Monday, June 10, 2013







பெண்கள் எடை குறைய  5  எளிய வழிகள்


பெண்களுக்கு கல்யாணம் பின் முக்கிய கவலையே அவர்கள் எடையை எப்படி குறைப்பது என்பதுதான். அதற்கு   5  எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.


1. பெண்களே நீங்கள் போடும் மேக்கப்களை நிறுத்தினாலே 1 கிலோ ஈஸியாக குறைத்துவிடலாம்.

2. நீங்கள் போடும் நகைகளை  எனக்கு அன்பளிப்பாக கொடுத்து அதன் பின் உங்கள் எடையை பாருங்கள் நிச்சயம் 1 கிலோ குறைந்து இருப்பீர்கள்

3. சேலை அணியாதீர்கள்...வெயிட் வெயிட் நான் சேலை இல்லாமல் இருங்கள் என்றால்  மார்டனாக வேற ஏதாவது அணியுங்கள் என்றுதான் சொல்ல வருகிறேன் அதற்குள் அவரசரப்பட்டு சண்டைக்கு வராதீர்கள். காரணம் பட்டு சேலைகள் குறைந்தது 2 கிலோவாகவது இருக்கும். அதை அணியாமல் இருந்தால் 2 கிலோ குறைய வாய்ப்புகள் அதிகம்.

4. என்னங்க மார்டனாக அணியுங்கள் என்பதால் ஜீன்ஸை அணியாதீர்கள் அதுவும் 2 கிலோ வெயிட்டுதாங்க.... அதனால த்ரிசா, நயந்தார பீச்சுக்கு வரும் போது அணியும் ஆடைகளை அணிந்தால் நிச்சயம் உங்கள் வெயிட் குறைய வாய்ப்புகள் அதிகம்.( இது எடை குறைய வைக்கும் ஐடியாதான் ஆனால் இது உங்கள் அழகை அதிகம் வெளிபடுத்தாது அதனால் இதை கடைசியாக கையாளுங்கள்)

5. உங்கள் வீட்டுல ஒரு நல்ல குப்பை தொட்டி வாங்கி வையுங்கள். இது எப்படி எடைய குறைக்கும் என்று யோசிக்கிறீர்களா? அது ஒன்னும் இல்லைங்க குழந்தைகள் சாப்பிடாமல் மிச்சம் வைச்சதை வேஸ்டா போயிடுமே என்று உங்கள் வயிற்றுக்குள் போட்டு உங்கள் வயிறை குப்பை தொட்டியாக்குவதற்கு பதில் இந்த குப்பை தொட்டியில் போட்டாலே நீங்கள் உண்மையில் அதிக எடை குறைய வாய்ப்புகள் உண்டு.


மேலே சொன்னது நகைச்சுவைக்காக சொன்னது இந்த லிங்கில் போய் எனது முந்தைய பதிவான  உடல் எடையை குறைக்க எளிய வழிகள் என்பதை பாருங்கள் & எடையை குறையுங்கள்

அப்ப வரட்டாங்க.....



அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. சகோதரி ராஜி மேல உங்களுக்கு எம்புட்டு பாசம். நான் உடல் வெயிட்டை குறைக்கலாம்ன்னு நினைக்குற டைம்ல கரெக்டா பதிவு போட்டிருக்கீங்க!!

    ReplyDelete
    Replies
    1. தங்கத்தின் எடை குறைய யாரவது விரும்புவார்களா? அதனால் எடை குறைய வைக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டாம்

      Delete
  2. Replies
    1. உங்களை இந்த பதிவு ரசிக்க வைத்தது என்பதை அறிந்ததும் எனக்கு சந்தோஷம்

      Delete
  3. எடையைக்குறைக்க இவ்வளவு யோசனைகள் அப்பப்ப எங்கள் ஊருக்கு இந்த செய்தி கரும்பல்லவா

    ReplyDelete
  4. நல்ல யோசனைகள் சார்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.