Wednesday, May 1, 2013

மனைவியை சமாளிப்பது எப்படி? ( இது ஆண்களுக்கான பதிவு அதனால் பெண்கள் திருட்டுத்தனமாக எட்டிப் பார்க்கக் கூடாது )

 
@avargal unmaigal



உங்கள் மனைவி ஏதாவது பலகாரம் பண்ணி உங்களுக்காக நான் சமைத்த பலகாரம் எப்படி இருக்கிறது எனக்கேட்டால் உண்மையைச் சொல்லி வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள்.


அதற்குப் பதிலாகப் பொய்யாக உன் உதடுகளை விட அது ஒன்றும் சுவையாக இல்லை என்று சொல்லிவிடுங்கள்.அதுக்கு அப்புறம்  உங்களுக்கு திட்டா விழும் ?

நீங்கள் என் பதிவுகளைப் படிக்கும் போதோ அல்லது பின்னூட்டம் இடும் போதோ உங்கள் மனைவி தொண தொண என்று  பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் வாயை அடைக்க  ஒரு முத்தம் கொடுத்து விடுங்கள்

அதன் பின் அவர்கள் மெய்மறந்து கனவு காண்கையில் எனது பதிவுகளையும் படித்தும் பின்னூட்டமும் இட்டு அதன் பிறகு நீங்களும் புதுப்பதிவு போட்டு பேஸ்புக்கில் பல லைக்ஸ் க்ளிக் பண்ணிவிட்டுத் தூங்கப் போகலாம்.

அது போல மனைவியின் உடம்பில் வெயிட் போட்டால் நேரடியாகச் சொல்லிப் பூரிக் கட்டையால் வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள்

அதற்குப் பதிலாக  அச்சச்சோ இந்த சுடிதார் கொஞ்சம் சின்னதாகிடுச்சுடாஎன அழகாக முகம் சுழித்து புதுசாய் பல சுடிதார் வாங்கி தருவதாகச் சொல்லுங்கள்.

 கோபம் வரும் போது கொஞ்சம் நல்லா திட்டிவிட்டு... படுக்கப் போகும் போது   கெஞ்சுவதைப்போல் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப் படுத்தால் அது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்

எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் கொட்டிவிட்டேன். உங்களுக்கும் இது போல ஐடியா ஏதாவது இருந்தால் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.

டிஸ்கி :திருட்டுத்தனமாக எட்டிப்பார்த்த பெண்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட்டுச் செல்லவும் இல்லை என்றால் இந்த மாதம் முழுவதும் நீங்கள் உங்கள் கணவரிடமோ காதலியுடனோ சண்டை போட்டுக் கொண்டிருப்பீர்கள். ( அது யார்டா கணவன் கூடவோ அல்லது காதலன் கூடவோ சண்டை போடாவிட்டால் எங்களுக்குத் தூக்கம் வாராது என்று சொல்லுவது... உஷ்.......)



நேற்று  சக பதிவாளர் உயர்திரு, முரளிதரன் எழுதிய பதிவு ஒன்றில் என்னைப்பற்றி எழுதி இருந்தார்.  அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . அந்த பதிவின் இறுதியில் அவர் எழுதிய கவிதைகள் வார இதழில் வெளிவந்து இருந்ததையும் வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்து எனக்கும் கவிதை எழுத ஆசை வந்து கிழ்கண்ட கவிதையை எழுதி இருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று சொல்லவும். ( இதெல்லாம் கவிதையா என்று படித்த பின் என்னைத் திட்டக் கூடாது )


  
@avargal unmaigal


கல்யாணத்திற்கு முன்பு
நாளிதழைப் பார்த்து
அந்த வாரப் பலன்களைப் பார்ப்போம்
ஆனால்
கல்யாணத்திற்குப் பின்பு
மனைவியின் முகத்தைப் பார்த்து
அந்த வாரப் பலன்களைப் பார்த்துக் கொள்கிறோம்.



( எனக்கு இந்த வாரம் என் மனைவியின் முகத்தை பார்க்க பயம் அதனால் பார்க்கவில்லை. காரணம் கெட்ட பலனைப் பார்க்க யாருக்குத்தான் பிடிக்கும் ஹீ.ஹீ.ஹீ)

அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. ஹா... ஹா...

    நல்ல கவிதை...

    வீட்டில் அவர்கள்... பதிவை வாசித்தார்களா...?

