Tuesday, May 28, 2013



இதுதாண்டா சைனா!! கழிவறை பைப்பில் 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை

A nurse feeds Baby 59, who is now stable in hospital after being rescued from a sewer pipe.
A nurse feeds Baby 59, who is now stable in hospital after being rescued from a sewer pipe. Photograph: Imaginechina/Corbis

பீஜிங் : சைனாவில், கழிவறை பைப்பில் அடைத்து கொண்டிருந்த இரண்டு நாள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சைனாவின் சிஜியாங் மாகாணம், ஜின்ஹுவா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின், நான்காவது மாடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஆனால், அந்த தளத்தில் இருந்தவர் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை சத்தம் மட்டும் கேட்டது. இது குறித்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த போது, கழிவறை பைப்பிலிருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரிந்தது. இதையடுத்து கழிவறை பைப்பை துண்டு துண்டாக உடைத்து பார்த்ததில், தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், ஒரு குழந்தை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பிறந்து இரண்டு நாட்களான அந்த குழந்தை தற்போது, "இங்குபேட்டரில்' வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையை கழிவறையில் தூக்கி போட்டதாக கருதப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் கடும் அபராதம் என்பதால், தவறுதலாக இரண்டாவதாகப் பெற்ற இந்த குழந்தை கழிப்பறையில் தூக்கி போடப்பட்டுள்ளது. 
Doctors in China cut a newborn baby boy free from a sewage pipe
Doctors in China cut a newborn baby boy free from a sewage pipe. Photograph: Reuters



  இது போல நடக்கும்  அநேக நிகழ்ச்சிகளை  எவ்வளவுதான் மூடிவைத்தாலும் அதையும் மீறி வெளி உலகத்திற்கு வந்து விடுகின்றன.

இதற்கு யாரை குற்றம் சொல்வது அரசாங்கத்தையா அல்லது குழந்தையை பெற்றவர்களையா? அபார்ஷன் செய்வதையே பாவமாக கருதும் சமயத்தில் இப்படி செய்வது தப்பு இல்லையா? அது போல அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கி இருக்கும் நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெறுவது தவறு இல்லையா? பிறந்த குழந்தையை இப்படி சாக அடித்தால் சட்டத்தின் கையில் மாட்டிக் கொண்டு சித்திரவாதையை அனுபவிப்போம் என்று  கூட தெரியாதா என்ன?இப்படிபட்ட சூழ்நிலை இருக்கும் சமயத்தில் இன்னொரு குழந்தை பிறக்காமல் இருக்க முயற்சி செய்திருக்கலாம் அல்லவா?
இப்படி மனதில் பல கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான சரியான பதில்கள் தான் இன்னும் கிடைக்கவில்லை.










A newborn baby in China flushed down a toilet by his parents was rescued from a sewage pipe in the eastern province of Zhejiang after neighbors heard cries emanating from plumbing alerting them to the infant’s plight.Residents of the apartment block in Jinhua heard the baby crying after he was flushed down a fourth floor squat toilet and called police.

Attempts to pull the five pound, two day old baby boy from the toilet directly were unsuccessful, and rescuers were forced to resort to sawing apart the piping piece by piece resulting in the infant’s dramatic rescue. The intact pipe was brought to a hospital, where surgeons and emergency workers collaborated to free the baby.

When he was finally freed from the sewage pipe, the Chinese baby flushed down the toilet in Jinhau was discovered to still have his placenta and umbilical cord attached. In China, the baby’s narrowly avoided fate has sparked intense outcry against his parents. Australian news sources report that the infant’s 22-year-old mother was on scene for the rescue and delivered the baby unexpectedly while using the bathroom.

A police officer said after the rescue of the newborn flushed down the toilet:“Fortunately the baby survived. But the [parents] still suspected of attempted murder.”
On Sina Weibo, a Chinese social media site similar to Twitter, users lambasted the baby’s parents. The case struck a strong chord particularly following the death of another newborn abandoned in a dumpster in the province of Hebei, and one user posted:

“This should be sentenced to death, they are killing their own baby. This is not the only abandoned baby case I saw in the past ten days, one threw in dumpster and died; the other one was flushed into toilet, those are not actions human beings should do.”Another said:“This little boy survived, he will do great in the future. The parents will never have a good life. I don’t even know how to curse them when seeing this shocking news.”

அன்புடன்
மதுரைத்தமிழன்
மிகவும் என் மனதை பாதித்த செய்தி. இது ஒரு செய்தி பகிர்வுமட்டுமே

7 comments:

  1. கருவில் உருவாகும் குழந்தையை அழிப்பதே பாவச்செயல்னு மனசு நெருடலா இருக்கும் போது.. பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தத்தையும் கேளாது வீசியெறிய கொடூர மனம்தான் இருக்கவேண்டும்.

    த.ம-1

    ReplyDelete
  2. அட ராமா..குழந்தை இல்லாமல் நிறைய தம்பதிகள் கஷ்டப்பட்டு கொண்டிருக்க இப்படியும் நடக்குது.யாரை குற்றம் சொல்வது.

    ReplyDelete
  3. எவ்ளோ முட்டாள்தனமான விஷயம் இது? பார்க்கவே ரொம்ப கொடுமையா இருக்கு. குழந்தைய பெற்றேடுக்கிறதுக்கு முன்னாடியே இதெல்லாம் தெரியாதா என்ன? கொலை செய்றதுக்காக குழந்தையை பெற்றேடுக்கலமா? ஒரு பூனைக்குட்டி தாய் இல்லாம பரிதாபமா கத்திட்டு இருந்தாலே காப்பற்ற தான் தோணும். இப்படி செய்ய அவங்களுக்கு எப்படி தான் மனசு வருதோ? மிகவும் கொடுமையான மனிதர்கள்.

    குழந்தையை காப்பாற்றிய அந்நாட்டு அரசுக்கு பாராட்டு தெரிவித்துதான் ஆக வேண்டும்.

    நல்ல தகவல் நண்பரே.

    ReplyDelete
  4. எவ்ளோ முட்டாள்தனமான விஷயம் இது? பார்க்கவே ரொம்ப கொடுமையா இருக்கு. குழந்தைய பெற்றேடுக்கிறதுக்கு முன்னாடியே இதெல்லாம் தெரியாதா என்ன? கொலை செய்றதுக்காக குழந்தையை பெற்றேடுக்கலமா? ஒரு பூனைக்குட்டி தாய் இல்லாம பரிதாபமா கத்திட்டு இருந்தாலே காப்பற்ற தான் தோணும். இப்படி செய்ய அவங்களுக்கு எப்படி தான் மனசு வருதோ? மிகவும் கொடுமையான மனிதர்கள்.

    குழந்தையை காப்பாற்றிய அந்நாட்டு அரசுக்கு பாராட்டு தெரிவித்துதான் ஆக வேண்டும்.

    நல்ல தகவல் நண்பரே.

    ReplyDelete
  5. //சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் கடும் அபராதம்//

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நண்பரே... பிறப்பது இரட்டைக்குழந்தை என்றால் அந்நாடு ஏற்றுக்கொள்ளுமா? அனுமதிக்குமா?

    ReplyDelete
  6. கேட்டப்பவே மணம் பதறி போனது இதை பார்த்த பிறகு ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.