Wednesday, April 3, 2013

அமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக?

அமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்பவர்கள் படிக்க இந்த பதிவு.    (ரமணி சார் அமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ள விரும்பியதாலும்  )

அமெரிக்காவின் நிரந்தர குடிமகனாக(சிட்டிசன்)  ஆக விரும்புபவர்களுக்கு  அமெரிக்க அரசாங்கம் ஒரு ஒரு டெஸ்ட் வைப்பார்கள் அதில் 10 கேளிவி கேட்பார்கள் அதில் 10 க்கு 6 பதில்கள் சரியாக சொன்னால் அந்த டெஸ்டில் பாஸாகிவிடலாம்.  அமெரிக்க சிட்டிசனுக்கு விண்ணப்பித்த பின் அவர்கள் கைரேகை பதிவிற்கு நம்மை அழைப்பார்கள் அப்போது அவர்கள் நமக்கு அமெரிக்கன் வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு புத்தகம் தருவார்கள் அதில் 100 கேள்வி பதில்கள் இருக்கும் அதில் இருந்துதான் சிட்டிசன் ஷிப் ஆவதற்காண கேள்விகள் கேட்பார்கள் அதை படித்தாலே அமெரிக்காவை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்

Study Materials for the Civics Test : There are 100 civics questions on the naturalization test. During the naturalization interview, applicants will be asked up to 10 questions from the list of 100 questions in English. You must answer correctly at least six (6) of the 10 questions to pass the civics test in English. Several study tools are available to help you prepare. To get started, see the resources below. Visit the U.S. Government Bookstore to purchase USCIS products and publications.

உங்களுக்கு அமெரிக்கா பற்றி தெரிந்து கொள்ள விருப்பம்  இருந்தால் இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்

http://www.uscis.gov/USCIS/Office%20of%20Citizenship/Citizenship%20Resource%20Center%20Site/Publications/PDFs/M-638_red.pdf


கிரின் கார்டு வைத்திருப்பதற்கும் சிட்டிசன் ஷிப் ஆவதற்கும் உள்ள வேறுபாடுகள் இதுதான்.
Green Card


அமெரிக்காவில் வந்து தங்குவதற்கு வேலை பார்ப்பதற்கு விசா இருக்க வேண்டும். அந்த விசா பல வகைப்படும் ஒவ்வொரு டைப்பான விசாவிற்கு ஏற்ற மாதிரி தங்குவதின் கால வரையறை வேறுபடும்.

கிரின் கார்டு பெற்றவர்கள் இங்கு நிரந்தரமாக வாழலாம். ஆனால் அதில் சில கட்டுபாடு உண்டு. அதன்படி கிரின் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஆறுமாதம் கண்டிப்பாக அமெரிக்காவில் தங்கி இருக்க வேண்டும் அதில் சில நாட்கள் குறைந்தாலும் அவர்கள் மீண்டும் கிரின் கார்டுக்கு அப்பளை செய்ய வேண்டும். க்ரின் கார்டு வைத்திருந்தாலும் அவர்கள் இந்தியர்கள்தான் அவர்களிடம் இந்தியன் பாஸ்போர்டுதான் இருக்கும். கிரின் கார்டு வைத்திருப்பவர்கள் கிரிமினல் குற்றங்களை செய்தால் தண்டனை காலம் முடிந்தவுடன் அவர்கள் நாட்டுக்கே அனுப்பிவிடுவார்கள் அதன் பின் அவர்கள் அமெரிக்கா பக்கமே திரும்பி பாரக்க முடியாது.
Citizenship Certificate


ஆனால் சிட்டிசன் ஷிப் பெற்றவர்கள்  இங்கு நிரந்தரமாக தங்கலாம் அவர்கள் அமெரிக்கர்களாகிவிடுவார்கள். அவர்கள் அமெரிக்க பாஸ்போர்டுக்கு அப்ளை செய்ய வேண்டும். அவர்கள் இங்கு ஒட்டுப் போடலாம். மத்திய அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளில் அமர்ந்து வேலை செய்யலாம். அமெரிக்காவின் நேச நாடுகளான கனடா லண்டன் சிங்கப்பூர் துபாய் போன்ற பல நாடுகளுக்கு விசா இல்லாமல் எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம் மேலும் பல உரிமைகள் உண்டு. இந்தியர்கள் அமெரிக்க சிட்டிசன் ஆனால் அவர்கள் இந்தியாவின் முதல் தர குடியுரிமையை இழந்துவிடுவார்கள். இந்தியாவில் இன்னும் இரட்டை குடியுரிமை வரவில்லை ஆனால் பல நாடுகளில் இரட்டை குடியுரிமை இருக்கிறது.. ஒரு வேளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இரட்டை குடியுரிமை வர சான்ஸ் இருக்கிறது. அதற்காக அவர்கள் முயற்சித்து கொண்டிருந்தார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்
இந்த பதிவு அமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவர்களின் தகவலுக்காக


டிஸ்கி : அமெரிக்க குடிமகனாக வருவதற்கு சிறிது கஷ்டப்படவேண்டும் ஆனால் டாஸ்மாக் குடிமகனாவதற்கு எந்த கஷ்டமும் இல்லை

25 comments:

  1. தெரியாத பல புதிய தகவல்கள்.. நன்றி...

    ReplyDelete
  2. சென்னை எம்பசியில் நம் இந்தியர்களை அவர்கள் நாயை விடவும் கேவலமாக நடத்துகிறார்கள். தெரிந்தும் நம்ம மக்கள் அங்‍கே தானே விழுகிறார்கள்.

    www.tngovernmentjobs.in

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் இந்தியர்களை எங்கேதான் கேவலமாக நடத்தவில்லை என்று சொல்லுங்கள்? சினிமா தியோட்டரில் நல்ல படியாக நடத்துகிறார்களா? "திருப்பதி கோயிலில்" நல்ல படியாக நடத்துகிறார்களா? ஹாஸ்பிடலில் நல்ல படியாக நடத்துகிறார்களா? ஸ்கூல் அட்மிஷன் டைமில் நல்ல படியாக நடத்துகிறார்களா சொல்லுங்களேன்.

      இங்கே நீயூயார்க்கில் உள்ள இந்தியன் எம்பசியில் இந்தியனை எப்படி நடத்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

      Delete
  3. பச்சை அட்டைதாரர்களும் தேர்தலில் ஓட்டு குத்தலாம், லோக்கல் மற்றும் மாநில தேர்தல்களில் மட்டும். அவர்கள் கனடா மெக்ஸிகோ மற்றும் கரீபியன் தீவுகளுக்கு விசா இல்லாமல் போய்வரலாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னது federal and state election ஆனா நந்தவனத்தான் சொன்னது ட்வுன் ஷிப் அல்லது கம்யூனிட்டி எலக்ஷ்ன் என்று நினைக்கிறேன்

      Delete
    2. கண்டிப்பாக federal எலெக்சனில் ஓட்டுப்போட முடியாது. மாநிலத்தின் சட்டத்தை பொருத்து non-citizenஆக மாநில தேர்தல்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் ஓட்டுப் போடும் முன்னர் விதிகளை அறிந்து ஓட்டுப்போடா விட்டால் ஊருக்கு தொறத்தி விட்டுவிடுவார்கள்.

      அமெரிக்க குடிவரவு துறை (USCIS)தளத்திலிருந்து... There are many different types of elections in the United States, such as federal elections, state elections or local elections. Only U.S. citizens can vote in federal elections....There are very few jurisdictions where a non-U.S. citizen may vote in a local election. However, this web site does not provide information regarding voting qualifications for state and local elections.

      Delete
  4. இந்தியர்களை அல்ல; தமிழர்கள் என்று சொல்லுங்கள் நான் ஒத்துக் கொள்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதில் ராதா அவர்களுக்காக சொன்னதுதானே

      Delete
    2. அதே! அதே! சபாபதே...! நூற்றுக்கு 99 விழுக்காடு தமிழர்கள் அமெரிக்க குடியுரிமையை அவசர அவசரமா எடுப்பதற்கெ முதன் மற்றும் முக்கிய காரணம் aka, catalyst: This bloody Hindi speaking assholes...!

      Delete
  5. ரமணி ஐயாவுக்கு மட்டுமா...? நாங்களும் தெரிந்து கொண்டோம்...

    இணைப்பு சுட்டிற்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரமணி சாருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான். ஆனால் ரமணி சார் முந்தைய பதிவில் கேட்டு கொண்டதற்கிணங்க சில தகவல்கள் அவரசர் பதிவாக வெளியிட்டுள்ளேன் அவ்வளவுதாங்க

      Delete
  6. நந்தவந்தான்...ஆச்சர்யர்மாக இருக்கு....லீகலா...பச்சை அட்டை ஒட்டு குத்தக் கூடாது என்பது நான் படித்து அரிந்தது.

    அவ்வளவு ஏன்...அமெரிக்க குடிமகன் ஆகுமுன் ஒட்டுக் குத்தினையா என்ற கேள்வியே உண்டு...அந்த விண்ணப்பத்தில்..

    ReplyDelete
    Replies
    1. ஐயா அது பெடரல் எலக்சன் குறித்து மட்டுமே. சில மாநிலங்கள் குடிமகனாக ஆகப்போகிறவர் என்ற உரிமையில் பச்சை அட்டைதாரரை குறிப்பிட்ட மாநில தேர்தல்களில் ஓட்டுப்போட அனுமதிக்கின்றன (அவற்றில் டெக்ஸாஸ் மற்றும் மினிசோட்டா அடங்கும் என படித்தாக ஞாபகம்)

      18-ம் நூற்றாண்டுகளில் பல மாநிலங்களில் அந்நியருக்கும் ஓட்டுரிமை உண்டு என்பது தாங்களுக்கு தெரிந்திருக்கும். பின்பு தேசியவாதம் தலையெடுத்த காரணத்தால் இவ்வுரிமை நீக்கப்பட்டது. இப்போது அவ்வுரிமையை மீண்டும் வசிப்பவர் எல்லோருக்கும் தரவேண்டும் என சில இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. வரி கட்டுவது போன்ற குடிமக்களில் எல்லா சுமைகளையும் வசிப்போர் அனைவரும் பகிர்த்து கொள்ளுவதால் அவர்களுக்கும் இவ்வுரிமை தர வலியுறுத்துகின்றார்கள். இவ்வுரிமைகளை சில மேற்குல ஏற்கனவே வசிக்கும் அந்நியருக்கும் வழங்கியுள்ளனவாம்.

      Delete
    2. இந்த எழவுக்கு அமெரிக்க குடியுரிமை வாங்கும் வரை எந்த வோட்டும் போடாமல் இருப்பதே நல்லது..!

      Delete
    3. சரியா சொன்னீங்க. எந்த நாட்டில் எவன் ஜெயித்தாலும் முதலாளிகளுக்குதான் விசுவாசமாக இருக்க போறானுக.ஏதோ இந்தியான்னா எலெக்சன் தினத்தில் ஒருநாள் லீவாவது கிடைக்கும். இங்க அதுவும் இல்லை.தமிழ்நாட்டில் வேட்பாளர் ஓசியாக ஆட்டோவில கூட்டிகிட்டு போய் சாவடில உடுவானுக அதுவும் இல்லை. ஓட்டுப் போட்டா மூக்குத்தி தோடு இல்ல குவாட்டர் பிரியாணியாவது கிடைக்குமான்னா அதுவும் இல்லை வீணா நமக்குதான் கேஸ் செலவு. ஓட்டு போட போன ஒன் அவர் கேப்புக்கு பாஸ் முறைப்பான். இது தேவையா? ஓட்டே வேணாம்யா!

      Delete
    4. இதுக்குதாங்க நம்ம கலைஞரை அல்லது ஜெயலலிதாவை அமெரிக்க சிட்டிஷன் ஆக்கி தேர்தல போட்டி போடஸ் சொல்லனும் அப்பதான் இங்குள்ள மக்களுக்கு ஐபோன் ஐபாட் புட்பால் கேமுக்கு ப்ரீ டிக்கெட், எல்லாம் கிடைக்கும் தேர்தல் அன்று ஒட்டு போட லிமோவில் கூட்டிப் போவார்கள் & நிறைய அரசாங்க லீவுகள் கிடைக்கும்


      ஹூம் இதெல்லாம் கனவா? அமெரிக்கர்கள் கொடுத்து வைத்தவங்க இல்லை போல...

      Delete
  7. தங்கள் பதிவின் மூலம் இதுவரைத்
    தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்
    எனது வேண்டுகளுக்கென உடன் ஒரு அருமையான
    பதிவினைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. தகவல் அறிந்தேன். இந்தியாவில் இரட்டை குடியுரிமை இருந்தால் நல்லது. விரும்பும் போது இங்கு வந்து உரிமையோடு வாழலாமே!

    ReplyDelete
    Replies
    1. இரட்டை குடியுரிமை தேவையியில்லை...இப்பவும் நாங்க பேஷா வந்து வாழலாம். அதுக்கு ஒரு அட்டை இருக்கு....என்ன டெல்லியில் இருக்கும் எங்க ஆட்கள் என்ன முட்டாள்களா?

      Delete
  9. தெளிவா பாடம் நடத்தினதற்கு நன்றி அப்புறம் இது தொடரா... ம்ம்ம்ம்.... எங்க சுத்தினாலும் அசரம அடிப்பதில் கில்லியோ

    ReplyDelete
  10. OCI card vanginal... indiavilum urimayodu thangalam... OCI(overseas citizen of India).

    ReplyDelete
  11. If you get OCI card after getting citizenship of other country still you can live legally in India.
    restrictions are : you can vote in india , you cannot buy farming land and you have to pay NRI fees in schools. even in hotels you need to pay twice the amt indians normally pay.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் ஓட்டுப் போடுவது எப்போ முக்கியம்..எவனாவது பணம் கொடுத்தால் தான்...இல்லாவிட்டால் அந்த கருமத்தை போட எதுக்கு வெயிலில் நிக்கணும்?

      Delete
  12. மிகவும் உபயோகமான தகவல்கள். நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.