Tuesday, May 21, 2013

    
@avargal unmaigal



ஆண்களும் மிக எளிதாக வடகம் போட்டு  மனைவியை அசத்தலாம்



கோடைக் காலத்தில் உங்கள் மனைவி குழந்தைகளைக் கூட்டி விடுமுறைக்காக அம்மா அல்லது சகோதர சகோதரி வீட்டிற்குச் சென்று இருக்கலாம். அவர்கள் ஊருக்குச் செல்லும் போது நாம் சாப்பிடுவதற்காகச் சாதத்தை நிறைய வடித்து வைத்துவிட்டுப் போயிருக்கலாம் மனைவி போன சந்தோஷத்தில் அந்த சாப்பாட்டை எவ்வண்டா சாப்பிடுவான் இன்றைக்காவது நண்பர்களோடு வெளியே சாப்பிடலாம் என்று போய் இருப்போம்.

அப்படிப் பட்ட சமயத்திலும்  சில சமயங்களில் ஹோட்டலிலேயே சாப்பிட்டு போரடித்துவிடுவதால் வீட்டில் நாமே சமைக்கலாம் என்று நினைத்துச் சமைக்கும் போது அளவு தெரியாமல் நிறையவே சாதம் பண்ணிவிடுவோம்.

இப்படிப் பட்ட சமயத்தில் மிஞ்சிய சாதத்தை வீணாக்காமல் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை வைத்து வடகம் தயாரிக்கலாம் அது மிகவும் எளிது & மிகவும் சுவையாக இருக்கும். நான் சிறுவயது சமயத்தில் இப்படிதான் வடகம் அம்மாவிற்கு உதவியாகச் செய்வேன் இந்த வடகம் எனக்கு மிகவும் பிடித்தது அது மட்டுமல்லாமல் இதை வறுத்து ஸ்நாக்கிற்கு பதிலாகப் பயன்படுத்தலாம்


சோற்று வடகம் செய்முறை.

தண்ணீர் விட்டு வைத்திருக்கும் பழைய சாதத்தை எடுத்து அதில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வேண்டிய அளவு உப்பைப் போட்டு அதனுடன் மிளகாய்த் தூளை வேண்டிய அளவு போட்டு அதனை நன்றாகப் பிசைந்து அதை எடுத்து  தட்டில் சிறிய அளவு அளவு வரும்படி போட வேண்டும். அதை உருட்டிப் போடக்கூடாது, பிச்சு பிச்சு போட வேண்டும். அது அடிக்கும் வெயிலைப் பொறுத்து அதை நாளிலோ அடுத்த நாளிலோ காய்ந்து விடும். அதன் பிறகு அதைப் பாட்டிலில் அல்லது பெரிய டின்னில் அடைத்து வைத்து விட்டால் எவ்வளவு காலம் ஆனாலும் வைத்துப் பொரித்துச் சாப்பிடலாம்.


இதை மழை நேரங்களிலும் பொரித்துச் சாப்பிடலாம்.

இதை முடிந்தவர்கள் மனைவி இல்லாத நேரத்தில் செய்து வைத்துவிட்டு அவர்கள் வந்ததும் பொரித்துக் கொடுத்து அசத்தலாம்.

மக்களே இந்த முறைப்படி யாரவது செய்தால் கொஞ்சம் எனக்கும் அனுப்பவும். இந்த வடகத்தைச் சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது.....


அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments:

  1. முகவரி சொல்லுங்க... அனுப்பிடலாம்...

    தமிழ்மண இணைப்பிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பதிவை பார்த்தும் வடகம் அனுப்பிவைக்க நினைக்கிற உங்கள் தங்க மனசுக்கு மிகவும் நன்றி .இந்த வடகத்தை தவிர்த்து மற்ற எல்லா வடகமும் இங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன. ஊரில் இருந்து யாரவது வந்தால் உங்களிடம் சொல்லுகிறேன் அதன் பின் அனுப்புங்கள்

      Delete
  2. அண்ணிக்கு நீங்க வடகம் போட்டு குடுத்துட்டீங்களா அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. அண்ணிதான் பூரிக் கட்டையால் என் தலையில் வடகம் பொரிக்கிறாள்

      Delete
  3. இந்த வடகத்தை சாப்பிட்டு 20 வருடங்கள் ஆகிறது..,
    >>
    கல்யாணம் கட்டிக்கிட்ட நாள் முதலா அண்ணி எங்கயும் போகலையா?! உங்க மேல அம்புட்டு நம்பிக்கை.

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டுதான் 20 வருஷம் ஆகிச்சுன்னு சொன்னேன் ஆனால் கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகவில்லை... நான் இன்னும் சின்னவயதுக்காரந்தான் ஆமாம் சொல்லி புட்டேன்


      //அண்ணி எங்ககேயும் போகலையா?///

      அந்த கொடுப்பினை ஒரே ஒரு தடவை அதுவும் 2 வருடங்களுக்கு முன்புதான் கிடைத்தது. ஹும்ம்ம்ம்ம்

      Delete
    2. நான் அப்பவே நினைச்சேன் 20 வருஷம் ஆகுதுன்னு சொன்னவுடனெ உங்களை ஸீனியராக்கிட்டாங்களேன்னு இருந்தாலும் நீங்களே சண்டை போட்டுக்கங்கன்னு விட்டுட்டேன்..

      Delete
  4. நம்ம ஊரு வத்தல்,வடாகம்லாம் மறக்க முடியாதுல்ல... அதான் அங்க இருந்தாலும் உங்களுக்கு ஞாபகம் வந்துடுச்சி..சாம்பார் சாதத்துக்கு ஸைடா இந்த வத்தல் ரொம்ப சூப்பர்.. ! இனிமே வத்தல் சாப்பிடும் போது உங்க ஞாபகம்தான் வரும்... நாங்க பேமிலியோட வெவ்வெவ்வெவ்வென்னு... வடக்கு பக்கமா (வேலூர்லர்ந்து அமெரிக்கா எந்த பக்கம்ங்க?) ஆக்-ஷன் காமிச்சி கரக் மொறுக்-ன்னு தின்போம்..! ஹா..ஹா..!

    ReplyDelete
    Replies
    1. நீங்க வடக்கு பக்கமா பார்த்து சாப்பிடுவீங்களோ அல்லது தெற்கு பக்கமா பார்த்து சாப்பிடுவீங்களோ எனக்கு தெரியாது ஆனா இனிமே நீங்க எனக்கு அனுப்பாம சப்பிட்டா வயிற்று வலி வந்து ஆஆஆஆஆஆஆஅ என்று அலறிக்கிட்டே வந்து ஹாஸ்பிடலுக்குதான் ஒடுவீங்க பீடி உஷா அவர்களே

      Delete
  5. வடகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies

    1. வடகத்திற்குதான் வாழ்த்தா அப்ப எனக்கு இல்லையா......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  6. இவ்வளவு தாமதமா வடகம் போட சொல்லி இருக்காங்க. அப்ப இவ்வளவு நாளா எந்த வேலையும் வாங்காம நிம்மதியா எப்படி விட்டு வச்சாங்க. தப்பாச்சே அதுவும் உங்களை ? இதோ வருகிறேன்.

    ReplyDelete
  7. கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அம்மாவே நீங்கள் சொன்னவாறு வடாம்(வற்றல்) செய்வதுண்டு! அது மிகவும் சுவையாகவே இருக்கும்! மலரும் நினைவுகளுக்கு வழிகோலிவிட்டது தங்கள் பதிவு! நன்றி!

    ReplyDelete
  8. சரியாகச் சொன்னீர்கள்
    இங்கு வெய்யில் வீணாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது

    ReplyDelete
  9. நீங்க போட்ட வடகம் :))) சுவைக்கின்றது.

    ReplyDelete
  10. https://imthihas1.blogspot.com/2023/05/blog-post_18.html

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.