உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, April 10, 2013

என் மனைவி என்னிடம் (மயங்கிய) ஏமாந்த கதை ( உண்மை காதல் கதை )
 

என் மனைவி என்னிடம் (மயங்கிய) ஏமாந்த  கதை ( உண்மை காதல் கதை )

எனது தாத்தாவின் பெயரை எனக்கு சூட்டியதால் நான் சிறு குழந்தையாக இருந்த போது எனது தாத்தா என்னை நேசித்தது மட்டுமில்லாமல்  என்னை ஒரு அப்பாவியான நல்ல பேரக் குழந்தை என்று நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போக கூடாது என்பதால் நான் வாலுவாக இருந்தபோதிலும் நான் நல்லவனாக நடிக்க தொடங்கினேன். அது போல என் பெற்றோர்களும் எனது சகோதரர்களும் நண்பர்களும்  ஆசிரியர்களும்  எங்கள் தெருவில் உள்ள பெண்களும் என்னை அப்படியே நம்பினார்கள். அவர்கள் எல்லோரும் அப்படி நம்பியதால் நானும் அவர்களுக்காகவே நல்ல அப்பாவியாக நடிக்க தொடங்கினேன்.

இந்த அப்பாவி மதுரையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கம்யூட்டர் படிப்பை படிக்க சென்னைக்கு சென்றான் .படித்து முடித்துவிட்டு அதே இன்ஸ்டிடுயூட்டிலே வேலைக்கு சேர்ந்தான். அப்போது இந்த காலத்தில் உள்ளது போல தெருக்கு ஒர் இன்ஸ்டிடுயூட் கிடையாது.. அந்த இன்ஸ்டிடுயூட்டில்  உள்ள அனைத்து ஆசிரியர்களும்  என்னை  நல்லவனாக கருதியதால் நானும் நல்லவனாகவே நடித்து வந்தேன்.

இந்த சமயத்தில்தான் இன்ஸ்டிடுயூட்டின் செலவிலே எல்லோரும் குற்றாலம், மதுரைக்கு டூர் சென்று வர ஏற்பாடாகியது. அப்போது கூட வேலை பார்த்த பெண்களும் எங்கள் கூட வந்தனர் அதில் ஒரு பெண்தான் இப்போது என் மனைவியாகி என் உயிரை எடுத்து கொண்டிருக்கிறாள்

அந்த பெண் எப்படி ஏமாந்தாள் என்றுதானே உங்களுக்கு தெரிய வேண்டும். சொல்லுறேன் கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள் அந்த சோக கதையை.


ஒரு மாலைப் பொழுதில் எங்கள் பஸ் சென்னையிலிருந்து குற்றாலம் நோக்கி அழகான பெண்களையும் எங்களைப் போல ஆண்களையும் சுமந்து சென்றது. அந்த பஸ் விழுப்புரத்தை நெருங்கியதும் எல்லோருக்கும் பசிக்க தொடங்கியதால் அங்கே உள்ள மோட்டலில் இரவு உணவுக்காக நிறுத்தினோம். அப்போது எல்லோரையும் அனுப்பிவிட்டு நானும் எனது நண்பரும் எங்களுடன் வந்த வயதான ஆசிரியரை கவனித்து கொள்வதாக சொல்லி மற்றவர்களை அனுப்பி வைத்தோம் 

( இந்த வயதான ஆசிரியர் மிலிட்டரியில் வேலை செய்துவிட்டு அதன் பின் எங்கள் இன்ஸ்டிடுயூட்டில் வந்து வேலை செய்தார். அவருக்கு சுகர் உண்டு இரு நாளில் அவரது பெருவிரலில் ஏதோ முள் குத்தியது அதை அவர் அரைகுரையாக எடுத்துவிட்டு அதை கண்டுக்காமல் விட்டு விட்டார் அதனால் அவர் காலில் ஏற்பட்ட புண்ணால் அவரது பெருவிரலை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிடு பண்ணி அவரது பெருவிரலை எடுத்துவிட்டு அதை எப்படி அவரிடம் சொல்வது என்று அவரின் குடும்பத்தார் கவலைப்பட்டனர் அவரிடம் சொல்ல தயங்கியவர்கள் அடுத்த சில நாளில் டாக்டர் சொன்னதை கேட்டதும் மிகவும் அதிர்ந்து போனார்கள் டாக்டர் சொன்னது இது தான் அவரின் காலில் சிழ் அதிகரித்து அதௌ மேலும் பரவி நரம்பை பாதித்ததால் அவரது காலை முழங்காலுக்கு கிழே எடுத்து விட வேண்டும் இல்லையென்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ரு சொல்லி கடைசியில் காலையும் எடுத்துவிட்டனர். அவர் காலை இழந்து மனம் தளராமல் வேலை செய்து வந்தார். அவரும் எங்கள் கூட குற்றாலம் பார்க்க வந்தார் )
 அனைத்து பேரும் சாப்பிட்டு விட்டுதிரும்ப  வரும் போது எங்களுக்கான உணவை பார்சலாக எடுத்து வாருங்கள் என்று சொல்லி இருந்தோம். அப்படிச் சாப்பிட சென்றவர்களில் எனது மனைவியும் ஒருவர். அப்போது அவர் மதத்தை சார்ந்த ஒரு வயதான நபரை வேற்று மதத்தை சார்ந்த இளைஞனாகிய நான் மற்றவர்களுடன் சேர்ந்து  ஆட்டம் பாட்டம் என்று கும்மாளமிடாமல் ஒருவருக்கு உதவுகிறான் என்றால் அவன் மிகவும் நல்லவனாகத்தான் இருக்க முடியும் என்று என்று என் மனைவி நினைத்து இருக்கிறார்

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்த ஆசிரியரோ மிலிட்டரியில் வேலை பார்த்தவர் அதானல் அவர் கேண்டின்லில் இருந்து சரக்கு வாங்கி வந்திருந்தார் அந்த சரக்கை  நாங்கள் மூவரும் எல்லோரையும் அனுப்பிவிட்டு அமைதியாக அருந்தி மகிழ்ந்தோம்.... இந்த சம்பவம் ஒவ்வொரு நாள் இரவும் எங்கேயெல்லாம் நாங்கள் தங்கி இருந்தோமோ அப்போது எல்லாம் நான் அந்த ஆசிரியருக்கு உதவினேனுங்க....நல்லா படிச்சு பாருங்க இந்த அப்பாவி யாரையும் ஏமாத்தல.. ஆனால் என்னை நல்லவன் என்று நம்பியது அந்த ஸ்மார்ட் பெண்ணின் தவறுதானே.. இதோட முடியலைங்க...


குற்றாலம் பார்த்துவிட்டு மதுரைக்கு இரவில் வந்த போது எல்லோருக்கும் ரூம் அரேஞ்சு பண்ணி கொடுத்துவிட்டு அதில் என் நண்பர்களை எனது வீட்டிற்கு அழைத்து சென்றேன். அப்போது இந்த பெண் நல்லவளாக இருந்ததால் அவளையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றேன்.இரவில் நாங்கள் நன்றாக தூங்கி எழுந்த்தோம் இந்த பெண் காலையில் சீக்கிரம் எழுந்து எங்கள் அம்மா எங்களுக்கான காலை டிபனை தயாரிக்கும் போது உடன் இருந்து உதவி செய்தாள் ஆனால் என்னுடன் வந்த மற்ற பெண்கள் நல்லா தூங்கினார்கள். அப்போது எங்கள் அம்மா சொன்னார்கள் இந்த மாதிரி பெண்தான் வீட்டிற்கு மருமகளாக வர வேண்டும் என்று சொன்னார்கள் அவங்க சொன்ன நேரம் முகூர்த்த நேரமோ என்னவோ அது பலித்துவிடும் என்று சொன்ன எங்கள் அம்மாவிற்கு தெரியாது.

(எங்கள் அம்மா சொன்னது பலித்தது எனது கஷ்டமும் தொடங்கியது அவங்க அப்படி சொல்லவில்லையென்றால் அது நடந்து இருக்காது நானும் வேற எவளையாவது கல்யாணம் பண்ணி இருப்பேன். இப்ப இப்படி நினைச்சு என்ன பயன் ஹூம்ம்ம்ம்)


அப்புறம் மதுரையை பார்த்துவிட்டு வரும் வழியில் திருச்சி மலைக் கோயிலுக்கு சென்றோம். அப்போது மலைக்கு செல்லும் படியின் அடிவாரத்தில் இருந்த போது என் மனைவி என்னிடம் ஒரு போட்டி வைத்தாள் யாரு மலை உச்சிக்கு முதலில் போவோமா என்று. நானும் சரியென்று சொல்லி வைத்தேன். நாங்க மதுரைக்காரய்ங்கள போட்டியில் இருந்து ஒதுங்கி விடுவோமா என்ன? போட்டி ஆரம்பம் ஆகியது நானும் வேகமாக ஏறுவது போல பாசாங்கு செய்து விட்டு அதன் பின் நார்மலாக ஏறத் தொடங்கினேன். காரணம் போட்டியில் வென்றால் ஒன்றும் கிடைக்காது. ஆனால் என் மனைவியோ போட்டி ஆரம்பித்ததும் தான் வெற்றி பெற வேண்டும் என்று படுவேகத்தில் நான் ஏறுகிறேனா இல்லையா என்று கூட பார்க்காமல் வேகமாக ஏறிச் சென்று வெற்றியும் பெற்றாள்.

அப்போது அவள் முகத்தில் ஒரு பிரகாசம் ( ஒரு வேளை மனதிற்குள் இப்படி நினைத்திருப்பாளோ...இவன் மட்டும் நமக்கு புருஷனா வந்து சேர்ந்தால் எந்த தவறும் செய்துவிட்டு ஒட முடியாது அப்படியே ஒடினால் நாம் அவனை ஈஸியாக பிடித்துவிடலாம் என்று எண்ணி இருக்கலாம்)

அதுபோல டூரில் வந்த என் நண்பருக்கும் எங்கள் ஆபிஸில் ஒரு வேலைபார்த்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்த சமயம் அது ஒரு சிலருக்க்கு மட்டுமே தெரிந்த விஷயம் ஆனால் அந்த விஷயம் என் மனைவிக்கு தெரியாது அதனால் அப்பாவியாக அந்த பெண்ணிடமே ஒட்டிக் கொண்டிருந்தாள் அதனால் அந்த காதல் ஜோடிகளுக்கு ப்ரைவேசி கிடைக்கவில்லை அதனால் நொந்து போன  என் நண்பர் டேய் ஏதாவது பேசி அந்த பெண்ணை உன் அருகில் அழைத்து கொள் என்று கேட்டுக் கொண்டார் அதன்படி நான் செய்ய என் மனைவியோ நான் என்னவோ அவளை நேசிப்பதாக எண்ணி என்னிடம் பேசிக் கொண்டே வந்தாள்

இப்படிதானுங்க என் மனைவி என்னைப் பார்த்து மயங்கி(ஏமாந்து)  இருக்கிறாள்.


இதுதாங்க எங்களது காதல் கதை... அடச்சீ இதெல்லாம் ஒரு காதல் கதையா நாங்கள் என்னவோ ரொம்ப விருவிருப்பா இருக்குமென்று நினைத்து வந்தால் இப்படி ஏமாத்திட்டீங்க என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது மக்களே அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும் உண்மைக்காதல் கதை படிக்க சுவராஸ்யமாக இருக்காது ஆனால் இட்டுகட்டி சொல்லும் கதைதான் சுவராஸ்யமாக இருக்கும்,


டிஸ்கி 1: நான் எனது காதல் கதையை எழுதப் போகிறேன் என்று ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அதை மிகவும் ஆவலோடு படிப்பதற்காக காத்திருக்கிறேன் என்று ஒரு அப்பாவி இளைஞரான மூங்கில் காற்று முரளிதரன் சொன்னதால் இந்த பதிவு.(மக்களே இப்படியும் ஒரு அப்பாவியா இருக்காரே இவர் பாத்தீங்களா )


டிஸ்கி 2 : நேரம் கிடைக்கும் போது என் மாமனார் ஏமாறியது எப்படி என்று பதிவு போடுகிறேன் ஒகே வா ( இந்த கதையை கேட்க ஒரு அப்பாவி சிக்கமாட்டாரா என்ன? பொறுத்து இருந்து பார்ப்போம்அன்புடன்
மதுரைதமிழன்

9 comments :

 1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. சுவாரஸ்யம்
  சொல்லிச் சென்ற விதம் மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஆஹா இன்னொருத்தர் கதைன்னா என்னா சுவாரசியமா இருக்கு..மாமனார் மாமியாரை ஏமாத்தின கதைய சொல்லுங்க பாஸ். நிறையப் பேருக்கு யூஸ் ஆவும். அமெரிக்கா எப்படி போனீங்க அந்த அந்த கதையும் எடுத்து விடுங்க .

  ReplyDelete
 4. ரொம்பவே கஷட்டபட்டு இருக்கீங்க நல்லவனா நடித்து பாவம்தான் அப்புறம் ஒரு இடத்தில எழுத்து பிழை செஞ்சிடீங்க 'என் உயிரை எடுத்து கொண்டிருக்கிறாள் ' இந்த எ -க்கு பதிலா கொ வரணுமுங்க இந்த கடவுளுக்கு கண்ணிலைன்னு சொல்றாங்களே இதை பத்தி நீங்க என்ன நினைகிறீங்க

  ReplyDelete
 5. டிஸ்கி-2வுல நீங்க சொல்லியிருக்கற அப்பாவி நான்தாங்க...! போடுங்க... படிக்கிறேன்! அதுசரி... அந்த ஆசிரியர் கொண்டு வந்த ‘விஷயத்தை’ நீங்க அருந்தினீங்க. அதுக்கப்புறம் உங்கள்ட்டருந்து வந்த ‘விசேஷ’ ஸ்மெல்லை வெச்சுக் கூடவா உங்க இந்நாள் மனைவி கண்டுபிடிககலை? மெய்யாலுமே அப்பாவி தாங்கோ!

  ReplyDelete
 6. தங்கள் கூறியவிதம் அருமை , உண்மையிலேயா ?

  ReplyDelete
 7. சரியான வாலுதான் நீங்க.

  படிக்க ஆரம்பிச்சதுமே பெக்க பெக்கனு சிரிப்புதாங்க வந்துச்சி.
  சூப்பர்.
  இந்த விஷயம் வீட்டுக்கு தெரியுமா? இல்லேன்னா..

  உங்க மனைவிய என்னைக்காவது சந்திக்கும் நாள் வரட்டும்.. அப்ப இருக்கு உங்களுக்கு...

  நீங்க ஓடி தான் ஆகணும். வேற வழியே இல்ல.

  ReplyDelete
 8. தன்னம்பிக்கை கொண்ட ஆசிரியர் இப்போ எப்படி இருக்கார்?
  பாராட்டுகளுடன் விசாரித்ததாக கூறவும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog