உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 28, 2013

பெண்களே உங்கள் பிள்ளைகள் உங்களை இப்படியும் ப்ளாக் மெயில் செய்யலாம்.
பெண்களை இப்படி எல்லாம் ப்ளாக் மெயில் செய்கிறார்கள்


பையன் அம்மாவிடம் ' அம்மா நண்பர்களோட வெளியில போகணும் அதனால ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று கேட்டான்.

அதற்கு அம்மா ' போடா உனக்கு இதே வேலையாய் போச்சு ஒரு நயா பைசா தரமாட்டேன் போய் படிக்கிறதுக்கு வழிய பாரு என்று சொன்னார்

அதை கேட்ட பையன் சொன்னான். அம்மா எனக்கு நீ பணம் தந்தால் நீ ப்யூட்டி பார்லருக்கு போன பின் அப்பா வேலைக்காரியிடம் என்ன சொல்லி பேசிக் கொண்டிருந்தார் என்பதை உனக்கு சொல்லாம் என் நினைத்தேன். சரி போ நான் போய் படிக்க போகிறேன் என்று சொல்லி சென்றான்.

அதை கேட்ட அந்த அம்மாவுக்கோ தலையே வெடித்துவிடும்  போல இருந்ததால் கைப் பையில் இருந்த பணத்தை எடுத்து மகனிடம் கொடுத்து விட்டு அப்பா என்னடா வேலைக்காரியிடம் பேசினார் என்று கேட்டார்.

அந்த பையன் பணத்தை பர்ஸில் வைத்து விட்டு காலில் ஷுவை மாட்டியவாறே அம்மா அப்பா அந்த வேலைக்காரியை பக்கத்தில் கூப்பிட்டு சொன்னார் அவரின் எல்லா ஷாக்ஸும் ரொம்ப அழுக்காக இருக்கிறது அதை நல்லா துவைத்து போடு என்று சொன்னார் அம்மா என்று சொல்லி பறந்துவிட்டான்


அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆங்கிலத்தில் படித்த நகைச்சுவையை தமிழில் 
எனது வழியில் தந்தது மட்டும் நான்

7 comments :

 1. கெட்டிக்காரப் பயல்
  ரசித்துச் சிரித்தோம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஹ..ஹ..ஹ.. ஹா.
  புத்திசாலி பையன்.

  நான் நினைக்கிறன். இது நீங்க பண்ணின வேலையா இருக்கும்னு.

  ReplyDelete
 3. ஹா.... ஹா..... ரசித்தேன்....

  ReplyDelete
 4. ஒரே சிரிப்ப்ஸ் ....
  படிப்பில் கெட்டியோ இல்லையோ
  இதில் எல்லாம் கெட்டி தான் !

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog