February 2012
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 27, 2012

சட்டத்தை மீறிய காவலர்களும் அதை வேடிக்கை பார்க்கும் சட்ட நீதிபதிகளும்



நன்றி (The  Hindu)


சட்டத்தை மீறிய காவலர்களும் அதை வேடிக்கை பார்க்கும் சட்ட நீதிபதிகளும்

அட இது என் கவுண்டர் பற்றிய எனது கருத்துக்கள்தான் வேற ஓன்றுமில்லைங்க... வந்ததுதான் வந்தீங்க நான் என்ன நினைக்கிறேன் என்பதை பற்றி படித்துவிட்டுதான் போங்களேன்.

என் கவுண்டர் தேவையில்லை என்பதுதான் எனது கருத்து

என்கவுண்டர் தேவையில்லை அதற்கு பதிலாக சட்டம் மிக கடுமையாக்க பட வேண்டும் ,தீர்ப்பும் சீக்கிரம் இருக்க வேண்டும். இதுதான்  என் எதிர்பார்ப்பும், மக்கள் எதிர்பார்ப்பும். தப்பு பண்ணுபவணை சிறையில் வைத்து தாலாட்டுபாடுவதால்தான் மக்கள் இந்த மாதிரி என் கவுண்டரை ஆதரிக்கின்றனர் மேலும் தண்டனை கடுமையாக இல்லாததல் மக்கள் மனதில் குற்றம் செய்ய எண்ணம் தோன்றுகிறது. அதனால் மிக கடுமையான தண்டனைகள் தேவை. அரேபியாவில் தரப்படும் தண்டனைகள் என் கவுண்டர் மாதிரியானவைகளாக இருந்தாலும் அவைகள் விசாரித்த பின்னே தரப்படுகின்றன என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

போலிஸாரின் வேலை சட்டத்தை மீறுபவனை பிடிப்பது மட்டுமே, தீர்ப்பு கூறுவது அவர்கள் வேலை அல்ல. அதனால் நீதிபதியின் வேலையை கையில் எடுத்தவர்களும் தண்டிக்க பட வேண்டியவர்களே!

எவருக்கேனும், என் கவுண்டர் நடத்திய போலிஸாரில், யாரேனும் ஒருவர் வாழ்க்கையில் தவறே செய்யாத லஞ்சம் வாங்காத போலிஸார் என்று சொல்ல தைரியம் உண்டா?


நடுரோட்டில் லஞ்சம் வாங்கும் போலிஸாரை அதே இடத்தில் கையை மட்டும் வெட்டினால் இதே போலிஸார் நம்மை பாராட்டி அவார்டு தருவார்களா கொஞ்சம் சிந்தித்து பதில் சொல்லுங்களேன்

இல்லை பெரிய அளவில் ஊழல் புரியும் அரசியல் வாதிகளை இப்படி என் கவுண்டரில் போட்டு தள்ள இந்த போலிஸாருக்குதான் தைரியம் உண்டா?

எளியவனும் வேறு மாநிலக்காரன் என்பதாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதால் தானே இந்த என் கவுண்டர் நிகழ்த்தப்பட்டது.

இந்த இளைஞர்கள் தவறு செய்ய காரணம் நம் நாட்டை வழி நடத்தும் தலைவர்களே அவர்கள் நாட்டின் வளத்தை பெருக்காமல் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தாமல் தமது சொந்த வாழ்க்கையை மட்டும் மனதில் கொண்டு செயல்படுவதால் இந்த மாதிரி படித்த இளைஞர்கள் பெற்றோர்களைவிட்டு உற்றார் உறவினர்களையும் பிரிந்து தாம் பிறந்த சொந்த மண்னையும் விட்டு பிரிந்து கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்களால் முன்னேற முடியவில்லை இறுதியில் அவர்களுக்கு தெரிந்தது இந்த வழிதான். நல்ல நிலையில் வாழ ஆசைபடுவதில் யாருக்குதான் ஆசை இருக்காது.


கொஞ்சம் மனம் விட்டு யோசித்துதான் பாருங்களேன். என் கவுண்டர் மிக தவறு என்பது புரியும்.
மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

அழகிரியாக ஆக போகிறாரா அம்மா ஜெயலலிதா.



அழகிரியாக ஆக போகிறாரா அம்மா ஜெயலலிதா.

சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளிலிருந்தும் வேட்பாளார்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் "திருமங்கலம்"  இடைத்தேர்தல் எப்படி அழகரியின் கெளரவப் பிரச்சனையாக இருந்ததோ அதே போல் அதிமுக ஆட்சியில் "சங்கரன் கோயில்" தேர்தல் அம்மாவின் கெளரவப்பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த தேர்தலை ஜெயலலிதா எப்படி எதிர் கொள்ள போகிறார் என்பதை இந்தியா முழுவதும் கவனித்து கொண்டிருக்கிறது.

எல்லாம் "தான்" தான் என்ற அகந்தையில் இருக்கும் ஜெயலலிதா .கடந்த தேர்தலில் அமோக வெற்றிக்கு காரணம் தான் மட்டும்தான் என்ற அகந்தையில் பேசி விஜயகாந்தை தூக்கி எறிந்திருக்கிறார்.தன்னை அரியனையில் தூக்கி வைத்த மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தாமல் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயல்களில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.

தனக்கு இன்னும் செல்வாக்கு இருக்கு என்று கர்வம் கொள்ளும் இவர். இந்த தேர்தலில் ஒரு  முறை பிரச்சாரம் செய்து வேட்பாளரை அறிமுகப்படுத்தி விட்டு உட்கார்ந்து இருக்கலாமே அதை விட்டு விட்டு தன் முழு மந்திரி சபையையே அங்கு அனுப்பி வேலை செய்துவது எதற்காக ? தன் செல்வாக்கின் மீது அவருக்கே நம்பிக்கை இன்மையைத்தான் இதை காட்டுகிறது

இந்த தேர்தலில் பண ஆறாக மாற போகிறாதா  அல்லது அராஜாகம் ஆறாக மாறப் போகிறதா சங்கரன் கோவில் என்று இருட்டில் முழ்கி இருக்கும் தமிழக மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

எனது சிந்தனையெல்லாம் சங்கரன் கோவில் மக்கள் எண்ண செய்யப் போகிறார்கள் என்பதுதான்.

அவர்கள் அதிமுகவிற்கு ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் ஜெயலலிதா செய்வது எல்லாம் சரிதான் என்று ஆமோதிப்பது போல ஆகிவிடும். ஆனால் தோற்கடித்தால் சங்கரன் கோவிலுக்கு எதிர்காலத்தில் அம்மா ஓன்றும் செய்யமாட்டார்கள் என்று மக்கள் பயப்படலாம் ஆனால் அவர்கள் ஓன்றை மறக்க வேண்டாம் அம்மா ஜெயித்தாலும் ஒன்றும் செய்யபோவதில்லை அதற்கு உதாரணம் இப்போதைய அவர் செயலையே எடுத்து காட்டலாம். இந்த சந்தர்ப்பம் ஜெயலலிதா அவரின் தலையில் கொட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம். இதை சங்கரன் கோவில் மக்கள் பயன் படுத்துவார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

அடுத்தாக அவர்கள் திமுக வை ஜெயிக்க வைத்தால் அவர்கள் கடந்த காலத்தில் செய்த தவறை எல்லாம் எளிதில் மறந்துவிட்டது போல ஆகிவிடும். அப்படி செய்தால் அது அரசியல்வாதிகளை தவறுகள் செய்ய தூண்டுமே தவிர குறைக்க வழி வகுக்காது.

அடுத்து தேமுதிகவை ஜெயிக்கவைத்தால் சட்டசபையை கேலி கூத்தாக்கா மேலும் ஒரு நபரை அனுப்பிவைத்தாகவே கருதப்படுமே தவிர வேறு எதற்கும் உதவாது.

இறுதியாக இருப்பது மதிமுக அந்த கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைத்தால் சட்ட மன்றத்தில் எந்த வித மாற்றமும் ஏற்பட போவதில்லை. ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சி தலைவரை தட்டி கொடுத்தது பாராட்டுவது போலத்தான். அதனால் அந்த கட்சி தலைவர் வைகோ மக்களுக்காக இன்னும் அதிகமாக குரல் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை மேலும் அவர் கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைப்பதால் மற்ற கட்சிகளுக்கு தலையில் குட்டியது போல இருக்கும் அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாளியக கருதும் அவர்களின் செயல்களும் மாறும்.

ஆனால் மக்களே குட்டுவதோ குமறுவதோ கும்மி இருட்டில் இருப்பதோ உங்கள் கையில்தான். சிந்தியுங்கள்! முடிவு செய்யுங்கள்
மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Sunday, February 26, 2012

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக நீக்கம்.




சங்கரன் கோவில்  இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக நீக்கம்.

சங்கரன் கோவில்  இடைத்தேர்தல் போட்டியில்  அதிமுக ,மதிமுக, திமுக, தேமுதிக ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் உண்மையான போட்டி என்பது மதிமுக, திமுக, தேமுதிக  ஆகிய மூன்று கட்சிகளுக்கு மட்டுமே. இதில் யாரு இரண்டாவது இடத்தை பிடிக்க போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

 



ஆளுங்கட்சிதான் எப்போதும் ஜெயிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆளுங்கட்சிகள் செய்யும் அராஜாகத்தில்தான் அந்த வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கபடுகிறது அதனால் ஆளுங்கட்சிகான  அதிமுக போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழக்கிறது.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிகள் இரண்டாவது இடத்தை பெறப்பபோவதுதான் இப்போதைய அரசியல் கட்சிகளுக்கான போட்டி.

அதனால்தான் சங்கரன் கோவில்  இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக நீக்கம். என்று நான் சொல்கிறேன்.
மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Thursday, February 23, 2012

ஆண்கள் எதுக்காக குடிக்கிறார்கள்? நகைச்சுவை

ஆண்கள் எதுக்காக குடிக்கிறார்கள்? நகைச்சுவை

இதுகெல்லாம் என்னால் விளக்கம் சொல்லி வாங்கிகட்டிக்க முடியாது. அதனால் கிழே உள்ள படத்தை பார்த்து புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க.












என்னங்க படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன புரிஞ்சுச்சு & புரியலைன்னு கிழே பின்னுட்டமாக இடுங்க





ஆல்கஹால் பற்றி பெரியவங்க உங்களூக்கு சொன்னவையும் அவர்கள் சொல்லதவைகளை உங்களுக்காக இந்த மதுரைத்தமிழன் கிழே படத்தில் சொல்லியிருக்கிறான்.










"ALCOHOL KILLS SLOWLY"
So what? Who's in a hurry

என்னங்க படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன புரிஞ்சுச்சு & புரியலைன்னு கிழே பின்னுட்டமாக இடுங்க.
மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Wednesday, February 22, 2012

உண்மைகள் சிரிக்கின்றன இங்கே......



உண்மைகள் சிரிக்கின்றன இங்கே......

1.  நாம் வெற்றிக்கான திறவுகோலை (சாவி)கண்டுபிடிக்கும் போதுதான் எவனோ ஒருவன் வந்து பூட்டை மாற்றிவிடுகிறான்.

2.  நாம் செல்லும் போதும் மட்டும் வெற்றிக்கான பாதைகள்...எப்போதும் அன்டர் கன்ஸ்டிரக்ஷனாகவே ( Under construction )உள்ளது.

3. ஆல்கஹால் அருந்துவதால் எந்த வித பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. கொஞ்சம் யோசித்து பார்த்தால் அதேதான் பால் குடித்தாலும்  எந்த வித பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது.

4. நாம் வாழ்க்கையில் விரும்புவைகள் எல்லாம் ஒன்று விலை அதிகமாக இருக்கிறது அல்லது தடை செய்யப்பட்டவைகளாகவும் இல்லையென்றால் உடலை பெருக்க வைக்க கூடியதாகவும் உள்ளது. ஹும்ம்ம்ம்

5. பேங்கிலிருந்து உங்களுக்கு லோன் வேண்டுமென்றால அந்த பேங்கிற்கு சென்று உங்களுக்கு லோன் தேவையில்லை என்பதை ஆதார பூர்வமாக நிருபியுங்கள் உடனே உங்களுக்கு கிடைக்கும்.

6. எல்லோரும் பணக்காரனாக திட்டம் வைத்து இருக்கிறோம் ஆனால் அது வொர்க் ஆவதில்லை.

7. ஏதாவது நம் கையில் இருந்து கிழே விழுந்தால் அது எப்போதும் எளிதில் எடுக்கமுடியாத ஒரு மூலையில்தான் போய் விழுகிறது.
.
8. நாம்  சீக்கிரம் பஸ் ஸ்டாப்புக்கு வந்தாலும் பஸ் லேட்டாகவே வருகிறது... நாம் லேட்டாக பஸ் ஸ்டாப்புக்கு வந்தாலும் அப்பொழுதும் லேட்டாகவே வருகிறது.

9. நாம் எப்போது ஒரு பொருள் வாங்கினாலும் அதை வாங்கிய பிறகுதான் அதே பொருள் இன்னொரு இடத்தில் மிக மலிவாக கிடைப்பது நமக்கு தெரியவரும்.

10. நம்மிடம் பேப்பர் இருக்கும் போது பேனா இருக்காது , பேனா இருக்கும் போது பேப்பர் இருக்காது ஆனால் இரண்டும் இருக்கும் போது எழுத ஓன்றும் இருக்காது.

11. நாம் ஆபிஸுக்கு எப்போது லேட்டாக போவோமோ அன்றுதான் எப்போதும் லேட்டாக வரும் நமது மேனேஜர் சிக்கிரம் வந்து நம் கழுத்தை அறுப்பான்.

12. நாம் காரில் எங்கையாவது போகும் போது நாம் போகும் சாலை மட்டும் மிக டிராபிக்காகவும் ஆனால்  எதிர் சாலை மட்டும் எப்போதும் காலியாக இருக்கும்.

13. நாளை நமக்கு தேர்வு என்றால் இன்று இரவு நிச்சயம் பவர் கட் இருக்கும்.( ஹீ.ஹீ இப்போது இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது).

14. நாம் பாத்ருமில் இருக்கும் போதுமட்டும்தான் நம் வீட்டின் வாசல் பெல்லும் அல்லது செல்போன் பெல்லும் ஒலிக்கும்.

15. சிகரெட் பிடிப்பவர்கள் விடும் புகை எப்போதும் சிகரெட் பிடிக்காதவர்கள் மூஞ்சி இருக்கும் திசையில் மட்டும் போகும்.

என்னங்க நான் சொன்னது எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைகள்தானே. நான் சொல்ல மறந்த உண்மைகள் உங்களுக்கு தெரிந்தால் பின்னுட்டமாக சொல்லாமே!!!!!!


மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Tuesday, February 21, 2012

அமெரிக்கனிடம் இப்படியா கேள்வி கேட்பார்கள் இந்த தமிழர்கள்?


அமெரிக்கனிடம் இப்படியா கேள்வி கேட்பார்கள் இந்த தமிழர்கள்?

எனது முந்தைய பதிவு ஒன்று, "அமெரிக்கா Vs இந்தியா கேள்வி பதில்கள்"  வாசித்து விட்டு,  அதன் தொடர்ச்சியாக, மேலும் சில கேள்விகள் எங்களிடம் உள்ளது கேட்கலாமா என்று கேட்டு இமெயில் அனுப்பி இருந்தனர் (கற்பனை )

ஆஹா  இது நேயர் விருப்பமாச்சே ...... ம்ம்ம்..... சூப்பரு என்று நானும், கேள்விகளை அனுப்புங்க ....என்னால் முடிந்த அளவு பதில்தருகிறேன் என்று ஒரு சேவை மனப்பான்மையுடன்  ரெடியாகினேன்......   சந்தோஷமாக,  கேள்விகள் வந்து குவிந்தன.... அதில்,  மொத்தம்  பத்து கேள்விகள் எடுத்துக்கிட்டு, பதில் ரெடி பண்ண ஆரம்பிச்சேன்.....இதோ அந்த பதில்கள்....
 
முதல் கேள்வியை கேட்பவர்  தோழி ஜோஸபின்  அவர்கள்  (ஜோஸபின் கதைக்கிறேன்.)

மதுரைத்தமிழா நீங்க இருக்கிற அமெரிக்காவில் சமையலுக்கு ஆள் கிடைக்குமா''
மதுரைதமிழன் : ''ஆள் எல்லாம் கிடைக்காதுங்க! காய்கறிதான் கிடைக்கும்!  மேடம் இந்த கேள்வியை ஆப்பிரிக்காவில் இருப்பவர்களிடம் கேளுங்க

இரண்டாவது கேள்வியை கேட்பவர்  சகோதரி ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)

மதுரைத்தமிழா உங்க  பதிவுகளை வாசிக்கும் உங்கள் மனைவி   உங்கள் பதிவை பற்றி என்ன நினைக்கறாங்க?
அ. அடாடா  இன்னும் இவருக்கு புலிட்ஸர் அவார்டு கிடைக்கலியே என்றா? . வெட்டியா பொழுத கழிக்காம வேற வேலையப் பாருய்யா என்றா?

மதுரைதமிழன் :ஹீ..ஹீ  அவங்க என் பதிவெல்லாம் படித்துவிட்டு ஆஆஆஆஆஆ என்று அசந்து போவார்கள்

மூன்றாவது கேள்வியை கேட்பவர்  தன சேகரன்.எஸ் அவர்கள்   (சேகர் தமிழ்)

மதுரைத்தமிழா நினைச்சது கிடைக்கலன்னா கிடச்சதை நினைக்கலாம்ங்கறது சரி என்று சொல்லுறாங்களே அது சரியா?.
மதுரைதமிழன் "அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

நான்காவது கேள்வியை கேட்பவர்  வா.கோவிந்தராஜ்  அவர்கள்  (தமிழன்)

மதுரைத்தமிழா :முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மைதானா?
மதுரைதமிழன் :அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா. அட போங்கப்பா

ஐந்தாவது கேள்வியை கேட்பவர்  ஸ்ரவாணி  அவர்கள்  (தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்)
மதுரைதமிழா பட்டுபுடவைகளை நீண்ட நாள் பாதுகாப்பாக வைக்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்.
மதுரைதமிழன் : உங்க வீட்டுல உள்ள ப்ரிட்ஜ்ல வைங்க அது கெடமா நீண்ட நாள் இருக்கும்

ஆறாவது கேள்வியை கேட்பவர்  "பெயர் சொல்ல விருப்பம் இல்லாதவர்" 

மதுரைத்தமிழா முகத்துல  விழும் சுருக்கம் நீங்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்?
மதுரைதமிழன் அது ரொம்ப எளிதுங்க  முகத்துல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சு பாருங்க எல்லாம் சரியாக போயிடும்

ஏழாவது  கேள்வியை கேட்பவர்  முகுந்தம்மா அவர்கள்  (முகுந்த்அம்மா )
மதுரைத்தமிழா தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
மதுரைதமிழன் கொட்டுவது எல்லாம்  திரவப்பொருள்தானே

எட்டாவது  கேள்வியை கேட்பவர்  சசிகலா அவர்கள் (தென்றல்)

மதுரைத்தமிழா  உங்க பையனை வீட்டுலே பார்க்க முடியவில்லையே எங்க போயிட்டான்?
என் பையனும்  கரண்ட்டும் ஒண்ணுதான் ... இரண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

ஓன்பதாவது கேள்வியை கேட்பவர்  ரமணி  அவர்கள்  (தீதும் நன்றும் பிறர் தர வாரா...)
மதுரைதமிழா:உங்க சொந்த ஊர் எது ?
மதுரைதமிழன் :அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க

பத்தாவது  கேள்வியை கேட்பவர்  ஆமினா  அவர்கள்  (குட்டி சுவர்க்கம்)
மதுரைதமிழா :உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?
மதுரைதமிழன் : பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களோ அவங்க பக்கம்.



படிக்காதவர்கள் படிக்க

அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது எப்படி?

மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Monday, February 20, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க & தி.மு.க வின் நிலமை

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க & தி.மு.க வின் நிலமை





இதுதான் இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க &  தி.மு.க வின் நிலமை.





மதுரைத் தமிழன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கீறிர்களா அல்லது இல்லையா என்பதை நேரம் இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.
மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Friday, February 17, 2012

அமெரிக்கா Vs இந்தியா கேள்வி பதில்கள்



அமெரிக்கா Vs இந்தியா கேள்வி பதில்கள்
மதுரைத்தமிழனின் கேள்வியும் நானே பதிலும் நானே.


குற்றாலத்திற்கும் நயகாரவிற்கும் உள்ள வேறுபாடு?
நயகாரா பார்பதற்கும் குற்றாலம் அனுபவிப்பதற்கும்.

அமெரிக்க குடும்பத்திற்கும் இந்திய குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடு?
அமெரிக்காவில் காதலிக்கவில்லையென்றால் குற்றம் இந்தியாவில் காதலித்தால் குற்றம்
அமெரிக்காவில் கல்யாணம் ஆகி பெற்றோர்கள் கூட இருந்தால் அசிங்கம் ஆனால் இந்தியாவில் கல்யாணம் ஆகி பெற்றோர்களைவிட்டு வந்தால் அசிங்கம்


அமெரிக்காவில் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதா?
அடிமைபடுத்தப்படும் தனம் அமெரிக்கர்களிடம் மாறாது. ஆனால் கருப்பர்களை அடிமைபடுத்துவதை நிறுத்தி இந்தியர்களை அடிமைபடுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்எங்களுக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள் என்று இந்தியர்களை அமெரிக்கா கருதுகிறது.




அமெரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் உள்ள வேறுபாடு?
அமெரிக்கன் உடல் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும் ஆனால் உள்ளமோ கருப்பாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் உடல் பார்க்க கருப்பாகவும் உள்ளம் வெள்ளையாக இருக்கும்



தமிழக அரசியல் கேள்வி பதில்கள் :

அம்மாவுக்கும் தமிழ் மக்களுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
அம்மாவுக்கு தமிழ் மக்கள் கொடுத்தது அதிக பவர் ஆனால் அம்மா மக்களுக்கு திருப்பி தருவது குறைந்த பவர்


தமிழகத்தின் பவர்கட் பற்றி உங்கள் கருத்து என்ன?
மின்சாரம் மின்சாரகனவாகி போனது

நடிகன் அரசியலுக்கு வரலாமா?
நன்றாக நடிக்க தெரிந்தவன் அரசியலுக்கு வரலாம்.


நடிகனுக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
நடிகன் சினிமாவில் மட்டும் நடிக்கிறான். அரசியல் வாதி நிஜ வாழ்க்கையில் மட்டும் நடிக்கிறான்

வைகோவுக்கும் ராமதாசுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
வைகோ ஒரு ஏமாளி, ராமதாஸ் ஒரு கோமாளி



போலிஸ்காரனுக்கும் திருடனுக்கும் என்ன வேறுபாடு?
திருடன் திருடிவிட்டு மாட்டி கொண்டால் போலிஸ் ஸ்டேஷன் போவான் ஆனால் போலிஸ் திருடிவிட்டு அவனே போலிஸ் ஸ்டேஷன் வருவான்.

ஜெயிலுக்கு போகும் அரசியல்வாதிக்கும் திருடனுக்கும் எப்படி நெஞ்சுவலி வருகிறது ?
அரசியல்வாதி மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குள் போனால் நாம் கொள்ளையடித்ததை அனுபவிக்க முடியாதே என்று நினைக்கும் போதே ஆட்டோமெட்டிக்காக நெஞ்சுவலி வரும் ஆனால் திருடன் உள்ளே போனால் வாங்கிய அடிகளால் நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடல் போவான்.


குடும்பம் :

குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமா?
அது உங்கள் மனைவி போட்டு தரும் காபியை பொறுத்து இருக்கிறது


மனைவியிடம் அம்மா செய்யும் சமையலை சொல்லி தைரியமாக பாராட்டுவது எப்படி?
அம்மாவின் உணவை நீ ஊட்டிவிடும் போது அதற்கென ஒரு நல்ல சுவை வந்துவிடுகிறது என்று பாராட்டி விடுங்கள்

மனைவிக்கும் காதலிக்கும் உள்ள வேறுபாடு?
காதலி சிரித்தே நம் பர்சை காலி செய்வாள் ஆனால் மனைவி நம்மை திட்டி கொண்டே பர்சை காலி செய்வார்கள்.


மனைவியிடம் கன்னத்தில் அடிவாங்கிய கணவர்கள் அதை எப்படி வெளியே சொல்லுவார்கள்?
மச்சி நேற்று எனக்கு என் மனைவிக்கும் வாக்குவாதம் கடைசியில் கோபம் தாங்காமல் நான் என் கன்னத்தால் என் மனைவியின் கையில் ஒங்கி அடித்தேன் பாரேன் என் கன்னம் எந்த அளவிற்கு சிவந்து கிடக்கிறது பாவம் அவள் கையை நினைத்தால் எனக்கு இப்போ பாவமாக இருக்கிறது என்று சொல்லுவார்கள் ( ஹேய்ய்ய்ய் யாரது இது உங்கள் அனுபவமா என்று சத்தம் போட்டு கேட்பது..மெதுவாக சத்தம் போடாமல் கேளுங்கள் மக்கா அவள் கையில் மறுபடியும் அடிக்க என் கன்னத்திற்கு சக்தி இல்லை)

என்னங்க மதுரைத்தமிழனின் கேள்விபதில்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

அமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயணம் - என் மனைவியுடன் சேர்ந்து முதல் காதலியை சந்தித்த அனுபவம் )



அமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயணம் - என் மனைவியுடன் சேர்ந்து முதல் காதலியை  சந்தித்த அனுபவம் )

நான் வளர்ந்த ஊர் மதுரை என்றாலும் பிறந்த ஊர் செங்கோட்டையாகும் அது குற்றாலத்திற்கு அருகே உள்ள ஒரு ஊர் .அதனால் சிறுவயதில்(5 வயது வரை) எப்போது எல்லாம் குற்றாலத்தில் தண்ணிர் வருகிறதோ அப்போது எல்லாம் சென்று வருவோம்.அதன் பின் மதுரைக்கு வந்த போது விடுமுறை என்றால் செங்கோட்டை சென்று குற்றாலத்தில் குளித்து வருவது ஒரு வாடிக்கை. அந்த வாடிக்கை அமெரிக்கா வந்த போதும் மாறவில்லை. காரணம் குற்றாலம் என் காதலி. சிறு வயது காதலி இன்னும் அவள் எனக்கு காதலிதான்அவள் எப்போதும் குளு குளூ.. சிலு..சிலு வென இருப்பாள். ஆனால் கிட்டே நெருங்கினால் தலையிலேயே கொட்டுவா....ஆனாலும் அவள் கையால் கொட்டப்படுவது என்பது மிக சுகமானதே அதனால் இந்த முறையும் குடும்பத்துடன் சென்று வந்தேன்.

என் குற்றால காதலி பற்றி சில தகவல்கள்:

அதுமட்டுமல்ல   சீஸன்  நேரத்தில் ஒரே நாளில்   அத்தனை அருவியிலும், எத்தனை முறையும் எவ்வளவு நேரம் குளித்தாலும் சளியோ, காய்ச்சலோ வராது. அதுதான் என காதலி பொதிகை மலை மூலிகையின் மவுசு.

தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆரியங்கா கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் வழியில் மலையில் உள்ள அத்தனை  முலிகைகளையும் தழுவி  சில்லென்ற  காற்றை  அணைத்து பிடித்து  வெள்ளியை உருக்கிவிட்டது போல அருவியாய்  வந்து  நம்மை மகிழ்விக்கிறது  குற்றால அருவி.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குற்றாலத்தில் இருக்கும்  அருவி ஓன்றல்ல இரண்டல்ல  மொத்தம் 8 அருவிகள் உள்ளன. என்ன எனக்கு இத்தனை காதலிகளா என்று நீங்கள் பொறாமைபடுவது தெரிகிறது .
என் 8 காதலியின் பெயர்கள் பேரருவி (Main Falls),   ஐந்தருவி( Five Falls) பழைய குற்றால அருவி (Old Falls) புலியருவி(Tiger Falls) சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி  என பல அருவிகள் சுற்றிச் சுற்றி அருவிகள்தான்.( இந்த அருவிகள் பற்றி மிக விரிவாக இன்னொரு பதிவு போடுகிறேன்)

நாங்கள் வழக்கமாக செல்வது மெயின் ஃபால்ஸ்(பேரருவி), பைவ் ஃபால்ஸ்(ஐந்தருவி), ஒல்டு ஃபால்ஸ்(பழைய குற்றாலம்). அருவிகளில் குளித்துவிட்டு பசியோடு வந்த நாங்கள் ஐந்தருவியை விட்டு வெளியே  வந்ததும் கார் டிரைவரிடம் ஒரு நல்ல வெஜிடேரியன் ஹோட்டலுக்கு அழைத்து போ என்றோம் அவனும் அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்குகூட்டி சென்றான் அந்த ஹோட்டலை பார்த்ததும் அவனை பார்த்து என்னப்பா ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூப்பிட்டு போக சொன்னால் ஒரு பழைய நிலையில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு  கூட்டி வந்திருக்காயே என்று கேட்டோம் அவன் பார்க்க அழுக்ககாத்தான் இருக்கும் ஆனால் சாப்பிட்டு வந்து சொல்லுங்கள் என்று சொன்னான் அவன் ஒரு முஸ்ஸிம் எங்கள் குடும்பத்திற்கு தூரத்து உறவினன் அவனுக்கு என்ன வெஜிடேரியன் பற்றி தெரிய போகிறது என்று மனதில் நினைத்தபடி பசியால் இருந்த நாங்கள் உள்ளே சென்றோம். (எனது குடும்பம் பிராமினும் முஸ்லீமும் கலந்த குடும்பம் அதனால்தான் வெஜிடேரியன் சாப்பாடு...)

சாப்ப்பிட்ட பிறகுதான் அதன் அருமை தெரிந்தது. அவர்களின் சாம்பார் மிகவும் அருமை. எனது பொண்ணோ சாம்பார் என்றால் ஒரு காத தூரம் ஒடுவாள் ஆனால் அங்கு அதை வாங்கி வாங்கி குடித்தாள். அந்த ஹோட்டல் சர்வர்களும் ஒனரும் எங்களை அதிசியமாக பார்த்தனர் மற்ற காய்கறிகளும் பிரமாதம் இந்த அளவு டேஸ்ட் நான் சாப்பிட்ட தமிழ்நாட்டு எந்த ஹோட்டலிலும் கிடையாது. எங்களுக்கு இருந்த சந்தோஷ்த்தில் அங்கு வேலை பார்த்த பலரையும் கூப்பிட்டு பாராட்டி அனைவருக்கும் நிறைய டிப்ஸ் கொடுத்தோம்.அந்த ஹோட்டல் பெயர் மறந்துவிட்டது அது ஐந்தருவியை விட்டு மெயின் ரோட்டுக்கு வந்ததும் வலது பக்கம் திரும்பியதும் வலது புற சைடில் உள்ளது அதற்கு எதிராக ஒரு பெரிய ஹோட்டலும் உண்டு ஆனால் அங்கு செல்ல வேண்டாம்.

குற்றால பகுதியில் உள்ள மிக பெரிய குறை நம் காரில் இருந்து செருப்பு இல்லாமல் அருவிக்கு போகும் உள்ள இடம்தான் மிகவும் அருவருப்பாக உள்ளது. மக்கள் சாப்பிட்டு போட்ட குப்பைகள் , துப்பிய எச்சில்கள் மிக அருவருப்பாக உள்ளது மற்ற இடமாக இருந்தால் ஏதோ அட்சஸ்ட் செய்துவிட்டு போகலாம் ஆனால் நீர் நிறைந்த பகுதிகளாக இருப்பதால்தான் இந்த அருவருப்பு மனதில் தோன்றுகிறது. அதற்கு நாம் ஒரு மாற்று வழியை அறிவது மிக அவசியம்.

நான் பார்த்து அனுபவித்த மூன்று அருவிகளை நீங்களும் பார்த்து அனுபவிக்க  நான் எடுத்த வீடியோவின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக..

மெயின் பால்ஸில் நான் எடுத்த விடியோவில் ஒரு பகுதி:

ஐந்தருவியில் நான் எடுத்த விடியோவில் ஒரு பகுதி:
பழைய குற்றாலம்
மெயின் ஃபால்ஸ்

பயணங்கள் தொடரும்......

எனது முந்தைய பயண அனுபவம் படிக்க :



மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (197) தமிழ்நாடு (107) அரசியல் (89) பெண்கள் (75) சிந்திக்க (66) அமெரிக்கா (59) இந்தியா (58) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (41) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (29) மனைவி (27) வாழ்க்கை (26) அனுபவம் (24) இந்தியன் (22) கணவன் (22) கலைஞர் (22) சமூக பிரச்சனை (22) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) மொக்கைகள் (18) யோசிங்க (18) உபயோகமான தகவல்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) உணர்வுகள் (16) எண்ணங்கள் (16) புது தகவல்கள் (16) ஹெல்த் டிப்ஸ் (16) குடும்பம் (15) காதல் (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) சினிமா (13) விகடன் (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) சட்டம் (12) மகளிர் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) கேள்வி பதில் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) கேள்விகள் (10) வேதனை (10) இழப்பு (9) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குற்றம் (9) தகவல்கள் (9) தலைவன் (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வாழ்க்கை அனுபவம் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் (8) கொடுரம் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) மரணம் (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) திமுக (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) இளஞிகள் (6) உங்களுக்கு தெரியுமா (6) எச்சரிக்கை (6) சமையல் குறிப்பு (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) டெக்னாலாஜி (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) விஞ்ஞானம் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உலகம் (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) கிறுக்கல்கள் (5) கோயில்கள் (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) அறிவியல் (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சக்தி வாய்ந்த நாடு (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) Award (3) NRI (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கட்சி (3) கதை (3) கற்பழிப்பு (3) காங்கிரஸ் (3) சீனா (3) செக்ஸ் (3) தரமான பதிவுகள் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) THE WHOLE TRUTH (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தந்தையர் தினம் (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) தொழில் நுட்பம் (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) பிறந்தநாள் (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) ரெசிப்பி (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோலம் (1) சக்கேடா (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுரை (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)