Monday, February 25, 2013






விவசாயிகளை உயிரற்ற பிண்டங்களே  என்று அழைத்த அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவு கெட்டவரா?

தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கான வறட்சி நிவாராண நிகழ்ச்சியில் அமைச்சர் வைத்தியலிங்கம் ஜெயலலிதா செய்தவைகளை சாதனையாக பேசினார். அதை கேட்ட ஒரு சிலரே கையை தட்டினர் அதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக அமைச்சர் கூட்டத்தை பார்த்து உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்கள் எல்லாம் உணர்ச்சியற்ற பிண்டங்களா என்று திட்டி நல்லா கைதட்டுங்கள் என்று மிகவும் கோபமாக பேசினார். அதை செய்தியில் பார்த்ததும் மிகவும் ஷாக்காகி போனேன்.


இதனென்ன ஜெயலலிதா கூட்டிய அமைச்சரவை கூட்டமாக என்ன?  அந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதற்கெல்லாம் ஆட்டு மந்தைகள் போல கூடி நின்றுகைதட்டும் அதிமுக அமைச்சர்களா இந்த விவசாயிகள் அல்லது சாரயத்திற்கும் பிரியாணிக்கும் ஆசைபட்டு வந்த அதிமுக தொண்டர்கள் கூட்டமா? கண்ணை மூடிக் கொண்டு கைதட்டுவதற்கு.

இந்த அமைச்சர் விவசாயிகளை களங்கப்படுத்துகிறா அல்லது  விவசாயிகளின் நலனை கருதி ஜெயலலிதா நிவாரணம் தருவதை களங்கப்படுத்துகிறாரா?

விவசாயிகளே நீங்க எந்த கட்சியினராக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வந்த அமைச்சர் மக்களை குறிப்பாக விவசாயிகளை கேவலப்படுத்திய அமைச்சருக்கு நீங்கள் நன்றாக பாடம் கற்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் சொன்னமாதிரி நீங்கள் அறிவில்லாத உயிரற்ற முண்டங்களே


ஜெயலலிதா அவர்களே நீங்கள் நல்லது செய்ய முயற்சி செய்தாலும் இந்த மாதிரி உள்ள அமைச்சர்கள் உங்கள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் . இந்த மாதிரி அமைச்சர்களை நீங்கள் களை எடுத்தால்தான் உங்களின் பிரதமர் ஆகும் கனவு நனவாகும். சிறு துளி பெருவெள்ளம் என்பது போலத்தான் ஒட்டுக்களும்.. இப்படி ஒட்டுக்களை ஈஸியாக எதிர்கட்சிக்கு கொண்டு செல்லும் உங்கள் கட்சியின் அமைச்சர் உங்களுக்கு எதிரியா? வறட்சியில் பாதிக்கப்பட்ட இந்த விவசாயிகள் உங்கள் எதிரிகளா?
முடிவு செய்யுங்கள்


தமிழ் மக்களின் உணர்வுக்கு ஜெயலலிதா முக்கியதுவம் கொடுப்பாரா?? பொறுத்து இருந்து பார்ப்போம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. ஆமாம்... பொறுத்து இருந்து பார்த்துக் கொண்டே இருப்போம் “உண்மைகள்“

    ReplyDelete
  2. புத்தியிருந்தா நமக்கு போயி ஒட்டு போட்டிருப்பாங்களா என்று நினைத்திருப்பாரோ?

    ReplyDelete
  3. ஹா ஹா அம்மா ஆட்சில இந்த அலட்சியம் கூட இல்லன்னாதான் அதிசயம்

    ReplyDelete
  4. இவர்கள் மேலிடத்தால் எப்படி நடத்தப்படுகிறார்களோ? அப்படியே தன் கீழுள்ளவர்களை நடத்துகிறார்கள்.அரசியல்வாதிகள் மட்டுமல்ல. உயர் அலுவலர்கள் தன் அடுத்த நிலை அலுவலர்களை இப்படித்தான் நடத்துகிறார்கள்.அவர்கள் தங்களுக்கு கீழுள்ளவர்களிடம் அதே முறையை பின்பற்றுகின்றனர்.ஆனால் கள அலுவலர்கள் தன் கீழுள்ள பணியாளர்களிடம் அப்படி நடக்க முடியாது. ஏனெனில் வலுவான சங்க அமைப்பு.

    ReplyDelete
  5. ‘அம்மா’ நம்மளை மாதிரி அமைச்சர்களையெல்லாம் அஞ்சு பைசா அளவுக்குக் கூட மதிக்கிறதில்லை. இந்த ஜனங்களாவது மதிச்சு கை தட்டுவாங்கன்னு பாத்தா கை தட்டக் காண‌ோமேன்னு கோபம் வந்திருக்குமோ... ஆனா கோபம் வந்தா என்ன வேணா பேசிடறதா? மேடை நாகரீகம் இல்லாத இவங்களுக்கெல்லாம் நிச்சயம் நல்லதொரு பாடம் புகட்டிடத்தான் வேண்டும்!

    ReplyDelete
  6. பாடம் புகட்ட வேண்டியதுதான்...

    ReplyDelete
  7. உண்மையில் அவர்கள் உயிரற்றவர்கள்தான். உயிர் இருந்திருந்தால் அனைவரும் ஓடி சென்று மேடையில் இருப்பவனை இழுத்துவந்து செறுப்பால் அடித்திருக்கவேண்டும் அல்லவா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.