உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, April 24, 2013

இன்றைய காதல் காவியக் காதல் அல்லஇன்றைய காதல் காவியக் காதல் அல்லஅவன் இவளது பேஸ்புக் ஸ்டேடஸ்க்கு லைக் போடுவான்
இவள் அவனது பேஸ்புக் ஸ்டேடஸ்க்கு லைக் போடுவாள்

அவன் அவளுக்கு பேஸ்புக்கில் காலை வணக்கம் சொல்லுவான்
இவள் அவனுக்கு பேஸ்புக்கில் இரவு வணக்கம் சொல்லுவாள்

அதன் பின் இருவரது புரோபைலிலும் போட்டோக்களும்
தினசரி மாறிக் கொண்டே இருக்கும்


அவன் பெண்ணுரிமைக்கு ஆதரவாக பதிவை இடுவான்
இவள் காதலில் உருகி கவிதைகள் எழுதுவாள்

அதன் பின் மொபைலிம் மெசேஜ் பரக்கும்
கம்பியுட்டரில்  சாட் செய்யும்
' லவ் யூ 'என்பார்கள்


கடற்கரையில் சந்திப்பார்கள்
படகோரம் அமர்வார்கள்
பட்டாணி சுண்டல் வாங்கி சாப்பிடுவார்கள்
கைகள் விளையாடும்

மீண்டும் சந்திப்பார்கள்
மனம் மட்டும் ஒன்றினால் போதுமா
கைகள் விளையாடினால் போதுமா
உடல் ஒன்ற வேண்டாமா என்று நினைத்து
மகாபலிபுரம் போவார்கள்
ஆதம் ஏவாளாக மாறுவார்கள்

உடல் பொருத்த ஆராய்ச்சி பல முறை நடக்கும்
மனப் பொருத்தமும் உடல் பொருத்தமும்
பார்த்தால் மட்டும் போதுமா என்று எண்ணி
சாதி ,பொருளாதார, குடும்ப அந்தஸ்து  பொருத்தமும் பார்ப்பார்கள்

அதன் பின் அவர்கள் அறிவுக் கண் திறக்கும்
மாற்றம் ஒன்றே என்றும் மாறாது என்று  நினைப்பார்கள்
உடனே அவர்கள் செல்போன் எண் மாறும் பேஸ்புக் ஐடியும் மாறும்.
காதலும் மாறும்  கத்தரிக்காயும் மாறும்
கல்யாணமும் நடக்கும் கஷ்டகாலமும் ஆரம்பிக்கும்

எனக்கும் கிறுக்க தெரியும்
அன்புடன்
20 comments :

 1. நல்லாவே கிறுக்கியிருக்கீங்கப்பூ...! யதார்த்த உலகில் நிறையக் காதல்கள் இந்த மாதிரி இருந்து தொலைக்கின்றன. என் செய்வது?

  ReplyDelete
  Replies
  1. காதல்கள் பல வகை அதில் இதுவும் ஒரு வகை

   Delete
 2. இன்றைய இளைஞர்களின் விளையாட்டு இதுதான்...

  ReplyDelete
  Replies
  1. இந்த விளையாட்டு முதியவர்களிடம் தொற்றிக் கொண்டு வருகிறது

   Delete
 3. மாற்றம் ஒன்றே மாற்றமே இல்லாது என்பது இதற்கும் பொருந்துகிறதே....!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே

   Delete
 4. //உடல் ஒன்ற வேண்டாமா // இந்த வரிகளில் இருக்கும் கோவத்தை ரசித்தேன்

  இல்ல சார் இது கிறுக்கல் அல்ல.. இன்றைய காதல் குறித்த அவலம்

  ReplyDelete
  Replies
  1. நல்ல விஷயம் இல்லாமல் அவலத்தை சொல்லுவதால் கிறுக்கல் என்று சொல்லி இருக்கிறேன்

   Delete
 5. Replies
  1. உண்மைதான் மதுரைக்காரரே

   Delete
 6. ஹாஹ்ஹ்..........நிஜமாதான் கிறுக்கி உள்ளீர்கள்

  ReplyDelete
  Replies
  1. நான் மனதில் தோன்றியதை கிறுக்கினேன் அது நிஜமாகி உள்ளது

   Delete
 7. இப்படித்தான் இன்றைக்கிருக்கிற காதல்னு இயல்பா அழகா கொஞ்சம் கோவத்துடன் கவிதையா சொல்லியிருக்கிங்க.

  ReplyDelete
  Replies
  1. இப்படித்தான் இன்றைய காதல் இருக்கிறது என்று சொல்ல வில்லை ஆனால் இப்படியும் காதலில் சிலவகைகள் இருக்கின்றன என சொல்ல முயற்சிக்கிறேன் அவ்வளவுதான் . அப்புறம் இதில் எனக்கு கோபம் ஏதும் இல்லை அது எழுதும் போது இயற்கையாக வந்து இருக்கிறது. இது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம் அதனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.


   நான் எந்த விஷயங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை அல்லது கோபப்படுவதில்லை


   இப்படி எழுதுவதற்கு பேருதான் கவிதையா?

   Delete
 8. உண்மையை கவிதையாய் சொன்ன விதம் சூப்பர்

  ReplyDelete
 9. அட கிறுக்கலும் கவிதையாத்தான் தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் என்னை கவிஞராக ஆக்கிட்டீங்க அப்ப நான் இனிமேல் அதிக கிறுக்க ஆரம்பிக்க போறேன்

   Delete
 10. உண்மையை கூட இலக்கிய நயத்துடன் சொல்லிய தமிழ் சங்கம் வளர்த்த மதுரை யில் மதுரைகாரரா நீங்கள் ..................

  ReplyDelete
  Replies

  1. என்னங்க இப்படியா நக்கல் பண்ணுவது புடிக்கலைன்னா நேரிடியா திட்டுங்க

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog