உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 6, 2013

அரபு ஷேக்குகளின் ஷோக்கிற்கு பலியாகும் பாவப்பட்ட இந்திய பெண்கள்அரபு ஷேக்குகளின் ஷோக்கிற்கு பலியாகும் பாவப்பட்ட இந்திய  பெண்கள்
How Arabs buy 'wives' and dump them in a few weeks


Courtesy: Midday  How Arabs buy 'wives' and dump them in a few weeks In a month-long investigation, Bhupen Patel and Kranti Vibhute went undercover to reveal a dark world where girls as young as 15 are sold to rich Arabs for a few days to be their 'wives' and qazis perform sham marriages to make a quick buck

இந்தியாவில் இருந்து "மிட்டே' என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர், கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர், பூபன் படேலும் (Bhupen Patel and Kranti Vibhute ), ஒரு மாதத்திற்கும் மேலாக,  இன்வெஸ்டிகேஷன் செய்து  இதை வெளிப்படுத்தியுள்ளனர்.


அரபு நாடுகளில் (Arabs, many of whom arrive on tourist visas from Saudi Arabia, UAE, Iran, Oman, Kuwait and Qatar ) இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர்.  இதற்கென வரும் டூரிஸ்ட் ஷேக்குகளுக்கு இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும் குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.

இதன் படி இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும், பெண் தேடும் படலத்தை துவக்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள ஏஜண்டுகள், அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு, பெண்களை கூட்டி செல்கின்றனர். பிடித்தமான பெண்களை, ஷேக்குகள் தேர்ந்தெடுக்கின்றனர்.

"எல்லாம் மத முறைப்படியே செய்ய வேண்டும்' என, விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன், திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை, முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார். அதற்கு முன், 15 ஆயிரம், முதல் ஒரு லட்ச ரூபாய் வரை, பணம் பேசப் பட்டு, பெண்ணுக்கு கைமாறி விடுகிறது.மேலும், எத்தனை நாட்களுக்கு, ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பிறகு, ஷேக்கின் மனைவியாக, இந்திய பெண் மாறுகிறாள். அதன் பின் தன் காம இச்சைக்கு, விருப்பம் போல பயன்படுத்துகிறார்.

விசா காலம், ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது, திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து, விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும், சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும், அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண், கசக்கி வீசப்படுகிறாள்.இதில் கொடுமை என்னவென்றால், அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு, அவள் பெறும் பணத்தில், கொஞ்சமே கிடைக்கிறது.

50 சதவீத பணத்தை, திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதம் உள்ளதை, பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.இப்படி பட்ட கொடுமையான நிகழ்வுகள், மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது. .இது ஒரு அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி கொண்டிருக்கிறது என்பது மன வேதனை தரும் ஒரு செயல்....டிஸ்கி : இப்படிபட்ட சம்பவங்கள் சில கயவர்கள் மத சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறு வளைத்து கொள்வதால் மத சட்டமே இங்கு கேலிக் கூறியதாகிவிடுகிறது. மத சட்டங்கள் பல நல்ல காரியத்திற்காக அருளப்பட்டது என்றாலும் அதை தவறாக பயன்படுத்துவதால் மற்ற மதத்தினர் ஏளனம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த மாதிரி பல்வேறு நிகழ்வுகள் எல்லா மதத்திலும் உள்ள கயவர்களால் நடத்தப்பட்டு கொண்டே வருகிறது என்பது யாராலும் மறுக்கப்படாத உண்மை

இப்படி அரபு ஷேக்குகள் மட்டும் செய்யவில்லை யூரோப் அமெரிக்கா நாட்டில் வசிக்கும் வெள்ளையர்கள் கூட இந்தியாவில் வந்து தங்கள் வெறியை தனித்து கொள்கின்றனர்.

இப்படி டூரிஸ்ட் விசாவில் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள் இப்படி இந்த ஏஜண்டுகள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி நமது அரசியல் தலைகளுக்கும் செல்கின்றன. அந்த அரசியல் தலைவர்களின் வேலை அவர்களது குடும்பத்தை காப்பாற்றுவது மட்டுமே நாட்டு மக்களை அல்ல


இதில் எனக்கு சிறிய சந்தோஷத்தை தரும் செய்தி என்னவென்றால் நான் படித்தவரை அறிந்த வரை இப்படிபட்ட நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதுதான். ஆனால் நமது அருகில் உள்ள மாநிலமான கேரளாவில் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுவதாக படித்தும் உள்ளேன் கேள்விபட்டும் உள்ளளேன்.

மேலே படித்த சம்பவங்களுக்கும் கேரளாவில் நடக்கும் சம்பவங்களுக்கும் உள்ள வேறுபாடு மேலே குறிப்பிட்ட பெண்கள் வறுமையின் காரணமாக ஈடுபடுகிறார்கள் ஆனால் படித்த மக்கள் அதிகம் வாழும் கேரளாவில் ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு செய்கிறார்கள் என்பதுமட்டுமே.அன்புடன்
உங்கள் மதுரைத்தமிழன்
 

மேலும் பல தகவல் அறிய கிழே உள்ள லிங்குகளை க்ளிக் செய்யவும்
MID DAY Sting: Mumbai's sex trade secret revealed


 

18 comments :

 1. இதை எழுதிய உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். ஏழ்மையைப் பயன்படுத்திப் பெண்களைச் சுரண்டுவதில் எல்லாரும் ஒன்றுதான். தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்றெல்லாம் நாம் மகிழ்ந்து விடமுடியாது. இது போன்ற பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவதே விபச்சாரத்திற்காகத்தான் என்பதெல்லாம் பழைய செய்திதான். இதெல்லாம் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது வேண்டுமென்றே. என்ன வேறுபாடென்றால், வெள்ளைக்காரர்கள் அனுபவித்துவிட்டு போய்விடுவார்கள், ஷேக்குகள் திருமணம் செய்துவிட்டுப் கொஞ்சநாள் கழித்து விரட்டுவார்கள்.

  பெண்களின் லட்சியமே நல்ல இடத்தில் வாழ்க்கைப்படவேண்டுமென்பதே, அப்படித்தானே அவர்கள் ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். இதில் அவர்களை நொந்து கொள்ள என்ன இருக்கிறது.

  ReplyDelete
 2. ஏழ்மையில் உள்ளவர்களளிடம் பணத்தை காட்டிவிடுகிறார்கள்.. வளமையில் உள்ளவர்கள் வித்தியாசத்தை விரும்புகிறார்கள்..

  ReplyDelete
 3. கருமாந்திரம் புடிச்ச அரசியல் வியாதிகள் இதில காசு வந்தாலும் வாங்கி பயில போட்டுக்கிரானுங்க, இவனுங்க எங்க மக்களுக்கு நல்லாது பண்ணப் போறானுங்க? ஈனம், மானம் சுத்தமா இல்லாத பயலுவளா இருக்கானுவளே?? :((

  ReplyDelete
 4. யாரங்கே...!!!! இனிமேல் அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் எல்லா அரபு முஸ்லீம்களையும் பிடித்து ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்து விடுங்கள்......

  ReplyDelete
  Replies

  1. எல்லா அரபு முஸ்லீம்களும் தவறு செய்வதில்லை .ஒரு சிலர் பேர் செய்யும் தவறுகளால் குடும்பம், நாடு , மதம், இனம் எல்லாம் தவறாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் சிலர் செய்யும் பலாத்காரங்களால் ஒட்டு மொத்து இந்தியாவே ஏதோ ஒரு பலாத்கார நாடாக இப்போது மேலை நாடுகளில் பார்க்கபடுகிறது

   Delete
  2. enga velinattil irunthu ingu thamilagathirku vantha enthanai pengal karpalikkapattuirukkirarkal. aka ella thamilanukkum aanmaiyai cut seivoma?

   Delete
 5. உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிக்க வேண்டும். அவர்கள் திருந்தினால் கீழ்மட்டத்தில் உள்ள எல்லோரும் திருந்திவிடுவார்கள்.

  நடக்குமா? எப்போது?

  நல்ல பதிவு.

  ReplyDelete
 6. தாசிகள் என்ற பெயரில் நல்ல குடும்ப பெண்கள் நம் நாட்டில் கோயில் பணி என்று விபச்சாரத்தில் பயன்பட்டார்கள். ஆக என்றுமே பெண்கள் தம்முடைய உடலமைப்பால் பாதிக்க பட்டவர்கள்தான். இதை பற்றி பேசவேண்டுமானால் படைத்த இறைவனை தான் கேட்க வேண்டும். அரபு தேசத்தில் 1433 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் தூதர் நபிகள் பெருமான் தோன்றி பெண்விடுதலைக்காக பெண்ணுரிமைக்காக இறைவனின் போதனைகளை உலகில் வாழ்ந்துகாட்டி பெண்ணடிமைத்தனம் நீக்கி, பெண்களையும் மனிதத்தன்மையுடன் வாழசெய்தஆர்கள் . சில அரபு கயவர்கள் [மிருகங்கள் ] செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த அரேபியர்களையும் குறிப்பாக முஸ்லிம்களை தவறு சொல்வது நம்முடைய மடமைத்தனம். நம்நாட்டில் இருக்கும் வறுமைதான் இதற்கெல்லாம் காரணம். அந்த பெண்களுக்கு பொருளாதார மேம்பாட்டிற்கு நாம் ஏற்பாடு செய்தால் ஒப்புதல் திருமணத்திற்கு ஒப்பு கொள்ள மாட்டார்கள். அந்த பெண்களின் தந்தையோ அல்லது சகோதரனோ அல்லது உறவினரோ தான் அந்த அரபி திருமணத்திற்கு துணை செல்கிறார்கள். ஆக காப்பாற்ற வேண்டிய நாமே அதற்கு காரணமாக் அமைந்துவிட்டு மட்ட்ரவர்களை குறை சொல்வது நமது மடத்தனம். பெண் பித்தர்கள் எல்லா நாட்டிலும் உள்ளனர் . அவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாங்களே விழிப்போடு இருந்துகொள்ள வேண்டும். எல்லா நாட்டிலும் சட்டங்கள் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது மீறி விட்டில் பூச்சிகளாய் நம் பெண்கள் இருந்தால் இறைவன்தான் அவர்களை காப்பாற்றவேண்டும் . தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று சந்தோசப்பட வேண்டாம். வேலியே பயிரை மேயும் கதை நம் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. தந்தை மகளை, ஆ...... சிரியன் மாணவியை, நடக்கும் அவலங்களை நம் பத்திரிகைகள் நமக்கு சொல்கின்றன ஆக எல்லா ஆண்களிலும் காமகொடூரர்கள் இருக்கிறார்கள் அவர்களை இனம் கண்டு .................நறுக்கினால் பெண்களுகேதிரான குற்றங்கள் குறையும். வறுமையை நீக்குவோம் கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரிப்போம் வரதட்சினை என்னும் அரக்கனை அழிப்போம்

  ReplyDelete
  Replies
  1. நண்பர் முகைதீன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. சில அரபு மிருங்கள் [ கயவர்கள் ] என்ற வரிகளுக்கு மேல் நீங்கள் சொல்லி உள்ளவைகள் இந்த பதிவிற்விகே சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத செய்திகளை பின்னுட்டமாக இடுவதை தவிர்க்கவும். மீதி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மைகள்தான் நன்றி

   Delete
  2. அதுதானே பாத்தேன் என்னடா இவனுங்க இன்னு வரலியேன்னு......வந்துட்டானுங்கப்பா...வந்துட்டானுங்க.....

   Delete
 7. வேதம் அருளப்பட்டது மனிதன் சரியான வழியில் நடப்பதற்காகவே, அதனை முறை கேடாக பயன்படுத்தும்
  யாராய் இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.

  ReplyDelete
 8. இந்த கொடுமைக்கு எல்லாம் முதல் காரணம் மத குரு திருமணம் நடத்தி வைத்து 10 நாட்களுக்கு அல்லது 15 நாட்களுக்கு பின்பு மத குரு விவாகரத்து செய்யும் ஒரு மத சட்டத்தை அனுமதித்தது தான் (இது எல்லாம் ஒரு சட்டம்?)
  மத சட்டம் அகற்றபட்டு வளர்ச்சியடைந்த நாடுகளை போல் பொது சிவில் சட்டம் மட்டுமே எல்லோருக்கும் நடைமுறைபடுத்த வேண்டும்.

  ReplyDelete
 9. இந்த வகை திருமணங்கள் ஹைதராபாத்,மும்பை , லக்னோ போன்ற இடங்களில்தான் அதிகம் நடக்கிறது . அவர்களுக்கு கூட்டு நிற்கும் நம் நாட்டு சுயநலவாதிகளின் தப்புதான் இது .தப்பு யார் செய்தாலும் தப்புதான் அது வெளிநாட்டவர் ஆனாலும் , நம் நாட்டவரனாலும் ,
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. பணம் பத்தும் செய்யும்...இது பதினொன்றாவது விஷயம் போல...

  ReplyDelete
 11. எந்த மதமும் காரணம் இல்லை; பணம் + சொந்தங்களின் சுயநலம் செய்யும் வேலை.
  இந்த மத அவசர கல்யாணம் + அவசர ரத்துவை அரசு நிறுத்தினால் வேறு வழியில் செய்யப் பொகிறார்கள. அப்படியே இப்ப செய்வது தானே என கேள்வி எழும்?

  நம்மை கடவுள் இப்படி செய்தால் மன்னிப்பார் என்ரூ ஒரு சாக்கு...
  சமுதாயத்தில் நாம் செய்வது நம் மதப் அப்டி; ஆதாலால் தப்பில்லை என்று ஊருக்கு கூற...
  இப்படி செய்தால் கடவுள் ஒன்னும் செய்ய மாட்டார் என்ற பயம். இப்படி பல கார்ணங்கள்.

  கோவில் நகைகளை கொள்ளை அடித்து அதில் பத்து விழுக்காக்டு கோவில் உண்டியலில் போடுவதில்லையா? கொலை கொள்ளை லஞ்சப் பணம் ஊழல் பணம் இதில் பத்து சதவீதம் பாலஜிக்கு உண்டியலில் போட்டு நம் பாவத்தை நாமே கழுவிக் கொள்ளவில்லையா அப்படிதான்....இதுவும்...

  மனிதன் தான் செய்யும் அயோக்கியத் தனத்திற்கு நியாம் கற்பிக்கத் தெரியாதாவனா என்ன?

  ReplyDelete
 12. மதம் பிடித்த யானையை என்ன செய்வார்கள் ?ஏன் னென்றால் அதற்கு ஐந்தறிவுதானாம்
  மதம் பிடித்த மனிதனுக்கு ஆறறிவு மேன்மக்கள் மேன்மக்கள் தான் இல்லையா ?

  ReplyDelete
 13. மத சட்டத்தை பயன்படுத்தி அரபிகளுக்கு இந்திய பெண்கள் இந்தியாவில் பலியாகிறார்கள். மத சட்டத்தை பயன்படுத்தி சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற ரிஸானா கொலை செய்யப்பட்டுள்ளார்.

  ReplyDelete
 14. அடிப்படைக் கேள்வி - இத்தகைய திருமணங்களை மதமே போதிப்பதும், திருமண வகைகளில் ஒன்றாக வைத்திருக்கும் திருப்பணியும் ஏன்?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog