Sunday, June 9, 2013



 


அமெரிக்காவால் அழிக்கப்பட்ட ரகசிய  ஆராய்ச்சி ( அதிர்ச்சியான தகவல்கள் )

1950 லிருந்து  1972 வரை அமெரிக்காவின் உளவுத்துறையான  CIA மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டு டாப் சீக்ரெட்டாக நடத்தப்பட்ட ரிஸர்ச்  ப்ராஜெக்ட் MK-ULTRA ஆகும் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமான ஆராய்சிகள் அமெரிக்காவில் உள்ள  புகழ் பெற்ற 30 க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்கள்(Harvard, Yale, Cornell, Johns Hopkins and Stanford போன்ற.) முலம் நடத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சி மூலம் மனிதர்களின் மனத்தை கண்ட்ரோல் (mind control) செய்ய முயற்சிகள் செய்யப்பட்டன. இதற்காக அந்த காலத்திலேயே 20 மில்லியன் டாலருக்கும் மேல் செலவழிக்கப்பட்டது இதன் மூலம் மனித நினைவுகளை அழித்து அதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு தேவையான எண்ணங்களை அவர்கள் மனதில் விதைப்பது  (erase and insert memories)

இந்த மைண்ட் கண்ட்ரோல் சோதனையில் ரேடியேஷன் , பயாலாஜிக்கல் வெப்பென்ஸ், கெமிக்கல்ஸ் போன்றவைகளை  குழந்தைகள் , பேஷண்ட்,  மாசமாக இருக்கும் பெண்கள், பொதுமக்கள் மேல் அவர்கள் அறியமாலே மிகவும் ரகசியமாக உபயோகப்படுத்தப்பட்டு ஆராய்சிகள் நடந்தன. இந்த சோதனைகள் கனடாவிலும் நடத்தப்பட்டன


.( Radiation, bacteria and funguses were released over urban areas. A large cloud of radiation was released over Spokane during OPERATION GREEN RUN; plutonium was injected into a comatose patient in Boston by Dr. William Sweet, a member of the Harvard brain electrode team; plutonium was placed in the cereal of mentally handicapped children at the Fernald School in New England; 751 pregnant women were injected with plutonium at Vanderbilt University; the bacteria serratia maracens was released into the air in San Francisco, resulting in a series of infections and plutonium was injected into an amputee at the University of Rochester. All these experiments were conducted without any informed consent or meaningful follow-up. Hallucinogens, marijuana, amphetamines and other drugs were administered to imprisoned narcotic addicts in Lexington, Kentucky, terminal cancer patients at Georgetown University Hospital, hospitalized sex offenders at Ionia State Hospital in Michigan and johns picked by prostitutes hired by the CIA in San Francisco and New York

The doctors violated all medical codes of ethics dating back to Hippocrates, including the Nuremberg Code. The experimental subjects were not told the real purpose of the experiments, did not give informed consent, were not afforded outside counsel and received no meaningful follow-up. As described by the psychiatrists in published papers, experiments with LSD and other hallucinogens, combined with sensory deprivation, electroshock and other interrogation techniques, resulted in psychosis and death among other “side effects.” The purpose of these experiments was to see how easily a person could be put into a psychotic state or controlled.)


இந்த ஆராய்ச்சி 1975 ல் பொதுமக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து. அதன் பின்  சர்ச் கமிட்டி, யூ. எஸ். காங்கிரஸ், ஜெரால்டு ஃபோர்டு கமிஷன் ஆகியவைகள் மூலம் இந்த ஆராய்ச்சிபற்றி துப்பு துலங்க ஆரம்பிக்கபட்டது. அதன் விளைவாக  சி.. டைரக்டர் ரிச்சர்டு ஹெல்ம்ஸ் என்பவர் ஆணையின் மூலம் அந்த ஃப்ராஜெக்ட்கான பைல்கள் எல்லாம் 1973 ல் அழிக்கப்பட்டன.
1977ல் Freedom of Information Act என்பதன் மூலம் யாரும் அறியாமல் இருந்த 20,000 க்கு மேலான டாக்குமெண்ட்கள் கண்டு பிடிக்கப்பட்டு ஜூலை 2001 ல் அழிக்கப்பட்டன.

இதுபற்றி மேலதிக தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

பல தகவல்கள் பல மட்ட அளவில் மறைக்கப்பட்டுள்ளன. மூடப்பட்ட ரகசியங்கள் ஒரு நாள் வெளி வரக் கூடும். அமெரிக்க அரசாங்கம் மட்டுமல்ல பல நாட்டு அரசாங்கமும் பல ரகசிய திட்டங்களை தீட்டி அதில் பல உயிர்களுடன் விளையாடி வருகின்றன.உண்மையில் இந்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டு அது தொடர்பான டாக்குமென்ட்கள் அழிக்கப்பட்டன என கூறப்பட்டாலும் அதில் ஈடுபட்ட பல ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உயிரோடு  இருக்க வாய்ப்புகள் இருப்பாதால் அவர்களின் ஆலோசனையை பெற்று வேறு  ஒரு ப்ராஜெக்ட் பெயரில் இதை நடத்த  வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிகின்றன. ஒருவேளை அந்த ஆராய்ச்சிகள் இந்த மண்ணில்(அமெரிக்கா) நடக்காமல்  நமது இந்தியா போன்ற ஊழல் அதிகம் புரையோடும் நாடுகளில் பணத்தை பெற்று நாட்டை அழிவு பாதைக்கு கொண்டும் செல்லும்  தலைவர்களின் அனுமதி பெற்று ரகசியமாக நடை பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று சொல்லலாம் என்பதே மறுக்கபடாத உண்மை...

அன்புடன்

மதுரைத்தமிழன்

12 comments:

  1. நிச்சயம அதிர்ச்சியூட்டும் தகவலே
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இது மிக அதிர்ச்சியான தகவல்கள்.

      Delete
  2. ஐயோ! இப்படி கூடவா அரசாங்கம் நடக்கும் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இப்படியும் நடக்குமா என்ற கேள்விக்கு இப்படியும் பல நாடுகளில் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் இங்கு விஷயம் வெளி உலகிறகு தெரிய வந்து அதற்கு எதிர்ப்பு வந்ததும் அதை மேலே தொடராமல் அழித்துவிட்டார்கள். அதுதான் அமெரிக்கா

      Delete
  3. அதிர்ச்சியான தகவல்!அவர்கள் இது போல் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இது மிக அதிர்ச்சியான தகவல்கள். இப்படி சொல்லாமல் எத்தனை நாடுகள் ஆராய்சிகளில் ஈட்பட்டு இருக்கின்றனவோ?

      Delete
  4. Dear AU/MTG,

    Please take this info up to and tell all these things about the so called developed nations to our Tamil Blogger @ www.nambalki.com blog.
    He is the one who used to criticise all things related to India in comparison to US and praise all things of the USofA!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் சொல்வதை பார்த்தால் நம்பள்கி ஏதோ அமெரிக்காவை தூக்கி இந்தியாவை இழிவுபடுத்தி பேசுவது போல இருக்கிறது அப்படியல்லா இந்தியாவில் நடக்கும் அவலங்களை ஆதங்கமாக அவர் வெளிபடுத்துகிறார் ஆனால் அவர் வெளிப்படுத்தும் விதம் வேண்டுமானால் வித்தியசமாக இருக்கலாம்

      Delete
  5. அதிர்ச்சியான தகவல்கள்.....

    எல்லா நாடுகளிலும் இது போல வெளியிடப்படாத ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன......

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான்

      Delete
  6. The account associated with publisher ID ca-pub-1350178451027553 has been disapproved
    Vanakkan nanba ithukku enna artham.
    Adsense kanakku kidaikkuma kidaikkatha.
    Vilakkam kudunga nanba.
    Nanri

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்து மிக அதிக அளவு ஹிட்ஸ் வரும் தளங்களுக்கு மட்டும் அவர்கள் அட்சென்ஸ் அப்புருவல் தருவார்கள். உங்களுக்கு வந்த பதிலை பார்த்தால் அவர்கள் அப்ருவல் பண்ணவில்லை என்று தெரிகிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.