உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 29, 2013

நான் செய்தது தவறா?

நான் செய்தது தவறா?

அன்புடன்

மதுரைத்தமிழன்


நகைச்சுவை பதிவு
 
நீங்கள் செய்தது என்ன என்று முதலில் சொல்லுங்கள் அதன் பிறகு அது தவறா இல்லையா என்பதை நாங்கள் சொல்லிகிறோம் என்று நீங்கள் சொல்லுவது எனது காதில் பலமாக விழுகிறது மக்களே


சொல்லுறதுக்கு முன்னால ஒரு கிளாஸ் அடிச்சுட்டு வாரேன்...மக்களே தப்பா நினைக்காதீங்க நான் ஒரு கிளாஸ் அடிச்சுட்டு வரேன்னு சொன்னது ஆரஞ்சு ஜூஸைத்தான்...

இப்ப சொல்லுறேன் மக்களே நான்கூடப் பெரிசா எதையும் செய்யலே.என்னையும் விட்டிருக்கலாம் ஏனோ தெரியலே இங்கே கொண்டாந்து விட்டுட்டாங்க.

அப்படி என்னதான் நடந்தது?

ஒன்றுமில்லே.. நேற்று பஸ்லே போய்கிட்டு இருந்தேன். கண்டக்டர் டிக்கெட் குடுத்தார். நான் பாக்கெட்லேயிருந்து காசு எடுத்து அவர்கிட்டே கொடுத்தேன். அதுக்காக என்னைப் பிடிச்சு போலீஸ்கிட்டே ஒப்படைச்சுட்டாங்க.

என்ன பாக்கெட்லேயிருந்து காசு எடுத்துக் குடுக்கறது ஒரு பெரிய தப்பா?

அதைத்தான் நானும் கேட்டேன்.. அடிச்சு கேட்டேன் அதுக்கு அவங்களும் என்னை நல்லா அடிச்சி சொன்னாங்க?

என்ன சொன்னாங்க?

பாக்கெட்லேருந்து காசு எடுத்துக் கொடுக்கறது தப்பு இல்லேப்பா ஆனா நீ காசு எடுத்த பாக்கெட் உன்னுடையது இல்லையே! பக்கத்துல நின்றிருந்தவர் பாக்கெட் ஆச்சே அப்படின்னு சொல்லி அடித்தாங்கப்பா.

அது சரியில்லையப்பா....எல்லோரிடமும் சகோதரத்துடன் பழகனும் சொல்லுறாங்க... இதில் மட்டும் பிரிவினை உண்டாக்குறாங்கப்பா....ஒரு மாதத்தில் இத்தனை கெட்ட நாட்களா?  
இந்திய பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட…எப்படி முன்னேற முடியும்? என்று மாறும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?


படித்து சந்தோஷம் அடைய கிறிஸ்துவ பாடல்கள்
சந்தோசம் பொங்குதே

சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
சந்தோசம் என்னில் பொங்குதே

அல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்

சந்தோசம் என்னில் பொங்குதே

வழி தப்பி நான் திரிந்தேன் - பாவ
வழி அதை சுமந்தழைந்தேன்
அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே

அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.
சாத்தான் சோதித்திட - தேவ
உத்தர வுடன் வருவார்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்த மானாரே.
----------------------------------------------------------
உன் இதயவாசல் தேடிவருகின்றேன்

உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையேல் நான் இல்லையேல் - 2
நான் வாழ என்னுள்ளம் வா

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன்னன்பு என்றென்றும் மாறாதையா
உன் நெஞ்சில் நான் என்றும் வாழ்வேனயா

குயில் பாட மறக்கலாம் மயிலாட மறக்கலாம்
பயமுடனே நண்பரும் என்னைவிட்டு பிரியலாம்
உன்னன்பு என்றென்றும் மாறாதையா
உன் நெஞ்கில் நான் என்றும் வாழ்வேனயா

7 comments :

 1. அண்ணே ஊருக்கு போன உங்களோட தான் போகணும் ப்ரீ டிக்கெட் கிடைக்கும்ல

  ReplyDelete
 2. அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.

  - தமிழன் பொது மன்றம்.

  ReplyDelete
 3. அது சரி... அடுத்த தடவ தமிழகம் வரும்போது ஒரு ட்ரிப் உங்க கூட அடிக்கலாம்னு நினைச்சேன்.... ஆனா முடியாது! :)

  நல்ல பகிர்வுக்கு நன்றி மதுரைத்தமிழன்.

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா சந்தோசம் பொங்கிவிட்டது

  ReplyDelete
 5. பாக்கெட் இருக்கிறவங்கல்லாம் சகோதரர்களா..? சூப்பர் ஜோக்!

  நல்ல நேரத்தை பார்க்கிறவங்க 21 முக்கால் நாள் சோம்பேறியாத்தான் இருப்பாங்க. மக்களிடம் இருக்கும் அறியாமை மாறும் வழியா தெரியலை.. இப்பல்லாம் வாஸ்து வேற பிடிச்சு ஆட்டிட்டிருக்கு.. இருக்கிற வீட்டையே மாத்தி மாத்தி இடிச்சிட்டிருப்பாங்க. எனக்கு தெரிஞ்சவங்க அவங்க இருக்கற சொந்த வீட்டிற்கு வாஸ்து சரியில்லைன்னு வாடகை வீட்டிற்கு போனாங்க.. ஐந்து மாதம்தான் ஆகிறது அதற்குள் அவுஸ் ஓனர் தொல்லை தாங்க முடியலைன்னு இப்ப மறுபடியும் சொந்த வீட்டிற்கே போக நல்ல நேரம் பார்த்துக்கிட்டிருக்காங்க.

  ReplyDelete
 6. மகிழ்ச்சி... எதுவும் சம்மதம்...!

  ReplyDelete
 7. நகைச்சுவை ரசிக்க வைத்தது!நன்றி!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog