உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 11, 2013

உலகின் மிகப் பெரிய கடிகாரம் பெங்களுரில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
உலகின் மிகப் பெரிய கடிகாரம் பெங்களுரில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?


Big Ben, India
லண்டனுக்கு செல்பவர்வர்கள் அனைவரும் பார்க்க செல்வது 'பிக்பென்’ (Bigben) என்ற  மிகப்பெரிய கடிகாரம். ஆனால் பெங்களூருக்கு சென்றால் அனேக பேர்  பார்க்காமலே இருக்கும் ஒரு பிக் பென் இருக்கிறது.காரணம் உள்ளுர் சரக்கை நாம் எப்போதும் மதிப்பில்லைதானே இன்னும் எளிமையாக சொன்னால் அடுத்தவன் பொண்டாட்டி நம் கண்ணுக்கு ஸ்மார்ட்டா தெரிவா ஆனா அதே நேரத்தில் நம் பொண்டாடி நமக்கு அப்படி தெரிவதில்லை .

சரி வழ வழன்னு இழுக்காமல் விஷயத்திற்கு வருவோம்...

இந்தக் கடிகாரம், நமது உள்நாட்டுத் தொழில் நுணுக்க விற்பனர்களால் உருவாக்கப்பட்டது என்பதும், ஆசியாவிலேயே இது மிகப்பெரியது என்பதும்  லண்டன் கடிகாரத்திற்கு இணையானது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

இது பெங்களூர் ராஜேஸ்வரி நகரில்  ஓம்கார் ஆஸ்ரமத்தில் அமைந்துள்ளது. இந்தப் பெரிய கடிகாரத்தை வடிவமைத்து, எச்.எம்.டி. என, சுருக்கமாக அழைக்கப்படும்இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்எனும் அரசு சார்ந்த தொழிற்சாலை. ஒவ்வொரு மணி நேரத்தின் போதும்ஓம்எனும் நாதஒலி எழுப்பி, பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் பரவசமூட்டும் கடிகாரம் இது. “ஓம்கார் மலைஎன்ற அழைக்கப்படும் சிறு குன்றின் மீது 2002ஆம் ஆண்டு இந்த கடிகாரம் நிறுவப்பட்டது. இந்த குன்றின் உச்சிக்குப் போய்விட்டால், தெற்கு பெங்களூர் நகர் முழுவதையும் பார்த்துவிட முடியும்.

கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கடிகாரத்தின் குறுக்களவு (விட்டம்) 24 அடி. தரையிலிருந்து 40 அடி உயரத்தில் 9 .அடி குறுக்களவு கொண்ட இரண்டு பெரிய தூண்களின் மீது பொருத்தப்பட்டுள்ளது, இந்த ராட்சஸ கடிகாரம். இந்த பிக்பென் கடிகாரத்தின் எடை 500 கிலோ, நிமிட முள், மணி முள் ஒவ்வொன்றின் எடையும் 40 கிலோ.

ஒவ்வொரு மணி நேரத்தின் போதும் சங்கொலி எழும் அதை தொடர்ந்து ஓம் எனும் நாதம் வெளிப்படும். மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த நாதம் எதிரொலிக்கும். ஓம்கார் ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ சிவபுரி மகாஸ்வாமி அவர்களின் 52வது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் 30 ஜனவரி 2002 அன்று ஹெச்.எம்.டி. வாட்சஸ் லிமிடெட், பொது மேலாளர் வி.. குல்கர்னி அவர்களால், சமர்ப்பணம் செய்யப்பட்டது, இந்த பிக் பென்.

பத்தாண்டுக் காலத்தில், ஒரே ஒரு முறைதான் சிறிய ரிப்பேருக்கு உள்ளாகிற்று. மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் சர்வ தர்ம சமன்வய பீடம் என்று ஓர் ஆன்மிக அமைப்பு. சர்வதேச சகோதரத்துவம், பரஸ்பர சுய மரியாதை, அனைத்து மதப் பிரிவினரும்ஒரு தாய் மக்களேஎன்ற உயர்ந்த லட்சியத்தை உள்ளடக்கிய ஒரு அமைப்பு, தற்சமயம், ஸ்ரீ மதுசூதானந்த பூரி ஸ்வாமிஜி, இந்த மடத்திற்குப் பீடாதிபதியாக இருக்கிறார்.இந்த பிக் பென் எனப்படும் ராட்சஸ கடிகாரம் அமைக்க, சுமார் பத்து லட்ச ரூபாய் செலவாயிற்று.பெங்களூர், ராஜேஸ்வரி நகர், ஓம்கார் ஆசிரமத்திற்கு விஜயம் செய்தால், கடிகாரத்தைப் பார்க்கலாம், ஆலய தரிசனம் செய்யலாம், ஆசிரமத்தைப் பார்வையிடலாம். தெற்கு பெங்களூரு நகர் மூழுவதையும்பருந்து பார்வையில் பார்வையிடலாம்.


 It is Bangalore's own Big Ben, but bigger. The magnificent tower clock, mounted atop Omkar Hills near Rajarajeshwari Nagar in the southern part of the city, is also said to be Asia's largest. And while London's famed clock thrills visitors with its Westminster chimes, the one crafted by HMT in Bangalore echoes the sacred 'Om' at the strike of each hour.

The fascinating tower clock was erected by Hindustan Machine Tools in 2002 at the Omkar Ashram sitting atop the Omkar Hills. The place was selected precisely because Omkar Hills is one of the highest points in Bangalore , at about 3,000 ft from mean sea level. It's a vantage point from where almost all of South Bangalore is visible. The giant clock, 24ft in diameter , adorns the scenic hills like a splendid crown. The dial is set on two columns, each measuring 9 sqft, rising 40ft from the ground, and holding up the clock which weighs about 500kg. The hour and minute hands weigh about 40kg each.Big Ben, London
The Clock Tower of the Palace of Westminster - officially named Saint Stephen's Tower - is commonly known as the Big Ben. The tower is one of London's most famous landmarks.


The clock inside the tower was the world's largest when it was installed in the middle of the 19th century. The name Big Ben actually refers to the clock's hour bell, the largest of the clock's five bells. The other four are used as quarter bells.

There were two bells cast as the clock tower's hour bell. A first, 16 ton weighing bell was cast by John Warner and Sons in 1856. Since the Clock Tower was not yet completed, the bell was hung temporarily in the Palace Yard. The bell soon cracked so it was recast in 1858 in the Whitechapel Bell Foundry as a 13.5 ton bell. Unfortunately soon after this bell was placed in the belfry in July 1859, it cracked as well. This time, instead of yet again recasting the bell, the crack was repaired and a lighter hammer was used to prevent any more cracks.

The clock was the largest in the world and is still the largest in Great-Britain. The clock faces have a diameter of almost 25ft (7.5m). The hour hand is 9ft or 2.7m long and the minute hand measures 14ft (4.25m) long. The clock is known for its reliability, it has rarely failed during its long life span. Even after the nearby House of Commons was destroyed by bombing during World War II, the clock kept on chiming. The clock's mechanism, designed by Edmund Beckett Denison, has a remarkable accuracy. The clock's rate is adjusted by simply adding small pennies on the shoulder of the pendulum.

The Tower
The tower was constructed between 1843 and 1858 as the clock tower of the Palace of Westminster. The palace is now better known as the Houses of Parliament.
The clock tower rises 316ft high (96m) and consists of a 200ft (61m) high brick shaft topped by a cast iron framed spire. The clock faces are 180ft / 55m above ground level


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


11 comments :

 1. பெங்களூரிலேயே இருந்தும் இதுவரை இந்த கடியாரம் பற்றி அறிந்ததில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
  கூடிய விரைவில் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்.
  தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி...........

  ReplyDelete
 3. world's biggest clock begins ticking


  http://www.designboom.com/architecture/worlds-biggest-clock-begins-ticking/

  ReplyDelete
 4. புதிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 5. அறிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

  கற்றதும் பெற்றதும்

  ReplyDelete

 6. வணக்கம்!

  பதிவைப் படித்திட்டேன்! பாரதி என்னுள்
  புதிய உணா்வுகள் பூத்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 7. இந்தக் கடிகாரத்தைப் பார்க்க நான் பெங்களுர் போக வேண்டாம் ...

  உங்கள் இடுகையிலேயே பார்த்துவிட்டேன்.
  நன்றி “உண்மைகள்“

  ReplyDelete
 8. சமீபதித்தில்தான் பெங்களூர் சென்றேன், இந்த தகவல் தெரியாமல் போயிற்றே. பார்த்திருக்கலாம்.
  ரெண்டு Coloumn உள்ள பதிவை இப்பதான் பாக்கறேன். வித்தியாசமா பதிவிட்டிருக்கீங்க. டெம்ப்ளேட் எதுவும் இருக்கா? html யூஸ் பண்ணி நீங்களே டிசைன் பண்ணி இருக்கீங்கன்னு நினைக்கறேன்.உங்க வெற்றிக்கு இதுபோன்ற "மாத்தி யோசி" சிந்தனைகள் தான் காரணமோ?

  ReplyDelete
 9. அருமையான , பெருமையான தகவல் தந்ததற்கு மிக்க நன்றி.
  கடிகாரம் அராபிக் எண்ணுடன் தெளிவாக , பெரிதாக பளிச் என அழகாக உள்ளது.

  ReplyDelete
 10. தெரியாது தெரிந்து கொண்டேன் உங்கள் படம் மூலமாய் நன்றி

  ReplyDelete
 11. நல்ல தகவல்..நன்றி.கூடவே நம் பொண்டாட்டி நம் கண்களுக்கு அப்படி தெரிவதில்லை என்ற கொசுறு தகவலுக்கும் நன்றி.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog