உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, May 5, 2013

அரசியல் உலகின் 'பவர் ஸ்டார்' அய்யா ராமதாஸா?அரசியல் உலகின் 'பவர் ஸ்டார்' அய்யா ராமதாஸா?

கேள்வி கேட்பதும்  மதுரைத்தமிழனே நக்கல் பதில் அளிப்பதும் மதுரைத்தமிழனே....


கேள்வி  :ராமதாஸை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கலைஞர் விடுவித்த கோரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்  : ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுகிறது என்று தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் அது தான் என் நினைவுக்கு வருகிறது.

கேள்வி  :ஜெயலலிதாவின் அரசாங்கம் தேவை இல்லாமல் தோண்டி துருவி பழைய கேஸூககளை  எடுத்து இப்போது தூசி தட்டுவதை பழி வாங்கும் செயலாகத்தான் தமிழக மக்களால் பார்க்கப்படுகிறதா ? இது ஜெயலலிதாவுக்கே பின்னடைவு ஏற்படுத்துமா?

பதில் : இது நிச்சயம் பழிவாங்கும் செயலாகவோ அல்லது அவருக்கு பின்னடைவி ஏற்படுத்தும் செயலாக இருக்காது.. காரணம் ஒரு நோயாளிக்கு  அவரசர சிகிச்சை அளிக்கும் டாக்டர் அந்த நோயாளிக்கு வேறு என்ன பிரச்சனைகள் இருந்தன என அவரது பழைய ஹிஸ்டரியையும் பார்த்து அதற்கும் சேர்த்துதான் சிகிச்சை அளிப்பார். அப்போதுதான் அந்த நோயாளிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க முடியும். அது போலத்தான் டாக்டர் ஜெயலலிதா அவர்கள்  ஒரு நோயாளிக்கு நல்ல சிகிச்சை அளித்து கொண்டு இருக்கிறார்.

  
கேள்வி : ராமதாஸ் அவர்களின்  கைதுக்குபின் வடமாநிலங்களில் ஏற்படும் கலவரம் பற்றி:?

பதில் : ஒரு சாதியை மையமாக வைத்து அரசியல் செய்த ராமதாஸ் அவர்கள் இன்று தனது குடும்பத்தை முன்னிலைப்படுத்த அரசியல் பண்ண ஆரம்பித்ததால் பா... தனது செல்வாக்கை இழக்க ஆரம்பித்துவிட்டது. அதை மீட்டெடுத்து அடுத்துவரும் தேர்தல்களில் அறுவடை செய்யவே ராமதாஸ் குடும்பம் வடமாநிலங்களில் வன்முறையைக் கையிலெடுத்துள்ளது.


கேள்வி : சொந்த வாகனத்தில் காவல் துறை பாதுகாப்போடு ராமதாஸ் அவர்களை திருச்சிக்குச் செல்ல நீதிபதி அனுமதியளித்ததுபற்றி ?

பதில்; சட்டம் எல்லோருக்கும் சமம் என்றுதான் இந்திய சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த சம்பவத்தில் நீதிபதி அதை மீறி விட்டாரா என்றுதான் நினைக்க தோன்றுகிறது ( நல்ல வேளை போலிஸ்காரர்கள் ஜெயிலில் வசதிகள்சரியாக இல்லை என்று ஸ்டார் ஹோட்டலில் அவரை தங்க ஏற்பாடு செய்யவில்லை .)


கேள்வி: இன்றைய இந்திய அரசியல்தலைவர்கள் பற்றி ஒரு வரியில் உங்களால் கருத்து சொல்ல முடியுமா?
பதில்   :குற்றவாளிக்கு உள்ள மறு பெயர்தான் அரசியல்வாதி.கேள்வி: இந்திய அரசாங்கம் மக்களுளின் பாதுகாப்பிற்க்காக பாடுபடுகிறதா? அதற்கு ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?

பதில் :அம்பானி அவர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடுகள் செய்து இருக்கிறததே இதை வைத்து ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று எடுத்து கொள்ளலாம்,===================
இந்த பதிவின் தலைப்பை அரசியல் உலகின் 'பவர் ஸ்டார்' அய்யா ராமதாஸா என்று சொல்லிவிட்டு அது சம்பந்தமா ஏதும் சொல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் விகடனில் வெளிவந்த ராமதாஸ் அவர்களின்  பேட்டியில் வந்த 2 இரண்டு கேள்விபதில்கள்  இங்கே வெளியிடப்பட்டு இருக்கின்றன.

ராமதாஸ் அவர்களின் பதிலைப்படித்ததும் நல்ல காமெடியாக தெரிந்தது எனக்கு அப்ப உங்களுக்கு?
Courtesy :Vikatan
விகடனார் :மற்ற கட்சிகள் அனைத்தும் பா..-வைத் தனிமைப்படுத்துவதாக நினைக்கிறீர்களா?''

ராமதாஸ் :''தேசியக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது; திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் தனிமைப்படுத்திவிட்டோம். எங்களை யார் தனிமைப்படுத்த முடியும்? எந்தக் கட்சி எங்களை வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும், யாருடனும் கூட்டணி சேர மாட்டோம். கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும் என்ற கலைஞர் வசனம்போல (சிரிக்கிறார்) எங்களுடைய முடிவில் மாற்றம் கிடையாது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும், தி.. போன்ற சில அமைப்புகளும் எங்களுக்கு எதிராக இருக்கின்றனர். எங்கள் தரப்பில் எவ்வளவோ நியாயம் இருந்தாலும் எங்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர்.''

 விகடனார் :''2016-ல் உங்கள் மகன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது எந்த அளவுக்கு சாத்தியம்?''

ராமதாஸ்:''என் மகன் தலைமையில் அல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் 2016-ல் நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சி அமையும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் சுலபமாக நாங்கள் வெற்றிபெறுவோம். அதன் பிறகு எங்களுக்குத் தேவையானது 18 இடங்கள். தெற்கே அல்லது மேற்கே தேசியக் கட்சிகளோடு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லாதவர்கள் ஒருங்கிணைத்து சுலபமாக ஆட்சி அமைப்போம்.''


மதுரைத்தமிழன்: ///தேசியக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது; திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது //// ராமதாஸ் ஐயா சொன்னா மிக தெளிவாகத்தான் சொல்லுவார் சரியா மக்களே ,சரி அடுத்த கேள்விக்கான பதிலை பார்ப்போம்//.தெற்கே அல்லது மேற்கே தேசியக் கட்சிகளோடு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லாதவர்கள் ஒருங்கிணைத்து சுலபமாக ஆட்சி அமைப்போம்.''///இந்த பதிலை படித்த ஜயாவுக்கு இன்னும் அரசியல் பற்றி விபரம் பத்தலைன்னுதான் தோணுது காரணம் தேசியக் கட்சிகளோடு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லாதவர்கள் தவிர வேறு எந்த கட்சியும் தமிழ் நாட்டில் கிடையாது என்பது அவருக்கு தெரியவில்லையா என்ன? ஒரு வேளை ஜெயிலில் இருக்கும் பவர் ஸ்டாரோட பேச்சுவார்த்தை நடத்தி அவரை கட்சி ஆரம்பிக்க வைத்து அவருடன் கூட்டணி வைத்து கொள்வாரோ என்னவோ...அல்லது .ஒரு வேளை ஒபாமாவுக்கு போனனை போட்டு அவருடன் கூட்டணி வைப்பாரோ? அட போங்கப்பா ஒன்றும் புரியவில்லை

-----------------------
இன்று பேஸ்புக்கில் படித்ததில் ரசித்தது
ரிப்போர்ட்டர் சோமு :
கருணாநிதி மாதிரி, "money"தாபிமானம் உள்ளவர் உலகில் வேறு யாரும் இல்லை!

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comment :

  1. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


    தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog