உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 26, 2013

சீனாவின் ஊடுருவலும் மன்மோகன்சிங்கின் மெளனமும்

சீனாவின் ஊடுருவலும் மன்மோகன்சிங்கின் மெளனமும்

 
நிருபர் மன்மோகன் சிங்கிடம் ; இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஊடுருவி உள்ளதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

மன்மோகன் சிங் : வாய் மூடி மெளனமாகி இருக்கிறார்.
ஆனால் அவரது மைண்ட் வாய்ஸ் பேசுகிறது . அட அடடா சோனியா அம்மா அந்த இடத்தை சீனாவுக்கு அடகு வைத்தது யாருக்கும் தெரியலை போலிருக்கிறது.


இன்னொரு நிருபர் மன்மோகன் சிங்கிடம் ;  சீனா இந்திய மண்ணை கைப்பற்றிக் கொண்டதற்கு பதிலாக நாம் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

மன்மோகன் சிங் : இருநாடுகளிடையேயான எல்லைப்பிரச்னை குறித்து வரும் மே மாதத்தில் சீன பயணத்தின் போது  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போதும் சீனா முரண்டு பிடித்தால் சீனாவை விட்டு வரும் போது தனது பெட்டி நிறைய சீன மண்னை கைப்பற்று வருமாறு அவருக்கு இந்த மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

நிருபர் மன்மோகன் சிங்கிடம் ; மக்கள் சினாவிற்கு பதிலடி கொடுத்து பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே அதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
 
மன்மோகன் சிங் :கடந்த சில ஆண்டுகளாக சீனாநமது நாட்டிலும் நாம் சீன நாட்டிலும் பலகோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து தனிப்பட்ட முறையிலும் கூட்டாக வும் தொழில்களை நடத்தி வருகிறோம். இத்தகைய சூழ்நிலையில் அவசரமாகவும், உணர்ச்சிவசப்பட்டும் இருநாடுகளிடையேயான உறவை எளிதாக முறித்துக் கொள்ள முடியாது. எனவே கவனமாகவும் பொறுமையாகவும் இப்பிரச்னையை கையாள வேண்டிஉள்ளது. இல்லையெனில் நாங்கள் செய்த மூதலீட்டின் நஷ்டம் ஏற்படும் அது சோனியா அவர்களின் வருமானத்தை பாதிக்கும் அதனால்தான் நாங்கள் யோசித்து கொண்டிருக்கிறோம்.

 
இன்னொரு நிருபர் மன்மோகன் சிங்கிடம் : சார்...

மன்மோகன் சிங் நிருபரை இடை மறித்து இதற்கு மேல் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டால் நான் அமெரிக்காவுக்கு செல்லும் பொது பெரிய அண்ணனிடம் சொல்லி அதன் பிறகு ஐநா சபையில் ஒரு அழுகை அழுதுட்டு வந்துடுறேன் இப்ப திருப்திதானே?


சரி இப்ப உங்களிடம் ஒரு கேள்வி இந்திய மக்களின் மனநிலைபற்றி எனக்கு சொல்லுங்களேன்

நிருபர் : நம்ம மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்க்ள். அதனால் அவர்கள் பேஸ்புக்கில் தங்கள் கோபங்களை சீனர்களுக்கு எதிராக பயண்படுத்துகின்றனர். இந்த மாத இறுதியில் எல்லைபகுதிக்கு சென்று மெழுகு வர்த்தி ஏந்தி தங்களது எதிர்ப்பை சீனாவுக்கு தெரியப்படுத்தப் போகிறார்கள் அதன் பிறகு ரஜினிபடம் ரீலீஸ் ஆகிவிடும். அப்புறம் ஜாலியாக எல்லோரும் பேஸ்புக்கில் காலை வணக்கம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதுதான் நம் இந்திய மக்களின் மனநிலை..

மன்மோகன் சிங் : அவ்வளவுதானா நான் என்னமோ ஏதுவோ என பயந்துட்டேன். அதனால நாங்கள் ஒரு மாற்று திட்டத்தை ரெடிபண்ணி வச்சிருந்தோம் இப்ப அதுக்கு வேலை இல்லை போல

நிருபர் : அது என்ன திட்டமுங்க?
அது ஒன்றுமில்லைங்க ஒரே நேரத்தில் 1 லிருந்து 100 வயது வரை வாழும் பெண்களை பலத்காரம் செய்ய ஏற்பாடு பண்ணி இருந்தோம். அப்படி நடந்தால் சீனாவை பற்றி எல்லோரும் மறந்து இதைப்பற்றி பேச ஆரம்பிப்பாரகள்
 

கிழே உள்ளது இன்று நான் படித்த செய்தியாகும். இதைபடித்த பின் நாம் எவ்வளவு வீக்காக இருக்கிறோம் என்பது புரியும்

அன்புடன்\
மதுரைத்தமிழன்

காஷ்மீர் லடாக்கில் ஊடுருவியுள்ளதன் மூலம், எல்லைப் பகுதியில் புதிய பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது சீனா. சட்ட விரோத ஊடுருவல் தொடர்பாக, சீனாவிடம் இந்தியா பல முறை எச்சரித்த போதும், பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், சீனா, பிடிவாதமாக பின் வாங்க மறுக்கிறது. இந்தியாவின் சமாதான நோக்கத்தை தோற்கடிப்பதையே சீனா வழக்கமாக கொண்டிருப்பதால், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளின் நிலைகள் இவை:

கிழக்கில் உள்ள ராணுவ படைகள்
சிலிகுரியில் 33 படைப் பிரிவுகள்
* கேங்டாக் மலையில் 17 மலை பிரிவுகள்
* பினாகுரி மலையில் 20 மலை பிரிவுகள்
* காலிம்பொங் மலையில் 27 மலை பிரிவுகள்
* பீரங்கி படைகள்
வடக்கில் உள்ள ராணுவ படைகள் (லே மலைப்பகுதி)
* லே மலையில் 14 படைப்பிரிவுகள்
* 3 காலட்படை பிரிவுகள்
* 8 மலை பிரிவுகள்
* பீரங்கி படைகள்

தேஜ்பூரில் உள்ள 4 படைப்பிரிவுகள்
* திப்ருகாரில் 2வது மலை பிரிவு
*பொம்டிலாவில் 5 மலை பிரிவுகள்
*மிஸ்சாமரியில் 71 மலை பிரிவுகள்

திமாபூரில் 3 படைபிரிவுகள்
* திப்ருகாரில் 2வது மலை பிரிவு
* ஜகாமாவில் 56 மலை பிரிவு
* லீமாகாங்கில் 57 மலை பிரிவு
* மத்திய பகுதியில் உள்ள படைகள்

சீனாவுக்கு எளிது :

விரிவுபடுத்தப்பட்ட சாலை மற்றும் ரயில் இணைப்புகள் சீனாவுக்குள் உள்ளதால், கோல்மோ - லாசா மற்றும் திபெத் வழியாக ராணுவத்தை எளிதாக கொண்டு வர முடியும்.

நமது எதிர்கால திட்டங்கள் :
 
* மேற்கு வங்கத்தில் உள்ள பனாகர் பகுதியில் புதிய மலைப் பிரிவை துவக்க, அமைச்சரவை குழு அனுமதிக்காக காத்திருக்கிறது.
* 81 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 40 ஆயிரம் படைவீரர்கள் கொண்ட இரண்டு சிறப்பு படைப் பிரிவுகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* அசாம் பகுதியில் உள்ள லெகாபனி, மிஸ்மார் பகுதியில் மேலும் 2 பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன. லடாக் பகுதியில் டேங்குகள், காலாட் படைகள் , போர் வாகனங்கள் மேலும் குவிக்கப்பட உள்ளன. 2,600 கோடி ரூபாய் செலவில் எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், ரயில் பாதைகள் போன்றவை உருவாக்கப்பட உள்ளன.


சீனாவின் திட்டம் :* லான்ஜூ ராணுவ படை, சீன - இந்திய எல்லையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
* லாக் பகுதியில் 3 லட்சம் படை வீரர்கள் உள்ளனர்.
* லான்ஜூ, சென்ங்டூ பகுதியில் 5 முதல் 6 படைகள் உருவாக்கப்பட இருக்கின்றன.

சீன ராணுவ பகுதிகள் :


லாசாவில் உள்ள குனாகர் ஏர்போர்ட் தவிர, காங் கா, நிங்ட்ரி, குன்சா, ஜிகாக், நாக்ஜூ, சாம்டோ போன்ற பகுதிகளில் சீனாவின் விமான படை பிரிவுகள் உள்ளன.
* டி.எப் -31, டி.ஜி -31 போன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வடக்கு திபெத்தில் உள்ள டிலின்கா பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.
* திபெத் ஆக்கிரமிப்பு பகுதியில், சீன ராணுவம் மற்றும் விமானப் படைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.


வான்வெளியில் இந்தியா- சீனா:


*தவுலத் பெக் ஆல்டி, ஃபக்கி, நியமா போன்ற இடங்களில் சீனா அதி நவீன விமான இறங்குதளங்களை அமைத்துள்ளது.
*நியாமா இறங்கு தளம் மற்ற இரண்டு இறங்கு தளங்களைக் காட்டிலும் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
*பனாகர் பகுதியிலிருந்து சிறப்பு படைகளின் விமானங்களை எழுப்ப சீனா திட்டமிட்டிருக்கிறது
*தேஜ்பூர், ஹால்வாரா, பெரில்லி போன்ற இடங்களில் சுகோய்-30 ரக விமானங்களை இறக்க இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது.
*வடகிழக்கு பகுதியான பாசிகாட், அலாங், ஜிரோ, விஜயநகர், வாலங் போன்ற பகுதிகளில் அதி நவீன விமான இறங்கு தளங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

1 comment :

  1. இந்த மண்ணு மோகன் சிங்கும்
    சோனியா மேடமும் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ
    புரியவில்லை.ஆமாம் திடீர்னு ஒரு சந்தேகம்
    மண் மோகன் சிங் இந்தியர்தானே

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog