Sunday, March 3, 2013






மதுவிலக்குக்குகாக உண்ணாவிரதம் இருக்கும் இந்த சசிபெருமாள் பைத்தியக்காரரா?



படித்த செய்தி


சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள்,57, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே, கடந்த ஜன., 30 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவர மறுத்து, சிறையில் அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.

உடல்நிலை மோசமானதால், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக காங்., கட்சியினர் கோர்ட்டில் ஜாமின் பெற்றனர். வெளியே வந்த சசிபெருமாள் தொடர்ந்து, சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.இந்நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள், உண்ணாவிரதத்தை தொடர்ந்தால், அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிவித்தனர்.


உண்ணாவிரதத்தை கைவிடும்படி நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் சசிபெருமாளை கேட்டுக்கொண்டனர். நேற்று பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாரதீய ஜனதாவைச் சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகர்கள் சிவக்குமார், எஸ்.வி. சேகர் ஆகியோர் சசிபெருமாளை சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டனர்.

பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் நிர்வாகி தாமோதரன், மாவட்ட தலைவர்கள் வெங்கட், அடையாறு துரை, ஆனந்தன் ஆகியோர் சசிபெருமாளை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வற்புறுத்தினர் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்தது.


ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட சசிபெருமாள் மறுத்து விட்டார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தின் 32 வது நாளான நேற்று, சசிபெருமாளை முன்னாள் காங்., கட்சி தலைவர் குமரி அனந்தன் சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். அதை பரிசீலித்து, இன்று முடிவை அறிவிப்பதாக சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------










இந்த செய்தியை படித்தது என் மனதில் மின்னலாக  தோன்றியது " இவர் ஒரு பைத்தியக்காரரா என்றுதான். காரணம்  கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டிச் சென்றவர் போல எனக்கு தோன்றியதால்தான். ஒரு தனிமனிதன் & சமுகமும் மற்றும் அதன் தலைவர்களும் இந்த குடியைப்பற்றி சிறிதும் கவலைப்படாத உலகில் இந்த தனிமனிதன் தன்னை வருத்தி கொள்வதால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட முடியும். இவரின் இந்த நல்ல செயல் குடிக்காதவர்கள் மனதில் கூட சிறிய சலனத்தை ஏற்படுத்த முடியவில்லை என்கிற போது குடிகாரர்களின் மனதில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட போகிறது.

இந்த சசிபெருமாள் கடந்த ஜன., 30 முதல் பீச்சில் உண்ணாவிரதம் இருந்து வருகிறாராம். தன் மகன்,  கணவன், அப்பா, நண்பர்கள் குடியால் அழிகிறார்கள் என்று சொல்பவர்கள், குடிக்கு எதிராக பேசுபவர்கள் இவர்களில் எத்தனை பேர்கள் பீச்சுக்கு போய் இந்த சசிபெருமாளுக்கு ஆதரவு கொடுத்தனர். மற்ற செய்திகளுக்கு முக்கியதுவம் தரும் மீடியாக்கள் ஊடகங்கள் இவரின் இந்த செயலுக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டன.

குடிக்கு எதிராக போராடும் ராமதாஸ் அவர்களும் அவர் கட்சிகாரர்களும், மதுவுக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்ட வைகோ அவர்களும் (உண்ணாவிரத்தில் இருந்த இவரை வைகோ சந்தித்து ஆதரவு கூறினார் என்பது செய்தி ஆனால் ஏன் அவரும் இந்த 30 நாளும் அவருடன் கூட இருந்து போராடவில்லை என்பதுதான் கேள்வி)அவர் கட்சிகாரர்களும், குடிக்கு எதிராக முழக்கமிடும் தமிழக மக்களும் இவருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டதில் சாப்பிட்டு கொண்டே கூட தலைநகரத்தில் இருந்து போராடி இருக்கலாமே?


100 கோடி செலவழித்து சமுகத்திற்கு உபயோகமில்லாத படம் எடுத்து, இரு மதத்தினர்களுக்கிடையே வேறுபாட்டை தூண்ட விதை விதைத்த கமலஹாசனின் விஸ்பரூபடத்தினை திரையிட தடை வந்த போது பொங்கி எழுந்த சமுதாயம் இந்த நல்ல மனிதரின் செயலுக்கு பொங்கி எழவில்லையே. தலைவர்களின் பிறந்த நாள் அன்று அவர் எழுவதற்கு முன்பே அவர் வீட்டிற்கு சென்று வாழ்த்து சொல்ல செல்லும் இந்த சினிமா நடிகர்கள் நடிகைகள் சங்கங்கள் இவரின் முயற்சிக்கு ஆதரவாக ஒரு வாழ்த்து செய்தியை கூட பத்திரிக்கைக்கு அனுப்பி செய்தியாக வெளியிடவில்லையே (சிவகுமார் தவிர)

விஸ்பருமம் படம் வெளியாகவில்லை என்றால் நான் தெருவுக்கு வந்துவிடுவேன் அல்லது வெளிநாட்டுக்கு ஒடிவிடுவேன் என்ரு சொன்னதும் அவரின் மேல் இரக்கம் கொண்டு போராடியவர்களும் அவருக்காக பணமாகவும் செக்காவும் மணியாடராகவும் அனுப்பிய தமிழர்கள் இந்த சசிபெருமாள் தெருவில் இறங்கி தன் உயிரை பணயமாக வைத்து சமுதாயம் நல்லபடி இருக்க வேண்டும் என்று போராடும் இவருக்கு பண அனுப்ப வேண்டாம் ஒரு மெயில் அல்லது தந்தி அடித்து நாங்களும் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும். அப்படி செய்யக் கூடாத ஒரு சமுகத்திற்கு இவர் உயிரை துச்சமாக மதித்து உண்ணாவிரதம் இருக்கும் இவரை பைத்தியக்காரர் என்று சொல்லவதில் என்ன தவறு இருக்க முடியும்.


//உண்ணாவிரதத்தை கைவிடும்படி நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் சசிபெருமாளை கேட்டுக்கொண்டனர். பல்வேறு பொது நல அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்தது. ////

எனக்கு ஒன்றுமே புரியவில்லை இந்த அரசியல் கட்சிதலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இவர் கூட சேர்ந்து போராடுவதர்கு பதிலாக உண்ணாவிரதத்தை ஏன் கைவிடும்படி கேட்டுக் கொள்கின்றனர். இவர்கள் எல்லாம் மதுக்கடைக்கு ஆதரவு தருகிறார்களா என்ன?

ஒவ்வொரு நாளும் இவர்கூட ஒரு அரசியல் தலைவர் அல்லது ரஜினி கமல் போன்ற பல நடிகர்கள் சமுக தலைவர்கள் கலந்து கொண்டிருந்தால் இது மிக முக்கியத்துவம் பெற்று மீடியா மற்றும் ஊடகங்களில் வெளிவந்து சிறிதளவாவது மக்கள் மனதில் பதிந்து மாற்றத்திற்கு வழி கோலி இருக்கும். அதை ஏன் அவர்கள் செய்யாவில்லை .


உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டு கொண்டவர்கள் அதில் கலந்து கொள்ளாதற்கு 2 காரணம் 1 சமுகத்தின் மேல் உண்மையான அக்கறை இன்மை 2. உண்ணாவிரத்தில் கலந்து கொண்டால் அது ஜெயலலிதாவிற்கு எதிராக போராடுவது என்ற எண்ணத்தில் விழுந்த பயம்

தமிழகத்தில் இருக்கும் நம் தமிழ் பதிவாளர்கள் 2 வார விஸ்வரூபபட தடைக்கு விஸ்பரூபமாக பொங்கி எழுந்து நூற்றுகணக்கான பதிவை எழுதியவர்கள் கண்ணில் ஒரு மாதமாக  இவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி கண்ணில் படவில்லையா? விஸ்வரூபபடதிற்கு நூற்றுக்கணக்கான பதிவு எழுதியவர்கள் இந்த உண்ணாவிரத்திற்கு  ஆதரவாக ஒரு பதிவு கூட வெளியிடவில்லையே அது ஏன்?


பணத்திற்காவும், சிரழிக்கும் சினிமாக்களுக்கும், கள்ள காம இச்சைகளுக்கும், மதுவிற்கும் ஆசைப்படும் இந்த சமுகம் அந்த உண்மையை மறைத்து நாங்கள் இதற்கு எதிராக போராடுகிறோம் என்ற போலி முகமுடியை அணிந்து வாழும் இந்த சமுகத்தின் நலத்திற்காக போராடும் இந்த சசி பெருமாள் ஒரு பைத்தியக்காரனாகத்தானே இருக்க முடியும்.


இனிமேல் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர எந்த கொம்பனாலும் (தலைவர்களாலும்) முடியாது  உண்மையே.  இல்லை முடியும்  என்று பேசுபவர்கள் ஒட்டுக்கள் வாங்குவதற்காக  மட்டுமே பேசுவார்கள் என்பதும் உண்மையே அல்லது உலகம் அறியாதவர்களாக இருப்பார்கள்.

காலங்களும் மாறி வருகின்றன...கலாச்சாரமும் மாறிவரும் இந்த நேரத்தில் மதுவிலக்கை முழுவதும் அமுல் படுத்த முடியாது. ஆனால் அதை வழிமுறைபடுத்தலாம் அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.


குடிப்பழக்கத்தை பற்றியும் அதனால் வரும் உடல் நலக் கேடுகளையும் பள்ளி குழந்தைகள் மனதில் படுமாறு (ஃப்ரெய்ன் வாஷ் செய்ய ) கற்றுக் கொடுக்க வேண்டும். அதை கட்டாயப்பாடமாக 5 ஆம் வகுப்பில் இருந்து + 2 வகுப்பு வரை ஆக்க வேண்டும்.

மதுகடைகளை 10 மணிக்கு மேல் திறக்க கூடாது. அது போல பள்ளிக் அருகில் அல்லது மத சம்பந்தப்பட இடங்களுக்கு அருகில் அல்லது பெண்கள் வந்து போகும் இடங்களான மார்கெட் , பஸ் ஸ்டாண்டு மற்றும் ரயில் நிலையத்துக்கு அருகில் கடைகளை வைக்க அனுமதி அளிக்க கூடாது. அப்படி அமைத்தால் அந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் அந்த தொகுதி  எம் எல் வீட்டையோ  அல்லது அந்த ஊர் கலெக்டர் வீட்டையோ மூற்றுகை இட்டு அதை மூடும் வரை கட்சி வேறுபாடின்றி போராட வேண்டும்.

கடைகளுடன் கூடிய நல்ல பார்களை திறக்கலாம் ஆனால் அங்கு உட்கார்ந்து குடிப்பது ரோட்டில் இருப்பவர்களுக்கு தெரியாத வண்ணம் இருக்க வேண்டும்.

குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களை அடிப்பது மாதிரி செயலில் ஈடு படுபவர்களின் மீது புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே நபர்கள் அரசாங்க ஊழியராக இருந்து அவர்கள் மீது 3 தடவை புகார்கள் வந்தால் அவர்களை வேலையில் இருந்தே நீக்க வழி செய்ய வேண்டும்.

குடியால் உடல் நிலை கெட்டு வருபவர்களுக்க எந்த நிலையிலும் அரசாங்க ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்க கூடாது என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

அதே நேரத்தில்  ஹெல்த இன்சூரன்ஸ் வழங்குபவர்கள் குடிப்பவர்களுக்கான ப்ரிமியத்தை அதிகப்படுத்த வேண்டும்

பொது இடங்களிலோ  அல்லது வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து குடிப்பதை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். அப்படியும் மீறி குடித்தால் அருகில் உள்ளவர்கள் போலிஸில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.

குடிப்பவர்களை காதலிக்கவும் வேண்டாம் அவர்களை கல்யாணமும் செய்ய வேண்டாம். கல்யாணம் ஆன பிறகு மாறிவிடுவான் என்று முட்டாள் தனமாகவும் முடிவு செய்ய வேண்டாம்

குடித்து விட்டு வண்டியை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சினிமாக்களில் குடிக்கும் காட்சிகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

எனக்கு தெரிந்தை நான் சொல்லி விட்டேன் உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் சொல்லிவிட்டு போங்கள்
 

அன்புடன்
மதுரைத்தமிழன்


12 comments:

  1. வணக்கம். இடுகை நீளத்தை குறைத்தால் நலம்.
    நான் முழுவதும் படிக்கவிலை;காரணம் முதலில் ஒரு தவறு அல்லது பொருள் குற்றம் கண்ணில் பட்டது...

    காந்தீயவாதி சசி பெருமாள், 57, பூர்ண மதுவிலக்கை வலியுறுத்தி....

    பொருள் குற்றம்: 57 வயதில் உள்ள எவரும் இந்தியாவில் காந்தீயவாதியாக இருக்க சான்சே இல்லை...! 1956 - ல் பிறந்தவர் காந்தீயவாதியா? தமாஷ் தான் போங்கோ..!

    ஊடால, கம்பனின் ஸ்வீகாரப் புத்திரன் நடிகர் சிவகுமாரை இழுத்து நடு சந்தியிலே விட்டது Great & Best..!

    வைகோ பாவங்க...அவரை please உட்டுடுங்க...!

    ReplyDelete
    Replies
    1. இடது பக்க செய்தி செய்திதாள்களில் வந்தது, வலது பக்க செய்தி நான் எழுதியது. நீங்கள் பொருள் குற்றம் கண்டுபிடித்தது ஊடகங்களில் வந்த இடது பக்க செய்திகளில்தான். அப்பாடா நான் தப்பித்தேன். வைகோ எனக்கு பிடித்த அரசியல் தலைவர்தான்....ஆனால் அவர் இப்போது காந்தியவாதி போல ஆகிவிட்டார் என நினைக்கிறேன். அவர் இன்னும் தைரியமாக போராட வேண்டும் பார்லிமெண்டில் தைரியமாக பேசக்க் கூடிய வைகோ அவர்கள் தமிழ்நாட்டில் பேசும் போது அடங்கி போவதாக உணருகிறேன்

      Delete
  2. நாங்களும் காந்தீயவாதி தான்; அவர் பிறந்த நாள் அன்று மிட்டாய் சாப்பிட்டுடிருக்கிறோம்; அந்த அளவுக்கு நாங்களும் காந்தீயவாதிகள் தான். அதுக்கு மேல நஹி ஹை...!

    கலியாணம் ஆகுமுன் நாங்கள் எல்லாம் காந்தீயவாதிகள் தான்; ஆம். புர்ச்சி தலிவர் ஆட்சியில், கடா மார்க் சாரயம் குடித்த காந்தீயவாதிகள் நாங்கள்...!

    பின்குறிப்பு: சாராயம் என்றால் சாரயம் மட்டுமல்ல! cheap & best கடா மார்க் சாரயம். கூடவே.. Hercules XXX Rum and Kodays XXX Rum (இவைகளும் கோலா கலரில் உள்ள பட்ட சாரயம் தான்)

    ReplyDelete
    Replies
    1. நானும் காந்தியவாதிதான் அதனால் இந்தியாவில் இருந்த வரை காந்திபடம் உள்ள நோட்டுகளை(பணத்தை) சேகரித்து வந்தேன் ஹீஹீ. நானும் காந்தியவாதிதான் என்பதை இப்போதாவது ஒற்றுக் கொள்வீர்களா?

      Delete
  3. மதுவினால் பல குடும்பங்கள் அழிவது தாங்களுக்கு தெரியவில்லை போலும்.

    தெருவிற்கு வந்து போராடும் எவரையும் கொச்சைப்படுத்தாதீர்கள்.
    மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியம்.

    எல்லோரும் மது குடியுங்கள் என்பது போல இருக்கிறது தங்களின் கருத்து.

    தேவையில்லாமல் வைகோவை இழுத்து இருக்கிறீர்கள். ஆனாலும் கருத்து நியாயமே!

    "கேட்டவன் மேலும் கெட வேண்டும். திருந்தவே கூடாது" என்பது போல இருக்கிறது தங்களின் கருத்து. திராவிடக் கட்சிகளின் பிரதிநிதி பேசுவது போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. குருநாதன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்


      மதுவினால் பல குடும்பங்கள் அழிவது தெரிகிறது நண்பரே அதனால்தான் பதிவின் இறுதியில் அதை குறைப்பதற்கான வழிகளை சொல்லி இருக்கிறேன்,

      நீங்கள் தேர்ந்த எடுக்கும் தமிழக தலைவர்களுக்கு ( முதலைமைச்சர்களுக்கு ) மதுவிலக்கை அமுல்படுத்துவதில் துளி கூட எண்ணமில்லை.அப்படி இருக்கும் போது சசிபெருமாள் என்ற நல்ல மனிதர் இந்த சமுகத்திற்காக உயிரை விட நினைப்பது நல்லதாக படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேனே தவிர அவரை நான் கொச்சை படுத்தவில்லை நான் சொல்வதை நன்கு ஆழமாக படித்து உணர்ந்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்


      நான் சொல்ல வருவது குடிகாரர்களே நீங்கள் குடிப்பதை அளவோடு குடியுங்கள் என்றுதான் சொல்லுகிறேன் . குடிக்காதவர்களை குடியுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை

      வைகோவை வம்புக்கு இழுக்கவில்லை. அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு நல்ல மதிப்பு உண்டு. ஆனால் அவர் மேல் எழுந்த ஆதாங்கத்தினால்தான் நான் அவரை இங்கு இழுத்துள்ளேன். அவர் நிச்சயம் மதுவிலக்கை கொண்டு வர விருப்பம் இருந்தால் நடைப்பயணத்திற்கு பதிலாக இவருடன் சேர்ந்து மேலும் பல தலைவர்களையும் அழைத்தும் அவர்களுடன் சேர்ந்து இவரும் சாகும்வரை தலை நகரத்தில் உண்ணாவிரதம் இருந்து இருக்கலாமே?

      இவர் மதுவிலக்கு கொள்கைக்காக உண்மையில் போராடுபவராக இருந்தால் அதை ஆதரித்து நடத்தும் ஜெயலலிதா அவர்களுடனும் அது மாதிரி செயல்படும் எந்த கட்சியுடனும் வரும் தேர்தலில் கூட்டு வைத்து கொள்ளமாட்டேன் என்று உறுதியாக அவரால் கூற முடியுமா சொல்லுங்கள்.

      குடிப்பவர்கள் யாரு சொன்னாலும் கேட்கமாட்டார்கள் அவர்களாக திருந்துவதை தவிர வழி கிடையாது. இங்குள்ள கடைகளை மூடினால் அவர்கள் குடிப்பதை நிறுத்தி விடமாட்டார்கள். கடைகள் மூடினால் கள்ளச்சாரயம் பெருகும் என்பது உங்களுக்கு தெரியாத என்ன? அதனால் செத்தவர்கள் குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை நண்பரே. அதையும் அரசாங்கம் தடுத்து நிறுத்தினால் இருக்கவே இருக்கு மக்கள் கேரளாவுக்கும் பாண்டிச் சேரிக்கும் சென்று சரக்கை வாங்கி வருவார்களே தவிர குடிப்பதை நிறுத்த மாட்டர்கள் என்பதைதான் உங்களால் மறுக்க முடியுமா என்ன?

      இன்று தமிழகமெங்கும் மதுவிலக்கு கோரிக்கைக்கான குரல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன .பலரும் வியக்கும் வகையில் பல அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்தில் களம் இறங்கியுள்ளது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. என்றாலும் பிரதான கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும் வாயே திறக்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

      நான் திராவிடக்கட்சிகாரனும் அல்ல ஆர்யகட்சி காரனும் அல்ல நான் இப்போது ஃப்லோ பண்ணுவது டொமொகிரடிக் கட்சியைதான் (ஒபாமா)

      Delete
    2. ஒபாமாவின் கொ.ப.செ, விளக்கத்திற்கு நன்றி

      சிக்கன்குனியா பற்றி வீதி வீதியாக அரசு பரப்புரை செய்தது போல குடியின் தீமைகளை அரசே வீதி வீதியாக விளக்க வேண்டும். பின்னர் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

      கேரளாவுக்கும்,பாண்டிக்கும் சென்று சரக்கு வணங்கி குடிப்பவன் குடிக்கட்டும்.அதையும் அரசால் தடுக்க முடியும்
      தமிழ்நாட்டில் தடை செய்தால் குடிப்பவர்கள் சதவீதம் குறைந்தது 50% எப்படியும் குறையும் என்பது என் கருத்து. பாசிட்டிவா நினையுங்க பாஸ்.

      Delete
    3. //* கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன..? *//

      என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. கள்ளச்சாராயம் பெருகினால் அதை கட்டுப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை அதை ஓரளவுக்கு நிறைவேற்றவும் செய்யும்.. அரசு சாராயக்கடைகளை மூடினால், இன்று குடிப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லை, எவன்-தான் குடிக்கல என்பது மாதிரியான பேச்சுகள் அடிபடும் என்பது உங்களுக்கு தெரியலயா..? அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சாராயத்தை குடிப்பது இழி செயல் என்பது மாதிரியான எண்ணம் உருவாகுமே அது உங்களுக்கு தெரியலயா..!!?
      இன்னைக்கு எட்டாவது படிக்கிற பையன்-கூட சாராயம் குடிக்கிறான். எதனால..!!? அவனுக்கு மிக எளிதில் அரசாங்கத்தின் உதவியால சாராயம் கிடைக்கிறது. இதை தடுக்க வேண்டாமா..!!?
      சாராயக் கடைகளை மூடினால், குடியால் சீரழியும் மக்களின் எண்ணிக்கை நிச்சயம் பாதியாக குறையும்..

