Tuesday, April 30, 2013



அட்டாக் அட்டாக் ஹார்ட் அட்டாக் -  ( ஆஞ்சியோ - ஸ்டென்ட் ) சிகிச்சை

மாரடைப்புக்கு 'ஸ்டென்ட்' சிகிச்சை



யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் "ஆஞ்சியோ பண்ணிடலாம்; 'ஸ்டென்ட்' வைத்து விட்டால் போதும்" என்று சொல்வதை பல முறை கேள்விபட்டிருப்பீர்கள்.

'ஸ்டென்ட்' மருத்துவம் உண்மையில் ஹார்ட் அட்டாக் நோயாளிக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க 'ஸ்டென்ட்' சிகிச்சை உதவுகிறது என்று அமெரிக்க மற்றும் மேலை நாட்டு டாக்டர்கள் உறுதி கூறுகின்றனர்.

இந்தியாவிலும் இப்போது இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்க 'ஸ்டென்ட்' பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். இந்த சிகிச்சையில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது.  பெரும்பாலானோருக்கு 'ஸ்டென்ட்' பொருந்திய பின் மருந்து மாத்திரை, உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சீராக்கி விட முடிகிறது. அதன்பின் தேவைப்பட்டால்  மட்டும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

'ஸ்டென்ட்' என்பது மிகச்சிறிய நெட் வலைக்குழாய்; உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த ஸ்டென்ட், ரத்த குழாயின் உள் பொருத்தபடுகிறது. இதை பொருத்துவதற்கான சிகிச்சையைத்தான் 'ஆஞ்சியோபிளாஸ்டி' என்று அழைக்படுகிறது. ஆஞ்சியோவின் முக்கிய கட்டம்தான் 'ஸ்டென்ட்' வைப்பது. ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி, ரத்தக்குழாய் பலவீனமாக இருந்து, அதனால் அது வெடிப்பதை தடுக்கவும் 'ஸ்டென்ட்' பயன்படுத்தப்படுகிறது. உலோகம், ஒருவகை இழைகள், மூலம் 'ஸ்டென்ட்' தயாரிக்கபடுகிறது.


இந்த 'ஸ்டெண்டின் சராசரி அளவு (average size of a single sten) இந்திய நோயாளிகளுக்கு Diameter 2.5 to 2.75 mm அளவும்,அமெரிக்க நோயாளிகளுக்கு   3 to 3.25 mm அளவும் ஆகும்
விடியோ விளக்கம்



How cholesterol clogs your arteries (atherosclerosis)

What happens during a Heart Attack?


இதயத்தின் உள்ள இரத்தக்குழாய்கள்  சீராக இருப்பது முக்கியம். அதன் வழியாக முதலில் ரத்தம் செலுத்தப்பட்டு  பின்னரே மற்ற உறுப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக்குழாய்கள் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, நெஞ்சுவலி, அதைத்தொடர்ந்து ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. இதைத்தான் 'ஆஞ்சினோ' என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதைத்தடுக்க ஆன்ஜியோ பிளாஸ்டி செய்யப்படுகிறது. 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டவுடன், ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலைட்யூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது. 'ஸ்டென்ட்' பொருத்தாவிட்டால், மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். பக்கவாதத்தை தடுக்கும் வலது, இடது கழுத்தில் 'கரோடிட்' என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த பாதிப்பை தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி மருத்துவ சிகிச்சை பயன்படுத்தபடுகிறது. 'ஸ்டென்ட்' வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இந்த சிகிச்சை பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அறீயாதன அறீந்தேன் மீக்க நன்றி

    ReplyDelete
  2. bye-pass செய்யும் ஒரு காணொளி ஒன்று காண்பியுங்களேன். பார்க்க ஆசை .. நீங்கள் இதைப் பார்த்தால் என் ஆசை புரியும் ....

    http://dharumi.blogspot.in/2005/11/e.html

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு, காணொளிகள்.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவலுக்கு நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.