    ReplyDelete
  2. அவர்கள் இந்த பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் இப்படிபட்ட பதிவே வருகிறது... ஹீ.ஹீ

    ReplyDelete
  3. அண்ணே கல்யாணம் ஆகாதவங்க யாருக்கு இச் கொடுக்குறது ஹி ஹி

    ReplyDelete
  4. பெண்களுக்கெதிரா அப்படி என்னதான் சதிதிட்டம் தீட்டறிங்கன்னு நாங்க உஷாரா நீங்க பேசிக்கிடறதை வாட்ச் பண்ண வந்தா.. திருட்டுத்தனமா எட்டி பார்க்கறதா சொல்லிப்பிடறதா? ஆங்..?

    கவிதை.. ம் உங்களை அவங்க கிட்ட மாட்டி விடனுமே? ( நல்ல வேளை அவங்க மெயில் ஐ.டி. மொபைல் நெம்பர் எதுவும் எனக்கு தெரியாதுன்னு நீங்க சத்தம் போட்டு தைரியமா சிரிக்கறது இங்க வரை கேட்குது..இருக்கட்டும் இருக்கட்டும் உங்களுக்கு இந்த வாரம் நல்ல பலன் தான்..!) பூரிக்கட்டைதான் பலமான ஆயுதம் என்று அடிக்கடி உங்கள் பதிவில் சொல்லி வருகிறீர்கள்.ரொம்ப நன்றி ! ஒரு டஜன் பூரிக்கட்டை ஆர்டர் பண்ணியிருக்கேன்..

    ReplyDelete
  5. அப்படியே உல்டாவா நடந்துக்க சொல்றீங்க.... ரொம்ப கஷ்டம்...

    ReplyDelete
  6. என்னது இந்தப் பகிர்வைப் பார்க்கக் கூடாதா?....!!
    பேராண்டி பார்க்க வேண்டியவங்க பார்த்தாச்சு
    இண்டைக்கு வீட்டுல சங்கு தானடி மவனே :)))))

    ReplyDelete
  7. தங்களின் மனைவி தங்களின் பதிவினைப் படிப்பதில்லையா?

    ReplyDelete
  8. அது எப்படிப்பா......பொமபளைன்னாலே ஒட்டு கேக்குறது, ஒளிஞ்சிருந்து பாக்குறது,கோள் சொல்லுறது,அம்மாவுக்கும் மவனுக்கும் சண்டை மூட்டிவுடறது இதானப்பா அடையாளம்....ஆனா ஹீ...ஹீ....என்மனைவி அப்படியில்லப்பா....ஏம்மா கரெக்ட்டா சொல்லீட்டேனா??( என் மனைவிய நான் அம்மான்னுதான் கூப்பிடறது....)

    ReplyDelete
  9. அடக்கடவுளே....
    நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை தானா “உண்மைகள்“?
    நாங்கள் தான் இவ்வளவு நாளாக ஏமார்ந்து இருக்கிறோம்.

    இருக்கட்டும்... இருக்கட்டும்....
    உங்களுக்கு இருக்கிறது... வீட்டில் கிடைப்பது பத்தாது என்று
    இந்த விசயங்களைப் போட்டு
    உடைத்ததால் பல ஆண்கள் உங்களை அடிக்க
    கட்டையுடன் காத்திருக்கிறார்கள்.

    (தப்பிக்க ஏதாவது வழி இருக்கா என்று பாருங்கள்)

    ReplyDelete
  10. அடடா.. நல்ல நல்ல டிப்ஸாக் கொடுத்திருக்கீங்களே...! அனுபவத்துல செஞ்சு பாத்துட்டுதானே சொல்லியிருக்கீங்க? ட்ரை பண்றேன். (பதிவோட கடைசில நீங்க வெச்சிருக்கற படம் மாதிரி ரியாக்ஷ்ன் ஆகிடாம இருந்தாச் சரிதேன்) உங்களைப் போல நானும் ஒரு முறை கவிதை(!)ன்னு ஒண்ணு படைக்க ட்ரை பண்ணேன். பலபேர் கதறி அழுதாங்கன்றதால அதுக்கப்புறம் ட்ரை பண்ணலை. நீங்க எழுதினது கவிதையோ இல்லையோ... தெரியாது. ஆனா அழ வெக்கலை. குட்!

    ReplyDelete
  11. ஆஹா... நல்ல ஐடியா மணியா இருக்கீங்களே....

    கவிதை.... நன்று!

    எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க.... பூரிக்கட்டை நிறைய ரெடியாகிட்டு இருக்காம்!

    ReplyDelete
  12. பூரிக்கட்டையெல்லாம் பத்தாது..பூரி தோய்க்கிற கல் தான் சரி..

    ReplyDelete
  13. இந்த வார பலன் செம மதுர மதுரதான்!?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.