      //* அதையும் தடுத்து நிறுத்தினால் இருக்கவே இருக்கு கேரளா, பாண்டிச்சேரி.. *//
      இதுவும் சரி இல்லீங்க..!! இந்த வாசகம் கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அதுவும் 100% சொல்ல முடியாது.
      உதாரணத்துக்கு, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருக்கும்; இன்றைய நிலையில் வாராவாரம் தொடர்ச்சியாக குடிக்கும் இளைஞன், தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டால் அவ்வாறு குடிக்க இயலுமா..!!? வாராவாரம் என்பது மாதாமாதம் எனவும் பின் மாதாமாதம் என்பது இரண்டு,மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என மாறாதா..?
      ------------------------------------------------------------------------------------
      நிச்சயம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர இயலும்.

      Delete
  4. எனக்கு தெரிந்து என் அறிவுக்கு எட்டிய வரை எம்ஜியாரை விட தமிழ்நாட்டில் ஒரு சுத்தமான அக்மரக் காந்தீயவாதி கிடையாது. இனி பிறக்கவும் போறதில்ல. சினிமாவில் கூட குடியை காட்டாத மாமனிதன்; பணம் முக்கியம் இல்லை கொள்கை தான் முக்கியம் என்று அவர் நடிக்கும் சினிமா படத்தில் கூட குடியை காட்சியாக வைக்கமாட்டார்; எம்ஜீயார் அப்பேற்பட்ட மாமனிதன். நிற்க.

    அந்த எம்ஜியார் என்ற அக்மார்க் காந்தீயவாதி...1981- ல் கடா மார்க் சாரயத்தை மொத்தமாக தமிழ்நாட்டில் படு படு மலிவு விலையில் விற்றார்; 750 மில்லி கடா மாரக் சாரயம் விலை = ஆறு ரூபாய். அம்புடுதான்.
    எவனாவது கேள்வி கேட்டானா? எம்ஜீயார் எனற அக்மார்க் காந்தீயவாதி அரசாங்கம் மூலம் சாராயத்தை விற்றதை?

    விலை:
    நூறு மில்லி ஒரு ரூபா...!
    750 மில்லி உள்ள முழு பாட்டில் ஆறே ஆறு ரூபாய்; வரிகள் கிடையாது...

    சரி...அப்ப நம்ம சசி பெருமாள் வயது...என்ன 24 இருக்கும்; அப்ப அவர் ஏதாவது செய்தாரா?
    இல்லை செய்யாவிட்டால், ஏன் இப்ப கண் கேட்டபின் சூர்யா நமஸ்காரம்???

    ReplyDelete
  5. என்றாலும் பிரதான கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும் வாயே திறக்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். // இந்த இரு கட்சிகளை எதிர்ப்பார்த்து கிடந்தால் கடைசிவரை தமிழன் உருப்படவே மாட்டான்

    ReplyDelete
  6. இந்தியாவில் திமுக மற்றும் அதிமுக ஆளும்/ஆண்ட தமிழ்நாட்டில் மட்டும் தான் குடி இருக்கு போல...! மத்தியில் ஆண்ட/ஆளும் இரு பெரும் கட்சிகளும் குடியை தேசத்தின் கொள்கையாக மாற்றிக் கொண்டு குடியை இந்தியாவில் ஒழிக்க சொல்லுங்கள்; அரசு நினைத்தால் முடியும்.

    முதலில் இந்தியன் அப்புறம் தான் தமிழன் என்று சொல்பவர்களுக்கு...தமிழன் மட்டும் நல்லா இருக்கணும் என்று சொல்லமால் எல்லா இந்தியர்களும் நல்லா இருக்கணும் என்று தேசிய அளவில் குடியை நிறுத்த ஆவான் செய்யுங்கள். தமிழுருவி மணியன் மற்றும் இதர காங்கிரஸ் பாஜக பேர்வழிகள் போராடனும்.


    ReplyDelete
  7. சசி பெருமாளுக்கு உண்ணவிரதத்தை தொடர என் வீட்டில் அதாவது தியாகி நெல்லை ஜெபமணி வீட்டில் இடம் கொடுத்தது நான்! தியாகி நெல்லை ஜெபமணி பெயரை இருட்டடிப்பு செய்ததன் மூலம் உங்கள் கட்டுரை பொட்டில்லாதா பூவில்லாத விதவை போல் இருக்கிறது.ஜெயா அரசை கண்டு பயப்படாமல் உண்ணாவிரதம் இருக்க இடம் கொடுத்த என் பெயரையும் இருட்டடிப்பு செய்ததற்கு நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.