உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 1, 2013

ஜெயலலிதாவிற்கு உள்குத்து கடிதம் எழுதியது யார்?


ஜெயலலிதாவிற்கு  உள்குத்து கடிதம் எழுதியது யார்?

எனக்கும், மிக பிரபல பத்திரிக்கைகளுக்கும், சி.எம் செல்லுக்கும் சிலர் வழக்கமாக இமெயில் அனுப்புகிறார்கள்.

அதில் ஒரு மெயில்தான் இந்த  கடிதம் இது. ஜெயலலிதாவினால் பாதிகப்பட்ட மாஜி அதிமுக மந்திரிகள்  எழுதி அனுப்புவதா  அல்லது பாதிக்கபட்ட திமுகவினர் அதிமுக மந்திரிகள் பெயரில் எழுதி அனுப்புவதா? தெரியவில்லை. ஆனால் இதை உள்குத்து வேலையில் தில்லாலங்கடி பட்டம் பெற்ற திமுகவினர் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன்.

இது யார் எழுதிய கடிதம் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அதில் வரும் விஷயங்கள் பல உண்மையை ஊருக்கு சொல்வதாகவே இருக்கிறது.   யார் எழுதிய உள்குத்து கடிதம் உங்கள் பார்வைக்கு:


. பன்னீர் செல்வத்தை தொடர்ந்து முன்னிலைபடுத்தினால் கட்சியை உடையும் அபாயம் உண்டு...
Sunday, March 31, 2013 12:06 AM


எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு,

நிதி அமைச்சர் . பன்னீர் செல்வத்தை தொடர்ந்து கட்சியில் முன்னிலைப்படுத்துவதும், தேவர் சாதி அமைச்சர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் கட்சி நிர்வாகிகள் அளவில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மற்ற மூத்த தலைவர்களான செங்கோட்டையன், ஜெயகுமார், சி.வி. சண்முகம் என்றவுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் தாங்கள் . பன்னீர் செல்வத்தை உச்சத்தில் கொண்டாடுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. தாங்கள் தேசிய அரசியல் சென்றால், அடுத்த முதல்வராக . பன்னீர் செல்வம் மட்டும் இருக்க வேண்டும்? பெரும்பான்மை சாதியை சேர்ந்த கே.பி. முனுசாமி இருக்க கூடாதா? கே.பி. முனுசாமி . பன்னீர் செல்வத்தை விட அரசியலில் மூத்தவர். திறமையானவர். கே.பி. முனுசாமி இல்லை என்றால் செங்கோட்டையன் அடுத்த முதல்வராக இருக்க கூடாதா? செங்கோட்டையன் உங்கள் தீவிர விசுவாசி. 1977 முதல் எம்.எல்.. கட்சி ஜா-ஜெ என்று பிரிந்த பொது உங்கள் வலது கரமாக இருந்த ஒருவர். 2001 ஆம் ஆண்டு கட்சியில் மூத்தவராக இருந்த சி.பொன்னையனை விட்டு விட்டு .பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது இன்னும் மறக்க முடியவில்லை. திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் சி.பொன்னையனுக்குதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். கட்சிப்பணியில் நெடுங்காலம் என்று பார்த்தால் முன்னால் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் முதல்வராக வேண்டும். இல்லை தற்போதைய நாடாளுமன்ற குழு தலைவர் தம்பி துரை அடுத்த முதல்வராக வேண்டும். முன்னால் சபாநாயகர் ஜெயக்குமார் முதல்வராக வேண்டும். இவர்களெல்லாம் பிடிக்கவில்லை என்றால் சென்னை மேயர் சைதை துரைசாமி முதல்வர் ஆகலாம். ..எஸ் அதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளவர். ஏன் பிராமண வகுப்பை சேர்ந்த மைத்தேரையன் கூட முதல்வர் ஆக தகுதி உண்டு?

நிதி அமைச்சராக அவர் செய்த சாதனை என்ன? எழுதி கொடுத்ததை படிப்பது நிதி அமைச்சர் வேலையா? இவரால் தமிழ் நாட்டில் பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆஹா ஓஹோ என்று வளர்ந்து விட்டதா? மு.. அழகிரியுடன் தொடர்பு வைத்து கொண்டு கட்சியை விட்டே விலக பார்த்தவர்தான். இப்பவும், மற்ற மந்திரிகள் பத்தி வேட்டு வைத்து குளிர் காயும் வேலையை செய்பவர்தான் இந்த கண்ணிய திலகம். சின்னம்மா குடும்பத்தில் ஒட்டி உறவாடும் நபர்தான். தன்னை விட தங்க தமிழ் செல்வன் மேலுக்கு வந்து விட கூடாது என்று தேனி தொகுதியில் நம் கட்சியை 2009 நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்தவர். இவருக்கும் பி.ஆர்.பி குடும்பத்துக்கும் உள்ள தொடர்பை தமிழ்நாடே அறியும். இவரை முன்னிலை படுத்தினால் தென் மாவட்ட தலித் ஓட்டுக்கள் அதிமுகவுக்கு விழாது. தலித் ஓட்டுக்கள் மட்டுமில்லை, நாடார்கள் ஓட்டும் சேர்ந்து விழாது.


அதிமுக ஒன்றும் திமுக போன்று வாரிசு கட்சியல்ல. . பன்னீர் செல்வதுக்குதான் மீண்டும் முதல்வர் வாய்ப்பு என்றால் கட்சி உடையும். எங்களுக்கு பதவி இழந்த மந்திரிகளின் ஆதரவு உள்ளது. . பன்னீர் செல்வம் அடுத்த முதல்வர் என்றால் கட்சிகாரனே ஓட்டு போட மாட்டான். பொது மக்கள் ஓட்டு சுத்தமாக கிடைக்காது. நாங்களும் கட்சிக்குள் உள் குத்து செய்யும் வேலையை செய்ய தயங்க மாட்டோம். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்றது. ஆனால் சைதை துரை சாமி தோல்வி அடைந்தார். இதற்கு காரணம்? நம் கட்சியில் உள்ள ஒரு சிலரே திமுகவுக்கு வேலை பார்த்தார்கள் என்பது ஒரு சிலர் மட்டும் அறிந்த ரகசியம். இதுவே தமிழ் நாடு அளவில் நடந்தால் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் இழக்க வேண்டி வரும் என்று யூகிக்கவும். கட்சிக்குள் கடுமையான பிளவு உண்டாகும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
பாதிகப்பட்ட மாஜி அதிமுக மந்திரிகள்
(2011 மே மாதம் முதல் ---)
-------------------------------------------


அன்புடன்
மதுரைதமிழன்

6 comments :

 1. யாருப்பா அந்த மாஜி....???

  ReplyDelete
 2. ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும் மாஜிகளுக்கு இந்த அளவுக்கு தைரியம் கொடுத்தது யார் யார் யார் ??????????????????????.

  ReplyDelete
 3. நீங்க அமெரிக்காவுல இருந்தால் உங்களை அம்மா ஒன்னும் செய்யமுடியாதுனு இப்படி எல்லாம் பதிவு போடுகிறீர்களா? இருங்க உங்களை அம்மா என்னபன்றாங்கனு பாருங்க.

  ReplyDelete
 4. இந்தக் கடிதம் யாரோ எழுதியதா இல்லை நீங்களே எழுதி உள்குத்து பண்றிங்களா..
  பாத்து சார் அவதூறு வழக்கு பாயப்போகுது

  ReplyDelete
 5. இது வெளிக்குத்து போல இல்ல இருக்கு!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog