Wednesday, April 10, 2013



தமிழகத்தில் மிக விரைவில்  மகா 'பார்' ரதம் 


தமிழகத்தில் நஷ்டம் இல்லாமல் அரசங்கத்தால் நடக்க கூடிய ஒரு தொழில் டாஸ்மாக். அது மட்டுமல்லாமல் கூடிய சீக்கிரத்தில்  இந்தியாவிலேயே அதிக குடி மக்கள் கொண்ட மாநிலமாக மாறக் கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகம். அதனால் தமிழக குடி மக்களுக்கு உதவுவதாக நடமாடும் (மொமைபல்)  பார்களை அரசாங்கம் நிறுவினாலும் நிறுவலாம். இதுவரை அதுமாதிரி ஐடியா ஏதும் இல்லாது இருந்தால் தமிழக அரசு இதைப்பார்த்தாவது அந்த ஐடியாவை பின்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதற்காக நான் உருவாக்கிய படம்தான் இந்த போட்டோடூன்.


வாழ்க தமிழ் 'குடி' மக்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. ஏற்கனவே நாம தான் சார் குடிப்பதில் முதலிடம்

    வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா அப்ப நாம் தமிழக அரசு சாதித்துவிட்டதுன்னு சொல்லுங்க....

      Delete
  2. என்னத்தை சொல்வது :(

    ReplyDelete
    Replies
    1. தலைக்கு மேல் போய்விட்டது அதனால ஜான் போனா என்ன முழம் போனா என்ன என்று இருந்துவிட வேண்டியதுதான்

      Delete
  3. நல்ல ஐடியாயாவாக உள்ளதே/

    ReplyDelete
    Replies
    1. நாந்தான் இப்படி பதிவு போடுறேன் அதை படித்துவிட்டு நீங்களும் நல்ல ஐடியா என்று சொன்னால் தமிழக அரசு அதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடும் பாத்துங்க பதிவுக்கு பின்னுட்டம் போடும் போது நல்ல யோசிச்சு போடுங்க

      Delete
  4. நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுங்கப்பா.

    ReplyDelete
    Replies
    1. இது நல்ல விசயம் இல்லையா நல்லா யோசிச்சு பாருங்க..... வீட்டு வாசல சரக்கு கிடைச்சா ஆண்கள் வாங்கும் அளவை கண்ரோல் பண்ணலாம். குடிச்சு விட்டு வண்டி ஓட்டுவது தவிர்க்கப்படும்....அதனால் உயிர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்...நண்பர்களுக்கு அனாவசியாமாக வாங்கி கொடுத்து செலவழிப்பது கண்ரோல் பண்ணப்படும் இது போல பல நல்ல விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கின்றன...

      Delete
  5. நடமாடும் நீதிமன்றம் இருககற மாதிரி நடமாடும் பார் ரதமா? உங்க கற்பனையக் கொளுத்த...! யாராவது அரசியல்வாதிங்க பாத்தா... நல்ல ஐடியாவா இருக்கேன்னு நிஜமாவே பண்ணிடுவாங்கய்யா....! என்ன செய்யறது? நாட்டு நெலமை அப்படி!

    ReplyDelete
    Replies
    1. என் கற்பனையை கொளுத்தினால் இந்த பதிவுலகமே பதிவுகள் இல்லாமல் தவித்து போய்விடும்... ஹீ.ஹீ

      Delete
  6. ஏன் ஏன் இப்படி ஒரு கொலைவெறி இனிமே உங்க பதிவை படிக்கனும்னா ஹெல்மேட்டோடதான் படிக்கனும் கைவலிச்சாலும் பரவில்லை தலைவலிக்க கூடாது அட கடவுளேனு தட்டி

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி ஆளுக்குதான் என் வலைத்தலத்தின் பேனரில் படிக்க ரசிக்க சிரிக்க சிந்திக்க கடைசியாக தலையில் அடித்து கொள்ள இந்த வலைத்தளத்திற்கு வாருங்கள் என்று சொல்லி இருக்கிறேன். அதை படித்தும் ஜாகிரதையாக ஹெல்மேட் போடாமல் தலையை காயப்படுத்தி கொண்டால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாக சொல்லிக் கொல்கிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.