Saturday, April 27, 2013



தளபதியும் அவுரங்கசிப்பும் ஒண்ணா ?


@avargal unmaigal



நான் ஒரு பதிவர் எழுதிய சொல்லுறத்தை சொல்லிப்புடேன் என்ற பதிவைப் படித்தேன். மிக நல்ல பதிவு. அதில் அவர் காத்திருப்பதன் அவசியத்தை மிக அழகாகச் சொல்லி இருந்தார். அதைப் படித்த போது அதில் ஒரு பாராவில்

//ஒன்றை நல்லதாக அடைய வேண்டுமென்றால் காத்திருக்கணும் தப்பில்லை அவசரப்பட்டு ஒரு முடிவெடுப்பதை விடக் காத்திருப்பது மேலானதென்று நான் நினைகிறேன் அவசரத்தில் செய்யும் காரியம் அலங்கோலம் ஆகும் என்று நம்ம பெரியவங்க சொல்லி இருகாங்க

அதுக்கு உதாரணமா நம் அவுரங்கசீப்பை எடுத்துகோங்க அப்பா ஷாஜகானிடமிருந்து நாட்டை பிடுங்கி அப்பாவையும் சிறையில் அடைத்து அண்ணனையும் கொன்றுவிட்டு அவசரமா அரியணை ஏறியதால் இன்றுவரை அவன் பழிக்க படுகிறான் சரித்திரத்தில்// என்று சொல்லி இருந்தார்


அதைப்படித்தவுடன் தளபதி உடனே என் மனதில் தோன்றினார், அவரை அவுரங்கசீப் இடத்தில் சற்று பொருத்தி பார்த்தேன் அவ்வளவுதாங்க...சொல்லுறதை சொல்லிப்புடேன். சரித்திரம் திரும்புகிறமாதிரி என் மனதில் பட்டது எனக்கென்னவோ தளபதி அவசரப்படுகிற மாதிரி தோன்றுகிறது....

  
@avargal unmaigal




ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு

ஓடுமீன் ஓட என்றால் எத்தனையோ மீன்கள் ஓடிக்கொண்டிருக்க அவற்றைக் கொத்தாமல் ஏன் காத்திருக்கிறது கொக்கு? உறு மீன் வருமளவும் காத்திருக்கும். ஆமாம், அந்தக் கொக்கின் வயிறு நிரம்பும் அளவுக்குக் கொழுத்த மீன் வரும் வரையில் அந்தக் கொக்கு காத்திருக்கும்
.அது போலத்தான் நாமும் நமக்குத் தேவையான, தகுதியான வாய்ப்பு  வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்.

காத்திருப்பாரா தளபதி????? காலம்தான் அதற்குப் பதில் சொல்லும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

யாருடைய மனதைக் காயப்படுத்த இந்த பதிவு எழுதப்படவில்லை மனதில் பட்டதைச் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க




8 comments:

  1. தளபதி அவுரங்கசீப் படக்கலவை ரொம்ப சூப்பர்ங்க! தகுதியான வாய்ப்பு வரும் வரை காத்திருந்தால்தான் நல்லது.

    ReplyDelete
  2. அவருக்கு தகுதி வருதோ இல்லையோ தலைவருக்கு டிக்கெட் குடுக்க நேரம் வந்துருச்சுல்ல அதான் தல

    ReplyDelete

  3. தளபதி யார் என்றே தெரியவில்லையே.

    ReplyDelete
  4. படம் நல்ல மிக்சிங்! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
  5. இன்னும் எவ்வளவு காலம் தான் காத்திருப்பாரு! அவருக்கும் வயசு ஆகுதில்லையா? நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. தளபதிக்கும் மெரினா பீச்ல இடம் வேணுமா என்ன?

    ReplyDelete
  7. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாவம் 64 வயசிலும் இளவரசராகவே இருக்காரே!
    அரசராகனும்னு ஆசையில இருந்த ஜகாங்கீர் வயசான பின்னும் திடகாத்திரமா இருந்த அக்பர பாத்து நொந்து போய் ஜோசியர பாத்து எங்கப்பா சாகவே மாட்டாரான்னு கேட்டாராம்.

    ReplyDelete
  8. சூப்பரான போட்டோஷப் வேலை
    என்னுடையபதிவை பகிந்தற்க்கு நன்றி
    உங்கபதிவு எங்கே இருந்து எங்கல்லாம் தவுத்து பாருங்க இந்த கற்பனை .............

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.