உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 31, 2013

விகடனில் வந்த மிக சிறந்த காமெடி இதுதான்விகடனில் வந்த மிக சிறந்த காமெடி இதுதான்


ஆனந்த விகடன் என்றாலே அதில் வரும் நகைச்சுவை காமெடிதான் எல்லோருக்கும் நினைவில் வரும். அது போல ஜூவி என்றால் அது நாட்டு நடப்பை சொல்லும் இதழாகத்தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதெல்லாம் ஒரு காலத்தில் ஆனால் இப்போது ஜூவியை எடுத்தாலும் அது காமெடிப் புத்தமாகவே தெரிகிறது.

இந்த செய்தி இப்போ எதுக்கு சொல்லுறேன்னா நேற்று ஜூவியில் வந்த செய்தியை படித்து வயிறு வலிக்க சிரித்ததினால்தானுங்க.

அந்த செய்தியின் படி ஜெயலலிதா அவர்கள் தமிழக அரசின் உளவுத்துறை சொல்லும் விஷயங்களை நம்புவதை விட ஜூவி நிருபர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்து செயல்பட்டு இருக்கிறார் என்று சொல்லி செல்கிறது அந்த செய்தி . கலைஞர் செய்யும் நக்கல்களைவிட   ஜூவி  ஜெயலலிதாவை பற்றி சொல்லும் நக்கல் மிகவும் அதிகம்தான்


மக்களே இதுக்கு மேலும் நான் சொல்லவில்லை ஜூவியில் கழுகார் சொன்ன அந்த செய்தியை கிழே தருகிறேன். அதை படித்து உங்களுக்கும் சிரிப்பு வந்தால் சிரியுங்கள் அல்லது அழுகை வந்தால் அழுங்கள் அல்லது இப்படியும் செய்திகள் தருகிறார்களே அதையும் நாம் பணம் கொடுத்து வாங்கி படித்து நாம் அறிவுஜிவி என்று நினைத்து தலையில் அடித்து கொண்டாலும் சரி

ஈழ விவகாரத்தை முழுமையாகக் கையில் எடுக்கப்போகிறார் ஜெயலலிதா. 'தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்என்று தமிழக சட்டசபையில் தீர்மானமே கொண்டுவரும் அளவுக்கு முன்னேறிவிட்டார். மாணவர் போராட்டம் உச்சக்கட்டத்தைத் தொட்ட நேரத்தில்கூட அதுபற்றி எந்தக் கருத்தையும் பதிவுசெய்யாமல் இருந்தார் ஜெயலலிதா. கலைக் கல்லூரிகள் மட்டுமல்ல பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துவிட்டு அமைதியாகத்தான் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில், சட்டசபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, கடந்த புதன் கிழமை அதிரடியாகத் தீர்மானம் கொண்டுவந்தது தமிழக அரசு. இந்த முடிவை அன்றைய தினம் காலையில்தான் எடுத்தனர்!''

''அவசர முடிவாக இருக்கிறதே''.


   


''அன்றைய தினம்தான் உமது நிருபர்கள் எடுத்த சர்வே முடிவுகள் தாங்கிய இதழும் வெளியானது. இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ற முக்கியமான முதல் கேள்விக்கு, 'தனித் தமிழ் ஈழம்தான்என்று 54 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருந்தனர். இலங்கை நம் நட்பு நாடு என்று இந்தியா சொல்வது பற்றியும் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பாகவும் சர்வே முடிவுகள் வெளியாகின. தனி ஈழம், நட்பு நாடு, போர்க் குற்றம் போன்ற இந்த விஷயங்கள் அப்படியே தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தது ஆச்சர்யம்.''


''மக்கள் மனசை ஜெயலலிதாவும் உணர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லும்!''

''இலங்கைத் தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமானால் 'தனி ஈழம்தான் தீர்வுஎன்று சொல்லக்கூடிய தீர்மானம் நிறைவேற்றத்தான் முதலில் திட்டமிட்டார்களாம். 'இன்னொரு நாட்டின் உள் விவகாரத்தில் அதுவும் பிரிவினையைப் பேசும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் பிரச்னை ஏற்படும் என்பதால் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வார்த்தையும் சேர்த்திருக்கிறார்கள்என்றும் சொல்லப்படுகிறது. 'தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்திட .நா-வில் தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பட்டுக்கொள்ளாத வார்த்தையைப் போட்டுள்ளார் ஜெயலலிதா. இலங்கையை நட்பு நாடு என்று இந்திய அரசு சொல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து, போர்க் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுவரை தீர்க்கமான வாசகங்கள் அந்தத் தீர்மானத்தில் இருந்தன. ஈழ விவகாரத்தில் தி.மு.-வுக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் நிலவுவதை சரியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் நினைப்பதாகவும் சொல்கிறார்கள்இந்த செய்தியை படித்த பின் எனக்கு தோன்றியது ஜெயலலிதா அவர்கள் ஏன் இன்னும் ஒன்றுக்கும் உதவாத தமிழக அரசின் உளவுத்துறையை வைத்திருக்கிறார் அதை கலைத்துவிட்டு ஜூவி ரிப்போர்டர்களையே நேரடியாக தனக்கு நாட்டின் நிலவரத்தை ரிப்போர்ட் செய்ய ஏற்பாடு செய்து கொள்ளலாமே. அதை அவர் செய்வாரா என்ன?அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comment :

  1. சரியாகத்தான் சொன்னீர்கள்...பிரயோசனம் இல்லாத உளவுத்துறை என்னாத்துக்கு...?

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog