Thursday, April 4, 2013


 

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கலைஞர் மேல் என்ன கோபம்?

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதவராக சென்னையில் நடிகர்கள் இன்று நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு

1.,இலங்கை தமிழர்களை பாதுகாக்க இலங்கை அரசை,இந்தியா வலியுறுத்த வேண்டும்.
2.இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
3.இலங்கை அரசு மீதுமத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
4. தமிழக சட்டசபையில் இலங்கை பிரச்னை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் ,இலங்கை பிரச்னைக்காக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நடிகர் சங்கம் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.


எல்லா தீர்மானமும் நிறைவேற்றியவர்கள் & தமிழக சட்டசபையில் இலங்கை பிரச்னை தொடர்பாக ஜெயலலிதா அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் நன்றி சொன்னவர்கள்  கலைஞர் இந்த பிரச்சனைக்காக மத்திய அரசில் இருந்து விலகியதற்கு நன்றி சொல்லி ஏன் தீர்மானம் போடவில்லை. ஏன் இந்த கோபம்??????????

இதே அவர் தமிழகத்தை ஆண்டு இருந்தால் இதற்க்காகவே அவருக்கு ஒரு விழா எடுத்திருப்பார்கள் அல்லவா இந்த நடிகர் சங்கத்தினர்.

இது என்மனதில் எழுந்த கேள்வி


அன்புடன்
மதுரைத்தமிழன்
நடிகர்கள் நடத்திய சுயநல உண்ணாவிரத போராட்டம்

12 comments:

  1. ஹா ஹா ஹா நடிகர் சங்கத்திற்கு தோன்றாதது உங்களுக்கு தோன்றியதற்கே ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்

    ReplyDelete
  2. காரியக்கார பயலுகண்ணே

    ReplyDelete
  3. வைகைப்புயல் கதை போல் ஆகிவிடும்

    ReplyDelete
  4. அவர் ஆட்சியில இல்லையே! இருந்தா மூச்சுத் திணற திணற பாராட்டி இருப்பாங்க.அவரும் இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு காது குளிர கேட்டு பொழுத போக்கி இருப்பார்.

    ReplyDelete
  5. ஆட்சியில் இருந்தா இதுக்காகவே ஒரு விழா எடுத்திருப்பாங்க- உண்மைங்க..!

    ReplyDelete
  6. கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுகிட்டு தேடுவீங்க ஆனாலும் சரியான கேள்வி யுவர் ஆனர் கலர் கலரா வேஷம் போட்டு போட்டு பழகி போய்ட்டாங்க

    ReplyDelete
  7. உண்ணா விரதம் என்ற வார்த்தையை ஆபாச சொல்லாக்கி விட்டார்கள்...
    இதுலே சோன்பப்படி விக்கிற கேஜாரிவால் உன்ன்னவிர்தம் சொல்லி மூணு நாள் படுத்து இருந்தார்...ஒருத்தனும் கண்டுக்கலை. அப்புறம் அவரே விரதத்தை முடித்துக்கொண்டார்.

    ReplyDelete
  8. இது தாத்தா காலங்கடந்து தன்மேல யாரும் குறை சொல்லிடக் கூடாதுன்னு ஆடற நாடகம்கறதால மறந்திருப்பாங்களோ...? ஆட்சியில இருந்தா விழா எடுத்திருப்பாங்கன்றது உண்மைதான்.

    ReplyDelete
  9. படத்தில் நடிப்பது போதாதென்று, இப்படியும் ஒரு நாடகம். அனால் நம்புவதற்குத்தான் ஆளில்லை

    ReplyDelete
  10. ஆல் பழுத்தா அங்கே கிளி அரசு பழுத்தா இங்கே கிளி.............

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.