உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, March 28, 2013

விகடனைப் பற்றிய ஒரு அதிரடி சர்வே (மக்களின் மனசு )விகடனைப் பற்றிய ஒரு அதிரடி சர்வே (மக்களின் மனசு )


மக்கள் மனசு - அ.உ. சர்வே அதிரடி ரிசல்ட்
அவர்கள்...உண்மைகள்  

சமூகம், இந்த நாடு, வெளிநாடு என மனிதர்கள் பற்றியும் சமூக குற்றங்கள் பற்றியும் கவலைப்படும் தமிழக பத்திரிக்கையுலகை சேர்ந்த சில ஆசாமிகள் தன் சக பணித்தோழர்களான பெண்களிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் வெட்கத்துக்குறியது சிந்தித்து பார்க்க வேண்டியது. இதை பற்றிய விவாதம் போராட்டம் இன்னும் எழவில்லை.

!‘தமிழ்நாட்டின் நாடித்துடிப்பு’ என்று பஞ்ச் டயலாக் பேசும் ஜூனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழும இதழ்கள் ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி எழுதவில்லை. விகடன் டெலிவிஸ்டாஸின் சார்பாக சன் குழுமத்தில் வந்துகொண்டிருக்கும் சீரியல்கள், ஒவ்வொரு நாளும் லட்சங்களை அள்ளிக் கொட்டும்போது அவர்கள் நாடி எப்படித் துடிக்கும்? சரி… இவர்களுக்கு நேரடி வர்த்தக நலன் இருக்கிறது, அதனால் எழுதவில்லை. ( எல்லா பத்திரிக்கைகளும் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்து வருகின்றது என்பது இங்கு கவனிக்க தக்கது)

இப்படி தரம் குறையும் இந்த நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது அ.உ ( அவர்கள்...உண்மைகள் )
'மக்கள் மனசு’ என்ற தலைப்பில், விகடன் பற்றி சர்வே எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சர்வே தமிழகத்தில் உள்ளவர்களை மட்டும் வைத்து எடுக்கப்படவில்லை உலகெங்கும் வசிக்கும்  தமிழர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது. எனது நண்பர்கள் உலகம்  முழுக்க வலம் வந்தனர்.  மக்களை நேரடியாகவும் இணையத்தின் மூலமும் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்டது. இதில் பல தமிழ் பதிவாளர்களும் ஆர்வமுடன் இந்த சர்வேயில் பங்கு கொண்டனர்( என்னிடம் இந்த சர்வேவிற்கான கேள்விகள் கேட்கப்படவில்லை என்று எந்த பதிவாளரும் குறை கூற வேண்டாம் ஒரு சில பதிவாளர்கள் விட்டு போய் இருக்கலாம் அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் ஹீ...ஹீ.ஹீ ) ''சரியான நேரத்தில் சர்வே எடுக்க முடிவு செய்திருக்கீங்க'' என்று ஆர்வத்துடன் கேள்விகளை எதிர்கொண்டனர் மக்கள்.

ஆச்சர்ய சர்வே முடிவுகள் உங்களின் பார்வைக்கு..


படம் தெளிவாக தெரிய அதை க்ளிக் செய்து பெரிய சைஸில் பார்க்கவும்

Click This Picture for LARGE SIZE


ஜூனியர் விகடனில் நேற்று வந்திருக்கும் சர்வேயின் முடிவுகளை பார்க்கும் போது முதலில் சர்வேயின் ரிசல்ட்டை அவர்களுக்கு வேண்டியவாறு எழுதி வைத்துவிட்டு அதன் பின் ஒரு போலித்தனமான சர்வேவை நடத்தியது போல இருக்கிறது என்பதை அதனை படித்தவர்கள் அனைவரும் புரிந்து இருப்பார்கள்.

அந்த சர்வேவை படித்த பின் என் மனதில் தோன்றிய கற்பனையின் வடிவமே இந்த பதிவு. இது கற்பனை என்ற போதிலும் அதில் பல உண்மைகள் மறைந்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது .மக்கள் மனசு - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட் ஜூனியர் விகடன்

தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது ஜூ.வி. 
'மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே டீம். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணைய தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது.
''சரியான நேரத்தில் சர்வே எடுக்க முடிவு செய்திருக்கீங்க'' என்று ஆர்வத்துடன் கேள்விகளை எதிர்கொண்டனர் மக்கள். ஈழ விவகாரத்தை மாணவர்கள் போராட்டமாக முன்னெடுத்ததற்கு ஏகோபித்த வரவேற்பு இவர்களிடம் உள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மத்திய அரசு மீதும் தி.மு.க- மீதும் மக்கள் மத்தியில் இருந்த கோபம், நமது சர்வே டீமிடம் வார்த்தைகளாக வந்து விழுந்தன.
'இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு?’ என்கிற கேள்விக்கு பொட்டில் அடித்தாற் போல 'தனி ஈழம்தான்’ என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லி இருக்கின்றனர். இந்தியாவின் துணையோடுதான் இலங்கையில் இறுதிப் போர் நடந்தது என்று 71 சதவிகிதம் கருத்து தெரிவித்தனர். ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் 88 சதவிகிதம் பேர். ஈழ விவகாரத்தில் கருணாநிதி எடுக்கும் முடிவுகள் தேர்தல் அரசியல் சார்ந்தது என 64 சதவிகிதம் பேர் டிக் அடித்துள்ளனர். அதே சமயம் ஜெயலலிதாவுக்கும் ஈழ விவகாரத்தில் பெரிதாக ஆதரவு இல்லை. இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கும் கட்சி என்கிற கேள்விக்கு ம.தி.மு.க-தான் முதல் இடத்தில் இருக்கிறது.
ஆச்சர்ய சர்வே முடிவுகள் உங்களின் பார்வைக்கு....
படம் தெளிவாக தெரிய அதை க்ளிக் செய்து பெரிய சைஸில் பார்க்கவும்


அன்புடன்
மதுரைதமிழன்
( இது ஒரு கற்பனை பதிவே ) 

 

        

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog