வாகம்) அதிகாரிகள் இருவர், டி.எஸ்.பி.,க்கள் இருவர், இன்ஸ்பெக்டர்கள் ஐந்து பேர் என, டேராடூன் சென்றார்; அங்கு தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு பணிக்காக, டில்லி, டேராடூனில் தலா ஒருவர்; குஜராத்தில் இருவர் என, ..எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்."குஜராத் பக்தர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளனர்; மீட்பு பணிகளை எவ்வாறு செய்வது' என்பது குறித்து, நள்ளிரவு, 1:00 மணி வரை, மோடி ஆலோசனை நடத்தினார்.

மறுநாள், மீட்புப்பணிகள் துரிதம் அடைந்தன. போக்குவரத்து இல்லாத இடங்களில், ராணுவத்தினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம், 15 ஆயிரம் பக்தர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு பணியில், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் பெரும் பங்கு வகித்தன.மீட்கப்பட்டோர், முதலில் சாலை வசதி உள்ள இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, பின், டேராடூன் சென்றனர். அங்கிருந்து சாலை மற்றும் வான்வழியாக குஜராத் புறப்பட்டனர்.இதற்காக, "இனோவா' கார்கள்-80, சொகுசு பேருந்துகள்-25, "போயிங்' ரக விமானங்கள்- 4 ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும், மோடியின் மேற்பார்வையில் நடந்தது.

என்னமோ இந்திய ராணுவத்தலைவர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் மக்களை காப்பாற்ற தெரியாதுமாதிரி சினிமா படத்தில் வரும் கமல்ஹாசன் மாதிரி மோடி அவர்கள் போய்தான் மக்களை காப்பாற்றிய மாதிரி ஒரு மெகா பில்டப் தருகிறார்கள்

அவர் அப்படி மக்களை காப்பாற்றி இருந்தால் பாராட்டலாம் ஆனால் உண்மை அது இல்லையே. மக்களைத்தான் ராணுவம் காப்பாற்றி உள்ளது.  ராணுவத்தினர் பல சிரமத்திற்கிடையே மக்களை மீட்டு பத்திரமான இடத்தில மக்களை ஒருங்கிணைத்த பிறகு, அங்கிருந்து குஜராத்திற்கு அழைத்து செல்வது பெரிய சாதனையா? சரி வருங்கால பிரதம வேட்பாளர் என்று சொல்பவர் ஒரு மாநிலத்தின் மக்களை மற்றும் காப்பாற்றி வந்தேன் என்று சொல்வது எவ்வளவு சுயநலமாக இருக்கிறது குஜராத் மக்களை மட்டும் காப்பாற்றினால் போதுமா என்ன ?

என்னடா காங்கிரஸுக்கு மாற்றாக இவர் ஒரு தலைவராக வருவார் என்று நினைத்தால் இவர் அவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுவது மாதிரி அல்லவா நடித்து கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய ஒரு சாபக்கேடு நாடாக மாறிவிட்டது போலத்தான் தோன்றுகிறது இந்தியாவை காப்பாற்ற் இனி எந்த ஒரு நல்ல தலைவர்களும் இல்லை இந்தியாவை காப்பாற்ற இனிமேல் கடவுள் வந்தால்தான் முடியும் அல்லது மக்கள் புரட்சியில் இறங்கினால்தான் முடியும்.

இந்திய மக்களை காப்பாற்றியவர்கள் நாம்  தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை ஆயிரம் பேர் வந்தாலும் ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்களும் இல்லை அல்லது கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிற நாம் தலையில் தூக்கி வைத்து ஆடும் கிரிக்கெட் வீரர்கள் இல்லை...உங்களின் சகோதரனாக தன் பிறந்த நாட்டுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் இந்திய ராணுவ வீரர்கள்தான் அவர்களை நாம் ஒவ்வொரு விதத்திலும் பெருமை படுத்தி அவர்களை கெளரவிப்போம் இந்த நேரத்தில்..சந்தர்ப்பவாதிகளையும் அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள்

இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்... இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரியுங்கள்..

அன்புடன்
மதுரைதமிழன்


8 comments:

  1. சரி விடுங்க சகோ! உங்க ஏக்கத்தை போக்க நான் பிரதமருக்கு தேர்தல்ல நிக்குறேன்..., சகோக்கள் எல்லோர்ரும் ஓட்டு போட்டுடுங்க சரியா?!

    ReplyDelete
    Replies
    1. அட எனக்கு இந்தியாவுல ஒட்டு போடும் உரிமை கிடையாதுங்க. இல்லைன்னா உங்களுக்கு போட்டு ஜெயிக்க வைச்சுடுவோம்ல

      Delete
  2. Modi has done a good job, whether it is dramatic or real, 15000 lives saved. appreciate it

    ReplyDelete
    Replies
    1. Yes, Modi is acting very good I agree with you மோடி ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேரை காபாற்றி இருப்பது உண்மையென்றால் கடந்த 9 நாட்களில் அவர் எவ்வளவு பேரை காப்பாற்றி இருக்கலாம் அதை ஏன் அவர் தொடர்ந்து செய்யவில்லை. அவர்தான் 15 ஆயுரம் பேரை காப்பாற்றினார் என்றால் நமது ராணுவ வீரர்கள் செய்து கொண்டிருந்தது என்ன நண்பரே சும்மா தினமலர் வெளியிடும் செய்திகளை மட்டும் படித்து விட்டு கருத்து சொல்லாதீர்கள். மோடியை பாராட்டுவதைவிட உயிரை கொடுத்து உயிரை காப்பாற்றும் நமது ராணுவ வீரர்களை பாராட்டுங்கள்.
      இப்படி நான் சொல்வதினால் நான் என்னவோ மோடிக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம். எனது தளத்தில் செய்திகள் எப்போதும் நடுநிலைமையோடுதான் வரும். காரணம் நான் எதையும் எதிர்பார்த்து எழுதவில்லை அதனால் யாருக்கும் ஜால்ரா போடும் அவசியமும் எனக்கு இல்லை

      Delete
  3. Good post friend. Appreciated.

    //The first flight of Gujarati pilgrims came on Saturday with 134 people. Flying in 15,000 people in 36 hours would have needed at least 115 flights, but theses many aircraft have not landed at the Ahmedabad airport.

    "Does Modi have his own private army that he managed to bring back 15,000 pilgrims in two days," asked Congress leader Shaktisinh Gohil. "Almost all states have helped Uttarakhand in this crisis and none of them have tried to get cheap publicity like this. Modi should also explain why he has offered just Rs 2 crore as aid to the flood-hit state when even Bimaru states like Bihar have offered Rs 5 crore."//

    http://timesofindia.indiatimes.com/india/Forget-Modi-even-Rambo-cant-save-15000-pilgrims-experts-say/articleshow/20734621.cms

    ReplyDelete
  4. காமராஜருக்கு பின்பு மக்களை நேசிக்கும் தலைவர் யாரும் இல்லை

    ReplyDelete
  5. நமது ராணுவ வீராகளுக்கு சல்யூட்

    ReplyDelete
  6. உங்களை போன்றவர்கள் ராணுவ வீரர்களின் சேவையை புரிந்து கொண்டு நினைவு கூருவதற்கு நன்றி.அனால் மற்ற நேரங்களில் ஏ மிலிடரி- என்று சில தெரிந்த நபர்களால் அவமான முறையில் அழைக்கபடுகிறோம் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.