Monday, June 24, 2013



சிங்கமாக அல்ல சுண்டெலியாக மாற ஆசைப்படும் மதுரைத்தமிழன் அது ஏன்? படிக்க சிரிக்க நகைச்சுவை



மதுரைத்தமிழா  உன்னை ஓர் ஆண் சிங்கமாக ஆக்கவா? இல்லை சுண்டெலியாக மாற்றவா?' என்று கடவுள் கேட்டார். அதற்கு நான் கடவுளே  என்னை சுண்டெலியாவே மாத்திடுங்க அதுக்குத்தான் என் மனைவி ரொம்ப பயப்படுவா என்று சொன்னனேன். அப்போது என் வீட்டு காலிங்க் பெல் ஒலித்தது. அந்த சத்தத்தை கேட்டதும் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தேன். அப்போதுதான் எனக்கு புரிந்தது நான் கண்டது கனவு மட்டுமே நிஜம் இல்லை என்பது. அடச்சீ


அது புரிந்து தூக்கம் தெளிந்த நான் கதவை திறந்தேன் என் பக்கத்துவீட்டு நண்பர் வந்து இருந்தார். உள்ளே வாங்க என்று அவரை அழைத்தேன். அவர் உள்ளே வந்தததும் முதலில் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி இன்னிக்கு உங்க வீட்ல பூரியா என்றுதான்
நானும் மனுஷன் மூக்கு நல்லாதான் வேலை செய்யுது என்று நினைத்தவாரே எப்படி கண்டுபிடிச்சிங்க என்று கேட்டேன்
அதற்கு அவர் பூரி கட்டையால அடி வாங்கின மாதிரி உங்க தலையில வீங்கி இருக்கே அதை வெச்சுதான் சொன்னேன் என்று சொல்லி சிரித்தார்.


அதற்கு நான் என் மனைவி ரொம்ப நல்லவங்கடா. அவங்க என்னை குழந்தை மாதிரி பாத்துக்கிறாங்க' என்றேன். அதற்கு என் நண்பன் ""சரி!  போதும், போதும் நிறுத்து அவங்க வாக்கிங்க் போறதை பார்த்துவுட்டுதான் நான் உங்க  வீட்டு காலிங்க் பெல்லை அடித்தேன் என்றான்.

ஹீ.ஹீ என்று அசடு வழிந்துவிட்டு .....

நண்பனுக்கும் நம்மை பற்றி தெரிந்து இருக்கிறேதே என்று அவனிடமே சரணடைந்து நண்பா நான் முதலில் குண்டாகனும் அதற்கு ஒரு நல்ல வழி சொல்லேன் என்று கேட்டேன் அதற்கு அவன் எல்லோரும் ஒல்லியாக இருக்க வழி சொல்லுன்னு கேட்டா நீ என்னடா இப்படி கேட்குற என்று கேட்டான்

இல்லை நண்பா  என் மனைவி அடிக்கடி தூக்கி ஏறிஞ்சு பேசுறா அதானால தான் குண்டா ஆகிட்டா அவளால அப்படி செய்ய முடியாதே என்று சொன்னேன் நண்பணோ அதற்கு சற்று சிரித்தான்.. நண்பன் கூட நாம் சொல்லுறதை சீரியஸா எடுத்துகிற மாட்டேங்கிறான்  என்று எண்ணி நொந்துகிட்டேன்.



அவன் சிரித்து முடித்ததும் மதுரைத்தமிழா எனக்கு ஒரு உதவி தேவை அதனால் தான் உன்னிடம் வந்தேன் என்றான் நானும் கொஞ்சம் சீரியாஸாகி என்னடா சொல்லு என்றேன்/ அதற்கு அவன் நீ அடிக்கடி என்கிட்ட அடியாள் இருக்குன்னு அடியாள் இருக்குன்னு பீத்திகிட்டுத் திரியுராறேயே அந்த அடியாள் யாருடா அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வையேன் அவரை வைத்து நான் என் மனைவியை மிரட்டனும் என்றார்.

இப்போது நான் சிரிக்க ஆரம்பித்து பின் அவனிடம் சொன்னேன் நண்பா நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுகிட்டே அது அடியாள் இல்லைடா என்னை அடிக்கிற ஆள்டா அவதான் என் மனைவியடா இதை வேறு யாரூக்கும் சொல்லிவிடாதேடா என்று சொன்னேன்

அதன் பிறகு அவனிடம் கேட்டேன் ஆமாம் உன் மனைவி நல்லவள்தானே எதுக்கு அவளை மிரட்டனும் என்று கேட்டேன் அதற்கு அவன் வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா என் மனைவிக்குப் பிடிக்காது அதனால எப்போ பார்த்தாலும் என் கூட சண்டை போடுறா என்றான்

அதற்கு நான் அட போடா இது பரவாயில்லையே  என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது! அவளும் எங்கிட்ட என் பொண்டாட்டி போல கோச்சுகிறார் .பார்த்தியடா இந்த மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனையை....

ஆமாம்டா உனக்கு சோதனை மேல சோதனைதான் . அது சரி தந்தையர் தினத்திற்கு உன் பொண்டாட்டி பிள்ளைகள் என்ன பரிசு கொடுத்தாங்கட மதுரைத்தமிழா.

அதை ஏன் கேட்குற வேலைக்காரி ஒழுங்கா துணி துவைக்கா மாட்டேங்கிறதுக்காக எனக்கு ஒரு நல்ல வாஷிங்க் மிஷன் கிப்ட்டா வாங்கி தந்திருக்கிறாங்க.

ஹா ஹா ஹா உன் மனைவி நல்ல ஸ்மார்ட்தாண்டா அது சரி  வேற என்னதான்  பண்ணிங்க அந்த தினத்தில்

அதே ஏன் கேட்குற...அன்று காலையில்  என் மனைவியிடம் எனக்கு ஒரு கப் காபி கொடேன் என்று கேட்டேன் அதற்கு அவள் சொன்னாள் இப்பதானே ஒரு கப் தந்தேன் என்று சொன்னாள் நான் அப்பவாது பேசாமவாது  இருந்திருக்க கூடாதா....ன் விதி  என்னை உண்மையை பேச வைத்துவிட்டது அதனால் அவளிடம் நான் சொன்னேன் ... நீ காபிதான் கொடுத்தியா நான் அதை வாய்கொப்பளிக்க எனக்கு வெந்நீர் தந்தாய் என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதாண்டா அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லியா உனக்கு தெரியனும்



டேய் மதுரைத்தமிழா உன் வீட்டிற்கு வெளியே நாய் குரைக்கிற மாதிரி இருக்குடா புதுசா நாய் எதும் வாங்கி இருக்கிறாயா இல்லையேடா இரு நான் பார்க்கிறேன்.. உம்ம்ம்ம் டேய் என் மனைவி எதோ சொல்லிக் கொண்டு வருகிறாளடா

அதை கேட்ட என் நண்பண் பின்பக்க வாசல் வழியா எஸ்கேப் ஆகிட்டான்


வெளியே வந்தா நான், என்னம்மா என்னை கூப்பிட்டாயா என்றேன்

அவளோ நான் நாயா கத்திக்கிட்டு இருக்கிறேன் அது உங்க காதுல விழவில்லையா என்றேன். சரி இதோ வர்ரேன் என்ற நான் வெளியே வந்ததும்  நான் நாய் நாய் என்றேன்

ஆமாங்க இன்று நான் புதுசா ஒரு நாய் வாங்கியிருக்கேன், வந்து பாருங்களேன்''
நான் அப்பாவியாக அந்த நாய் கடிக்குமா என்று கேட்டேன். அதற்கு அவள் அதைத் தெரிஞ்சுக்கத்தான் உங்களைக் கூப்பிடறேன்' என்றாள்.

அடிப்பாவி இப்படி ஒரு மனைவியா என்று நினைத்தவாறே வீட்டிற்குள் ஒடிவிட்டேன்

அவளோ நாயை வீட்டிற்கு முன்னாள் கட்டி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்து சொன்னாள்.எனக்கு ரொம்ப அலுப்பா இருக்குங்க என்றாள்.

அதுக்கு என்ன இப்போ உனக்கு காபி கிப்பி வேண்டுமா என்றேன். அதற்கு அவள்  வெறும் வாய்ச்சண்டையோடு இன்னைக்கு முடிச்சிக்கிடலாம் என்று சொன்னாள்

அதன் பின் சொன்னாள் நான் இன்னும் ஒரு மணிநேரத்திற்கு அப்புறம் என் அம்மாவீட்டிற்கு போறேன் அதன் பிறகு ஒருவாரம் கழிச்சுதான் வருவேன் என்றாள்.

ஒரு மணி நேரம் கழித்து அவள் அம்மாவீட்டிற்கு காரில் கிளம்பியதும் சொன்னேன் .அம்மா வீட்டிற்கு போய் சேர்ந்ததும் போன் போடு பண்ணு என்றேன்' எதுக்குங்க என்று கேட்டாள் ..

அப்பத்தான் எனக்கு முழுச் சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கும் என்று சொல்ல நினைத்தேன் ஆனால் சில நேரங்களில் உண்மைகள் பேசப்பாடாமல் இருப்பதே  நல்லது என்பதால் நீ பாதுகாப்பாக சென்றுவிட்டாயா என்று அறியத்தான் என்றேன்.

அவளும் சரியென்று தலையைசத்தாள். நானும் அப்பாடி ஒரு வாரம் எனக்கு சுதந்திரம் கிடைச்சது என்று சந்தோஷமாக பதிவுலகம் வந்து காலம் கழிக்க ஆரம்பித்தேன் சந்தோஷமாக

இரண்டு நாள் கழித்து போன் வந்தது எடுத்து பேசினேன் என் மனைவியுடன் சென்ற என் குழந்தை பேசியது சிறிது நலம் விசாரித்தவுடன் இப்போது எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன் அதற்கு அவள் சொன்னாள் நான் அம்மாவுடன் சரவணா ஸ்டோர் இருக்கிறேன் அம்மா கிச்சனிற்கு  தேவையான கரண்டிகளை வாங்கி கொண்டிருக்கிறார் என்றாள்

எனக்குள் பயம் வந்துவிட்டது "ஆயுத குவியல் பண்ணினா பயமா இருக்காதா?' மக்கா இப்படி பயந்தவாறே மகளுடன் பேசும் போது என் மனைவி தன் தோழியிடம் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது அவங்க பேசினதில் இதுதாங்க என் காதில் விழுந்தது
மனைவியின் தோழி : உன் கணவர் உன்னை அடித்து துன்புறுத்தினால் போலீஸில் புகார் கொடுக்க வேண்டியதுதானே?''
அதற்கு என் மனைவி பண்ணிடலாம். நான் பூரிக்கட்டையால் அடித்ததற்கான அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே'' அதுதான் இப்ப பிரச்சனை என்கிறாள்.






ஒருவித பயத்துடன்
உங்கள் அபிமானதிற்குரிய மதுரைத்தமிழன்

டிஸ்கி ; நான் நெட்டில் படித்த பல ஜோக்குகளை மிக்ஸ் பண்ணி வெளியிட்டதுதான் இந்த பதிவு. இப்படி நான் எழுதும் பதிவுகளையும் நகைச்சுவைகளையும் படித்துவிட்டு என் உண்மையான வாழ்வில் இப்படிதான் நடக்கிறது என்று கற்பனை செய்ய வேண்டாம், இந்த பதிவில் நான் வெளியிட்ட படங்கள எனது உண்மை வாழ்வை பிரதிபலிப்பவை...அவ்வளவுதாங்க

10 comments:

  1. ஹா... ஹா...

    கற்பனை எல்லாம் செய்ய மாட்டோம்...

    ஆனால் சில நேரங்களில் மெளனமாக இருப்பது நல்லது தான்...

    ReplyDelete
    Replies
    1. சிலநேரங்களில் மட்டுமல்ல கல்யாணம் ஆன பின் மெளனமாக இருப்பதே மிகச் சிறந்தது நண்பா

      Delete
  2. நீங்கள் மிக்ஸ் பண்ணி கொடுத்திருந்தாலும் க(லப்)படமில்லாத சிரிப்பை என் உள்ளத்திலிருந்து வரவழைத்தமைக்கு நன்றி.
    மிகவும் ரசித்தேன்
    தாஸ்
    திருப்பூர்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் க(லப்(படமில்லாத கருத்து எனக்கு மகிழ்ச்சியை அளித்தது நண்பரே

      Delete
  3. டிச்கி பொய்ன்னு எங்களுக்குலாம் தெரியும் சகோ!

    ReplyDelete
    Replies
    1. அட அது உங்களை மாதிரி தெரிஞ்சவங்களுக்கு போட்டது அல்லம்மா. அது தெரியாதவங்களுக்கு போட்டது. ஆனால் நீங்கள் நம்ப குடும்ப மானத்தை பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டிங்களே சகோ...

      Delete
  4. Replies

    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே

      Delete
  5. பல ஜோக்குகளை கலந்ததுன்னாலும் பண்ணினதுன்னாலும் மிக்ஸிங் சரியா வந்திருக்கே... அனுபவமோ?

    ReplyDelete
    Replies
    1. சரக்கை நல்லா மிக்ஸ் பண்ணிட்டு அடிச்சா தன்னாலே மற்றதும் நல்லா மிக்ஸ் ஆகிடும் நண்பா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.