Wednesday, March 13, 2013

மனதில் தோன்றிய கேள்விகளும் அதற்கான நக்கல் பதில்களும்




திமுக  பந்த் நடத்தியது எதற்க்காக?
மதுரைத்தமிழன் :இது இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. திமுக நடத்திய போராட்டம் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகத்தான். அமெரிக்கா என்ன தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் திமுகவும் கண்மூடி ஆதரிக்கும்

திமுக கட்சியின் உட்பூசலால்தான் பொட்டுவை கொன்றார்களா?
மதுரைத்தமிழன் :திமுக கட்டுக்கோப்பான இயக்கம் அதில் உட்கட்சி பூசல் என்று எதுவும் கிடையாது. ஆனால் திமுகவினர் மிகவும் பகுத்தறிவாளர்கள் அதனால் பொட்டு என்பது மத ரீதியான அடையாளமாக இருப்பதால் அதற்கு திமுகவில் இடம் இல்லை என்பதால் பொட்டுவை பொட்டென போட்டு தள்ளிவிட்டனர் போலும்

டெசோ போராட்டத்தால் மதுவிலக்கு போராட்டங்களை தலைவர்கள் மறந்து கொஞ்சநாள் லீவு விட்டுவிட்டனரா என்ன?
மதுரைத்தமிழன் :ஆமாங்க இப்ப இலங்கையில் மரித்தவர்களுக்காக போராடுகிறார்கள் . இப்பதான் தமிழகத்தில் மக்கள் சாக ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள் லட்சக்கணக்கில் செத்து மடிந்த பின்  அவர்களுக்காக இந்த கட்சிகள் கண்டிப்பாக போராடும்

ஐ.ஏ.எஸ் தேர்வுகள் விவகாரம்: மறைமுக இந்தித் திணிப்புக்கு கலைஞர்  கண்டனம் செய்துள்ளாராமே?
மதுரைத்தமிழன் :ஆமாங்க நேரடியாகவே திணிக்க வேண்டியதை மறைமுகமாக திணிக்கிறார்கள் என்பதற்காகத்தான் அவர் கண்டணம் செய்கிறாறோ என்னவோ.

இந்தியா மீது, "சைபர்' தாக்குதலை, சீன அரசு நடத்தி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களை திருடியதாமே அதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறிர்கள் ?
மதுரைத்தமிழன் :சீன  இவ்வளவு கஷ்டப்பட்டு திருடனும் என்ற அவசியமே இல்லை. காசு கொடுத்தா நாட்டையே அடகு வைக்கும் இந்த காங்கிரஸ் த்லைவர்கள்  இந்திய ராணுவ  ரகசியங்களை காசு கொடுத்தால் தரமாட்டார்களா என்ன

 


கொடுத்த வாக்கை காப்பாற்றா விட்டால், அதற்குரிய விளைவுகளை, இத்தாலி அரசு சந்தித்ததே தீர வேண்டும்,அதற்க்காக நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்க நேரிடும்  என, பிரதமர் , லோக்சபாவில் எச்சரிக்கை விடுவித்தாரம். அவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று உங்களால் சொல்ல இயலுமா? ?
மதுரைத்தமிழன் :இத்தாலி அரசாங்கம் அவர்களை திருப்பி அனுப்பாவிட்டால் இந்திய கொசுக்களை அங்கு அனுப்பி அங்கு வாழும் மக்களை கடிக்க வைப்போம் போன்ற கடும் நடவடிக்கைகளை எடுப்பார் என நினைக்கிறேன்


ஜெயலலிதா  அமைச்சர்களை அடிக்கடி மாற்றுவது ஏன்?
மதுரைத்தமிழன் :ஜெயலலிதா அவர்கள் அனைத்து எம் எல் ஏக்களையும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக மதிப்பதால் அனைத்து எம் எல் ஏக்களையும் ஆட்சி முடிவதற்குள் அமைச்சராக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற நல்லெண்னத்தால்தான்

டாஸ்மார்க் கடைகளினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாமே?
மதுரைத்தமிழன் :அது உண்மைதாங்க அதனால் தமிழக முதல்வர் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும்.

குடிகாரர்களின் பேச்சு விடிந்தால் போச்சு என்று சொல்வது மாதிரி நீங்களும் அதுமாதிரி ஏதாவது சொல்லுங்களேன்?
 மதுரைத்தமிழன் :அரசியல்வாதிகளின் பேச்சு ஒட்டு வாங்கின அப்புறம் போச்சு


தே.மு.தி.க.,  நடத்திய மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவு கூட்டம் கூடாததன் காரணம் என்ன?
மதுரைத்தமிழன் :ஒருவேளை கட்சிக்காரகள் அது விஜயகாந்தக்கு எதிராக அவரது மனைவி நடத்திய ஆர்பாட்டம் என்று கருதி இருக்க கூடும் 



ரசிகர்களின் முதல்வர் ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா?

மதுரைத்தமிழன் :ரஜினியை போல அவரது ரசிகர்களுக்கும் வயதாகி பகல் கனவுகளை கண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கனவை ரஜினி ஏதாவது படத்தில் முதல்வர் வேடம் போட்டு நடித்துதான் ரசிகர்களின் கனவுகளை நிறை வேற்ற முடியும்.

தமிழனுக்கு  கோபம் வந்தால் என்ன செய்வான்?


மதுரைத்தமிழன் : தமிழனுக்கு கோபம் வரும் போது அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால் திமுக வுக்கும் , திமுக ஆளும் கட்சியாக இருந்தால் அதிமுக வுக்கும் ஒட்டு போட்டு தன் ஆத்திரத்தை தீர்த்து கொள்வார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. பதில்கள் எல்லாமே ஹா.. ஹா. அதிலும் இரண்டாவது. ரஜினி ஓவிய படம் சூப்பர். படகலவையில் அசத்தறிங்க.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. அனைத்துக் கேள்விகளும் அருமை அதற்கு மதுரைத்தமிழன் பதில்களும் அருமை..நையாண்டியின் உச்சம்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு மனமார்ந்த நன்றிகள்

      Delete
  3. உங்களுடைய சில பதிவுகளை க்ளிக் பண்ணும் போது மறுபடியும் dash board க்கே வந்து விடுகிறது..அவற்றை படிக்க முடியவில்லை ஏன்? (e-x) உலகின் மிகப் பெரிய கடிகாரம் பெங்களுரில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. உஷா அவர்களுக்கு உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி. சில சமயங்களில் எனது வலைத்தளத்தில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அது கூகுலினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னால் ஏற்படுவதில்லை, காரணம் நான் டெம்ப்ளேட்டில் ஏதும் மாற்றம் ஏற்படுத்துவதில்லை. நீங்கள் சொல்லிய காரணங்கள் நானும் பல வலைத்தளங்களுக்கு செல்லும் போது நேர்ந்து இருக்கிறது. எனக்கு அப்படி நேர்ந்தால் நான் அந்த வலைத்தளத்தில் உள்ள Archive பகுதிக்கு சென்று க்ளிக் செய்து படித்து வருவேன்.. நீங்களும் முடிந்தால் அதுமாதிரி செய்து பார்க்கலாம்

      Delete
  4. பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் டாஸ்மாக் அருமையான ஐடியா!

    "விஜயகாந்த் மனைவி நடத்திய போராட்டம்" பாதிக்கப்பட்டவங்க போராடனாகூட யாரும் ஆதரவு கொடுக்க மாட்டேன்கிறான்கப்பா.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.