Wednesday, May 29, 2013






கடவுளுடன்  விளையாடி ஜெயிக்க முடியுமா?

கடவுளுக்கு ஆத்திகர்கூட மட்டுமல்ல
நாத்திகன் கூட விளையாட பிடிக்கும்.

அவன்  நம் கூட விளையாடுவது
வாழ்க்கை என்னும்  சதுரங்க ஆட்டத்தை (செஸ்) தான்.
அவன் கூட  விளையாடும் போது
நாம் 'ஆசை' என்ற காயை நகர்த்தி கொண்டே இருக்கிறோம்.
ஆனால் அவன் அதற்கு எதிராக 'விளைவுகள்'
என்ற காயை நகர்த்தி கொண்டே  இருக்கிறான்.
நாமோ 'அவன் கூட' மட்டும் விளையாடிக் கொண்டு இருக்கிறோம்
ஆனால் 'அவனோ அநேக' மக்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அதனால் அவனுக்கு நம்மை விட அதிக அனுபவம் உண்டு.
அவனுடன் நாம் விளையாடும் போது
அவன் நம்மை  சவாலுக்கு அழைக்கிறான்
சோதிக்கிறான் விளையாட்டின் உச்சத்திற்கே
நம்மை கொண்டு செல்லுகிறான்.
அவனுடன் விளையாட விளையாட
நமக்கும் அந்த விளையாட்டு  புரியும் போது
அவன் நம்மை வெற்றி அடைய வைப்பதன் மூலம்
அவன் வெற்றி அடைகிறான்.



டிஸ்கி :  முன்பு ஒரு நாள் நான் படித்த புத்தகத்தில் உள்ள கருத்து என் மனதிற்கு  பிடித்து இருந்தது. அது இன்று என் ஞாபகத்திற்கு வந்ததால் அதை எனது வழியில் இங்கு தந்திருக்கிறேன். படித்து ரசித்து நேரம் இருந்தால் உங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லுங்கள்


God is always playing chess with us. He makes moves in our life & then sits back to see how we react to the challenges. So make the best moves always!
 



அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. மிகவும் ரசித்தேன்
    விளையாட்டை சுவாரஸ்யப்படுத்துவது
    நம்முடைய மூவுக்கும் அதிக பங்குள்ளது
    அவன் விளையாட்டில் மிகக் கெட்டிக்காரன் ஆகையால்
    ஆடுவோருக்கு ஏற்றபடிதான் ஆடிப்போகிறான்

    ReplyDelete

  2. VERY NICE AND GOOD TO SEE SUCH POSTS FROM YOU.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  4. உங்க வழி- தனி வழி .. ரசிக்க முடியாமல் இருக்க முடியுமா?
    த.ம-2

    ReplyDelete
  5. மிகவும் ரசித்தேன். சிறப்பானதோர் விஷயத்தினை நினைவில் வைத்திருந்து உங்கள் பாணியில் எங்களுடன் பகிர்ந்தமைக்கு உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் ஞாபகம் தந்த கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. Interestingly imaginative. and thought provoking

    ReplyDelete
  8. நல்ல ரசிக்கும்படியான பதிவு!! சிந்தைக்க வைப்பதும் கூட!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.